மடமையைக் கொளுத்துவோம்
சமக்கல்வித் திட்டத்தைச் சட்டமாக்காதவரை
பட்டப்படிப்பைப் பகல் கொள்ளையாக்குவோரை
மாணவனின் நம்பிக்கையை மரணித்தவரை
சுயமுயற்சியைச் சுக்கு நூறாக்கியவரை
பெண்கள் கற்புக்கு பங்கம் விளைவிப்போரை
பெண்ணடிமை இன்னும் பேசித்திரிவோரை
பெண்ணைப் போகப் பொருளாய்ப் பார்ப்போரை
திருநங்கையின் மனம் நோகச் செய்வோரை
அரசியலைத் தனக்கு அடிமை செய்வோரை
அரசுக்கு வரிப்பணம் கட்டத் தவறியோரை
தினக்கூலியின் உழைப்பைத் தின்போரை
தெருக்கடையில் பேரம் பேசுபவரை
விவசாயியின் வேர்வையை உறிஞ்சுவோரை
வீட்டுவேலை செய்பவரிடம் வீரம் காட்டுவோரை
வெட்டியாய்ப் பொழுது போக்கும் வீணரை
வேதங்கள் பெயரால் ஏமாற்றும் வித்தகர்களை
சாதிக்கப் பிறந்தவனை சவட்டிக் கழிப்போரை
சமாதானமெனும் பெயரில் அரசியல் செய்வோரை
அச்சம் வரவைக்கும் அன்றாட அவலங்களை
அடித்து விரட்டுவோம்... மடமையைக் கொளுத்துவோம்...
- அன்புடன் ஆனந்தி, மிச்சிகன், வட அமெரிக்கா.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.