சிட்டுக்குருவி
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி
எங்கே போறீங்க?
கூட்டில் இருக்கும் குஞ்சுகளைப்
பார்க்கப் போறோங்க
வயக்காட்டில் நெல்மணிகள்
எடுத்து வந்தீரா?
வயிறு முழுக்க உண்டுவிட்டு
மறந்து விட்டீரா?
கொஞ்சமாகச் சாப்பிட்டுக்
கொண்டு வந்தோமே
கூட்டமாக உண்ண எண்ணிப்
பறந்து வந்தோமே
சின்னச்சின்னப் பறவையெல்லாம்
சிறகடித்தது
வண்ணவண்ணப் பறவைகளும்
வந்து நிக்குது
வயதான குருவியெல்லாம்
மகிழ்ச்சி அடைந்தன
கொத்திக்கொத்திச் சாப்பிட்டு
மனம் நிறைந்தன!
- நெல்லை அன்புடன் ஆனந்தி, மிச்சிகன், வட அமெரிக்கா
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.