இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

கிழக்கிலங்கை - போரதீவுப்பற்றின் முக்கிய வரலாற்றுப் பதிவுகள்

கவிக்கோ வெல்லவூர்க் கோபால்
இலங்கை


போரதீவுப் பற்று - அறிமுகம்

மட்டக்களப்புத் தேசத்தில் ஒரு நீண்டகால வரலாற்றுப் பாரம்பரியத்தைத் தன்னகத்தே கொண்டு சிறப்புடன் மிளிர்வது போரதீவுப்பற்றுப் பிரதேசமாகும். வெல்லாவெளி குடைவரைக் கல்வெட்டை ஆதாரப்படுத்தியஅண்மைய ஆய்வுகளின்படி, இதனது ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றுக் காலம் கிறிஸ்துவுக்கும் முன் முன்னூறு ஆண்டுகளைக் கடந்ததாக அமையும். கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வாக்கில் நெடுந்தீவை இருக்கையாகக் கொண்டு ஆட்சி செய்த விஷ்னுபுத்திரன் வெடியரசன் வரலாற்றில் அவனது தம்பியரில் ஒருவனான விளங்குதேவன் (போர்வீரகண்டன்) போர்முடை நாட்டில் வாழ்ந்ததாக, வாய்மொழித் தகவல்கள் கூறுகின்றன. அத்தோடு மீகாமனுடனான போரில் தனது மற்றைய தம்பியான வீரநாராயணனை இழந்த வெடியரசன், தனது அந்திமக் காலத்தில் இப்பகுதிக்கு இடம்பெயர்ந்ததாகவும் சொல்லப்படுகின்றது. (01) போர்முடை நாடு பின்னர் போர்முனைநாடு என வரலாற்றில் பதிவாகியுள்ளது.

போர்முடைநாடு பெயர்க் காரணம் குறித்து நாம் இங்கு கவனமாக ஆராயவேண்டியுள்ளது. போர் என்பது நெற்குவியலாலான சூட்டினையும் முடை என்பது காட்டுப்பகுதியையும் குறிப்பதாக அமையும். மருதமும் முல்லையும் கலந்த இந்நிலப்பகுதிக்கு இது பொருத்தமான பெயராகவே விளங்கியதெனலாம். கி.பி 11ஆம் நூற்றாண்டான சோழராட்சிக் காலத்தில், இப்பிரதேச திருப்படைக் கோவிலான கோவில் போரதீவு சித்திரவேலாயுதர் ஆலயம் போர்முனைநாடு சித்திரவேலாயுதர் ஆலயம் என அழைக்கப்படுவதை அறியமுடிகின்றது. (02) கி.பி 1215ன் பின்னர் கலிங்க மாகோனின் ஆட்சிக்காலத்தில் அவன் மட்டக்களப்புத் தேசத்தை ஏழு வன்னிமைப் பிரிவுகளாகப் பிரித்தபோது கதிர்காமம் தொடக்கம் நாதனை (வெல்லாவெளி) வரையான பெருநிலப்பரப்பு நாடுகாடுப் பற்றினுள் உள்ளடக்கப்படுகின்றது. (03) 1540வாக்கில் மட்டக்களப்புத் தேசத்தின் சிற்றரசுப் பொறுப்பினை ஏற்ற எதிர்மன்னசிங்கன் வெருகல் தொடக்கம் கதிர்காமம் வரையான நிலப்பரப்பை ஐந்து நிருவாக அலகுகளாகப் பிரித்த போது, இப்பிரதேசம் மீண்டும் போர்முனைநாடு என வரையறை செய்யப்பட்டுள்ளமையும் அறியலாம். (04) எதிர்மன்னசிங்கனின் ஆட்சிக் காலத்தின் பின்னர் (1585) மட்டக்களப்புத் தேசத்தில் பல சுய ஆதிக்கமிக்க வன்னிமைச் சிற்றரசுகள் கண்டி அரசின் பிணைப்புடன் தோற்றம் பெற்றபோது பழுகாமத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட செல்ல பண்டார சிற்றரசனின் கீழ் இப்பிரதேசம் செல்கின்றது. 1622ல் போர்த்துக்கேயர் மட்டக்களப்பைக் கைப்பற்றியதும் அவர்கள் மாகோன் வகுத்த நிருவாகப் பிரிவுகளையே நடைமுறையில் கைக்கொண்டனர். அதனால், மீண்டும் இப்பிரதேசம் நாடுகாடுப் பற்றுள் இணைக்கப்பட்டது. 1736ல் ஒல்லாந்தர் மட்டக்களப்பைக் கைப்பற்றியதும் போர்த்துக்கேயரின் நிருவாகக் கட்டமைப்பினையேப் பின்பற்றலாயினர். பின்னர், அவர்கள் கண்டியுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்பிரகாரம் 1766ல் மட்டக்களப்பின் வடபகுதிக்கு காலிங்காகுடி அருமைக்குட்டிப் போடியையும் தென்பகுதிக்கு பணிக்கனார்குடி கந்தப்போடியையும் தலைமைப் போடிகளாக நியமித்த போது, இப்பிரதேசம் மட்டக்களப்பின் வடபகுதிக்கு உள்ளானது. (05) கி.பி 1802ல் ஆங்கிலேயர் மட்டக்களப்பில் தங்கள் ஆட்சியை நிலைநிறுத்திய பின்னர் நாதனைப் பற்று உருவாக்கம் பெற்றது. இதில் இன்றைய உகனைப் பகுதி, மகோயா பகுதி, போரதீவுப் பற்று, எருவில் பற்று என்பன உள்ளடக்கப்பட்டிருந்தன. அதன் பின்னர், 1832ல் கோல்புறுக் - கமரோன் ஆணைக்குழு, இலங்கையின் எல்லைகளை மீள்வரைவு செய்தபோது, வெருகல் தொடக்கம் கட்டகாமம் வரையான மட்டக்களப்புத் தேசம் பதின்மூன்று நிருவாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டு, அதில் இன்றைய போரதீவுப் பற்று மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேசம், உகனைப் பிரதேசம் ஆகியவை ஒரே நிருவாக அலகுக்குள் போரதீவுப் பற்று எனும் பெயரில் செயல்படலாயின. ஆங்கிலேயர் ஆட்சியின் பிற்பட்ட காலத்தில் அவர்கள் தனித்தனியாகப் பெரும்பாக இறைவரி அலுவலர்களை (D.R.O) நியமித்த போது மண்முனை தென் எருவில் போரதீவுப் பற்று எனும் நிருவாகப் பிரிவில் இப்பிரதேசம் அடங்கியிருந்தது. அதன் பின்னர் 1971ல் போரதீவுப் பற்று தனி உதவி அரசாங்க அதிபரின்கீழ் செயல்படலாயிற்று. 1982 முதல் இப்பிரதேசம் போரதீவுப் பற்று மற்றும் மண்முனை தென்மேற்கு என இரு நிருவாக அலகுகளாக இயங்குவதைக் காணலாம்.

இன்றைய போரதீவுப் பற்று முன்னர் தனித்தனியாக இயங்கிய பழுகாமம், மண்டூர், நவகிரி நகர் ஆகிய உள்ளுராட்சி மன்றங்களை உள்ளடக்கிய சுமார் 167 சதுரக் கிலோ மீற்றரைக் கொண்ட பகுதியாகும். இது பண்டைய வரலாற்றுச் சிறப்பும், பாரம்பரியமும்மிக்க பழுகாமம், பெரிய போரதீவு, கோவில்போரதீவு, வெல்லாவெளி, மண்டூர் ஆகிய பழந்தமிழ் கிராமங்களை முன்னிலைப்படுத்துவதை இங்கு முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்.


வரலாற்றுப் பதிவுகள்

01.வெல்லாவெளி

போரதீவுப் பற்றின் நிருவாக இருக்கையாக அமைந்த வெல்லாவெளிக் கிராமம், மட்டக்களப்புத் தேச வரலாற்றை இன்று சர்வதேச அளவில் ஆய்வுரீதியாக முன்னிலைப்படுத்துவதில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.

01: 01. வெல்லாவெளி கற்சாசனம் (குடைவரைக் கல்வெட்டு)



இவ்விரு கல்வெட்டினையும் 1995ல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் குழுவொன்று பார்வையிட்டிருந்தும் முழுமையான தகவல்கள் அவர்களால் வெளிப்படுத்தப்படவில்லை. பின்னர் 2011ல் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையிலாலான குழுவினர் இதனை ஆய்வு செய்தனர். இது தொடர்பில் 19.02.2012ல் தினக்குரல் வாரமஞ்சரியிலும், 06.09.2012ல் வீரகேசரியிலும் இரு கட்டுரைகளைப் பேராசிரியர் பத்மநாதன் எழுதியிருந்தார். இதன் பின்னர் 11.10.2012ல் தமிழகத்தையும் இலங்கையையும் சேர்ந்த தலைச்சிறந்த கல்வெட்டாய்வுக் குழுவினர், இதனை முறையாக ஆய்வு செய்தனர். இதில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையின் மூத்த கல்வெட்டாய்வாளர் முனைவர் வே. வேதாசலம், மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொல்லியல் துறைப் பேராசிரியர் கு. சேதுராமன், தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை ஆய்வாளர் முனைவர் சு. இராஜகோபாலன், தஞ்சைப் பல்கலைக்கழக நீரகழ்வாய்வு மையப் பேராசிரியர் ந. இராஜவேலு, மதுரை தமிழ்நாடு தொல்லியல்துறை அலுவலர் முனைவர் சொ. சாந்தலிங்கம் ஆகியோருடன் பேராசிரியர் சி. பத்மநாதன், பேராசிரியர் வ. மகேஸ்வரன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

“பெரும் தலைவன் ஒருவனுக்கு எல்லோருடைய சம்மதத்தின் பேரிலும் செய்து கொடுக்கப்பட்ட குகை” எனும் வாசகம் பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டு இற்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டதெனவும், இது முறையான தமிழ்ப் பிராமி வரிவடிவத்தைக் கொண்டுள்ளதெனவும், கி.மு 300 ஆண்டுகளுக்கு முற்பட்டே தமிழினம் இங்கு வாழ்ந்துள்ளமையையும், இலங்கையில் மாத்திரமன்றி, தென்னிந்தியாவில் கிடைக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இவை முக்கிய இடம் பெறுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன் விரிவான விளக்கத்தை ‘வெல்லாவெளி வரலாறும் பண்பாடும்’நூல் கொண்டுள்ளது. (06)


தமிழ்நாடு - இலங்கை கல்வெட்டாய்வுக் குழுவினர்


இவர்கள் போரதீவுப்பற்றில் வெல்லாவெளி, கோவில்போரதீவு, பழுகாமம், பக்கியெல்லை, 39ம் கிராமம் உட்பட மட்டக்களப்பின் தொல்லியல் தடயங்களை ஆய்வு செய்தனர்.


01:02. தொட்டத்து மலை தொல்லியல் தடயங்கள்

இம் மலைத்தொடரின் முழுப்பகுதியினையும் முறையாக ஆய்வு செய்த இக் குழுவினர், இங்குள்ள ஏறு படிகள், அழிபாடுற்றுக்கிடக்கும் கட்டிடச் சிதைவுகள் மற்றும் நீர்ச் சுனைகள் என்பவற்றை விரிவான ஆய்வுக்கு உட்படுத்தியதோடு சுமார் 2000 வருடங்களுக்கு முற்பட்டு ஒரு நீண்டகாலம் இங்கு மக்கள் வாழ்ந்துள்ளமையை உறுதிப்படுத்தினர். மிகப் பெரிய அளவிலான செங்கற்களை இவர்கள் கட்டிடங்களுக்கு பாவித்திருப்பதையும் இங்கு ஒரு முக்கிய வழிபாட்டுத்தலம் இருந்துள்ளமையையும் இவர்கள் தெளிவுபடுத்தினர். பின்வரும் படங்கள் அவற்றினை விரிவாகவே சித்தரிக்கின்றன.



தொட்டத்து மலைத்தொடரில் அழிபாடுற்ற பண்டைய குடியிருப்புகள்

01:03. வதனமார் பாறை


வதனமார் என்போர் தமிழகத்தின் நீலகிரிப் பகுதியிலிருந்து இலங்கைக்கு குழுவாக வந்த இடையர் குலத்தினர் என்பது ஒரு பொதுவான கருத்தாகும். அங்குள்ள தோடர் சமூகத்தினராகவும் இவர்களைக் கருதுவதுண்டு. இவர்கள் தொடர்பான ஆய்வுகளில் வெல்லாவெளி (நாதனை) இவர்களது முக்கிய வாழ்விடமாக குறிப்பிடப்படுகின்றது. வெல்லாவெளி வதனமார வழிபாடு மற்றும் புகழ்பெற்ற நாதனை வில்லைகட்டிச் சடங்கு போன்றவை இவர்களைக் கொண்டே ஆரம்பித்தன. கண்டி கீர்த்திசிறி ராஜசிங்கனின் ஆட்சிக் காலத்தில் சிறப்பாக இடம்பெற்ற இச்சடங்கு குறித்த தகவல்களை, நாடுகாடு பரவணிக் கல்வெட்டு தகவல்படுத்தியுள்ளது. இது குறித்து எஸ்.ஒ. கனகரெத்தினம் தனது Monograph of the Batticaloa District நூலில் நாதனை எனும் பழமைமிக்க சிறிய நகரத்தில் வதனமாருக்கு கோவில் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். (07)

01:04: போர்த்துக்கீசரால் அழிக்கப்பட்ட வெல்லாவெளி சிவாலயம்


இச்சிவாலயம்குறித்த ஆய்வுகள் தற்போது பலராலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆய்வாளர் என்.கே.எஸ். திருச்செல்வம் 2012ல் இரு கட்டுரைகளை, தினக்குரல் பத்திரிகையில் விரிவாக எழுதியுள்ளார். இதனை கி.பி 10ஆம் நூற்றாண்டுக்குரியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் கருங்கல்லினாலான மூன்று கதவு நிலைகள் வெல்லாவெளி பிள்ளையார் ஆலயத்தில் (1890) வைத்துக் கட்டப்பட்டுள்ளது. இதன் தீர்த்தக் கிணறு மற்றும் சிவலிங்கமிருந்த பீடக்கல் என்பனவும் அங்கு காணப்படுகின்றன. இதனை வெல்லாவெளி வரலாறும் பண்பாடும் நூல் விரிவாகப் பதிவுசெய்துள்ளது. (08)

01:05. கல்லடிப் பிள்ளையார்


இங்கு சிறிய குன்றின் அடிப்பாகத்தில் அழகிய விநாயகர் சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இதனை ஆய்வுப்படுத்திய ஆய்வாளர்கள் தமிழகத்தில் விநாயகர் வழிபாடு முன்னெடுக்கப்பட்ட சோழராட்சிக் காலத்தில் மட்டக்களப்புத் தேசமும் சோழரது மேலாதிக்கத்தின்கீழ் இருந்தமையால் இக்காலத்தே இவ்விநாயகர் சிற்பம் குன்றின் அடிப்பாகத்தில் பொறிக்கப்பட்டிருக்கலாம் எனக்குறிப்பிடுகின்றனர். இதனை ‘மட்டக்களப்புத் தேசம் வரலாறும் வழக்காறும்’ நூலும் பதிவுசெய்துள்ளது. (09)


02: படலைக்கல் (பக்கியெல்லை)

02:01. படலைக்கல் கல்வெட்டு


இக்கல்வெட்டு கி.பி 2ஆம் அல்லது 3ஆம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டாக தமிழக ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகின்றது. இப்பிராமிச் சாசனத்தின் வாசகமானது “சிப்பு கல மி குரத்தி வேமி பெரு வணிக” என்பதாகும். அங்கு பெண் துறவிகளைக் கொண்ட தமிழ் வணிகர்களின் ஆதரவினைப் பெற்ற - தமிழருக்கான ஒரு சமணப்பள்ளி இருந்தமையை இது புலப்படுத்துகின்றது. மலையில் காணப்படும் ஏனைய தொல்போருட் சின்னங்களும் இதனையே மெய்ப்பிப்பதாக இவ்வாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சாசனம் குறிப்பிடும் ‘பெருவணிக’ எனும் பதம் இப்பள்ளியை அமைத்துக்கொடுத்தவராதல் கூடும். சமணருக்கான பள்ளிகளை அமைத்துக் கொடுத்தவர்களில் வணிகர்கள் முக்கியப்படுவதாக தென்னிந்திய சாசனங்கள் வெளிப்படுத்துகின்றன. (10)

03. பழுகாமம்

மட்டக்களப்புத் தேசத்தின் பண்டைய புகழ்பெற்ற கிராமங்களில் பழுகாமத்திற்கு என்றும் தனியிடமுண்டு. சிங்காரக்கண்டி எனச் சிறப்பிக்கப்படும் இதன் தோற்றுவாய் பழுவன் எனும் வேடர; தலைவனை முன்னிறுத்தி அமைவதாக மூத்த எழுத்தாளர் கவிஞர் ஆ.மு.சி.வேலழகன் தனது திருப்பழுகாமம் வரலாற்றில் குறிப்பிடுவது ஏற்புடைத்தாகவே அமையும். காமம் என்பது ஊர், கிராமம், குடி என பொருள் தருவதாகும். இக்கிராமம் தொடர்பில் நாம் மேற்கொண்ட சமூக கள ஆய்வுத் தகவல்களைப் பார்க்கின்ற போது, அவரால் துணியப்பட்ட கி.பி 10ஆம் நூற்றாண்டான இதன் வரலாற்றுக்காலம் இன்னும் பல நூற்றாண்டுகள் முன்னோக்கியதாகவே அமையும். (11)

03:01. நடுகல் - குத்துக்கல் (Hero Stone)


முத்தமிழ் நாடுகளில் ஒன்றான பண்டைய சேரநாட்டில் இறந்த வீரர்கள் மற்றும் சமூகத் தலைவர்களின் புதைகுழியில் நடுகல் வைக்கும் சங்ககால மரபு இக்கிராமத்தில் பேணப்பட்டுள்ளமை மிகவும் முக்கியத்துவம் பெறுவதாகும். இந்நடுகற்கள் இங்கு முன்னர் பரவலாக காணப்பட்டமை களஆய்வில் தெரியவந்துள்ளது. இந்நடைமுறையானது எக்காலம் முதல் தோற்றம் பெற்றுள்ளது என்பதனைக் கண்டறியமுடியவில்லை. பெருங் கற்காலப் பண்பாடு பரவலாக நிலவிய மட்டக்களப்புத் தேசத்தில் ஒரு பழந்தமிழ் கிராமத்தில் காணப்பட்ட இச்சிறப்பியல்பு விரிவான ஆய்வினுக்கு உட்படுத்தப்படவேண்டிய ஒன்றாகும். இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் க. தங்கேஸ்வரி தனது கிழக்கிலங்கை பூர்வீக வரலாற்றில் மிகவும் விரிவாகவே விளக்கியுள்ளார். (12)


03:02. சிங்காரக்கண்டி பண்டாரவீடு

2005ல் நாம் பழுகாமத்தில் மேற்கொண்ட சமூகவியல் களஆய்வில் கண்டியரசின் காலத்தில் அங்கிருந்த ‘பண்டார வீடு’ பற்றிய தகவல் பெறப்பட்டது.(13) பண்டாரத் தோப்பு என்பது அரசுக்குரிய தோட்டத்தினையும் பண்டார வீடு என்பது அரச விடுதியினையும் குறிப்பதாகும். கழக அகராதியும் இதனையேக் குறிப்பிடுகின்றது. பண்டாரப் பிள்ளைகள் என்போர் அரச உள்ளுர்ப் பாதுகாவலர்களாகவும் போர்வீரர்களாகவும் செயல்பட்டவர்கள். தமிழக - யாழ்ப்பாண - மட்டக்களப்பு வரலாற்றுத் தகவல்களும் இதனை உறுதிசெய்வதைக் காணலாம். புகழ்பெற்ற ஆய்வாளர் தேர்ஸ்டனும் இதுகுறித்து விளக்கியுள்ளார். (14) பழுகாமம் பண்டார வீடு இன்று அங்கிருக்கும் துரோபதை அம்மன் ஆலயத்தை அண்மித்திருந்ததான வாய்மொழித் தகவலொன்றினை முன்னாள் வண்ணக்கரான திரு.வ. தெய்வராசா 2005ல் எமக்கு வழங்கியிருந்தார். கண்டியரசின் காலத்தில் கண்டி மன்னர்களது சுற்றுலா அரச இல்லமாக அப்பண்டார வீடு விளங்கியிருக்கின்றது. அங்கிருந்த பண்டாரப் பிள்ளைகள் அவர்களது உள்ளுர்ப் பாதுகாவலர்களாகச் செயல்பட்டிருக்கின்றார்கள். கண்டியரசன் இராசசிங்கன் கரவெட்டியில் தனது தாரமாக்கிக் கொண்ட வேடுவ அழகி அவ்வில்லத்தில்தான் வசித்திருக்கின்றார். இதனால் இராசசிங்கன் அடிக்கடி பழுகாமம் வர நேர்ந்துள்ளது. அவனது பழுகாமம் வாரிசுகளுக்காக 84 ஏக்கர் வயல் நிலங்களை அரச கொடையாக மன்னன் வழங்கியிருந்தான். (15)


சிங்காரக் கண்டி



அமைச்சுப் புட்டி


பழுகாமம் துரோபதையம்மன் ஆலயத்தின் முன்புறப் பகுதியின் வலப்புறம் ‘சிங்காரக் கண்டி’யென்றும் இடப்புறப்பகுதி ‘அமைச்சுப்புட்டி’ என்றும் இன்றும் அடையாளப்படுத்தப்படுவதைக் கொண்டு கண்டி ஆட்சியாளர்களின் முக்கிய சுற்றுலா இருக்கையாக பழுகாமம் திகழ்ந்துள்ளமையை நிச்சயப்படுத்த முடிகின்றது. அண்மையில் நாம் மேற்கொண்ட களஆய்வில் துரோபதையம்மன் ஆலய நம்பியார் சிவசிறி மா.கு. தட்சனாமூர்த்திக் குருக்கள், இதில் பல காத்திரமான தகவல்களை வழங்கியிருந்தார். மேலும் மன்னன் இராசசிங்கன் கடுமையான உடல் உபாதையால் பாதிக்கப்பட்டபோது, அதனை மிகுந்த சிரமத்தின் மத்தியில் நீக்கிய வைத்யா (வச்சினா) குடியினருக்கும் பக்கபலமாக இருந்த அத்தியா குடியினருக்கும் அவன் ஏழு வயல்களைக்கொண்ட நிலக்கொடையை அளித்த தகவலையும் இதில் பதிவுசெய்யமுடிந்தது.

03:03. பழுகாமம் துரோபதையம்மன் வழிபாடு


பண்டைத் தமிழர்தம் மரபுவழிப் பண்பாட்டை வரலாற்று ரீதியாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் பழுகாமம் கிராமம் அதன் நீண்டகால வழிபாட்டியலில் பல்வேறுதரப்பட்ட வழபாடுகளை உள்வாங்கியிருக்கக் கூடிய வாய்ப்பே தென்படுகின்றது.

மட்டக்களப்புத் தேசத்தில் கி.பி 16ம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற துரோபதையம்மன் வழிபாடு கண்டியரசின் காலத்தில் இங்கு நிலைநிறுத்தப்படுவதற்கு முன்னர் இக்கிராமத்தில் முக்கியப்படுத்தப்பட்ட வழிபாடாக எது திகழ்ந்துள்ளது என்பதனைச் சரியாகக் கண்டறிய முடியவில்லை. பொதுவாக கடந்த 400 ஆண்டுகளாக இங்கு துரோபதையம்மனின் வழிபாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுவதை நம்மால் உணரமுடிகின்றது. இவ்வாலய அர்ச்சகர்கள் ‘நம்பி’ என்ற சிறப்பினைப்பெறுவதும் ஒரு அர்த்தப்பாட்டினை வெளிப்படுத்துவாக அமையும்.



இவ்வாலயத்தில் வைத்துப் பேணப்பட்ட பல சந்தண மரச் சிற்பங்கள் நம்மை பிரமிக்கச் செய்கின்றன. பண்டைய தமிழரது வழிபாட்டியலில் மரச் சிற்பங்களே முக்கியத்துவம் பெற்றன. கி.பி 2ஆம் நூற்றாண்டில் சேரன் செங்குட்டுவன் கொடுங்கொளுரில் கண்ணகிக்கு அமைத்த கோவிலில் முற்றிய பலாமரத்தில் வடிவமைக்கப்பட்டு மூலிகைக் குழம்பால் பூசப்பட்ட கண்ணகி விக்கிரகத்தையே பிரதிஷ்டை செய்திருந்தான். நடைமுறையில் இவ்வாலயத்திலும் பண்டைத் தமிழர் பண்பாடே பின்பற்றப்பட்டிருக்கின்றது. இதன் முகப்பில் ஒரு கல்வெட்டு நிறுத்தப்பட்டிருக்கின்றது. இதன் பொறிப்புகள் தமிழ் பிராமியைக் கொண்டிருக்காத தன்மையில் இது இன்னும் சரியாக வாசிக்கப்படவில்லை.


04. கோவில் போரதீவு

மட்டக்களப்புத் தேசத்தின் திருப்படைக் கோவிலாகவும், தேசத்துக் கோவிலாகவும் கொள்ளப்படும் சித்திரவேலாயுதர் ஆலயத்தை மையப்படுத்தியதாக இப்பெயர் அமைகின்றது. இவ்வாலயம் போர்முனைநாடு சித்திரவேலாயுதர் ஆலயம் என்றே பண்டைய காலத்தில் அழைக்கப்பட்டதாகும். இது கி.பி 1030க்குரிய சோழராட்சிக் காலத்தில் மட்டக்களப்பில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த மதிசுதனால் ஆகம விதிகளுக்கமைய கட்டப்பட்டதாக மட்டக்களப்பு மான்மியம் மற்றும் மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் போன்றவை குறிப்பிடுகின்றன.16 இவ்வாலயம் கி.பி 13ஆம் நூற்றாண்டில் குளக்கோட்டனின் சீரவரிசையைப் பெற்றுள்ளமை குளக்கோட்டன் கல்வெட்டு பாடலால் நிருபணமாகின்றது. இக்கல்வெட்டுப் பாடல் இதனை ‘வெள்ளை நாவலம்பதி’ எனக் குறிப்பிடும். மட்டக்களப்புத் தமிழகத்தில் இந்துப்பண்பாடு நூலும் இவ்வாலயம்பற்றி விபரிக்கின்றது. (17)

04:01: கோவில்போரதீவு சித்திரவேலாயுதர் கல்வெட்டு


இவ்வாலயம் பின்னர் தமிழ்நாடு, காரைக்கால் நாகப்ப செட்டி என்பவரால் மீளுருவாக்கம் பெற்றபோது ஆலய மூலஸ்தான படிக்கட்டில் இச்சாசனம் பொறிக்கப்பட்டுள்ளது. இச்சாசனம் கி.பி 15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது 16ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பொறிக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்களால் கருதப்படுகின்றது. இதன் வாசகம் காரைக்குடி நாகப்ப செட்டியால் இவ்வாலயம் புனரமைக்கப்பட்டதையும் பிராமணரால் பூசை செய்யப்படவேண்டியதையும் சுட்டுவதாக அமையும். (18)

05. மண்டூர்

பண்டைய மட்டக்களப்புத் தேசத்தில் தமிழர்தம் மரபுவழிப்பட்ட பண்பாட்டு அம்சங்களையும் வழிபாட்டியலையும், இன்றும் முன்னிறுத்திக்கொண்டிருப்பது மண்டூர் கிராமமாகும். கிறிஸ்துவுக்கும் முற்பட்ட காலம் முதலே நாகர்களதும் வேடர்களதும் குடியிருப்புகளை கொண்டிருந்த தன்மையில் இதன் பழமை தெற்றெனப் புலப்படும். இதன் பெருமைக்கு நாடளாவிய அந்தஸ்தினை நல்கிக்கொண்டிருப்பது மண்டூர் கந்தன் ஆலயமாகும். கதிர்காமத்தை நோக்கிய பார்வையில் தில்லை மரத்தடியில் நிலைகொண்டு அருள்பாலிக்கும் வேலவனைப் பற்றி நாவாரப் பேசாதார் யாருமே இத்தேசத்தில் இருக்கவே செய்யார்.


“பண்டூரு முகிற்குலங்கள் எமதிறைவர் மருகர்திருப் பதியீதென்ன, விண்டூர மழைபொழியும் சிறப்பதனால் வளம்பொலிந்து மிகுந்துதோன்றும், மண்டூரில் உறைமுருகன்……” என நமது முத்தமிழ் மாமுனிவார்சுவாமி விபுலானந்த அடிகளால் போற்றிப் புகழப்படும் திருத்தலம் இது.19வெளிநாட்டு உள்நாட்டு ஆய்வாளர்களதும், அறிஞர்களதும், ஆர்வலர்களதும், அறிவுப் பசிக்கு தீனிபோடும் சிறப்பியல் பால் இதன்பெருமை நாளெல்லாம் நிலைக்கவேச் செய்யும். கூடவே இதன் பெருமைகளை இம்மண்ணீந்த பெரும் தமிழாளர்கள் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, தமிழ்ப்பேரறிஞர் வி.சி. கந்தையா, பைந்தமிழ்க் கவிஞர் மு. சோமசுந்தரம்பிள்ளை எனப் பலரும் தங்கள் தங்கள் பாவாலும் நாவாலும் மனதாரப் போற்றியுள்ளனர். தமிழ்க் கடவுளான முருகனை ஆரியத்தின் ஆகமவிதிப்பட்ட நடைமுறைகளுக்கு அப்பால், கோவில் அமைப்பிலும், நடைமுறைகளிலும் சங்ககால தமிழரது வழிபாட்டியலுக்குள் நிலைநிறுத்தும் தன்மையில் இதனை முறையாகப் பேணுவது அது சார்ந்தோரின் தலையாய கடமையாகவே கொள்ளப்படும். மட்டக்களப்புத் தமிழகத்தில் இந்துப்பண்பாடு நூலும் இதனை சிறப்பாகப் பதிவு செய்துள்ளது. (20)

05:01. மண்டூர் முருகன் வரலாற்று தடயங்கள்

அ. வழிபாடு

இதன் மூலவராக திரைமறைவில் தில்லைமரத்தடியில் கோவில்கொண்டு அருள்பாலிக்கும் கதிர்காமக் கந்தனின் மறுவடிவான வேலினை மனக்கண்ணால் அன்றி நிஜக் கண்ணால் நம்மால் தரிசிக்கமுடியாதுபோனாலும் அதன் உண்மைத்தன்மையானது, இங்குள்ள வரலாற்று தடயங்களால் வெளிப்படுத்தப்படுவதை உணரலாம்.


1. மூலவர் வாசல்                 2. குமாரதெய்வம்                      3. பழமைமிக்க வைரவர்


குமார கோவிலில் இடம்பெறும் வேடுவர் வெறியாட்டு, பலநூறு ஆண்டுகள் பழமைபெற்ற வைரவர் வழிபாடு, சங்ககால முருக வழிபாட்டில் முன்னிலை பெறும் வள்ளியம்மன் வழிபாடு மற்றும் திருவிழா நடைமுறைகள் போன்றவை இவற்றை சான்று படுத்துபவையாகவே அமையும்.

ஆ. வரலாற்றுச் சின்னங்கள்


இவ்வாலயத்தில் பாதுகாப்பாக வைத்துப் பேணப்படும் இவ்வரலாற்றுச் சின்னங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுவன. இவற்றில் பட்டுத்துணியால் வைத்து சுற்றப்பட்டு பாதுகாக்கப்படுகின்ற ஐந்து ஓலைச்சுவடிகளில் மூன்று நீண்டகாலமாக பாவனைக்குட்படுத்தாத தன்மையில் பழுதடைந்துபோயுள்ளன. இதில் ஒன்று கந்தப்புராண ஏடு என்றும் மற்றையவை திருச்செந்தூர்ப்புராண ஏடு என்றும் பத்ததி என்றும் கூறப்படுகின்றது. ஓரளவு நல்ல நிலையிலுள்ள இரண்டு சுவடிகளில் ஒன்று திருச்செந்தூர்ப்புராண இன்னுமோர் ஏடும்மற்றையது இன்னுமோர் பத்ததியுமாகும். இவை ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. கந்தசஷ்டி விரத காலத்தில் இவ்வாலயத்தில் மட்டுமே கந்தப்புராணம் படிப்பதற்கு பதிலாக திருச்செந்தூர்ப் புராணம் படிக்கும் வழக்கம் நடைமுறையிலுள்ளது. இது இவ்வாலயத்திற்கான ஒரு தனிச்சிறப்பியல் எனலாம். (21)

இவ்வாலயத்தின் ஆதிவரலாறு வேடருடன் சம்பந்தப்படுவதால், இங்கு வாழுகின்ற வேடவேளாள குலத்தினர் திருவிழா நடைமுறைகளில் முக்கியத்துவம் பெறுபவர்களாகவேயுள்ளனர். சுவாமி வலம் வரும்போது சுவாமிக்கு முன்னால், வேடுவ வள்ளியின் மணாளனான கந்தனை தங்களது மைத்துனனாகக் கருதி, பாதுகாப்பளிக்கும் தன்மையில் கையில் வில் அம்பு ஏந்தி சுற்றுமுற்றும் பார்த்துப் பின்னோக்கி அடிவைத்து அவர்கள் நடந்து வரும் பாங்கு மிக்க சிறப்பானதாகும். கையில் ஏந்திவரும் இங்குள்ள வில்லும் அம்பும் பலநூறு ஆண்டுகள் பழமைமிக்கதென தகவல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்னுமோர் சிறப்புமிக்க வரலாறாக அமைவது 1623ல் நிகழ்ந்ததாகும். போர்த்துக்கேயர் மட்டக்களப்பிலுள்ள புகழ்பெற்ற ஆலயங்களை அழித்து கொள்ளையிட்ட சூழ்நிலையில் அவர்கள் அபாயச் சங்கொலித்து மண்டூர் ஆலயத்தை நெருங்கியதும் ஆலய முன்றலில் இருந்த பெருவிருட்சத்தில் குடிகொண்டிருந்த குளவிக் கூட்டம் அவர்களைத் துரத்தித்துரத்திக் கொட்டியதாகவும் கையிலிருந்த அபாயச் சங்கொலிக்கும் ஊதுகருவி, துப்பாக்கி, வாள் என்பவற்றை அவர்கள் கைவிட்டுத் தலைதெறிக்க ஓடியதாகவும் கூறப்படுகின்றது. இங்குள்ள இவை அனைத்தும் ஆலயத்தில் பாதுகாப்பாகப் பேணப்பட்டு வருகின்றன.

05:02 நாகன்சாலை (நாகன்சோலை) காளிகோவில் (காளித்திடல் - காளிப்புட்டி)


இன்று நாகன்சோலை எனப்படும் இடம் மண்டூர்ப் பிரதேச வரலாற்றுடன் பிணைப்புறும் நாகர் தலைவன் மண்டுநாகனின் இருக்கையாக அன்று அமைந்ததிருந்த தன்மையில் நாகன்சாலை என அழைக்கப்பட்டதாக வரலாறு கூறும். இதுதொடர்பான தகவல்கள் மட்டக்களப்பு பூர்வ சரித்திரம், கோவில்போரதீவு சித்திரவேலாயுதர் ஆலய வரலாறு மற்றும் வெல்லாவெளி வரலாறு போன்றவற்றினூடாக வெளிவருகின்றன. (22) இங்கிருந்த பழமைமிக்க காளிகோவில் கி.மு 4ஆம் நூற்றாண்டில் காலசேனனின் படையெடுப்பில் அழியுண்டதாகவும், பின்னர் சோழராட்சிக்காலத்தில் கி.பி 11ஆம் நூற்றாண்டில் செப்பனிடப்பட்டதாகவும் போர்த்துக்கேயர் இப்பிரதேசத்தில் இந்துக் கோவில்களை அழித்துக் கொள்ளையிட்ட போது, இவ்வாலயம் முற்றாக அழிக்கப்பட்டதாகவும், இவ்வாலயம் அமைந்திருந்த இடம் பின்னர் காளித்திடல், காளிப்புட்டி என்ற பெயர்களால் அழைக்கப்பட்டு வந்ததாகவும் கள ஆய்வுத் தகவல்கள் கூறுகின்றன. தற்போது இவ்விடத்தில் ஓலைக்கொட்டிலொன்றில் காளி வழிபாடு இடம்பெறுவதைக் காணமுடிகின்றது.


அடிக்குறிப்புகள்

01. Thambu Kanagasabai, The Life and History of Eelam Tamils, Gayathry Publication, 2012 p: 96

02. கமலநாதன்,சா.இ, கமலா கமலநாதன், மட்டக்களப்பு பூர்வ சரித்திரம், குமரன் புத்தக இல்லம், 2005 பக்:36

03. வெல்லவூர்க்கோபால். கவிக்கோ, வெல்லாவெளி வரலாறும் பண்பாடும், மனுவேதா வெளியீடு, 2012 பக்: 30

04.வெல்லவூர்க் கோபால், மட்டக்களப்பு வரலாறு ஒரு அறிமுகம், மனுவேதா வெளியீடு, 2005, பக்: 76

05. வெல்லவூர்க்கோபால். கவிக்கோ, மட்டக்களப்பு வரலாறு ஒரு அறிமுகம், (3ம் பதிப்பு), மனுவேதா, 2011 பக்:105

06. - மேற்படி- வெல்லாவெளி வரலாறும் பண்பாடும், மனுவேதா வெளியீடு, 2012 பக்:26, 27, 28, 194

07. Kanagaratnam, S.O. Monograph of the Batticaloa District, 1921 p:81

08. வெல்லவூர்க்கோபால். கவிக்கோ, வெல்லாவெளி வரலாறும் பண்பாடும், மனுவேதா வெளியயீடு, 2012 பக்:86, 87

09.- மேற்படி - மட்டக்களப்புத் தேசம் வரலாறும் வழக்காறும், மனுவேதா வெளியீடு, 2013 பக்: 21 10. - மேற்படி - பக்: 19,20

11.வேலழகன், ஆ.மு.சி. திருப்பழுகாமம் ஒரு சுருக்கவரலாறு, எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 2008, பக்:25

12. தங்கேஸ்வரி.க, கிழக்கிலங்கை பூர்வீக வரலாறு, மணிமேகலை பிரசுரம், சென்னை, 2007 பக்: 95,96

13. வெல்லவூர்க்கோபால், மட்டக்களப்பு வரலாறு ஒரு அறிமுகம், மனுவேதா வெளியீடு, 2005, பக்:165,166

14. Thurston vol:02 , Bharath Printers, New Delhi 1981 - p 113

15. வெல்லவூர்க்கோபால், மட்டக்களப்பு வரலாறு ஒரு அறிமுகம், மனுவேதா வெளியீடு, 2005, பக்:166

16. கமலநாதன்.சா.இ, கமலா கமலநாதன், மட்டக்களப்பு பூர்வ சரித்திரம், குமரன் புத்தக இல்லம், 2005, பக்:35, 36

17. வெல்லவூர்க்கோபால் கட்டுரை, பதிப்பாசிரியர் பேராசிரியர் சி.மௌனகுரு, மட்டக்களப்புத் தமிழகத்தில் இந்துப் பண்பாடு, குமரன் பதிப்பகம், 2003, பக்:15,16

18. வெல்லவூர்க்கோபால், மட்டக்களப்புத் தேசம் வரலாறும் வழக்காறும், மனுவேதா வெளியீடு, 2013, பக்: 24

19. கந்தையா வி.சி, மட்டக்களப்புச் சைவக்கோவில்கள், இந்து சமய திணைக்கள வெளியீடு, 1983, பக்: 65

20. வெல்லவூர்க்கோபால் கட்டுரை, பதிப்பாசிரியர் பேராசிரியர் சி.மௌனகுரு, மட்டக்களப்புத் தமிழகத்தில் இந்துப் பண்பாடு, குமரன் பதிப்பகம், 2003, பக்:17,18,19,20

21. கந்தையா வி.சி, மட்டக்களப்புச் சைவக்கோவில்கள், இந்து சமய திணைக்கள வெளியீடு, 1983, பக்: 70

22. கமலநாதன்.சா.இ, கமலா கமலநாதன், மட்டக்களப்பு பூர்வ சரித்திரம், குமரன் புத்தக இல்லம், 2005, பக்:25

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p190.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License