
கிரக பாதசாரங்கள்
சூரியன்- 1 -13 மகம், 14 – 27 பூரம், 28 உத்ரம், சிம்மம்.
சந்திரன் - அசுவினி – ரோகிணி.
செவ்- 5 – 10 கிரு, 11 ரோகிணி ரிஷபம்.
புதன் - 2 – 3 உத்ரம், சிம்மம், 4 – 13 உத் – கன்னி, 14 அஸ்தம் கன்னி. 25 ல் வக்ரம்.
குரு - (வ) 8 வரை உதி 4, 9 ல் உத்திரட்டாதி 3 – மீனம்.
சுக்கிரன் - 3 பூசம், 4 – 13 ஆயில்யம், கடகம். 14 – 25 மகம் – சிம்மம், 26 – பூரம் – சிம்மம்.
சனி – 12 வரை அவிட்டம் 2, 13 அவிட் 1 – மகரம். (வக்ரம்) 13 ல் வக்ர நிவர்த்தி.
ராகு - பரணி 3 - மேடம்.
கேது - விசாகம் 1 - துலாம்.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சுகத்தானம் பலம் பெறுவதால் நன்மை. இருப்பினும் ஆவணி 15 தேதிக்கு மேல் மிகுந்த நன்மை அமையும். நோய், எதிரி, வழக்கு, சில கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். வீட்டில் வாக்கு வாதம், கடும் வார்த்தைகள் பேசுவது தவிர்த்தல் நலம். இருப்பினும் சில குறைபாடுகள் இருக்கும். திருமணத்தடைகள், சிலருக்கு எதிர்பாராமால் திடீர் திருமணம், சில இடையூறுகள் அமையும். தந்தையுடன், தொழில், இளைய, மூத்த சகோதரம், இளைய தாரம் முதலியவற்றில் கருத்துப்பிணக்கு, தொல்லைகள், சண்டை, சச்சரவுகள் அமையும். உறவில் திடீர் மரணம் அமையும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தாயாரால், குடும்பத்தால் மகிழ்வு, மேன்மை அமையும். கல்வி, தொழில் வளர்ச்சி, சுற்றுலா முதலிய வெளியூர்ப் பயணங்களில் அலைச்சல், செலவினங்கள், மகிழ்ச்சி, சில தடைகள் ஆகியன அமையும். கேளிக்கை, உல்லாசம், மகான்களின் தரிசனம், செவ்விலங்குகளினால் கண்டம், விபத்து ஆகியன அமையும். தந்தை, தொழிலில் கருத்துப்பிணக்கு, வில்லங்கம் தகராறு அமையும். இளைய சகோதிரத்தால், ஆடை ஆபரணச்சேர்க்கை ஆகியவற்றால் மன மகிழ்வு அமையும். தனவரவில், குடும்பத்தில், அறிவில் சில குழப்பங்கள் தடைகள் வந்து விலகும். கரும காரியம் நிகழும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
15 தேதிக்கு மேல் வளர்ச்சி, முன்னேற்றம், குடும்பம், வசதி வாய்ப்புகள், தனவரவு, எதிரி, கடன், வம்பு, வழக்கு, நோய்களில் இருந்து வந்த தடைகள் விலகி நன்மையைப் பெறுவீர். மனம் ஆன்மீகத்தில் இலயித்தல், தொழிலில் பல்வேறு பல நிலைகளில் வருமானம் அமையும். கவனம் தேவை. தந்தையாருடன் கருத்துப்பிணக்கு அமையும். வளர்ச்சி, முன்னேற்றம், தொழிலில் இருந்து வந்த தடைகள் இம்மாத இறுதில் யாவும் பெரும் நன்மையாய் நல்ல உயர்வு நிலையில் சிறப்பாய் அமையும். இளைய சகோதிரத்தால் மகிழ்வு, கௌரவம் அமையும். மூத்த சகோதிரம், இளைய தாரத்துடன் கருத்து மாறுபாடு அமையும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வளர்ச்சி, திருமணத்தில், முன்னேற்றத்தில் சில தடைகள், குடும்பத்தில் தனவரவு, மகிழ்வு, பெயர், புகழ், கௌரவம், ஆடை ஆபரணச்சேர்க்கை, குழந்தைகள் வழி மகிழ்வு ஆகியன அமையும். மூத்த சகோதிரம், இளைய சகோதிரம், இளைய தாரம் ஆகிய வழி கருத்துப்பிணக்கு அமையும். தாயாருக்கு உடல் நலிவு, அறுவை சிகிச்சை முதலியன ஏதாவது அமையலாம். கரும காரியம் நிகழும். திருமணத்தில், வளர்ச்சி, முன்னேற்றத்தில் தடைகள் அமையும். தொழிலில் பல்வேறு பல நிலைகளில் வருமானம் அமையும். கவனம் தேவை.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
முன் கோபம், கௌரவம், பெயர், புகழ், மரியாதை, அரசாங்கத்தால் ஆதாயம், நன்மை, சிறப்புகள் அமையும். குழந்தைகள், வெளியூர்ப்பயணம், குடும்பத்தார் வழி இருந்து வந்த தடைகள், சிரமங்கள் விலகி நன்மையாய் மகிழ்வாய் அமையும். இளைய சகோதிரத்துடன் கருத்து மாறுபாடு அமையும். தாய்மாமன், கடன், வம்பு, வழக்கு, திருமணம், வளர்ச்சி, முன்னேற்றம் வழி சில தடைகள் அமையும். வெளியூர்ப்பயணங்கள், சிறந்த தனவரவு, தாயாரால், குடும்பத்தால் மனமகிழ்வு ஆகியன 15 தேதிக்கு மேல் சிறப்பாய் அமையும். கரும காரியம் நிகழும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
செய்யும் தொழிலில், வளர்ச்சி, முன்னேற்றத்தில் தடைகள் நிலவும். வாழ்வில் பற்றற்ற நிலை காணப்படும். விட கண்டங்கள், விரதமிருத்தல், திடீரென இரத்த அணுக்கள் ஏற்ற இறக்கத் தினில் அமைதல், உடல்நலனில் கவனம் தேவை. குழந்தைகள், தாய்மாமன், கடன், வழக்கு, நோய், எதிரி வழி சில இடையூறுகள் காணப்படும். இலாபம், மூத்த சகோதரி, இளைய தாரம், வளர்ச்சி, முன்னேற்றம், இளைய சகோதரி, ஆடை ஆபரணச் சேர்க்கை வழி இருந்து வந்த தடைகள் விலகி நன்மை அமையும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
அரசாங்க ஆதாயங்கள், இலாபங்கள், கௌரவம், மேன்மைகள் அமையும். மனம் பேதலித்து நிற்றல், சிலருக்கு சித்தப்பிரமை, மனம் அமைதியின்மை, பல முன்னேற்றத் தடைகள், இளைய சகோதிரத்துடன், தாய்மாமன், கடன், வழக்கு வழி கருத்து மாறுபாடு, மனஸ்தாபங்கள் இருக்கும். தொழிலில், திருமணத்தடைகள், தந்தையாருடன் வெளியூர்ப்பயணங்களில் அலைச்சல், செலவினங்கள், ஆகியன யாவும் 15 தேதிக்கு மேல் விலகி நன்மையாய் முடியும். தாயாருடன், குழந்தைகளுடன் கருத்துப்பிணக்கு ஆகியன அமையும். கரும காரியம் நிகழும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தந்தை, இலாபம், மூத்த சகோதிரம், இளைய தாரம் வளர்ச்சி, முன்னேற்றம் வழி இருந்து வந்த தடைகள் யாவும் 19 தேதிக்குப் பின்னர் விலகி நன்மை வெகு சிறப்பாக அமையும். இளைய சகோதிரம், தாயார், குடும்பத்தார் வழி சிரமங்கள் நிலவும். கரும காரியம் நிகழும். விட கண்டங்கங்கள், கருவிலங்குகளினால் ஆபத்து, ஆலய ஆன்மீக தரிசனங்கள், வெளியூர் ஆலய பயணங்கள், வாழ்வினில் பற்றற்ற நிலை, உறக்கமின்மை, மன அமைதி ஆகியன அமையும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பத்தார், தனவரவு, இளைய சகோதிரம் ஆகியவற்றில் சில தடைகள் காணப்படும். சாதகர், வளர்ச்சி, தொழில், திருமணம், முன்னேற்றம், வெளியூர்ப்பயணம் ஆகியவற்றின் வழி இருந்து வந்த தடைகள் யாவும் 15 தேதிக்கு மேல் விலகி நன்மையாய் முடியும். மூத்த சகோதிரம், இளைய தாரம், குழந்தைகள் வழி சில இடையூறுகள் அமையும். குழந்தைகள் வழி வெளியூர்ப்பயணங்கள் அமையும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
உடலில், தனவரவில் சில தடைகள் இருக்கும். இளைய சகோதிரம், வெளியூர்ப் பயணங்களில் தடைகள் நிலவும். 15 தேதிக்கு மேல் விலகி தொழில், குழந்தைகள், வளர்ச்சி, முன்னேற்றம், தந்தையார், கடன், வழக்கு, தாய்மாமன், இலாபம், மூத்த சகோதிரம், இளைய தாரம் வழி நன்மைகள், ஆன்மீகம் தொடர்ந்த நிலைகளில் மகிழ்வு, சிறந்த எதிர்பாராத மகான்களின் தரிசனம், சிறந்த அரசாங்க வழி இலாபங்கள் ஆகியன வெகு சிறப்பாய் அமையும். சிலருக்கு குடும்பத்தில் சண்டை சச்சரவுகள், தாயாருக்கு சுகமின்மை, அறுவை சிகிச்சை, அவருக்கு மரண கண்டங்கள், கரும காரியம் நிகழ்வு ஆகியன அமையும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பத்தில், தனவரவில், மூத்த சகோதிரம், இளைய தாரம் ஆகிய வழிகளில் தடைகள், மன உளைச்சல்கள், கருத்து மாறுபாடு ஆகியன காணப்படும். பெற்றோர்க்கு உடல் சுகமின்மை, சாதகருக்கு உடல் சுகமின்மை அமையும். இம்மாதம் 15 தேதிக்கு மேல் வளர்ச்சி, முன்னேற்றம், உடல் நலனில் முன்னேற்றம், தொழில் ஆகியவற்றில் நல்ல நிலை அமையும். இளைய சகோதிரத்தால் நன்மை, ஆடை, ஆபரணச்சேர்க்கை ஆகியன சிறப்பாய் அமையும். மகான்கள் வழி நன்மை, ஆசிகள், சிறப்பு ஆலயத் தரிசனங்கள் ஆகியன அமையும். கரும காரியம் நிகழும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வளர்ச்சி, முன்னேற்றம், தொழில் ஆகியவற்றில் இருந்து வந்த தடைகள் 15 தேதிக்கு மேல் விலகி நன்மை அமையும். குழந்தைகள் வழி மகிழ்வு, திருமணம், தாயாருக்கு உடல் சுகம், தந்தை வழி நன்மை ஆகியன அமையும். இலாபம், மூத்த சகோதரி, இளைய தாரம் ஆகிய வழி கருத்துப் பிணக்கு காணப்படும். குடும்பத்தில் கடும் வாக்குவாதம், சண்டைகள், பிரிவினைகள், விட கண்டங்கள் ஆகியன நிலவும். ஆன்மீக வழிபாடு, மௌன விரதம் மிகுந்த நன்மையைத் தரும். கரும காரியம் நிகழும்.
* * * * *