வெண்தாமரை விருதுகள் - படத்தொகுப்பு
உ. தாமரைச்செல்வி

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் 20 ஆம் ஆண்டு வெற்றிப் பயணத்தில், முத்துக்கமலம் மின்னிதழில் தொடர்ந்து எழுதி வருபவர்களிலிருந்து அதிக அளவில் பங்களிப்பு வழங்கிய சில படைப்பாளர்களைத் தேர்வு செய்து, ‘வெண்தாமரை விருது’ வழங்குவதென்று முடிவு செய்யப் பெற்றது.
முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் தேர்வு செய்த வெண்தாமரை விருதாளர்கள் அனைவருக்கும் தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியின் முதல்வர் முனைவர் ஹெச். முகமது மீரான் அவர்கள் பயனாடை அணிவிக்க, தேனி மாவட்ட மூத்த எழுத்தாளர் தமிழ்ச்செம்மல் தேனி சீருடையான் அவர்கள் விருதினை வழங்கிச் சிறப்பித்தார்.
முனைவர் சி. சேதுராமன், தமிழ்த்துறைத் தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
எழுத்தாளர் ஆர்னிகா நாசர் அவர்கள், (நல அலுவலர் (பணி நிறைவு), அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்), கோயம்புத்தூர்.
திரு சிதம்பரம் ரவிச்சந்திரன் அவர்கள், சிதம்பரம்.
முனைவர் தி. கல்பனாதேவி (முனைவர் ஸ்ரீவாலாம்பிகை) அவர்கள், (கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, திரு கோவிந்தசமி அரசினர் கலைக்கல்லூரி, திண்டிவனம்) அச்சிறுப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்.
முனைவர் க. மங்கையர்க்கரசி அவர்கள், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, மீனம்பாக்கம், சென்னை.
முனைவர் பி. வித்யா அவர்கள், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, நாடார் மகாஜன சங்கம் எஸ் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, நாகமலைப்புதுக்கோட்டை, மதுரை.
திரு நௌஷாத்கான் லி. (அபுதாபி), சோழபுரம், கும்பகோணம்.
வெண்தாமரை விருது பெறும் அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்...!
விருது வழங்கப் பெற்ற நாளில் விருது பெற்றுக் கொள்ள முடியாதவர்கள்
1. பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்கள், தலைமையாசிரியர் (பணி நிறைவு), ஓசூர்.
2. திரு செண்பக ஜெகதீசன் அவர்கள், (நிருவாக அதிகாரி (பணி நிறைவு), அருள்மிகு நெல்லையப்பர் கோயில், திருநெல்வேலி), மருத்துவாமலை, கன்னியாகுமரி மாவட்டம்.
3. கவிஞர் பாரியன்பன் நாகராஜன் அவர்கள், குடியாத்தம், வேலூர் மாவட்டம்.
4. திரு ஆர்.எஸ். பாலகுமார் அவர்கள், சென்னை.
(இவ்விழாவில் விருதைப் பெற்றுக் கொள்ள இயலாதவர்களுக்கு அடுத்து வரும் நிகழ்வில் விருதுகள் வழங்கப்பெறும்)
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|