கவிக்கோ வெல்லவூர்க்கோபால்
இலங்கை, மட்டக்களப்பு மாவட்டம், வெல்லாவெளியைப் பிறப்பிடமாகக் கொண்ட சீனித்தம்பி கோபாலசிங்கம், எழுத்துலகப் படைப்புகளுக்காகத் தனது பெயரை வெல்லவூர்க் கோபால் என்று மாற்றிக் கொண்டார். கணக்கியல் சான்றிதழ் படிப்பு படித்த இவர் உள்ளூராட்சி நிர்வாக அலுவலர், கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிக் கற்கை இணைப்பு அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார். இவர் 16 நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். பத்திரிகைகளில் 600க்கும் அதிகமான கவிதைகளும், 200க்கும் அதிகமான கட்டுரைகளும் வெளியாகி இருக்கின்றன. வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் 62க்கு அதிகமான நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கிறார். இவருடைய மூன்று நூல்கள் இலங்கை சாகித்ய விருதுகளைப் பெற்றிருக்கின்றன.
இலங்கை அரசின் தேசியக் கலைஞர் விருது மற்றும் கலாபூஷண் விருது, மாகாண அரசின் முதல்வர் விருது, இலங்கை இந்து கலாச்சார அமைச்சு வழங்கிய அருள்நெறி விருது, இலக்கிய அமைப்புகளின் ஒன்றியம் வழங்கிய கவிக்கோ விருது, மட்டக்களப்பு கலாச்சாரப் பேரவை வழங்கிய தேனகக் கலைச்சுடர் விருது ஆகியவைகளை இவர் பெற்றிருக்கிறார்.
கட்டுரை - பொதுக்கட்டுரைகள்
கட்டுரை - இலக்கியம்
கட்டுரை - சமூகம்

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.