கொக்கரக்கோ
கூட்டமாகப் பறவைகளும்
சிறகடிச்சுப் பறக்குது
கொக்கரக்கோ கொக்கரக்கோ
கொண்டச்சேவல் கூவுது
அதிகாலைச் சூரியனும்
எட்டிஎட்டிப் பாக்குது
ஆத்தங்கரை மணலோரம்
நண்டு பதுங்கி ஓடுது
பண்ணையில பால்வாங்க
பாதி சனங்க போகுது
பள்ளிக்கூடம் போகலேன்னு
பாப்பா அடம் பிடிக்குது
வயக்காட்டு வேலைக்குத்தான்
வண்டியெல்லாம் போகுது
வைக்கப்புல்லு மேல ஏறி
ஆட்டுக்குட்டி குதிக்குது
குக்கரிலே விசிலடிக்க
பாப்பா விழிக்கப் போகுது
அம்மா ஓடி அணைத்திடவே
பாப்பா மெல்ல தூங்குது!
- நெல்லை அன்புடன் ஆனந்தி, மிச்சிகன், வட அமெரிக்கா.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.