வாழ்வின்அவதானம்
பெண்மையே இன்னும் ஏன் மௌனம்.
உண்மையே உலகுன்னால் உயரும்
உலகுயர உன் உதிரம் உபயம்
மனையறம் காத்து மாண்புற வாழ்வுகாட்டி
சிறையறம் காப்பது முறையோ! – நீ
இல்லறத்தை நல்லறமாய்க் காத்ததனால்
இவ்வகம் நல்லகம் ஆகியது – நீ
அகத்தடியாளாய் அடிமை கொள்ளாதே!
கொழுநன் மார்பில் கொடியாய்ச் சாய்ந்ததனால்
கொழுகொம்பாய் மாண்புற்றான் கொண்டவன் - நீ
கொடியாய் ஒரு போதும் சாயாதே
கொழுகொம்பாய் நிமிர்ந்து நில்
தினமொன்று சிந்தனை செய்வதனால்
வாழ்வொன்றும் சிறப்பதில்லை – வாழ்வை
சொர்க்கமாக்குவதும் நரகமாக்குவதும் - பெண்ணேயுன்
சொந்த மூளையில் சிறந்திருக்கு - அதுவேயுன்
வாழ்வின்அவதானம்
- சந்திரகௌரி சிவபாலன், ஜெர்மனி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.