இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
சமூகம்

சடங்குமுறைகள் - இலங்கையின் புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம்
பற்றிய ஒரு சமயம் சார் சமூகவியல் நோக்கு

செல்வி. ராஜேந்திரன் கிருஷிகா
தற்காலிக உதவி விரிவுரையாளர்,
சமூக விஞ்ஞானங்கள் துறை (சமூகவியல் மற்றும் மானிடவியல்),
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை


கட்டுரையின் தொடர்ச்சி - பகுதி 2

2. கலந்துரையாடலும் பெறுபேறுகளும்

2.1 சடங்கு முறைகள்

புன்னைச்சோலை பத்திரகாளிஅம்மன் ஆலயமானது, தற்போது ஆகம முறைப்படி அமைக்கப்பட்டுக் கும்பாபிசேகம் செய்யப்பட்டிருந்தாலும், பத்ததி முறைப்படியே வழிபாடு நடத்தி வருகின்றனர். இது “சடங்கு” என்றே அழைக்கப்படுகின்றது. இச்சடங்கில் உடுக்கடித்தல், காவியம் பாடல், தேவாதிகளை உருவேற்றி ஆடச்செய்தல் என்பன இடம் பெறும். இவ்வழிபாட்டின் ஆரம்பத்தில் இருந்து இறுதிநாள் வரை பொங்கல் பொங்கிப் படைக்காது, பல வகைப் பழங்களை நிவேதனமாகப் படைப்பர். இது “மடை” என்று அழைக்கப்படும் வேப்பிலை, கமுகம் பாளை, தாமரைப்பூ முதலியவற்றைக் கொண்டு மடையை அலங்கரிப்பர். பின்பு, கற்பூர தீபமேற்றி மந்திர உச்சாடனத்துடன் பூசைகள் ஆரம்பமாகும். பூசை முடியும் கட்டத்தில் உடுக்கடித்துக் காவியம் பாடி கைதட்டி பூசையினை முடித்து வைக்கின்றனர். பின் திருநீறு, தீர்த்தம், சந்தனம், குங்குமம் போன்ற பிரசாதப் பொருட்கள் வழங்கப்படும்.

ஆண்டு உற்சவமானது ஆனி மாதத்தில் ஓர் ஞாயிற்றுக் கிழமை ஆரம்பமாகி வெள்ளிக்கிழமை தீ மிதிப்பு இடம் பெறக் கூடியவாறான ஆறு நாட்கள் சடங்குகள் இடம் பெறுகின்றன. ஆறாம் நாள் சடங்கில் தீ மிதிப்பேப் பிரதானமானது. நிறைவு பெறும். ஏனைய ஆலயங்களில் காணப்படுவது போன்று திதி இவ்வாலயத்தில் இல்லை. இதனால், கண்ணகி அம்மனுக்குக் கதவு திறந்து ஒரு வாரத்தில் இவ்வாலயத்தின் கதவு திறக்கப்படும். இச்சடங்கானது கிராமியச் சடங்கு முறையில் பாரம்பரியமாக வழிபட்டு வருகின்றன. வருடாந்த உற்சவச் சடங்கின் போது இடம் பெறும் சடங்குமுறைகள் வருமாறு:

இச்சடங்குகள் அனைத்தும் பத்ததி முறையிலேயே நடைபெறும்.

1 ஆம் நாள் சடங்கு - கதவுதிறத்தல், அம்மன் எழுந்தருளப் பண்ணுதல், கும்பம் கொண்டுவரல்

2 ஆம் நாள் சடங்கு - பட்டெடுத்து வருதல்

3 ஆம் நாள் சடங்கு - கல்யாணக்கால் வெட்டுதல், கன்னிமார் பிடித்தல்.

4 ஆம் நாள் சடங்கு - எரிக்கம் இலை, கள்ளி வெட்டும் சடங்கு, நெல்லுக் குற்றுதல்

5 ஆம் நாள் சடங்கு - விநாயகர் பானை ஏற்றுதல், தீ மூட்டுதல்

6 ஆம் நாள் சடங்கு - பலி கொடுத்தல், மஞ்சள் குளித்தலும் தீ மிதித்தலும், பள்ளையச் சடங்கு.


2.1.1 முதலாம் நாள் சடங்கு

இவ்வாலயத்தில் ஆண்டுக்கொரு முறையே மூலஸ்தானக் கதவு திறந்து பூசை நடத்தப்பட்டு வருகிறது. வருடாந்தரச் சடங்கிற்காக ஆனி மாதத்தில் உற்சவத்துக்காகக் கதவு திறக்கப்படுதலையே “கதவு திறத்தல்” என்பர். இங்கு, கதவுதிறத்தல் நாளன்று, “அம்பாள் எடுத்து வரும் நிகழ்வு அல்லது அம்மனை எழுந்தருளப் பண்ணுதல் நிகழ்வு இடம் பெறும். இவ் அம்மனை எடுத்து வரும் நிகழ்வு, ஆலயத்தில் அருகிலுள்ள வீட்டிலிருந்து கொண்டு வரப்படும். அதாவது, கும்பத்தை எடுத்து வருதலை அம்மனைக் கொண்டு வருதல் என்பர். ஆலய நிர்வாகத்தினர் யாராவது ஒருவரது வீட்டைக் கூறினால் அங்கிருந்து இந்நிகழ்வு இடம் பெறும். வருடாவருடம் மாறி மாறி வரும். ஆலயங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் பாதுகாப்புக் கருதியே அம்மன் முகக்களைகளையும் ஆயுதங்களையும் பாதுகாப்பான ஓர் வீட்டில் வைத்துவிட்டு உற்சவம் ஆரம்பித்தும் எடுத்து வந்தனர்.

இந்நிகழ்வு ஆலயத்தை ஆரம்பித்து வைத்த பெரியார் என்பவரை ஞாபகப்படுத்தும் நிகழ்வாக, தலைமுறை தலைமுறையாக ஆண்டு உற்சவத்திற்குக் கதவு திறக்கும் நிகழ்வாக இது நடைபெறுகின்றது. இன்றும் மரபு ரீதியாகப் பின்பற்றப்பட்டு வருகின்றது. மாம்பழம், வாழைப்பழம் சேர்க்கப்பட்டு ஒரு பாத்திரத்தில் இட்டுக் கழுவி எடுக்கப்படும். கும்பங்களுக்கு நூல் சுற்றி அவற்றை மூலஸ்தானத்தில் வைப்பர். மூன்று கும்பங்கள் வைக்கப்படும். அதில் நடுக்கும்பம் பத்திரகாளிக்கும் அருகேயுள்ள கும்பங்கள் மாரியம்மனுக்கும் வீரபத்திரருக்கும் வைக்கப்படும்.

பின் முகக்களை வைத்திருக்கும் வீட்டிற்குச் சென்று தேவாதிகளை ஆடச் செய்து, உடுக்கடித்துக் காவியம் பாடி பூசை முடித்து “பூப்போட்ட பின்”அங்கு வைத்து பூசை செய்யப்பட்ட பின் அவற்றை இரு கைகளாலும் தாங்கிப் பிடித்துக் கொண்டு வரஅவரை இருவர் பிடித்துக் கொண்டு ஆலயத்தை நோக்கி ஊர்வலமாக வருவர். இவருக்குப் பின்னால் வாயைச் சிவப்புத் துணியால் கட்டிய ஓர் இளைஞர் வட்டாமடையைத் நோக்கி வருவார். இவற்றைப் பரம்பரை பரம்பரையாகவே நோக்கி வரும் மரபு காணப்படுகின்றது. வட்டாமடை என்பது தட்டத்தில் வெற்றிலை, பாக்கு, பழம், கமுகம் பாளை, பூக்கள் என்பவற்றை வைத்து ஊர்வலமாகச் செல்லும் தெய்வத்திற்கு உபசாரம் செய்யும் ஒருமங்களப் பொருளாகும். ஊர்வலம் வரும் போது, அவ்வீதியில் இருக்கும் மக்கள் நிறை குட கும்பம் வைத்து வரவேற்பர். இந்நிகழ்வு இரவில் இடம் பெறும். ஆலய வாயிலை அடைந்ததும் மூன்று தெய்வங்களை மந்திரம் ஓதி, தேங்காய் உடைத்து ஆலய வளவில் புகுவர். பின் அவ் ஊர்வலமானது, ஆலய வீதியைச் சுற்றி வந்ததும் கொண்டு வந்த முகக்களைகளை மூலஸ்தானத்திற்குக் கொண்டு சென்று வைக்கப்பட்டு பூசை நடைபெறும். பின் தெய்வங்கள் பந்தலிற்கு வந்து வாக்குச் சொல்லும். ஒரே சமயத்தில் நான்கு, ஐந்து பந்தல்களில் தெய்வமாடுவதனை கூடுதலாகக் காணலாம். வாக்குச் சொல்லி முடிய அன்றைய முதலாம் நாள் சடங்கு முடிவுறும்.

2.1.2 இரண்டாம் நாள் சடங்கு

இரண்டாம் நாள் சடங்கானது, புன்னைச்சோலை இளைஞர்களால் நடாத்தப்படுகின்றது. இச்சடங்கின் போது, மாமாங்கப் பிள்ளையார் கோயிலில் இருந்து சடங்கிற்குரியவர்கள் பட்டெடுத்து வருவர். மேளக்கச்சேரிகள் முழங்க காவடி எடுத்துக் கொண்டு தாம்பாளத்தில் பட்டு தட்சணைப் பொருட்கள் என்பவற்றை ஊர்வலமாகக் கொண்டு வந்து பத்திரகாளியம்மன் ஆலயத்தைச் சுற்றியதும் அவற்றைப் பூசாரியிடம் கொடுப்பர். அதனைப் பூசாரிஅம்மனுக்குச் சாத்திஅன்றைய இரண்டாம் நாள் பூசையினைச் செய்வார். பல ஆண்டுகளுக்கு முன் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புன்னைச்சோலை கிராமத்து மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த பூசையின் போது உரிமைகள் மறுக்கப்பட்டதால் விலகிச் சென்ற சமூகம் மீண்டும் ஓர் இணைப்பினை அவ்வாலயத்துடன் ஏற்படுத்திக் கொண்டுள்ளமையினை இந்நிகழ்வில் காணக்கூடியதாக உள்ளது. மேலும் ஆகமமுறையில் நடத்தப்படும் ஆலயத்திற்கும் பத்ததி முறைப்படி நடத்தப்படும் ஆலயத்திற்கும் இடையில் ஓர் உறவு ஒன்று ஏற்படுவதையும் பரஸ்பரம் பங்கு பற்றுவதையும் இது எடுத்துக் காட்டுகிறது. அதாவது, சமத்துவத்தினை எடுத்துக் காட்டும் தலமாக புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயம் விளங்குகின்றது.

சடங்கின் போது, ஒவ்வொரு நாளும் இரண்டு சாமப் பூசைகள் இடம் பெறும். பகல் பூசையானது மு.ப இரண்டு மணிக்கு ஆரம்பமாகி நடைபெற இரவு பூசையானது பன்னிரெண்டு ஒரு மணியளவில் ஆரம்பமாகி நடைபெறும். முதல் நாள் சடங்கை விட இரண்டாம் நாள் சடங்கின் போது, தெய்வங்கள் ஆடுவதும் கட்டுச் சொல்லுதலும் இடம் பெறுவதை அவதானிக்கலாம்.


2.1.3 மூன்றாம் நாள் சடங்கு (கல்யாணக்கால் வெட்டுதலும் கல்யாணச் சடங்கும்)

அம்மன் சடங்கின் போது கல்யாணக்கால் வெட்டு முக்கிய நிகழ்வாக நடைபெறுகிறது. சில பத்ததிகளில் கல்யாணக்காற் தோகை என்ற தனிப்பிரிவும் காணப்படுகிறது. கல்யாணக்கால் வெட்டும் போது பூவரசு, வேம்பு, அரசு மரங்களில் ஒன்றின் நேராக வளர்ந்து வருகின்ற கம்பையே தெரிந்தெடுப்பர். விதிமுறைகளுக்கமைய இக்கம்பு வெட்டப்பட்டு ஆலயத்திற்குக் கொண்டு சென்று, கல்யாண மண்டபத்துள் நிறுத்தி நட்டு சோடனை புரிந்து, அவற்றிற்குத் தாலி கட்டும் பூசையும் இடம்பெறும். இவ்வாறு கல்யாணக்கால் வெட்டும் நிகழ்வு பௌத்தர்களின் பத்தினி வழிபாட்டிலும் காணப்படுகின்றது.

அந்த வகையில், புன்னைச் சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்தில் மூன்றாம் நாள் கல்யாணக்கால் வெட்டும் சடங்காக நடாத்தப்படுகின்றது. பி.ப நான்கு மணியளவில் அம்மன் கும்பத்தை ஒருவர் தூக்கியதும், இன்னொருவர் வட்டாமடையினை தூக்கியும் வெள்ளை பிடித்து வர கல்யாணக்கால் ஊர்வலம் ஆரம்பமாகும். தேவாதிகள் ஆடிச் செல்ல அதன் பின்னே கும்பம் வட்டாமடை என்பன செல்கின்றது. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நிறைகுட கும்பமிட்டு அம்பாளை வரவேற்பர். அதில் வேப்பிலை மஞ்சள், குத்துவிளக்கு, குடத்தில் நீர் என்பவை வைக்கப்பட்டிருக்கும். தெய்வம் ஆடுபவர்கள் அவற்றில் நின்று ஆடுவர். பூசாரிமார் அவற்றிற்கு பூசை முடித்துச் செல்வதைக் காணலாம். இந்நிகழ்வு புதன்கிழமை நடைபெறும்.

கலியாணக் கால் வெட்டும் இடத்தை அடைந்ததும், கன்னிக்கால் வெட்டும் மரத்தடியில் கும்பம் வட்டாமடை தூக்கியவர்களும் பூசாரிமார்களும் அன்மித்துச் செல்ல பக்தர்கள் பக்தியுடன் சுற்றி நின்று கல்யாணக்கால் வெட்டும் சம்பவத்தை ஆவலுடன் பார்த்துக் கொண்டு நின்றனர். பூவரச மரத்தடியில் மடை வைத்து பூசை செய்த பின் மரத்தில் ஒரு தெய்வம் ஏறி நேராகக் கம்பினைச் சுற்றி நூல் கட்டி, அக்கம்பினைக் கத்தியால் வெட்டுவர். இவ்வேளையில் அரோகராச் சத்தம் பக்தி உணர்ச்சியினைத் தூண்டுவதாக அமைகின்றது. பின் வெட்டப்பட்ட கம்புகளுக்கு அவற்றில் பட்டைகள் உரிக்கப்பட்டு மஞ்சள் பூசி, வெள்ளைத் துணியினால் சுற்றி அவற்றை தூக்கியவாறு கன்னிமார் பிள்ளைகளின் தோளில் வைத்துத் தாங்கிக் கொண்டு வருவர். இதன் பின், ஆலயத்தை நோக்கியவாறு ஊர்வலம் தொடரும். இவ்வேளைகளில் தெய்வங்களை மந்திரங்களால் கட்டி வீழ்த்துவர் வீழ்த்தப்பட்ட தேவாதிகளை உருவேற்றியே மீண்டும் ஊர்வலத்தைத் தொடங்குகின்றனர். செல்லும் வழியில், ஒவ்வொரு சந்தியிலும் தேங்காய்கள் வெட்டப்படும். இவ்வாறு கல்யாணக்கால் ஊர்வலமானது ஆலயத்தைச் சென்றடைகின்றது.

கொண்டு வரப்பட்ட கலியாணக்கால் மூலஸ்தானத்திற்கு முன்னுள்ள மண்டபத்தில் நட்டுஅலங்கரிப்பார்கள். அதைச் சுற்றி மணவறை போல் சேலைகளைக் கொண்டு அலங்கரித்து, அப்பெண்ணை காளியம்பாளாக பாவனை செய்வர். அதற்கு முன் பூரண கும்பங்களும் மடைகளும் வைக்கப்படும். இம்மடைகளில் பூரண கும்பத்துடன் வெற்றிலை பாக்கு, கமுகம் பாளை, தாமரைப்பூ, வாழைப்பழம், வேப்பிலை கொண்டு அலங்கரிக்கப்படும். அலங்காரங்கள் முடிவுற்றதும் பூசைகள் ஆரம்பமாக நடைபெறும் தெய்வங்கள் ஒவ்வொரு பந்தலிற்கும் சென்று வாக்குச் சொல்லியதும் சடங்குகள் நிறைவுறும். அன்றைய தினம் கன்னிமார் பிடிப்பதும் வழமையாகக் காணப்படுகின்றது.

இக்கன்னிக்கால் சடங்கின் போது பூவரசு கம்பம் நடப்படுவதற்கான காரணம் என்னவெனில், மகிசாசூரனின் தளபதிகள் 40 நாள் யுத்தம் புரிந்தனர். இந்நிலையில் காளி 51 மண்டையோடுகளைப் போட்டு அவர்களுடன் சேர்ந்து யுத்தம் புரிந்தாள். அந்த 40 நாள் யுத்தத்திலும் பணிவிடை புரிந்தது பூவரசி. இந்நன்றிக் கடனுக்காக பூவரசியை நினைவு கூறும் முகமாக பூவரசம் கம்பு நாட்டப்படுகிறது.


2.1.4. நான்காம் நாள் சடங்கு (எரிக்கம் இலை, கள்ளி வெட்டும் சடங்கு)

நான்காம் நாள் எரிக்கம் இலை, கள்ளி என்பன வெட்டும் சடங்கு இடம் பெறும். இச்சடங்கு வியாழக்கிழமை நடைபெறும். இச்சடங்கின் போதும் கும்பம் வட்டமாடை என்பன வைக்கப்பட்டு ஊர்வலமாகவே கள்ளி, எரிக்கம் இலை வெட்டும் இடங்களுக்கு ஊர்வலமாகச் செல்லும் பாதையில் நிறை குட கும்பம் வைத்து மக்கள் பக்தியுடன் வரவேற்பர். அவர்களது கும்பத்திற்கு பூசை முடிந்ததும் அக்கும்பத்து நீர் கும்பம், வட்டமாடை தூக்குபவர்களின் பாதங்களில் ஊற்றப்படும்.

கள்ளி, எரிக்கம் இலை என்பன வெவ்வேறு இடங்களில் இருப்பதால், இச்சடங்கை இலகுபடுத்துவதற்காகக் குறிப்பிட்ட இடத்தில் உள்ள மரத்தடியில் கள்ளியும் எரிக்கம் இலையும் வெட்டப்பட்டு, வெள்ளை நூலால் மரத்துடன் கட்டி வைக்கப்பட்டிருக்கும். இம்மரத்தடியில் வெள்ளை விரித்து மடை வைத்து அதனுள் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்ட அம்மன் முகக் களைகளையும், கும்பமும், வட்டாமடையும், வாளும் வைக்கப்பட்டு அதற்று பூசை செய்யப்படும். பின் தெய்வங்கள் வாளினால் கள்ளி, எரிக்கம் இலைகளை வெட்டி, தட்டின் மேல் வைத்து, வெள்ளைத் துணியால் சுற்றி மூடி வட்டாமடை தூக்கியதும் மீண்டும் ஆலயத்தை நோக்கி ஊர்வலம் தொடங்கும். அவ்வேளையில் கோயிலின் முன் மீதியில் திக்குழி தயாராக வெட்டப்பட்டு இருக்கும். கள்ளி வெட்டிய ஊர்வலமானது, கோயிலைச் சுற்றி வந்து கள்ளி, எரிக்கம் இலை என்பவற்றை தீக்குளிக்குள் வைப்பர். இதனைத் தொடர்ந்து தீக்குளியின் நான்கு மூலைகளிலும், நான்கு பெரிய சூலகங்கள் நாட்டப்படும். அதன் பின், கும்பத்தை ஆலயத்தினுள் கொண்டு வைப்பர். மூன்றாம் நாள் சடங்கில் இருந்தே வெளியில் உள்ளஅனைத்துப் பந்தல்களுக்கும் முகங்களை வைத்து, பூசை செய்யும் மரபினைக் காணலாம். எரிக்கம் இலையையும், கள்ளியையும் வெட்டி தீ மேடையில் வைப்பதன் காரணம் என்னவெனில், அனலை (நெருப்பை) அடக்கும் சக்தி இவ்விரு செடிகளுக்கும் காணப்படுகின்றது.

2.1.5. ஐந்தாம் நாள் சடங்கு (நெல்லுக் குற்றுதலும், விநாயகர் பானை ஏற்றுதல்)

ஐந்தாம் நாள் சடங்கின் போதே இந்நிகழ்ச்சி இடம் பெறும். அனுமார் மரத்தடிக்கும், காளிகோயில் மண்டபத்திற்கும் இடையில் மடை வைத்து பூசை செய்து உரல் நாட்டியே நெல்லு குத்தல் சடங்கு இடம் பெறும். இது வியாழன் பகல் நடைபெறும். உரலிற்குள் நெல்லை இட்டு தெய்வம் மூன்று தடவைகள் குற்றியே இதனை ஆரம்பித்து வைக்கின்றது. பின் ஆலயத்திற்கு வந்திருக்கும் பெண்கள் சிலரைப் பிடித்து அவர்களிடம் உலக்கையைக் கொடுத்து நெல்லு குற்ற வைக்கப்படுகின்றது. இதில் பெறப்படும் புதிய அரிசியை ஐந்தாம் நாள் சடங்கின் போது, பொங்கப்படும் விநாயகப் பொங்கலுக்கும் பத்தினியம்மன், காளியம்மன் பொங்கலுக்கும் பாவிக்கின்றனர். இந்த உரலிலேயேச் சடங்கிற்று தேவையான மஞ்சள் தூளையும் இடித்து எடுக்கின்றனர். நெல்லு குத்துபவர் அதனை அம்பாளுக்குச் செய்யும் பணி என்றென்னி அதில் ஈடுபடுவர். அதனைச் செய்வதன் மூலம் நம்மைப் பிடித்துள்ள துன்பம், நோய், பிணி தீருமென்ற நம்பிக்கையும் அச்சமூகத்தினர் மத்தியில் காணப்படுகின்றது.

நெல்லுக் குற்றல் முடிந்தவுடன் வியாழன் இரவு விநாயகர் பானை ஏற்றும் சடங்கு நடைபெறும். நெல்லைக் குற்றி எடுக்கப்பட்ட புது அரிசியை விநாயகருக்காகவும் அம்மனுக்காகவும் பொங்கும் நிகழ்வாகும். ஆலய முன்றலில் புதிதாக அடுப்பு மூட்டி மடை வைத்து தீபாராதனை செய்து புதிதான பானையில் நூல் சுற்றி விநாயகபானை ஏற்றிய பின் அம்மனுக்குப் பொங்கல் பானை வைக்கப்படும். மூன்று பானைகள் வைக்கும் மரபு இங்கு காணப்படுகின்றது. பத்தினி அம்மனுக்கு ஒரு பொங்கல் பானை ஏற்றுவர். பானையில் பால் பொங்கும் வேளையில் பொங்கிய பாலை கோயிலுள் கொண்டு போய் அம்மனுடைய மடையில் பக்குவமாக வைப்பர். இது குளிர்த்தி தீர்த்தம் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றது.

2.1.6 ஆறாம் நாள் சடங்கு (பலி கொடுத்தல், தீ மூட்டுதல், மஞ்சள் குளித்தலும் தீமிதித்தலும்)


பலி கொடுத்தல்

இந்நிகழ்வு தீக்குழி மூட்டுவதற்கு முன் இடம் பெறும். ஆரம்பக் காலங்களில் இருந்தேப் பலியிடும் மரபு இங்கு பின்பற்றப்படுகின்றது. இதற்கான காரணத்தை நோக்கும் போது பலி கொடுப்பதை நிறுத்தினால் வறுமை, நோய் ஏற்படும் என்ற அச்சமாகும். அதனாலேயே தீ மேடையைச் சுற்றி நான்கு கோழிகள் பலியிடப்படுகின்றது. இதனை அனைவரும் தள்ளி நின்று பார்ப்பர். சிறுவர்கள், பெண்கள் பார்வையிடக் கூடாது என்ற நம்பிக்கையும் காணப்படுகின்றது. தீக்குழியில் பலியைத் தொடர்ந்து காளியம்மனும், ஆடும் தெய்வமும், பூசாரியும் கோயிலின் வெளித் தீயைத் தாண்டிச் சென்று வடக்கேயுள்ள பற்றைக் காட்டுக்குள் தாம் கொண்டு சென்ற சேவற் கோழியைப் பலி கொடுத்து விட்டு ஆலயம் திரும்புவர். இதன் பின் தீ மூட்டுதல் இடம் பெறும்.

பண்டைக்காலத்தில் ஆடவருக்கு தீ மிதித்தலும் பெண்களுக்கு மாவிளக்கேற்றுதலும் வழிபாட்டின் அம்சங்களாக இருந்தன. வீரத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய தீ மிதித்தல் வழிபாடு தற்காலத்தில் பெண்பாலாருக்கும் உரியதாக மாற்றம் பெற்றது. அதுமட்டுமின்றி, வீரத்தெய்வத்திற்குரிய ஆலயங்களில் நிகழ்த்தப்படும் இத்தீமிதிப்பானது ஏனைய தெய்வங்களுக்குரிய வழிபாடாகவும் வளர்ச்சி பெற்றது. ஆடவரின் வீருப்பெருமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய இத்தீமிதிப்பானது மக்கள் தங்கள் குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகச் செய்யப்படும். நேர்த்திக்கடனுக்காக தற்காலத்தில் பிரசித்தி பெற்றுள்ளது.

20, 21 அடி நீளமும் 3 அல்லது 5 அடி அகலமும் 3 அடி ஆழமுமாக நீள் சதுரமான குழி தோண்டி வீரக்கட்டை, சந்தனக்கட்டை ஆகிய விறகுக் கட்டைகளை அதனுள் அடுக்கி தீ மூட்டப்படும். அது தீக்குழி எனப்படும். தற்காலத்தில் வேப்பமரமும் தீக்கட்டைகளாக உபயோகப்படுத்தப்படுகிறது. எரியூட்டப்பட்ட தீக்குழியை ஒட்டி சிறுகுழி தோண்டி நீர்த்தொட்டி அமைப்பில் கட்டப்பட்ட குழியில் பாலும், நீரும் தேக்கி வைக்கப்படும். இந்நீர்குழி பாற்குழி எனப் பெயர் பெறும். பாற்குழி வைப்பதும் அருகிச் செல்வது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவ்வாலயத்தில் ஆறாம் நாள் சடங்கன்று மாலை 2 மணியளவில் மஞ்சள் குளித்தல் நிகழ்வு இடம்பெறும். வெள்ளிக்கிழமை இந்நிகழ்வு இடம் பெறும். தீமிதிப்பில் கலந்து கொள்ளும் அம்மன், தேவாதிகள், பூசாரிகள் என பலர் மஞ்சள் குளிப்பதற்காக பறையும் நாதங்களும் முழங்க, காளியம்மன் கும்பத்துடன் மட்டிக்களி ஆற்றினை நோக்கி ஊர்வலமாகச் செல்வர். ஆற்றை அண்மித்ததும், அவற்றில் இறங்கி அனைவரும் நீராடும் முன் அவர்களுக்குக் கரையில் வைத்து மஞ்சள் வழங்கப்படும். அவற்றைத் தமது உடலில் பூசிக் கொண்டு நீராடுவர். மஞ்சள் குளித்து முடிய ஆலயத்தை நோக்கிப் புறப்படுவர். இதனையே, கடல் குளித்தல் எனவும் அழைப்பர். இதன் பின்னர் கோயிலை வந்தடைந்தவுடன் தீக்குழியை மூன்று தடவைகள் கும்பம் சகிதம் அனைவரும் சுற்றி வந்து, முதலில் வேப்பை இலைக் கொத்து தீயில் போடப்படும். இது தீயில் கருகிவிடும். இதைத் தொடர்ந்து இரண்டாம் முறையும் வேம்பை இலை கொத்து போடப்படும். வேப்பம் இலை வாடியிருக்கும். மூன்றாம் தடவை போடப்படும் கொத்தானது வாடாமலும் கருகாமலும் இருக்கும். இதனைப் பார்த்து, அனைவரும் அதிசயித்து, காளியம்மனைக் கைகூப்பி வணங்குவர். அரோகரா ஓசை அனைத்துப் பக்தர்களின் வாயிலிருந்தும் வெளி வருவதனைக்காணலாம்.


தீப்பாய்தல் சடங்கானது புன்னைச்சோலை ஆலயத்தில் பல கோடி மக்களை ஒன்றிணைத்து நடைபெறும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெள்ளையாடை அணிந்து செல்வர். இலங்கையில் எந்த ஆலயத்திலும் இல்லாத அளவுக்கு “பெருந்திரளான மக்கள் தீப்பாயும் ஆலயம்” என்ற சிறப்பினை இவ்வாலயம் பெறுகின்றது. தீ மிதித்தல் வைபவத்தின் போது, முதலில் தீ மிதிப்பதற்கு தலைமைத் தெய்வமான பத்திரகாளிக்கு ஆடுபவரே இறங்கும் வழமை காணப்படுகின்றது. அவற்றின் பின் மற்றைய அனைத்துத் தெய்வங்களும் தீ மிதிப்பில் ஈடுபடுவர். அதனைத் தொடர்ந்து, முகக்களை கும்பம் வைத்திருப்பவரும, பூசகர்கள், தொண்டர்கள் என ஒருவர் பின் ஒருவராக தீ மிதிப்பில் ஈடுபடுவர். இவர்களைத் தொடர்ந்தே மக்கள் தீ மிதிப்பில் ஈடுபடுவதனைக் காணலாம். இந்நிகழ்வானது அதிகளவு நேரத்தை எடுக்கும். இவ்வாலயத் தீக்குழியானது 14 அடி நீளமும் 6 அடி அகலமும் உடையது என்பது குறிப்பிடத்தக்கது.

தீமிதித்து முடிந்த கையோடு பலிகரும பூசை இடம் பெறும். பிரத்தியக்கிரி காளிக்கு அன்று நடுச்சாமம் கோழிப்பலி கொடுக்கப்படும். காளியம்மாளுக்கும் அவரது 12000 பரிகாரத் தெய்வங்களான இவ்வாலயத்தில் அமைந்துள்ள வைரவர், வீரபத்திரர், பேச்சியம்மன், வதனமார், திரௌபதை, நாககாளி, நாககன்னி போன்றவற்றிற்கும் பலி கரும பூசைகள் இடம்பெறும். மேலும் தெய்வங்களுக்கு மதுவர்க்கங்களும் கொடுப்பர். அதாவது, தெய்வம் அதனை அருந்தாது அவட்களுக்கு வைத்து வணங்குகின்ற சடங்காகக் கொள்ளப்படுகின்றது.

பக்தர்கள் மன ஒருமைப்பாட்டுடன் அம்மனை நினைத்து, பக்திப் பரவசத்துடன் தீக்குழியில் இறங்கி நடந்து சென்றுவெளியேறி பாற்குழியில் தமது கால்களை நனைத்துச் செல்வர். “தீக்குழியாடி பாற்குழி காணல்” என்பது வாக்குமொழி. தமது குறிக்கோள் நிறைவேறியதற்காகவும், நிறைவேற வேண்டும் என்றும் துன்பமான வாழ்க்கை அகல வேண்டும் என்பது போன்ற நம்பிக்கையின் அடிப்படையிலான நேர்த்தியாக இது காணப்படுகின்றது.

பள்ளையச் சடங்கு

தீ மிதிப்பு வைபவம் முடிவடைந்ததும் அன்றிரவு விடியும் வரை பள்ளையச் சடங்குகள் இடம் பெறும். எல்லாப் பந்தல்களும் புதிதாக மடைகள் வைக்கப்படுவதுடன் பூசைகளும் அவற்றுக்குரிய தெய்வங்கள் ஆடலும் இடம் பெறும். இச்சடங்கன்று பன்னிராயிரம் பரிகலன்களும் ‘பால், பழம் எறிதல்’ என்றும் ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவர்களால் எறியப்படும் பாணக்கமானது நிலத்தில் சிந்தவிடாது அப்பரிகலம்கள் ஒப்புக் கொள்கின்றன என்று நம்பிக்கை அங்கு காணப்படுவதையும் காணலாம். அன்றிரவு பிரத்தியக்கிரி காளிக்குக் கோழிப் பலியும் ஏனைய தெய்வங்களுக்கு மடைப் பலியும் வழங்கப்படும்.

இதனைத் தொடர்ந்து, அதிகாலையில் செவ்வாட்டம் ஆயுதம் பாரம் கொடுத்தல் என்னும் நிகழ்வும் இடம் பெறும். புன்னச் சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்தில் விசேசமாக காளியம்மன் குளிர்த்தி பாடும் மரபினைக் காணலாம். குளிர்த்தி என்னும் தீர்த்தமானது கரும்பு, கற்கண்டு, பால், பலவிதப் பழங்கள், தேன், சர்க்கரை, நெய் முதலிய பதார்த்தங்கள் சேர்க்கப்பட்டு ஓர் பானையில் கரைத்து உரலின் மேல் வைக்கப்படும். பானை துணியால் மூடி இருக்கும். பூசாரி பெண் வேடமுற்று அம்மனைக் கொண்டு வருவார். பின் குளிர்த்தி ஏடு படிக்கப்படும். ஒவ்வொரு பாடலின் முடிவிலும், வேப்பிலைக் கொத்தினால் அம்மனுக்கும் மக்களுக்கும் அள்ளி வீசுவார். கடைசியாக, வாழி பாடி குளிர்த்தி முடிவுறும் இறுதி நிகழ்வாக நேர்த்திக்கடன் பொருட்கள் விலை கூறி ஏலத்தில் விற்கப்படும். மூலஸ்தான கருமத்தில் கதவினை அடைப்பார்கள்.


பூப்பூசையும் தீக்குழிப்பாலூற்றலும்

புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை தீ மிதிப்பு இடம் பெற்ற பின்னர் பூப்பூசை இடம் பெறும். அந்நாளிலேயே தீ மிதித்தோர் தீக்குழிக்கு பா நூற்றுவர். அத்துடன் காவல் தெய்வமான வைரவ மூர்த்திக்கு விசேட பூசையும் இடம் பெறும். வைரவர் பூசை இடம் பெறும் இடத்தில் பந்தல் போட்டு அலங்கரித்து பொங்கிப் படைத்து ரொட்டி சுட்டு பழ வகைகள் படைத்து பூவினால் அலங்கரித்து வைரவர் காவியம் பாடி பூசை இடம் பெறும். பூசை முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும்.

இவ்வாறான கதவு திறக்கும் சடங்கானது, ஞாயிறு தொடங்கி வெள்ளி மாலை தீ மிதிப்புடன் முடிவுற்று, சனி காலை வரை முற்று முழுதாக நிறைவு பெறும். இவ்வாலயச் சடங்கின் போது, சிலம்பொலி, மணியொலி, உடுக்கொலி, சேகண்டி ஒலி, முதலியன முக்கியம் பெறுகின்றது. இவ்வாலயத்தில் அம்மானைக்காய், பிரம்பு, வேப்பங்குழை என்பன வழிபாட்டுப் பொருட்களாகும். அறுகோண சிலம்பு காளியம்மாளுக்குரியது. அம்மானைக்காயையும் பிரம்பையும் காவியம் பாடும் போது அதிகளவில் பயன்படுத்துவர். இவ்வாலயத்தில் அம்மானைக்காயை அம்மனின் ஆணைக்காக வைத்து வழிபடுவர். வெள்ளிப்பிரம்பை அம்மனுடைய அடையாளமாகவும் வழிபடுவர். மேலும், வழிபாட்டுத் தெய்வங்களில் பரிவாரத் தெய்வங்கள் சிறிய ஆலயம் வைத்து வழிபடப்படுகின்றன.

மாரி, பேச்சி, திரௌபதை, கம்பகாமாட்சி, வைரவர், வீரபத்திரர், புள்ளிக்காரன், பத்தினியம்மன், வதனமார், காடேறி, நாகதம்பிரான், பிரத்தியங்கிர் காளி, நரசிங்கர், நீலாசோதையன் போன்ற பலதெய்வங்கள் வழிபடப்படுவதைக் காணலாம். இத்தெய்வங்களுக்கு வருடாந்த உற்சவங்களில் போதே பூசைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு பந்தலிலும் முகக்களை வைத்தும் மடை படைத்தும் பூசைகள் நடைபெறுகின்றன. அத்தெய்வங்களில் பெரும்பாலானவற்றிற்குத் தெய்வங்கள் ஆடியும் காவியம் படித்தும் உடுக்கடித்தும் இங்கு வழிபாடு இடம் பெறுவதனைக் காணலாம். காடேறி, பிரத்தியங்கிரி காளி எனும் தெய்வங்கள் காளி அம்பாளின் தொடர் தெய்வங்களாகக் கொள்ளப்படுகின்றன. பிரத்தியங்கிரி காளி கூடாகப் பிள்ளை வரம் பெறலாம் எனும் நம்பிக்கை பக்தர்களிடம் காணப்படுவதனைக் காணலாம். இத்தெய்வத்துக்கு ஆடுபவர் பிள்ளை வரம் வேண்டுபவர்களை மறைத்து வைத்து மருந்து கொடுத்தால் அடுத்த வருடம் வரும் போதே குழந்தைகளுடன் வருவார்கள் என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். கம்பகாமாட்சி என்று அழைக்கப்படும் தெய்வம் பெண் தெய்வமாகக் கருதப்படுகின்றது. இத்தெய்வத்திற்கு உயர்ந்த கம்பம் கட்டப்பட்டு அதன் உச்சியிலே சூலம் உள்ளது. இக்கம்பத்தில் கம்பகாமாட்சிக்கு ஆடுபவர் ஏறி ஆடி மகிழ்வதனைக் காணலாம். இத்தெய்வத்திற்கே சிறிய பெண் பிள்ளைகள் பெட்டியைத் தலையில் ஏந்தி செவ்வாட்டம் ஆடுகின்றனர். வைரவருக்கு உட்சவக் காலங்களில் தினமும் பூசை நடைபெறும். ஆனாலும், கதவு பூட்டும் நாள் பந்தல் அமைத்து ரொட்டி, பழம், பொங்கல் என்பன படைத்து காவியம் பாடி விசேட பூசை நடைபெறுகின்றன.

நீலாசோதையன் எனும் தெய்வம் பெரியதம்பிரான் வண்ணார் குலத்துக்கே உரியது. ஆரம்பக் காலங்களில் இத்தெய்வத்திடம் ஆலய முடிவின் போது, ஆயுதங்கள் ஒப்புக் கொடுக்கப்பட்டன. ஆனால், இன்று தமது குலக்குறியீடு வெளிப்பட்டு விடும் என்று அவ்வூர் மக்களில் சிலர் விரும்பாமையினால் மருவிச் செல்கின்றது. இன்று நீலாசோதையன் எனும் தெய்வத்திற்குத் தெய்வம் ஆடாமல் பூசை மாத்திரமே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


இவ்வாலயத்தில் இடம் பெறும் தின பூசைகள் பற்றி விளக்கும் போது, இரண்டு நேரப்பூசைகள் இடம் பெறுகின்றது. மதியம் 2 மணிக்கும், மாலை 6 மணிக்குமாக இரண்டு வேளை பூசைகள் கிராமிய முறையில் நடாத்தப்படுகின்றது. உற்சவக் காலங்கிளில் சரி விசேட பூசைகளில் சரிதினப் பூசைகளில் கூட முதலில் குருவிற்கு நடாத்தப்படும். அதாவது, இவ்வாலயம் சிறப்பு பெறுவதற்குக் காரணமாக இருந்த பெரியாருக்கு ஒரு பாக்கு, பழமாக மூன்று வைத்து வழிபடுவர். அதில் ஒன்று விளக்கிற்கும், மற்றொன்று கலசத்திற்கும், இன்னொன்று அம்பாளுக்குமாக மூன்று வைக்கப்படும். அடுத்து, விநாயகருக்கு பூசை நடாத்தப்படும். பின்னர் அம்பாளுக்கு நடாத்தப்படும். வௌ;ளி, செவ்வாய்க் கிழமைகளில் அம்பாளுக்கு விளக்கு பூசை நடைபெறும். அதாவது, அடியார்களால் நேர்த்திக்கடன் நிகழ்வாக விளக்கு பூசை செய்வர். அநேகமாக, நெய் விளக்கேற்றி தமது குறைகளை கூறி வருந்தும் சடங்காக இது கொள்ளப்படும்.

ஆனால், உற்சவக் காலங்களில் முதலில் குருவிற்கு நடாத்தப்படும். பின்னர் விநாயகருக்கும், அடுத்து பரிகாரத் தெய்வங்களுக்கும் நடாத்தப்படும். பிரதான பூசை கும்பம் வைத்து அம்பாளுக்கு நடைபெறும். காளி, மாரியம்மன், பேச்சியம்மன் என்று மூன்று அம்மாளுக்கு முகக்களை வைத்து பூசை நடைபெறும். அடுத்து, இவ்வாலயத்தில் இடம் பெறும் விசேட பூசைகளில் பௌர்ணமி பூசை இன்றியமையாதது. மாதத்தில் ஒரு தடவை இது இடம் பெறும். இந்நிகழ்வில் பூப்போடுதல் பிரதான நிகழ்வாகக் கொள்ளப்படுகிறது. அன்றைய தினமும் அடியார்கள் விளக்கு பூசை செய்வர். பௌர்ணமி பூசை அன்றும் வழமை போல வெளியிலே அம்பாளுக்குப் படையல் படைத்து பூசை நடைபெறும். ஆனால், உற்சவக்காலத்தில் மட்டும்தான் கதவு திறந்து மூலஸ்தானத்தில் இடம் பெறும். பூப்போடுதல், விளக்குப் பூசை என்பது அடியார்கள் தமக்குள்ள குற்றங்களுக்காகவும், தமது குறைகள் தீர்ந்து நேர்த்திக் கடனாகவும் நம்பிக்கையடிப்படையில் இதனை மேற்கொள்வர். தொடர்ச்சியாக ஏழு கிழமைகள் செய்து வந்தால், அம்பாள் அருள் பாலிப்பார் என்பது நம்பிக்கையாகக் காணப்படுகின்றது. பௌர்ணமிப் பூசையானது மதியம் 2 மணிக்கு ஆரம்பமாகி விசேடமாக நடைபெறும். அதிகளவான பக்தர்கள் வருகை தருவார்கள்.

(தொடர்கிறது)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/community/p28a.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License