முனைவர் ஜெ. முத்துச்செல்வன்
சேலம்மாவட்டம், ஆத்தூர்வட்டத்தில் உள்ள நாவக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த இவர், தற்போது சென்னை - மீனம்பாக்கத்தில் உள்ள அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரியில் (A.M. Jain college) தமிழ்த்துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். “ஓலைச்சுவடிப் பதிப்பு வரலாறு” என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வையும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் “அகநானூறு - தொடரடைவு” என்ற தலைப்பில் முனைவர் பட்ட மேலாய்வையும் (PDF) மேற்கொண்டவர். 2014 -2015ஆம் ஆண்டிற்கான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இளம்அறிஞர் விருதினை இந்தியக் குடியரசுத்தலைவர் அவர்களிடமிருந்து பெற்றவர். சுவடியியல், சங்கஇலக்கியம், தமிழர்களின் அறிவியல் சிந்தனை, நாட்டுப்புறவியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு ஏழு நூல்களையும், 23 ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். சமூகச்சேவையுடன் தமிழ்ச் செவ்வியல் இலக்கியம், வாய்மொழி இலக்கியங்கள், நாட்டுப்புறக்கலைகள் ஆகியவற்றைத் தொகுத்துப் பாதுகாப்பதற்காக நாவைத் தமிழ்ச்சங்கத்தை நிறுவி, அச்சங்கத்தின் மூலம் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்.
கட்டுரை - பொதுக்கட்டுரைகள்
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.