ஆர்.கனகராஜ்
1970 முதல் 1980 வரை கோயம்புத்தூரிலிருந்து வெளியான இதழ்களில் கனகராசன் என்ற பெயர்களில் தனது படைப்புகளை வெளியிட்டு வந்த இவர் கோயம்புத்தூர் வானொலிக்கு நாடகங்களையும் எழுதி அனுப்பி வந்தார். வானொலி நிலைய இயக்குனர் இவரது கனகராசன் என்கிற பெயரை தபால் முகவரிக்குக் கொடுத்திருந்த ஆர்.கனகராஜ் என்ற பெயரையே பயன்படுத்தியதால் அந்தப் பெயரே நிலைத்து விட்டது. நாத்திகக் கொள்கையில் ஈடுபாடுடைய இவர் 2004-ல் ஆழிப் பேரலையில் தாய், தங்கை மற்றும் தங்கை மைந்தன் ஆகியோரை இழந்திருக்கிறார். இவர் "திருக்குறள் நாத்திக நூலே..." என்கிற நூலையும் வெளியிட்டு இருக்கிறார்.
கதை - சிறுகதை

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.