இயந்திர நிமிடங்கள்
முட்களை முந்திக்கொண்டு
பயணிக்கிறது நாகரீக
வாழக்கையின் இயந்திர
நிமிடங்கள்
இப்பொழுதுதான் தொடங்கியது
போல இருக்கிறது
ஒவ்வொரு வருடமும்
திடும் என முடிந்து விடுகிறது
சட்டென முடிந்து விட்டதை
திடீரென உணர முடிவதில்
அதிர்ச்சியே மிஞ்சிகிறது
நாட்காட்டியில் குறைக்கப்படுகிற
வாழ்க்கை - வருடங்களில்
எண்ணப்படுகிறது
வாழ்க்கையின் இலட்சியங்களும்
லட்சங்களும் சேகரிப்படுவதில்
ஒவ்வொரு வருடமும் திடும் என
முடிந்துவிடுகிறது
காலை தொடங்கிய மாலை முடியும்
அலுவலக வாழ்க்கையில்
அலுவலகமே பல நேரம்
வருடங்களை தின்றுவிடுகிறது
என்பதில் நிரம்ப
இருக்கிறது உண்மை
ஆம்தானே???
- ராசை நேத்திரன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.