இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

கண்ணகி வழிபாடு பார்வையும் பதிவும்

கவிக்கோ வெல்லவூர்க் கோபால்
இலங்கை


சிலப்பதிகார நிகழ்வுகளின் பின்னணியில் அடியொற்றி வந்த கண்ணகி வழிபாடானது காலச்சூழலில் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்ட தன்மை குறித்துப் பல ஆய்வாளர்கள் தங்களது ஆய்வுகளை முன்னெடுத்திருந்தாலும் அவ்வழிபாடு நிலைபெற்றிருந்த கேரளம், தமிழகம், இலங்கை என ஒரு விரிவான ஆய்வினை முன்னெடுத்தல் என்பது எமக்கு ஒரு பாரிய சவாலாகவே அமைந்திருந்தது. சிலப்பதிகாரத்தின் அதிமுக்கிய நிகழ்வுகள் மதுரையில் இடம் பெற்றதென நம்பும் தன்மையில் அதன் பிரதிபலிப்பானது தொடர்ந்து மக்களிடையே புதிய வழிபாட்டுடன் கூடிய வாழ்வுமுறையொன்றுக்கு வித்திட்டிருக்கின்றது என்பதை யாரும் மறுதலிக்க முடியாது. ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு நற்குடியில் பிறந்த ஒரு பெண் நாண் இழந்தும் நாடுபோற்றும் தெய்வமாக்கப்பட்ட வரலாறு கண்ணகியின் வரலாறாக நிலைபெறுகின்றது. காலக்கணிப்பு தொடர்பில் ஆய்வுகளில் வேறுபாடுகள் தோற்றம் பெறினும் பொதுவாக இதனைக் கி.பி 2ஆம் நூற்றாண்டாகக் கொள்ளல் ஏற்றுக்கொள்ளப்படுவதைப் பார்க்கின்றோம். பண்டைய சேரநாடான கேரளத்தில் கண்ணகியாக அல்லது பத்தினியாக வெளிப்பட்ட இத்தாய்த் தெய்வம் காலத்தின் விளையாட்டால் கொடுங்கர பகவதி, ஆற்றுக்கால் பகவதி, பாலக்காடு பகவதி, மண்டைக்காடு பகவதி என அவ்வவ்வூர் பகவதிகளாக மாற்றமுற்ற நிலையில் தமிழகத்திலே கண்ணகி செல்லத்தம்மன், மதுரைக் காளி, மங்கலதேவி, வெற்றிவேலம்மன், வட்டப்பாறையம்மன், கொப்புடையம்மன், முத்தாரம்மன், வஞ்சியம்மன், வலங்கையம்மன், கண்ணாத்தாள், வீரமாத்தி எனப் பல்வேறு வடிவங்களைப் பெற்றுள்ளமை தெரிகின்றது. இலங்கையில் தமிழ் மக்களிடையே கண்ணகி என்பது கண்ணகை எனவும் சிங்கள மக்களிடையே தொடர்ந்து பத்தினியாகவும் வழிபடப்படுகின்றாள்.

இன்று தெருவுக்குத் தெரு கோவில் கொண்டு காக்கும் தெய்வமாக நோய்நொடிகளைப் போக்கும் தெய்வமாக மாரி மழை தந்து வாழ்வை வளப்படுத்தும் தெய்வமாகக் குறிப்பிடப்படுகின்ற மாரியம்மன்தான் கண்ணகியின் மறு வடிவம் என்பதைப் பல ஆய்வாளர்கள் ஐயத்துக்கு இடமின்றி நிலைநிறுத்தவே செய்கின்றனர். ஆடி வெள்ளியில்தான் கண்ணகி ஆவேசம்கொண்டு மதுரையை அழித்தாள் என்பதுவும் தொடர்ந்து 14 ஆம் நாள் ஆடிவெள்ளி அனுஷத்தில்தான் அவள் வானுலகம் சென்றாள் என்பதுவும் வரலாறாய் நிலைத்துவிட்ட தன்மையில் தமிழகத்தில் ஆடிவெள்ளியில் அம்மன் ஆலயங்களில் இன்றுவரை கூழ்வார்த்தல், இளநீர் சொரிதல், பாணக்கம் படைத்தல், மாவிளக்கேற்றுதல் என அம்மனைக் குளிர்ச்சிப்படுத்தல் நிகழ்வுகள் இடம்பெறுவதைப் பார்க்கின்றோம்.

பாண்டியன் அவைநோக்கி கண்ணகி சென்றபோது, கையில் வேப்பங் குலையும் சிலம்பும் ஏந்திச் சென்றதாக ஈழத்தில் கண்ணகி கதை பேசுகின்றது. சிலப்பதிகாரத்தின் உரைபெறு காதையில் கண்ணகியை ‘மாரியும் இவளோ காளியும் ஆவாளோ’ என மக்கள் வியந்து போற்றியதை அறிகின்றோம். அதனைத் தொடர்ந்து பண்டைத் தமிழகத்திலும் ஈழத்திலும் கண்ணகிக்கு வழிபாடு இயற்றப்பட்டது. தொடக்கத்தில் கண்ணகிக்கு நடுகல் வழிபாடே செய்யப்பட்டதை சிலப்பதிகாரம் நடுகல் காதை தெளிவுபடுத்துகின்றது. அதுவே அன்றைய தாய்த்தெய்வ வழிபாடாகவும் மிளிர்ந்தது. பின்னர் மண்ணாலும் கற்றகளாலும் கோவில்கள் எழுப்பப்பட்டன. பின்னர் காலப்போக்கில் சிலைமரபுக் கோவில்கள் உருவாகின. ‘ஒருமுலை எறிந்த திருமா பத்தினி’ எனக் கண்ணகி ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்டதாலும் ‘முத்தார மார்பின் முலைமுகம் திருகினாள்’ எனச் சிலப்பதிகாரம் வெளிப்படுத்துவதாலும் ஒற்றை முலைச்சியம்மன், முத்தாரம்மன் போன்ற பெயர்களில் கண்ணகி வழிபடலானாள். அன்று கொற்றவை, பிடாரி போன்ற தாய்த் தெய்வங்கள் வழிபடப்பட்ட நிலையில் கண்ணகி தமிழகத்தின் சில இடங்களில் பூவாடைக்காரியாகவும் ஆக்கப்பட்டாள். வாழ்வின் பெரும்பகுதி அவளுக்கு அமங்கலமாகக் கழிந்தாலும் முடிவில் மங்கலதேவி மலையில் மாலையிட்டு கோவலன் விண்ணுலகு அழைத்தபோது அவள் மங்கலதேவி ஆக்கப்பட்டாள். எனினும் எந்தச் சூழலிலும் கண்ணகி மங்கல நாணைக் களைந்ததாக அவளது வரலாற்றில் அறியமுடியவில்லை.


தமிழரது வழிபாட்டு மரபே கண்ணகியின் வழிபாட்டிலும் பின்பற்றப்பட்டது. அன்றைய தமிழகத்திலும் ஈழத்திலும் பூசகர்களும் பண்டாரங்களுமே அதனை மேற்கொண்டனர். கண்ணகி, மாரி, காளி, கொற்கை, பிடாரி என அனைத்துத் தாய்த்தெய்வ வழிபாட்டிலும் அந்நடைமுறைகளே பின்பற்றப்பட்டன. தமிழகத்தில் படிப்படியாக நுழைந்த பார்ப்பனரால் வழிபாட்டியலில் ஆரியப்பண்பாடும் உள்நுழையலானது. தாய்த்தெய்வக் கோவில்களில் துர்க்கை வழிபாட்டு முறைகள் புகுந்தன. அம்மாற்றங்களின் அடையாளங்களாக அத்தெய்வங்களின் காலடியில் மகிஷாசுரன், எருமைத்தலை, சிம்மம் என்பவற்றோடு சிலம்பிருந்த கையில் அங்குசமும் சூலாயுதமும் வைக்கப்பட்டன.


தனது மார்பைப் பிய்த்தெறிந்து மதுரையை எரித்த கண்ணகி மார்பில் இரத்தம் பீறிட, கண்களில் நீர்சொரிய மீளா வெஞ்சினத்தினளாய் வந்தமர்ந்த இடையர் சேரியே இன்றைய மதுரையின் வடக்கு மாசி வீதி என்பது ஆய்வுகளின் வெளிப்பாடு. அதனையண்டியதாக பறையர் சேரியும் இருந்திருக்கின்றது. இடையர்குலப் பெண் மார்பில் வெண்ணெய் பூச பறையர் குலப்பெண் தனது முந்தானையைக் கிழித்து விசிறி இரத்தம் கசிந்த மார்பில் சுற்ற இளநீர், பாணாக்கம், மாப்பண்டங்கள் என உண்ணக்கொடுத்து ஆறுதல்படுத்துகின்றனர். இதனாலேயெ இன்றும் தென்பாண்டிப் பகுதிக் கிராமியப் பாடல்களில் ‘எச்சேரி வெந்தாலும் இடைச்சேரி வேகாது’ எனவும் ‘பார்மதுரை எரிந்தாலும் பறையர்தெரு எரியாது’ எனவும் பாடப்படுவதைப் பார்க்கின்றோம். இதன்கூடவே பரவலாக நிகழும் அம்மன் வழிபாடுகளில் இளநீர், பாணாக்கம், மாக்கூழ், மாவிளக்கு போன்றவை முக்கியத்துவம் பெறுவதையும் நம்மால் அவதானிக்கமுடிகின்றது. அத்தோடு இப்பகுதிவாழ் யாதவர்கள், மலைவாழ் பழங்குடியினர், கண்ணகி இறுதியாக நின்ற வண்ணாத்திப்பாறை (மங்கலதேவி மலை) பகுதிவாழ் பளிஞரின மக்கள் போன்றவர்கள் இன்றும் தங்கள் குழந்தைகளுக்குச் சிலம்பாயி, கண்ணகி, கண்ணாயி, மங்கலதேவி எனப்பெயரிடுவதையும் குறிப்பிட்டாக வேண்டும்.


கோவலனது தலை துண்டிக்கப்பட்ட இடம் இன்று ‘கோவலம் பொட்டல்’ எனஅழைக்கப்பட கள்வனைக் கொன்று சிலம்பைக் கொணர்க என ஆணையிட்ட பாண்டியன் மதுரையில் (றிங்றோட்டில்) பாண்டி முனியாக கோவில் கொண்டுள்ளான். சேரன் எழுப்பிய நினைவாலயமும் திட்டமிட்டோரால் சின்னாபின்னப்பட்டுச் சிதறுண்டு போய்விட்ட நிலையில் சிலப்பதிகார நிகழ்வுகள் மதுரையில் நடந்ததை வெளிக்கொணரும் தன்மைக்கு தொல்லியல் தடையங்களோ கல்வெட்டுக்களோ அத்தோடு மதுரை மாவட்டத் தொல்லியல் கையேட்டிலும் எதுவுமே இல்லாத போக்கினையே காணுகின்றோம். இன்று நம் கண்ணில்படுவது மதுரை செல்லத்தம்மன் கோவிலில் சிறப்பாகத் திகழும் பாண்டியர்கால கலைச் (கல்) சிற்பமான கண்ணகி சிலை மட்டுமே.

கி.பி 2ம் நூற்றாண்டைத் தொடக்க வரலாறாகக் கண்ணகி வழிபாடு கொண்டுள்ளது. இக்காலம் முத்தமிழ் நாடுகளையும் சமணம் அதனோடு சார்ந்த பௌத்தம் போன்ற மதங்கள் வெகுவாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்த காலம். சேரநாட்டைப் பொறுத்தவரை சேரன் செங்குட்டுவன் மற்றும் அவனைத் தொடர்ந்த சேரலாதன் ஆட்சியாளர்கள் அம்மதங்களையும் கௌரவித்தமை வரலாற்றுப் பதிவுகளாகவேயுள்ளன. தொல்காப்பியர் உட்பட சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகள் போன்றவர்கள் சமணத்தைப் பின்பற்றியதாகவும் மணிமேகலையை எழுதிய சாத்தனார் பௌத்தத்துக்கு மதிப்பளித்தவராகவும் வரலாறு உண்டு. கண்ணகியின் பூம்புகாரும் (காவிரிப்பூம்பட்டினம்) சமணத்தையே பின்பற்றியிருந்ததால் கண்ணகியும் சமணச்சியேயெனும் கருத்தும் வலுப்பெறவே செய்தது.


வேதம் பரப்புபவர்களாக வந்த ஆரியர்கள் அக்காலகட்டத்தே முத்தமிழ் நாட்டுக்குள் புகுந்திருந்த போதும், அவர்களது மதக் கோட்பாடுகளும் நால்வர்ணச் சமூகப் பகுப்புகளும் சங்ககாலச் சமூகக் கட்டமைப்பை உடைத்து உடனடியான வெற்றியை அப்போது பெறவில்லை. பல்லவராட்சியைத் தொடர்ந்த கி.பி 4 ஆம் நூற்றாண்டு முதல் அரசவைக்குள் படிப்படியாகத் தங்கள் செல்வாக்கினை இவர்கள் நிலைநிறுத்தலாயினர். சோழராட்சிக்காலம் இன்னும் பெருவாய்ப்பினை இவர்களுக்கு நல்கியது. அரசவைக்குள்ளும் ஆலயங்களுக்குள்ளும் மிக்க இறுக்கத்தினை ஏற்படுத்திக் கொண்ட இவர்கள் சமூக மட்டத்தில் மேம்பட்டவர்களாயினர். அவர்களால் நாலாம் இடத்தில் வைக்கப்பட்ட மிக்க பெரும்பான்மையினரான சூத்திரரைப் பலவீனப்படுத்தும் நோக்கில் அவர்களுக்குள் இடங்கை வலங்கைப் பிரிவுகளைப் பிராமணர் உருவாக்கினர். தொடர்ந்தாற்போல் சாதீயம் வளர்த்து அதனுள் கூறுகளையும் அடுக்குகளையும் உருவாக்கி நால்வகை நில மக்கள் நானூறுக்கும் மேற்பட்ட சாதிகளாய்ச் சிதறுண்டுபோக வழிசமைத்தனர். ஆலயங்களின் நிருவாகச் செயல்பாட்டுக்குள் புகுந்துகொண்ட அவர்கள் பின்னர் ஆலயச் சொத்துக்களின் மேலாளர்களாகவும் மாறினர். தமிழர்களது வழிபாட்டு முறைகளுக்குள் தங்களது வழிபாட்டு முறைகளைப் புகுத்தினர்.

கி.பி 8 ஆம் நூற்றாண்டைத் தொடர்ந்த சோழர்களது வலுவான ஆட்சிக்காலம் அவர்களுக்குப் பெரும் சாதகமாக அமைந்த போது சமணச்சியான தமிழணங்கு கண்ணகியை இந்துக்கள் வழிபடுவது தவறானது எனும் காரணத்தைக் கற்பித்து சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் வெவ்வேறு சக்திகளின் வடிவங்களில் மாற்றியமைக்கச் செய்தனர். கண்ணகி பகவதியாக, காளியாக, துர்க்காவாக, ராஜேஸ்வரியாக, செங்காளத்தியம்மனாக இன்னும் செல்லத்தம்மன், வட்டபுரியம்மன் போன்ற சூழ்நிலைப் பெயர்களைத் தாங்கியவளாக மாற்றம் பெறலானாள். எனினும், இவ்வாறான மாற்றங்கள் முற்று முழுதாகக் கண்ணகி நம்பிக்கைகளை அழித்துவிடவில்லை என்பதே உண்மையாகும். கேரளத்தின் சில பகவதி ஆலயங்களிலும் தமிழகத்தின் திருவொற்றியூர் வட்டபுரியம்மன் ஆலயத்திலும் இடம்பெறும் நிகழ்வுகள் இதற்குச் சிறந்த உதாரணமாக அமையும்.


கேரள மாநிலத்தில் நடைமுறையிலுள்ள பகவதி மந்திரங்களிலும் பகவதி தோத்திரங்களிலும் பெரும்பாலும் கண்ணகியின் அடையாளங்கள் வெளிப்படுவது தெரியும். கேரளாவின் விஷாரிகாப் பகுதியில் அமைந்துள்ள ஆனைக்குளம் பகவதி தொடர்பில் பாடப்படும் மலையாள உச்சரிப்பிலமைந்த தமிழ் விருத்தப்பாவானது இதன் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தும்.

“ஆதிமுதல் காவிரிப்பூம் பட்டினத்து ஆயிரவூர் வங்கிசத்தில்
அரிய கண்ணகையம்மனாகவே தான்பிறந்து அதிரூபமானபொழுது
தீதிலாக் கோவலருடன் பாரியாளாகவும் சிறிதுகாலம் சென்றபின்
திங்கள் முகமாய்வந்து தனிக்காக மதுரையில் சிலம்பு கூறினாளில்
நீதியரச சென்றான பாண்டிநா டெத்திநீ நீறாயெரித்த சோதி
நித்தில சொரூபியாய் இத்துலகாள்கின்ற நீலியே திரிசூலியே
ஆதிகாலத்திலும் மகிமையாய் நீவந்த அதிசயமும் ஆரறிவாரோ
ஆனைக்குளம் வளர் பகவதி அம்மையே! ஆனந்த மகமாயியே!”

மட்டக்களப்புத் தேசத்தில் இன்றுவரை முதன்மைபெற்று விளங்குகின்ற கண்ணகி வழிபாடு, பண்டைத் தமிழகத்தே குறிப்பாக, அதனை உருவாக்கித் தந்த சேரத்தில் (கேரளம்) அது அருகிவிட்டமைக்குத் தமிழக மற்றும் கேரள ஆய்வாளர்கள் பல காரணங்களை முன்வைக்கின்றனர். கி.பி 2ஆம் நூற்றாண்டு முதல்கொண்டு சேரநாட்டிலும் பின்னர் பாண்டிநாடு, சோழநாடு, தொண்டைநாடு என்பவற்றிலும் கன்னட நாட்டின் சில பகுதிகளிலும் வழிபாட்டிற்குரிய தெய்வமாக்கப்பட்ட கண்ணகி பல்லவர் ஆட்சியின் பிற்காலம் முதல்கொண்டு தொண்டைநாடு மற்றும் சோழநாட்டிலும், அதன் பின்னர் பாண்டிய மற்றும் சேரநாட்டிலும் படிப்படியாக மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டுமென்பதே அவர்களது ஒத்த கருத்தாகவுள்ளது. 2005ல் திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் ஒரு வார காலம் இடம் பெற்ற சிலப்பதிகாரக் கருத்தரங்கில், பல ஆய்வாளர்களால் இதுதொடர்பான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.


பண்டைத் தமிழகத்திலே மிக்க சிறப்போடு விளங்கிய கண்ணகி வழிபாடு வேறு வழிபாடுகளுக்குள் உள்வாங்கப்படவும் படிப்படியாக வழக்கொழிந்துபோகவும் தமிழகத்தில் மிகத் தெளிவாகத் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்ட ஆரியமயமாக்கல் தன்மையும் கூடவே கண்ணகி வாழ்ந்ததாகச் சொல்லப்படுகின்ற காலத்தே காவிரிப்பூம் பட்டினத்தில் ‘ஜைன’ மதமே நிலைபெற்றிருந்ததால் அவள் சைவ மதத்தினைச் சார்ந்திருக்கமுடியாது என்ற ஐயப்பாடுமே முக்கிய காரணங்களாயமையலாம் என்பது பலரது ஆய்வின் வெளிப்பாடாக அமைந்திருந்தது. அத்தோடு கூடவே கண்ணகி ஒரு தமிழ்ப் பெண்ணாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதுவும் ஒரு காரணமாயமையும்.

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் - ஆய்வாளர் முனைவர் சிலம்பு நா. செல்வராசு, ‘International Tamil Research E-Journal’ இல் கண்ணகி மரபு: தமிழ் இன அடையாள உருவாக்கமும் அடையாள அழிப்பின் அரசியலும் எனும் ஒரு நீண்ட ஆய்வுக்கட்டுரையினை எழுதியிருந்தார். அதில் பின்வருமாறு அவர் குறிப்பிடுகின்றார்.

மூவேந்தருள் தலைசான்றவனாக இமயம் வென்றவனாக சேரன் முன்னிறுத்தப்பட்டான். இம்மன்னன் முன்னிறுத்தும் சமயமாக கண்ணகி சமயம் காட்சி தருகின்றது. இவற்றோடு கண்ணகி வழிபாடும் பத்தினி வழிபாடாக அல்லது தாய்த்தெய்வ வழிபாடாக நகரத் தொடங்கியது. கண்ணகி தொன்மம் சிலப்பதிகாரமாக மலர்ச்சியுற்ற போது வடவேங்கடம் தென்குமரிக்கு இடைப்பட்ட நிலப்பகுதியைத் தமிழ்நாடாக மொழிவழியாகக் கட்டமைத்தது. பன்முகச் சமய மரபுகள் கண்ணகி வழிபாட்டை ஏற்றது. ஆகத் தமிழ்த் தேசியத்திற்குரிய மொழி, அரசு, சமயம், பண்பாடு, கலைகள், வரலாறு, வணிகம் முதலியவற்றைக் கட்டமைக்கும் காப்பியமாகச் சிலப்பதிகாரம் உருவானது. இந்நிலையில் இந்த அடையாளத்தை வீழ்த்தும் அழிக்கும் நுண் அரசியல்சார் நிழ்வுகள் தமிழகத்தில் நடந்தேறின. பல்வேறு சமயங்கள் பெரும் சமய நிலையை நோக்கி நகரத் தொடங்கின. இதன்போது அனைத்துச் சமயங்களையும் வீழ்த்தி சைவமும் வைஷ்ணவமும் பெரும் சமயங்களாக மாறின.

இது பல்லவர் காலத்து நிகழ்வாகும். கண்ணகி வழிபாடு மெதுவாக மறையத் தொடங்கியது. பத்தினி வழிபாட்டின் இடத்தைத் திரௌபதையம்மன் வழிபாடு உச்சம்பெற்று வீழ்த்தியது. அது கால்கொண்ட பின்னர் கண்ணகி வழிபாடு வழக்கொழிந்தும் சில இடங்களில் மாரிவழிபாடாக மாற்றம்பெறவும் தொடங்கியது. இந்நிலைக்கு கண்ணகி ஒரு மானிடப் பெண்ணாக விளங்கியமையும் ஒரு காரணமாகும். இது வடமொழியானது பெரும்மொழியாக வழக்குப்பெற்ற சோழர் காலத்தில் உச்சம்பெற்றது. எனக் குறிப்பிடுகின்றார்.

இதன்போது கி.பி 8ஆம் நூற்றாண்டைத் தொடர்ந்த சோழராட்சிக் காலத்தே பல கண்ணகி கோவில்கள் பிராமணரின் ஆலோசனைக்குள் வெவ்வேறு பெயர்களுள் மாற்றமடைந்தன. சேரன் செங்குட்டுவனால் கண்ணகிக்கு கட்டப்பட்ட முதல் ஆலயமாக - இவ்வாறு மாற்றமடைந்த கொடுங்களூர் பகவதியைப் பார்க்கின்றோம்.


இங்குள்ள அம்மன் ஒற்றை மார்போடு தென்படுவதால் ‘ஒற்றை முலைச்சி அம்மன் கோவில் என்றே சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர்வரை அழைக்கப்பட்டதாக இதனைத் தனது சிறுவயது முதலே அறிந்து வைத்திருக்கும் ஆய்வாளர் கே.ஆர்.வைத்தியநாதன் கூறுவார். வைத்தியநாதன் கேரளத்துக் கோவில்கள் பற்றி பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியவர். ‘Temple and Legends of Kerala’ என்ற நூலில் இவ்வாலயம் பற்றிய பல தகவல்களை அவர் பதிவாக்கியுள்ளார். கேரளத்து மக்களின் நீண்டகால வரலாற்றுக்குரிய ஒரே கோவிலாகவே இன்றுவரை இது நிலவுகின்றது.

கேரளத்திலும் பின்னர் தமிழகத்திலும் ஏற்பட்ட இம்மாற்றத்தின் தொடர்ச்சியை யாழ்ப்பாணப் பிரதேசத்திலும் நம்மால் அவதானிக்கமுடியும். இதில் முக்கியமாக ஆறுமுக நாவலர் போன்ற பெரியவர்களும் மற்றும் மேலாதிக்க சமூகத்துக் கனவான்களும் பெரும் பங்காளர்களாகவுள்ளனர். இது தொடர்பில் சிறந்த சமூகவியல் ஆய்வாளராகக் கருதப்படும் பேராசிரியார் என்.சண்முகலிங்கன் அவர்களின் ஆய்வுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. யாழ்ப்பாணப் பிரதேச கண்ணகி வழிபாடு தொடர்பில் அவரது கள ஆய்வுத் தகவல்கள் இதில் வலுச்சேர்ப்பதாகவேயுள்ளன. நாவலரின் சமஸ்கிருதமயமாக்க அலைகளிடை யாழ்ப்பாணத்தில் சில கண்ணகி அம்மன் கோவில்கள் அடையாளத்தினை இழந்ததுண்டு. செட்டிச்சியான சாதாரண பெண்ணுக்கு எப்படிக் கோவிலமைக்க முடியுமெனும் தீவிர கேள்விகளுக்கிடையே சில கோவில்களைப் பிற தாய்த் தெய்வங்களுடன் இசைவாக்கி பிழைக்க வைத்ததுமுண்டு. பல்வேறு தடைகளையும் மாற்ற முயற்சிகளையும் தாண்டி சுட்டிபுரம், பூநகரி, புளியங்கூடல், சாவகச்சேரி, பன்றித் தலைச்சி, கோப்பாய், அச்செழு போன்ற இடங்களில் மீளவும் கண்ணகி உயிர்ப்புக் குன்றாமல் நிலைபெறுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.


கண்ணகி கோவில்களை வெவ்வேறு தாய்த்தெய்வப் பெயர்களுக்கு மற்றிய தன்மை கேரளத்தில் இடம்பெற, கேரளத்தின் கோவில் சொத்துடமையாளர்களாவும் சமூகக் கட்டமைப்பின் முதன்மையாளர்களாகவும் அன்று விளங்கிய நம்பூதிரிப் பிராமணர்கள் முக்கியப் பங்காளிகளாகின்றனர். கேரளத்தின் முதன்மை பெற்ற வேளாண் சமூகத்தினரான நாயர் சமூகத்துடன் சம்பந்த மணமுறையை நம்பூதிரிப் பிராமணர்கள் பேணியமை இதற்குப் பெரும் வாய்ப்பாகவே அவர்களுக்கு அமைந்தது. நம்பூதிரிகள் நாயர் பெண்களை மணந்து மருமக்கள் தாய நடைமுறையின் கீழ் சொகுசான வாழ்க்கையை அனுபவித்ததோடு பெரும்பாலான ஆலயங்களையும் தம்வசப்படுத்தினர். இதனை வலுப்படுத்தும் தன்மையானது கண்ணகியின் முதல் கோவிலான கொடுங்களூர் கண்ணகி (பகவதி) ஆலயத்தில் இன்றும் இடம்பெறுவதைப் பார்க்கின்றோம். கொடுங்களுர் அம்மா எனப் பெருமையோடு அழைக்கப்பட்ட இக்கண்ணகி கோவிலை நாயர் சமூகம் உள்ளிட்ட ஏனைய சாதரண மக்களின் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் பகவதி ஆலயமாக மாற்றியிருந்தாலும் ஒற்றை முலைச்சியம்மன் கோவில் என்ற நீண்டகாலப் பெயரையே அண்மைவரை இது கொண்டிருந்தது. இவ்வாலயத்தின் தலைப்பொலி மற்றும் பரணி விழா போன்றவை கேரளத்தின் உரித்துமிக்க சமூகமான நாயர் சமூகத்தின் முன்னீடாவே இன்றுமுள்ளது. இதில் பரணி விழா கேரளத்தின் பெருவிழாவாகவே இடம்பெறும். நாட்டின் நாலாதிசையிலிருந்தும் ஆயிரக் கணக்கில் மக்கள் குழுமுவர். நாயர் சமூகத்தைச் சேர்ந்த பூசகரே இன்றும் பூசைகளை மேற்கொள்கின்றார். எனினும் விழா முடிவுற்ற பரணிக்கு மறுநாளான கார்த்திகை நட்சத்திரத்தில் நம்பூதிரிப் பிராமணப் பூசகரால் ஆகம முறையில் ஆலயத்தைத் தூய்மைப்படுத்தும் கிரியைகள் இடம்பெறுவதைக் காணமுடியும். இத்தன்மையை அவதானிக்கும்போது பண்டைத் தமிழரது பாரம்பரிய வழிபாட்டு முறைகளைப் பிராமணர்கள் ஒதுக்கியதோடு கண்ணகி, தெய்வமாக நிலை நிறுத்தப்படுவதை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமையே இது என்பதாகும். ஏனைய ஆலயங்களைப் போல் இவ்வாலயமும் பிராமணர் கைக்கு மாறுவதை அன்று மக்கள் முழுமூச்சுடன் எதிர்த்த போது அப்போதிருந்த ஆட்சியாளர்களால் இந்நடைமுறை ஏற்படுத்தப்பட்டதாக அங்கு பெறப்படும் களஆய்வுத் தகவல்கள் மூலம் அறியவருகின்றது. கண்ணகித் தெய்வத்தின் மாற்றுரு தொடர்பாகக் கேரளத்தைச் சேர்ந்த பேராசிரியர் வைத்தியநாதன், பேராசிரியர் ரி.கே. கெங்காதரன் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் பி.எல்.சாமி போன்றோர் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.


இலங்கையில் சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் பத்தினி வழிபாடானது அது அடைந்திருந்த பெருவளர்ச்சியில் இன்று தளர்வினைக் கண்டாலும் கிராமப்புறங்களில் அதன் இறுக்கம் இன்னும் வலுவோடிருப்பதைப் பேராசிரியர் கணநாத் ஒபயசேகராவின் ஆய்வுகள் உறுதிப்படுத்தவே செய்கின்றன.

பண்டைய புகழுக்குரிய நவகமுவ பத்தினி தேவாலயம் பெரும் பாரம்பரியத்திற்கு உட்பட்டதாகும். அவ்வம்மன்மேல் பாடப்பட்ட தலுமுற பூஜாவ எனும் இலக்கியமானது, ‘நவகமுவவில் வாழும் அழகிய பெண் தெய்வமான பத்தினித் தாயே! உனது வல்லமையால் தமிழ்த் தெய்வங்களைத் தண்டித்தவளே!’ என வரும் பாடல் அடிகளைக் கொண்டு கண்ணகியைச் சிங்கள அடையாளத்துடன் அம்மக்கள் நோக்குவது புலனாகின்றது. மேலும் ‘பகம் கம்புறா’ எனும் இலக்கியமானது பத்தினியை பௌத்தத்தின் ஏழு கிரியம்மாக்களில் ஒருவராக அடையாளப்படுத்துவதோடு, பத்தினி அடுத்த பிறவியில் ஆணாகப் பிறந்து அதன் வழியே புத்தரின் நிலையை அடையவிருப்பதாகவும் குறிப்பிடுகின்றது. பேராசிரியர் ஒபயசேகர சந்தித்த பத்தினியம்மன் ஆலயக் கப்புறாளைகளில் ஒருவர் பத்தினித் தெய்வத்தின் உரிமை குறித்து வெளிப்படுத்தும் போது, பத்தினி ஒரு சிங்கள பௌத்த தெய்வம். அவளுக்கான சடங்குகள் இங்குதான் இடம்பெறவேண்டும். இந்தியாவிலல்ல. ஏனெனில் அங்கு பௌத்தம் செத்துவிட்டது எனக் கூறியதாகக் குறிப்பிடுகின்றார். இவை அனைத்தையும் ஒப்புநோக்கும்போது உண்மையில் நாம் விளங்கிக் கொள்வது யாதெனில் கண்ணகியின் தெய்வத்தன்மையானது யாவருக்கும் ஏற்புடைத்தாயமைவது என்பதே.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p177.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License