தம்பி, தங்கைகளே...!
அன்பை விதைத்த நேருவின்
ஆளுமையை நினைத்துப்பாரு தம்பி!
குழந்தைகளை நேசித்த மாமாவின்
குணத்தை சுவைத்துப் பாடு தங்கை!
காத்திருக்கும் பாரதம் உனக்கானது
நம்பிக்கையாய் விழித்துப்பாரு தம்பி!
பாரோங்கும் பாரத தேசத்தின்
தூண்களாய் நீயும் மாறு தங்கை!
முட்களில் மலரும் ரோஜாவாய்
மகிழ்வுடன் நித்தமும் வாழு தம்பி!
தடைகள் யாவும் படிகளாகும்
தளர்வின்றி நடை போடு தங்கை!
சிதறடிக்கும் எண்ணங்கள் யாவையும்
சீர்ப்படுத்தப் பழகு தம்பி!
சிறகடிக்கும் பறவையாய்ப் பறந்து
விண்ணைத் தொடுவாய் தங்கை!
- முனைவர் அ. சுகந்தி அன்னத்தாய், முடிச்சூர், சென்னை 48.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.