செந்தாமரை விருதுகள் வழங்கல் - படத்தொகுப்பு
உ. தாமரைச்செல்வி

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் 20 ஆண்டு வெற்றிப் பயணத்தில், முத்துக்கமலம் மின்னிதழின் வளர்ச்சிக்காகப் பல்வேறு வழிகளில் உதவியவர்கள், முத்துக்கமலம் மின்னிதழுடன் இணைந்து செயல்பட்டவர்கள் போன்றவர்களைச் சிறப்பிக்கும் நோக்கத்துடன் அவர்களுக்கு ‘செந்தாமரை விருது’ வழங்குவதென்று முடிவு செய்யப் பெற்றது.
முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் தேர்வு செய்த ‘செந்தாமரை விருது’ பெற்ற அனைவருக்கும் தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியின் முதல்வர் முனைவர் ஹெச். முகமது மீரான் அவர்கள் பயனாடை அணிவிக்க, தேனி மாவட்ட மூத்த எழுத்தாளர் தமிழ்ச்செம்மல் தேனி சீருடையான் அவர்கள் விருதினை வழங்கிச் சிறப்பித்தார்.
திரு கோ. சந்திரசேகரன் அவர்கள், எழுத்தாளர் மற்றும் இணைய தள வடிவமைப்பாளர், சென்னை.
திரு சு. இளங்கோவன் அவர்கள், வழக்கறிஞர், மதுரை.
முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்கள், இணைப்பேராசிரியர் (பணி நிறைவு), தூய வளனார் கல்லூரி, திருச்சி.
முனைவர் நா. சுலோசனா அவர்கள், உதவிப்பேராசிரியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
முனைவர் மா. பத்மபிரியா அவர்கள், தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி.
முனைவர் ம. தேவகி, தமிழ்த்துறைத் தலைவர், நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), வடபுதுப்பட்டி, தேனி.
முனைவர் அ. காமாட்சி அவர்கள், (பேராசிரியர் (பணி நிறைவு), மொழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்), நிலக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்.
முனைவர் பெ. முருகன் அவர்கள், தமிழ்த்துறைத் தலைவர், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரி (தன்னாட்சி), உத்தமபாளையம்.
முனைவர் இரா. முருகானந்தம் அவர்கள், கௌரவ விரிவுரையாளர், அரசு கலைக் கல்லூரி, மேலூர், மதுரை மாவட்டம்.
செந்தாமரை விருது பெறும் அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்...!
விருது வழங்கப் பெற்ற நாளில் விருது பெற்றுக் கொள்ள முடியாதவர்கள்
1. முனைவர் துரை. மணிகண்டன் அவர்கள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நவலூர்குட்டப்பட்டு, திருச்சி.
2. திருமதி சுகந்தி நாடார் அவர்கள், நிறுவனர் மற்றும் தலைவர், தமிழ் அநிதம், அமெரிக்கா.
3. முனைவர் சி. சிதம்பரம் அவர்கள், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம், திண்டுக்கல் மாவட்டம்.
4. முனைவர் த. கண்ணன் அவர்கள், பேராசிரியர் மற்றும் தலைவர், அரிய கையெழுத்துச்சுவடித்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
6. முனைவர் கோ. செந்தில்செல்வி அவர்கள், தமிழ்த்துறைத் தலைவர், அக்சிலியம் கல்லூரி (தன்னாட்சி), காட்பாடி, வேலூர்.
7. திரு சு. விக்னேஷ் அவர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரி, பேரூராதீனம் பேரூர், கோயம்புத்தூர்.
(இவ்விழாவில் விருதைப் பெற்றுக் கொள்ள இயலாதவர்களுக்கு அடுத்து வரும் நிகழ்வில் விருதுகள் வழங்கப்பெறும்)
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|