வாழ்வுக்கு அழகு!
அம்மா அம்மா தினம் உனக்கு
அன்பாய் வணக்கம் சொல்லிடுவேன்!
அப்பா அப்பா தினம் உனக்கு
தப்பாமல் அதனைச் சொல்லிடுவேன்!
குருவே குருவே தினம் உமக்கு
குளிர்ந்தே வணக்கம் சொல்லிடுவேன்!
தாத்தா தாத்தா தினம் உனக்கு
தித்திப்பாய் வணக்கம் சொல்லிடுவேன்!
பாட்டி பாட்டி தினம் உனக்கு
பாசமாய் வணக்கம் சொல்லிடுவேன்!
என்னைப் படைத்த ஆண்டவனுக்கு
என்றும் வணக்கம் சொல்லிடுவேன்!
வணக்கம் சொல்லி வாழ்த்தப் பழகு!
இணக்கமாய் என்றும் வாழ்வதே அழகு!!
- ஜெயந்தி நாகராஜன், ஊரப்பாக்கம், சென்னை.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.