ஒரு வண்டியின் பயணம்
ஒரு வண்டி பயணம் செய்கிறது
அந்த வண்டியை…
நாங்கள் தான் இழுத்துச் செல்ல வேண்டும்
அந்த வண்டிதான்…
எங்களை இழுத்துச் செல்ல வேண்டும்
இங்கு வண்டி என்பது “ கொள்கை ”
பயணம் என்பது “ வாழ்க்கை ”
போய்ச் சேரவேண்டிய ஊர் “இலட்சியபுரி”
தடைகள் ஏராளம்
தனிமனிதனால் முடியாது..!
சிலர் இழுக்கிறார்கள்…!
பலர் இருக்கிறார்கள்… !
இன்னும் சிலர்…
இழுக்காமலும்... இருக்காமலும் …
வண்டியின் ஓரமாய்
வந்து கொண்டிருக்கிறார்கள்.
இருப்பவர் அதிகம்…!
இழுப்பவர் குறைவு…!
வண்டியின் வேகம் குறைகிறது
வண்டிக்காரன் குரல் உயர்கிறது
இந்த வண்டியை
ஊர் கொண்டு போய்ச்
சேர்க்க வேண்டியது
இன்றைய இளைஞர்
உங்கள் கடமையல்லவா?
வாருங்கள்!
வந்து இழுங்கள் …!
இளைஞர் சிலர் ஓடிவந்து
ஆவேசமாய் முன் இழுக்க…
வண்டி மெல்ல நகர்கிறது....!
- இரா.ஜெகதீஸ், சுவிஸ்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.