அ. சுகந்தி அன்னத்தாய்
திருநெல்வேலி மேல இலந்தைக்குளத்தைச் சேர்ந்த சி. அதிகாரிசாமி - அ.சுசிலா அன்னத்தாய் இணையரின் மகளான இவர், சென்னை, குரோம்பேட்டை ஸ்ரீமதி தேவ்குன்வர் நானாலால் பட் மகளிர் வைணவக் கல்லாரியின் தமிழ்த்துறையில் (சுய உதவிப் பிரிவு) உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தமிழ் மொழி மேல் ஆர்வம் கொண்ட இவர், தமிழை முதன்மைப்பாடமாக எடுத்துத் திருநெல்வேலி மாவட்டம், மேலநீலிதநல்லூர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பையும், பாளையங்கோட்டை, சாராள் தக்கர் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பையும் படித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். கல்லூரி நாட்கள் முதல் எழுதுவதில் ஆர்வம் கொண்ட இவர், திருநெல்வேலி அகில இந்திய வானொலியின் இளையபாரத நிகழ்வில் கலந்து கொண்டு கவிதை மற்றும் இலக்கியச் சிந்தனையினை வழங்கியுள்ளார். தினகரன் இதழ் வெளியிட்ட கல்லூரிக் கடலின் நன்முத்துக்கள் வரிசையில் சாராள் தக்கர் கல்லூரி சார்பாக இவர் பெயர் இடம் பெற்றது. முத்துக்கமலம் இணைய இதழ் உட்படப் பல்வேறு இதழ்களில் இவரது கவிதை, கட்டுரை, துணுக்குகள் வெளிவந்துள்ளன. ஐந்து பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு கட்டுரைகளை வழங்கியுள்ளார். பல்வேறு ஆய்விதழ்களில் இவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. 'தொடர்கதை தொடரும் கதை' , 'ஊத்துமலை ஜமீன்' என்று இரு நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.
தேன் துளிகள் - கவியரங்கம் - கவிதை
கவிதை
குறுந்தகவல்
சிறுவர் பகுதி - கவிதை
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.