
கிரக பாதசாரங்கள்
சூரியன்- 3 - 9 உத்ரம், 10 – 22 அஸ்தம், 23 – சித், கன்னி.
சந்திரன் - மிருக – புனர்.
செவ்- மிருகசீரிடம் 6 - 19 ரிஷபம், 20 – மிது.
புதன் - (வ) உத்ரம். 2 – 15. 16 ல் வக்ர நிவர்த்தி. 21 – 26 வரை உத்ரம், 27 அஸ்தம் – கன்னி.
குரு - (வ) 6 உட் 2 மீனம்.
சுக்கிரன் - 2 - 3 பூரம், 4 – 6 உத்ரம் – சிம்மம். 7 – 14 உத்ரம், 15 - 25 அஸ்தம், 26 சித் – கன்னி.
சனி – அவிட்டம் 1 மகரம். புரட் 30
ராகு - பரணி 3 - மேடம். புரட் 30 பரணி – 2 மேடம்.
கேது - விசாகம் 1 - துலாம். சுவாதி 4 துலாம்.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தாயாரால் நன்மை, மன மகிழ்வு அமையும். வீட்டு விசேடங்கள், சுப நிகழ்ச்சிகள், உபயோகப் பொருட்கள் வாங்குதல், மகான்களின் ஆசி, கடன், வம்பு, வழக்குகளில் இருந்து விடுபடல், இளைய சகோதிரத்தால் ஆதாயம், இலாபம், நன்மைகள், புத்திரர்கள் வழி மகிழ்வு ஆகியன அமையும். உடல் நலனில் முன்னேற்றம் காணப்படும். கடின உழைப்பு, தொழிலில் கடின நிலை, அதனால் சிறந்த இலாபங்கள், மூத்த சகோதிரத்தால், இளைய தாரத்தால் நன்மை அமையும். வீட்டில் முன் கோபம், கடும் வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். முறையற்ற காதல் விவகாரங்களைத் தவிர்க்கவும். சில இடையூறுகள் காணப்படும். கரும காரியம் நிகழும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிலருக்குத் திருமணம், வீட்டில் சுப விசேடம், உயர் கல்வி நிலை ஆகியன அமையும். கல்வி, வளர்ச்சி, முன்னேற்றம், வீட்டில் சுப நிகழ்வுகள், உயர் கல்வி முதலியன சிறப்பாய் அமைதல், சிலருக்கு புத்திரப்ப்ராப்தம், இளைய சகோதிரத்தினால் நன்மை, பொன், பொருள், ஆடை ஆபரணச் சேர்க்கையினால் நன்மை, சிறந்த தன வரவால், புத்திரர்களால் மகிழ்வு, அவர்கள் வழி நன்மை, தந்தையினால், தொழிலினால் மன மகிழ்வு, நன்மை, மகான்களின் ஆசி ஆகியன கிடைக்கும். செவ்விலங்குகளினால் ஆபத்து, விட தேவதைகளை வணங்குதல் நன்மை தரும். உறக்கமின்மை, திடீர் பயணங்களில் அலைச்சல், செலவினங்கள் காணப்படும். மூத்த சகோதிரம், இளைய தாரத்தால் சில இடையூறு அமையும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிறந்த தனவரவு, குடும்பத்தில் மகிழ்வு, வீட்டில் மகிழ்வு, வீட்டு விசேடங்கள், சுப நிகழ்ச்சிகள், உபயோகப் பொருட்கள் வாங்குதல், மகான்களின் ஆசி, கடன், வம்பு, வழக்குகளில் இருந்து விடுபடல், தாயாரால் நன்மை, மன மகிழ்வு அமையும். எதிரி, கடன், வம்பு, வழக்கு வழி திடீர் பயணம், செலவினம், பயணத்தில் அலைச்சல் ஆகியன அமையும். தொழில், வளர்ச்சி, முன்னேற்றங்களில் தடைகள் சில காணப்படும். தந்தையால் மன மகிழ்வு, நன்மை ஆகியன அமையும். இளைய சகோதிரம், ஆடை ஆபரணங்களினால் நன்மை. மூத்த சகோதிரம், இளைய தாரத்தால் சில இடையூறு அமையும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து, மேன்மை, வளர்ச்சி நிலை, மேம்பாடு, முன்னேற்றம், இளைய சகோதிரத்தால் ஆதாயம், இலாபம், நன்மைகள், ஆடை ஆபரணங்களினால் நன்மை, பயணங்களில் அலைச்சல், செலவினங்கள், புத்திரர்கள் வழி மகிழ்வு, சிலருக்கு புத்திரப்ப்ராப்தம், கடன், வம்பு, வழக்குகள் வழி தடையுடன் கூடிய நன்மைகள் அமையும். தாயாருக்கு நலிவு, பீடை காட்டும். கரும காரியம் நிகழும். தொழில், புத்திரர், மூத்த சகோதரி வழி நன்மை அமையும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
செலவினங்கள், தொலை துார பயணங்கள், மன மகிழ்வுகள், சிறிது சிரமம் இருப்பினும் நன்மையே. சிறந்த தனவரவு, குடும்பத்தில் மகிழ்வு, மூத்த சகோதரத்தால், இளைய தாரத்தால் இலாபம், நன்மை, குடும்பத்தில் மகிழ்வு, வீட்டில் மகிழ்வு, வீட்டு விசேடங்கள், சுப நிகழ்ச்சிகள், உபயோகப்பொருட்கள் வாங்குதல், இளைய சகோதிரத்துடன் கருத்து மாறுபாடு, தந்தைக்குப் பீடை, கண்டம், சில சிரமங்கள் அவர் வழி அமைதல், வம்பு, கடன், வழக்கு, புத்திரர்கள் வழி சிரமம் இருப்பினும் நன்மையே. பெற்றோர்களினால் இலாபம், நன்மை அமையும். கரும காரியம் நிகழும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து, மேன்மை, வளர்ச்சி நிலை, மேம்பாடு, முன்னேற்றம், இளைய சகோதிரத்தால் ஆதாயம், இலாபம், நன்மைகள், ஆடை ஆபரணங்களினால் நன்மை, மூத்த சகோதரத்தால், இளைய தாரத்தால் இலாபம், நன்மை, குடும்பத்தில் மகிழ்வு ஆகியன அமையும். குடும்பத்தாருடன் உல்லாசப்பயணங்கள், மன மகிழ்வுகள் அமையும். எளிய வகை உணவுகள் நன்மை தரும். விட கண்டங்கள், இரத்த அணுக்கள் திடீர் குறைவு, இரத்த அழுத்தம் ஏற்ற இறக்கம் காணப்படும். புத்திரர்கள், தாய்மாமன், கடன், வம்பு, வழக்கு வழி சிரமம் இருப்பினும் நன்மை அமையும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
அரசாங்கத்தால் ஆதாயம், இலாபம், நன்மை, உயரிய சன்மானம், விருதுகள் செலவினங்களுடன், வெளியூர்ப் பயணங்களுடன் அமையும். காரியத் தடைகள் இருக்கும். முறையற்ற காதல் விவகாரங்களைத் தவிர்க்கவும். சில இடையூறுகள் காணப்படும். தந்தை, மூத்த சகோதரர், இளைய தாரம் வழி இலாபம், நன்மை, ஆதாயம், வெளியூர் பயணங்கள், செலவினங்கள் அமையும். குடும்பத்தார், களத்திரத்தால், வளர்ச்சி, முன்னேற்றத்தால் சில தடைகள், அவமானங்கள், வேதனைகள் காணப்படும். தாயார், புத்திரர் வழி நன்மை, மன மகிழ்வு ஆகியன அமையும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து, மேன்மை, வளர்ச்சி நிலை, மேம்பாடு, முன்னேற்றம், செவ்விலங்குகளினால் ஆபத்து, விட கண்டங்கள், அலைச்சலுடன் கூடிய பயணங்கள், உறக்கமின்மை, வாழ்வில் பற்றற்ற நிலை, வனாந்திரம் அல்லது சிலர் பரதேசம் செல்லுதல், வாழ்வில் பற்றற்ற நிலை, மூத்த சகோதரர், இளைய தாரம் வழி இலாபம், நன்மை, ஆதாயம் ஆகியன அமையும். கரும காரியம் நிகழும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிறப்பான தொழில் அமையும். பணியில் மாறுதல், புதிய பணி, தந்தையார் வழி ஆதாயம், நன்மை, மகான்கள், அரசாங்கம் ஆதாய உதவி இலாபம், நன்மைகள் ஆகியன அமையும். பல அவமானங்களில் இருந்து பாதுகாக்கப் படுவீர். வெளியூர் பயணங்கள், செலவினங்கள் அமையும். குடும்பம், இளைய சகோதிரம் வழி நன்மை அமையும். மூத்த சகோதிரம், இளைய தாரம், புத்திரர்கள் வழி சிரமங்கள் காணப்படும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிலருக்குத் திருமணம், வீட்டில் சுப விசேடம், உயர் கல்வி நிலை ஆகியன அமையும். பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து, மேன்மை, வளர்ச்சி நிலை, முன்னேற்றங்கள், மேம்பாடு, சிறந்த தனவரவு ஆகியன காணப்படும். இளைய சகோதிரம் வழி சில சிரமம் இருக்கும். தாயார் வழி கண்டம், பீடை, உறவில் விரிசல் காட்டும். குடும்பத்தார், தாயார், மூத்த சகோதரத்தால், இளைய தாரத்தால், புத்திரர்களால் இலாபம், நன்மை, மன மகிழ்வு ஆகியன அமையும். தொழிலில் பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து, மேன்மை, உயர் நிலை ஆகியன அமையும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். தாய்மாமன், தகப்பன், வம்பு, கடன், வழக்கு, பூர்வ புண்ணியம் வழி நற் பலன்கள் அமையும். அரசாங்கத்தால் ஆதாயம், இலாபம், நன்மை, உயரிய சன்மானம், விருதுகள் அமையும். கரும காரியம் நிகழும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
கடன், வம்பு, வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். தாய்மாமன் வழி நன்மை அமையும். களத்திரர், புத்திரர் வழி அவமானம் அமையும். சிலருக்கு சிறப்பான தொழில் அமையும். தொழில் வளர்ச்சி, பணி கூடுதல் நிலை முதலியன அமையும். இளைய சகோதிரம், தந்தையார் வழி சிரமம் அமையும். மூத்த சகோதிரம், இளைய தாரம் வழி சில சிரமங்கள் காணப்படும். சிலருக்கு சிக்கலுடன், அவமானத்துடன் சில சம்பவங்கள் நிகழும். புத்திரர்கள், தாரம் வழி சில சிக்கல்கள் ஏற்படும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிலருக்குத் திருமணம், வீட்டில் சுப விசேடம், உயர் கல்வி நிலை ஆகியன அமையும். பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து, மேன்மை, வளர்ச்சி நிலை, முன்னேற்றங்கள், மேம்பாடு, மகான்கள், அரசாங்கம் ஆதாய உதவி இலாபம், நன்மைகள், உயரிய சன்மானம், விருதுகள் அமையும். புத்திரர்கள் வழி மகிழ்வு, சிலருக்கு புத்திரப் ப்ராப்தம் அமையும். மூத்த சகோதரத்தால், இளைய தாரத்தால், இலாபம், நன்மை அமையும். குடும்பத்தில் கடும் வாக்குவாதம் அமையும். விட கண்டங்கள், இரத்த அணுக்கள் திடீர் குறைவு, இரத்த அழுத்தம் ஏற்ற இறக்கம் காணப்படும். தாயார், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம், தாய்மாமன், வழக்கு வழி சில தடைகள் இருப்பினும் நன்மை அமையும்.
* * * * *