ப. சுடலைமணி
(தங்கள் ஒளிப்படம் அனுப்பி வைக்கலாமே? - ஆசிரியர்)
தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கோயம்புத்தூர் குமரகுரு பன்முகக் கலை, அறிவியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் இவர் திருநெல்வேலியில் பிறந்தவர். பணியின் நிமித்தமாகச் சொந்த ஊரை விட்டு இடம் பெயர்ந்து கோவையில் வசித்து வருகிறார். இவரது கவிதைகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. முகநூலிலும் கவிதைகள் எழுதி வருகிறார். "நட்சத்திரக் கிழவி" என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். கல்யாண்ஜி, கலாப்ரியா கவிதைகளில் ஈடுபாடு கொண்டவர். சூழலியல் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் செலுத்தி வருகிறார். பயணம் செய்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பயணங்களில் காணும் காட்சிகளைக் கவிதைகளாகப் பிரதியெடுத்து வருகிறார். இவரது கவிதைகள் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, கோவை கலைமகள் கலை, அறிவியல் கல்லூரி மற்றும் வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
கவிதை

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.