ஆ… கலாம் ஆகலாம்...!!
அன்புடன் பழகலாம்
ஆர்வத்துடன் உழைக்கலாம்
இன்சொல் உரைக்கலாம்
ஈகையில் சிறக்கலாம்
உயர்ந்த பதவி வகிக்கலாம் - கிரியா
ஊக்கியாய் நிற்கலாம்
எளிமையாய் இருக்கலாம்
ஏறு போல் நடக்கலாம்
ஐயங்களை நீக்கலாம்
ஒற்றுமையை வளர்க்கலாம்
வேற்றுமையைப் போக்கலாம்
கனவுலகில் மிதக்கலாம்
கனிமரமாய் இனிக்கலாம்
வல்லரசாய் ஆக்கலாம்
செடிகளை விதைக்கலாம்
மரங்களை வளர்க்கலாம்
மதங்களைக் கடக்கலாம்
மனங்களைப் பிடிக்கலாம்
வள்ளுவனைப் படிக்கலாம்
உலகை வியக்க வைக்கலாம்
பண்புடனே ஒழுகலாம்
ஆ கலாமை வியக்கலாம்
ஆகலாம் கலாமைப் போல்
- முனைவர் ஜெயந்தி நாகராஜன், ஊரப்பாக்கம், சென்னை.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.