இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

தமிழரின் வானியலும் உயிரியலும்

முனைவர் ஜெ. முத்துச்செல்வன்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
அகர்சந்த் மான்மல் செயின் கல்லூரி, சென்னை - 114.

பேரண்டப்பகுதியில் உள்ள ஒன்பது கோள்களில் பூமியும் ஒன்றாகும். அவற்றுள் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்கின்றன. அவ்வாறு பல்லாயிரக்கணக்கான உயிர்களைத் தன்னகத்தே வைத்துள்ள புவியின் தோற்றத்தைப் பற்றியும், உயிர்களின் தோற்றத்தைப் பற்றியும், ஆதிமனிதன் யார்? எங்குத் தோன்றினான் என்பதைப் பற்றியும் இலக்கிய, இலக்கணச் சான்றுகளுடன், ஆய்வாளர்களின் ஆய்வு முடிவுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டதே இக்கட்டுரையாகும்.

இயற்கையின் புறவெளியைப் பற்றியும் மக்கள் வாழ்விற்குரிய வழிமுறைகளைப் பற்றியும் தொல்காப்பியர், திருவள்ளுவர், சங்க இலக்கிய மற்றும் பிற இலக்கியப் புலவர்களும், சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளாட்டோ, கன்பூசியஸ் போன்ற பிறநாட்டு ஆய்வாளர்களும் எடுத்துரைத்துள்ளனர்.

புவியின் தோற்றம், பிரபஞ்சத்தின் இயக்கம், பஞ்சபூதங்களின் தன்மை, உயிர்களின் தோற்றம், மனிதன் பிற உயிர்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறான் போன்ற பல்லாயிரக்கணக்கான வினாக்களைத் தொடுத்து அதற்குப் பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் விளக்கங்களையும் கொடுத்துள்ளனர்.

புவியின் தோற்றம், இயக்கம், உயிர்களின் பெருக்கம் போன்றவை நிகழ்வதற்குப் பல கோட்பாடுகள் இருப்பினும் அவற்றில் அடிப்படைவாதங்களைக் கொண்டு இரண்டு வகையான கொள்கைகளாகப் பகுக்கலாம். அவை,

1. கடவுள் கொள்கை (கடவுளும் தேவதைகளும் இந்த உலகை இயக்குகின்றனர். அவர்களே உலகில் உள்ள அனைத்தையும் படைத்தனர் என்பது)

2. அறிவியல் கொள்கை (பூமி இயற்கையில் ஏற்பட்ட பேரண்ட வெடிப்பினால் சூரியனிடமிருந்து பிரிந்து பரிணாமக்கோட்பாட்டின் அடிப்படையில் பல மாற்றங்களினால் தன்னை வடிவமைத்துக்கொண்டு பல உயிர்களை உருவாக்கியது என்பது)
கடவுள் கொள்கை

செம்மொழியான தமிழ்மொழியில் நமக்குக் கிடைக்கக்கூடிய இலக்கிய, இலக்கணங்களுக்கெல்லாம் ஆதிநூலாக விளங்குவது தொல்காப்பியமாகும்.இந்நூலின் ஆசிரியரான தொல்காப்பியர், இவ்வுலகமும் இவ்வுலகத்தின் உயிர்களும் கடவுளால் படைக்கப்பட்டவை என்ற கடவுள் கொள்கையை ஏற்கவில்லை.மாறாக உயிர்களின் பரிணாம வளர்ச்சி என்ற அறிவியல் கொள்கைக்கு அடித்தளம் அமைத்ததுள்ளார்.அதனால் கடவுள் கொள்கை இங்கு கைவிடப்படுகிறது.

அறிவியல் கொள்கை (பேரண்ட வெடிப்பும் பரிணாமக்கொள்கையும்)

பேரண்ட வெடிப்பு

1927இல் பெல்ஜியத்தைச் சேர்ந்த இயற்பியல் அறிஞர் ஜியார்ச்சு லெமெட்ரே அவர்கள் பிரபஞ்சத்தின் தோற்றத்தை, “ஆதியில் இருந்த சக்திமிக்க மிகப்பெரிய சடப்பொருள் ஒன்று அதன் உயர்ந்த அடர்த்திநிலைக் காரணமாக வெடித்து சிதறியதன் மூலம் தோற்றம் பெற்றதே இப்பிரபஞ்சம்” என்று குறிப்பிட்டார்.


இப்பெருவெடிப்பு தொடங்கியதிலிருந்து அணுக்களும், அண்டப்பொருட்களும் தோன்றின. அதனைத் தொடர்ந்து சூரியமண்டலமும் அதிலுள்ள கோள்களும் தோன்றின. இவை தோற்றம்பெற்ற காலத்திலிருந்து தற்காலமானது சுமார் 500 கோடி ஆண்டுகள் கழிந்துள்ளன எனலாம்.


பூமி தன் தாயான சூரியனின் ஈர்ப்பு விசையால் அதனைச் சுற்றிவருகிறது.இந்த ஓயாத சுழற்சியினால் பூமி உட்பட அனைத்துக்கோள்களும் கோளவடிவம் பெற்றன.


அண்டவெளியில் சுற்றும் இந்த பூமியைப்பற்றி ஆய்வுசெய்த மேனாட்டவர்கள் கி.பி.15ஆம் நூற்றாண்டிற்கு முன்புவரை உலகம் தட்டையானது என்றே நம்பியிருந்தனர்.


15ஆம் நூற்றாண்டில் போலந்து நாட்டு நிக்கோலஸ் கிராப்ஸ் என்பவர் உலகம் உருண்டையானது என்று சொன்னார்.ஆனால் அதனை யாரும் ஏற்கவில்லை.16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கலிலியோ (1564 - 1642) உலகம் உருண்டை என விளக்கினார், அதற்றகான காரணங்களை அடுக்கினார்.உலகம் நம்பியது.


இந்த ஆராய்ச்சியகளுக்கெல்லாம் முன்னால் கி.மு.முதல் நூற்றாண்டிலே, உலகம் உருண்டை வடிவானது என்றுச்சொல்லியது ஒரு தமிழ்க்குரல், அந்த குரலுக்குச்சொந்தக்காரர் திருவள்ளுவர். அவரின் திருக்குறள்,


“சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை” (குறள் -1031)

என்கிறது. இதில் உருண்டை வடிவம் உள்ள பொருள்தானே சுழலமுடியும்,

இத்தகைய சுழலும் உலகமோ உழவுத்தொழிலால்தான் உய்ய (உயிர்வாழ) முடியும் என்பதையும் அவர் அழுத்தமாக அறிவுறுத்தியுள்ளார்.

உலகம் உருண்டை என்பதையும் அதன் தோற்றத்தையும் கி.பி. 10ஆம் நூற்றாண்டில் மாணிக்கவாசகரும்,

“அண்டப் பதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங்காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழை கதிரின் துன்னனுப் புரையச்
சிறியவாகப்.....” (திருவாசகம். திருவண்டப்பகுதி 1-6)

என்று எழுதுகிறார். பரந்த வானவெளியில் பலகோடியாக உடைந்து சிதறிய நெருப்புத் துண்டின் ஒரு சிறுபகுதியே இந்தப் பூமி. அது உருண்டை வடிவமாகும் என்கிறார்.


யாழ்நூலின் சிறப்புப் பயிரத்தில்,

“ஒளிபரிதி யியக்கத்தாற் சிதைந்து
தீர்ந்ததோர் பகுதி யுலகமாகிய.......”

என்ற பாடலும், சூரியனிலிருந்து சிதறிய அக்கினிக்குழம்பே பூமியாக உருமாறப் பலகோடி ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.அவ்வாறு ஆன உருண்டைவடிவமே பூமி என்கிறது. எனவே அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு முன்பே பூமி உருண்டை வடிவானது என்பதில் தெளிவு பெற்றவர்களாகத் தமிழர்கள் இருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

புவியின் தோற்றம்

பூமியின் மேற்பரப்பு குளிரத் தொடங்கியது. ஆனால் பூமியின் உட்பகுதியில் இருந்த வெப்ப அழுத்தத்தின் காரணமாக எரிமலைகள் வெடித்து, கார்பன் டை ஆக்ஸைடு, நீராவி ஆகியவற்றைப் பெருமளவில் வெளியேற்றின. இத்துடன் சிறிதளவு மீத்தேனும், அம்மோனியமும் வெளிவந்தன.


அப்போது பூமியில் ஆக்ஸிஜன் (o2) இல்லை.வெளிவந்த நீராவி காலப்போக்கில் குளிர்ந்து நீராக மாறியதால் பூமியில் கடல் தோன்றியது.


பூமி எப்படித் தோன்றியது என்பதை, தாலஸ் (tholes) என்ற அறிஞர், உலகம் நீரினால் ஆக்கப்பட்டது, அதனால் நீரே முதன்மைப்பொருள் என்றார். அனாக்ஸிமினிஸ் (Anaximinies) என்ற அறிஞர் காற்றினாலேயே உலகம் ஆக்கப்பட்டது என்றார். அனாக்ஸி மேண்டர் (Anaximandar) (சுமார் கி.மு. 6) என்பவர், ஏபைரான் (Apeiron) என்ற உருவமற்ற, யாரும் பார்க்கமுடியாத பொருளால் உலகம் உருவாக்கப்பட்டது என்றார். இவ்வாறு பஞ்சபூதங்களில் ஒவ்வொன்றைப் பற்றி மட்டும் அறிஞர்கள் ஆராய்ந்து விளக்கியகாலத்தில், பூமி பஞ்சபூதங்களினால் ஆன ஒரு கூட்டுப்பொருள் என்பதைத் தெள்ளத் தெளிவாகத் தமிழர்கள் விளக்கினர்.

சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பே உலகம் எப்பொருள்களால் ஆனது என்பதைத் தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பதற்குத் தொல்காப்பியரே முதல் சான்றாக அமைகின்றார்.


இவ்வுலகமாகிய பூமி பஞ்சபூதங்களினால் ஆனது என்பதை,


“நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்துங்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்” (தொல். பொருள். மரபு - 635)

என்ற நூற்பாவில் பஞ்சபூதங்கள் அனைத்தும் ஒன்று மற்றொன்றோடு கலந்து மயங்கி நிற்பதை உலகம் (பூமி) என்று கூறுகிறார். (இரண்டு பங்கு ஹைட்ரஜன் ஒருபங்கு ஆக்ஸிஜன் வாயுக்கள் இணைந்து நீராக மறுவது விதி)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p136.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License