போவது எங்கே...?
ஏறியது இறங்குவதில்லை
எதிலும்-
விலைவாசி...!
கூறிய சொல்லைக்
காப்பதில்லை-
கொள்கையிது அரசியலில்...!
நாணயம் என்பது
செல்லாக்காசாய்-
பொதுவாழ்வில்...!
ஏமாற்றுதல் என்பது
ஏகமனதாய்
ஏற்றுக்கொண்ட பொதுமொழியாய்...!
தொலைக்காட்சித் தொடரில்
தொலைந்துபோகும்
குடும்பங்கள்...!
சீரியல் அழுகை ஓயும்வரை
டாஸ்மாக் கடையில்
தஞ்சமடைந்து
தள்ளாடும் குடும்பத் தலைமைகள்...!
மடிக்கணினியைக்
கொடுத்தவகைக்கு உபயோகிக்காமல்
கொள்ளை போகும்
குலவிளக்குகள்...!
இப்படித்தான் போகுது
இந்தியர் பலரின் வாழ்வு,
இலவசத்தையும்
இடைத்தேர்தலையும் எதிர்பார்த்தே...!
- செண்பக ஜெகதீசன்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.