கொங்குச் சீமை...பெருமை!
தங்கத் தமிழ் நாட்டிலொரு
கொங்குச் சீமையிருக்குது…
கொங்குச் சீமைக் காத்துலதான்
சிலுசிலுப்பு யிருக்குது!
எந்தப் பக்கம் திரும்பினாலும்
பஞ்சாலைக தெரியுது…
மந்தத்தனம் இல்லாத சனம்
மாங்கு மாங்குனு உழைக்குது!
வாங்க போங்க பேச்சுலதான்
மனசு நெறைஞ்சு போவுது…
தீங்கான எண்ணம் விலகித்
திருந்தி வாழப் பாக்குது!
மருதமலைக் கோயிலது
மேக்கால தான் இருக்குது…
மக்க துயர் துன்பமெலாம்
தன்னால தீர்ந்து போவுது!
சிறுவாணிச் சுவை நாக்கில
தீர்த்தம் போல இனிக்குது…
சிறப்பான புகழ் அதுக்கு
சீமை வரை இருக்குது!
இன்னுமொரு பிறவியெனக்கு
இறைவன் தர வேணுங்க…
இதெ மண்ணில் பிறந்து வாழும்
வரமும் அருள வேணுங்க!
- முகில் தினகரன், கோவை.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.