நெல்லை அன்புடன் ஆனந்தி

தமிழ்நாட்டில் திருநெல்வேலியில் பிறந்து, அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் நகரில் வசித்து வரும் இவர் அங்கிருக்கும் நிறுவனம் ஒன்றில் அலுவலக மேலாளராகப் பணியாற்றி வருகிறார். தமிழ் மொழி மேல் கொண்ட ஆர்வத்தில் கவிதைகள், கட்டுரைகள் என்று எழுதி வரும் இவர், இதழாசிரியர், தன்னார்வலத் தமிழாசிரியர், நிகழ்வுத் தொகுப்பாளர் மற்றும் தயாரிப்பாளர், பட்டிமன்றப் பேச்சாளர் மற்றும் நடுவர், கதை சொல்லி என்று தனக்கென்று தனித்துவத்தையும், பன்முகத்தன்மையையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இவரது படைப்புகள், முத்துக்கமலம், கதம்பம், தென்றல், வளரி, வல்லினச் சிறகுகள், இனிய உதயம், மக்கள் முரசு, தாரகை, நெல்லை டைம்ஸ், ஆனந்தச்சந்திரிகை, ஆக்கம், தமிழ்ப்பல்லவி, கொக்கரக்கோ, சித்திரகுப்தன், அன்புப்பாலம் என்று பல்வேறு இதழ்களில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதுவரை இவர் 20 நூல்களை எழுதியிருக்கிறார். 18 நூல்களைத் தொகுத்தளித்திருக்கிறார். இவரது படைப்புகள் 20 தொகுப்பு நூல்களில் இடம் பெற்றிருக்கின்றன.
சங்கப்புலவர் விருது, பாரதியார் விருது, உ.வே.சா. விருது,உவமைக்கவிஞர் சுரதா விருது, தங்க மங்கை விருது, சொல்லின் செல்வி விருது, சமுதாயச்சிற்பி விருது, ஈரோடு தமிழன்பன் 80 விருது, சிங்கப்பெண் விருது, முத்தமிழ்த்திலகம் விருது, அருந்தமிழ் தாரகை விருது என்று பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கவிதை
சிறுவர் பகுதி - கவிதை

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.