இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

இலங்கையின் இசைநடன மரபு

தாக்‌ஷாயினி பிரபாகர்

முந்தைய பதிவின் தொடர்ச்சி...

கண்டிய நடனத்தின் மறுமலர்ச்சி

1930க்கு பிற்பட்ட காலம் இலங்கையின் தேசியக் கலைகளின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட காலமாகும். தமிழகத்தில் இக்காலத்தே நடனமேதை ருக்மணிதேவி அருண்டேல் மற்றும் கலாமேதை கிருஷ் ஐயர் போன்றவர்கள் எவ்வாறு பரதக்கலை மீட்சியுற அரும்பணியாற்றினரோ அதேதன்மையில் இலங்கையிலும் கண்டிய நடனத்தின் மறுமலர்ச்சிக்கு திருமதி சித்திரலேகா மற்றும் திருமதி மரியன் டி சொய்சா ஆகியோர் பெரும் தொண்டாற்றினர். அவர்களைத் தொடர்ந்த காலத்தே கண்டிய நடன ஆசான்களாக விளங்கிய கிரிகணித குருநான்ஸே, ரங்கம குணமனாகுரு, தித்த சஜ்ஜல கரம்பகுரு, உக்குவ குரு போன்றவர்களும் பின்னர் கலாநிதி பணிபாரத, ரங்கனா மற்றும் இந்துள் கொடகே போன்றவர்களும் அவர்களை அடியொற்றி புதவத்தகுரு நான்ஸே, மிரண்டா ஹேமலதா, சித்ரா உல்கம, குணவதி துண்டலியத்த, கமலா நயன ரத்நாயக்க, மாலதி உல்கம போன்ற நடன மேதைகள் கண்டிய நடனத்தின் வளர்ச்சிப் போக்கில் பெரும் பங்காளிகளாகத் திகழ்கின்றனர். மேலும் R.W.G. சுறம்ப குருனான்ஸே, அவரது புத்திரி R.W.G. வைத்தியாவதி றாஜபக்சே, பொல்காவலயில் நடனப் பாரம்பரியத்தில் வந்த கலாமேதை பியசர சில்பாதிபதி போன்ற நாட்டியமேதைகளும் இதில் முக்கியத்துவம் பெறுகின்றனர்.

உலகப் புகழ்பெற்ற நடனக் கலைஞர் டாக்டர் சித்திரசேன டயஸ் சிங்கள மக்களது பாரம்பரிய நடனக் கலைகளின் புத்தாக்கத்திற்கு பெரும்பணியாற்றிய சிறப்பிற்கு உரியவராகின்றார். கண்டிய நடனத்தை அக்காலத்தே புகழ்பெற்ற நடன ஆசான்களான அல்கம கிரிகநிதய குருநான்ஸே, முத்தனாவே அப்புவ குருநான்ஸே மற்றும் பெவில்கமுவ குருநான்ஸே ஆகியோரிடம் முறையாகப் பயின்ற பின்னர் திருவாங்கூர் அரண்மனைக் கலைஞரான ஸ்ரீகோபிநாத் இடமும் பின்னர் கேரள கலாமண்டலத்திலும் கதகளியை முறையாகப் பயின்றார். 1945ல் கல்கத்தாவிலுள்ள கலாமேதை ரவீந்திரநாத்தாகூரின் சாந்திநிகேதனில் இணைந்து அங்கு பல்வேறு நடன நுணக்கங்களையும் கற்றுத் தேர்ந்தார். அங்கு பயின்ற காலத்தில் வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நடன நிகழ்வுகளைச் செய்தார். கொழும்பு நகரில் 1944ல் ‘சித்ரசேன கலயதனய’ நடனப் பள்ளியை ஆரம்பித்தார். இக்காலத்தே இலங்கையின் தலைசிறந்த கலைஞர்கள் பலர் சித்தரசேனவுடன் இணைந்து பணியாற்றினர். சித்ரசேனவின் பாரியார் கலாசூரி வஜிரா சித்ரசேன, ஆனந்த சமரக்கோன், சதிரிஸ் சில்வா, அமரதேவா, சுனில் சந்தா, ஹென்றி ஜெயசேன, சோமபந்து, எட்வின் சமரதிவகர, W.B.மகுலொலுவ, லயனல் அல்கம, சோமதாஸ எல்விட்டிகல, R.L. விமலதர்ம, செல்ரன் பிரேமரத்ன போன்ற தலைசிந்த கலாவித்தகர்கள் இதில் அடங்குவர். 1943ல் ராமா சீதா நாட்டிய நிகழ்வு மூலம் ஆரம்பித்த இவரது கலைப்பயணம் 1986ல் நிருத்த பூஜா நாட்டிய நிகழ்வுவரை தடையின்றித் தொடர்ந்தது. அனைத்து நிகழ்விலும் சித்ரசேனாவே முக்கிய பாகமேற்று ஆடினார்.



இவரின் ஆக்கப்பணிகளில் கண்டிய நடனத்தை மேடைகளில் ஆடுவதற்கு ஏற்றவாறு அமைத்ததுடன் தனது மேடை நடன நிகழ்வுகளில் கண்டிய நடன அசைவுகளையும் ஏனைய அம்சங்களையும் பயன்படுத்தியமை மிகுந்த முக்கியத்துவம் பெறுவதாகும். மக்கள் மத்தியில் இவருக்கிருந்த புகழும் செல்வாக்கும் இந்நடனம் தொடர்பாக இருந்துவந்த சாதியத் தடைகளை உடைப்பதற்கு உதவியதுடன் கண்டிய நடனத்தை நகர்ப்புற மக்களும் சுவைஞர்களும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் நவீனத்துவப்படுத்த உதவியது. இவர் நிறுவிய நடனப்பள்ளி இன்றுவரை பெரும் பணியாற்றிக்கொண்டிருப்பதை இங்கு முக்கியமாகக் குறிப்பிட்டாகவேண்டும்.

இலங்கையில் நாட்டியக் கலையின் மறுமலர்ச்சியல் சித்ரசேனவின் பங்களிப்பு இமயம் நிகர்த்தாகும். அவருக்கு கிடைத்த தேசமான்ய, கலாபூஷண், கலாகீர்த்தி, கலாசூரி, களனிப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம் போன்ற உயர்விருதுகள் அவரின் மறைவுக்குப் பின்னரும் பெருமை சேர்ப்பனவாகும்.26

கண்டிய நடனமானது இன்று இலங்கையில் அரசின் முழு ஆதரவுடன் பல்கலைக்கழகங்களிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் பொதுவாக எல்லாச் சிங்கள மொழிப் பாடசாலைகளிலும் பயிற்றுவிக்கப்படுவதோடு தனியார் நடன நிலையங்களும் இந்நடனத்தை போதிக்கவே செய்கின்றன. கடந்த அரை நூற்றாண்டுகாலக் கணிப்பில் இந்நடனம் பாரிய வளர்ச்சியை எட்டியுள்ளமை அதன் சிறப்பியல்பை தொடர்ந்தும் வெளிப்படுத்துமெனலாம்.



அடிக்குறிப்புகள்:

01. Paranavitana S, EZ volume III -London 1943, page: 191- 196
02. Ibin Batuta, Te Rehla - Broda pp:223- 224
03. கவிக்கோ வெல்லவூர்க்கோபால், மட்டக்களப்பு வரலாறும் வழக்காறும்,மனுவேதா, மட்டக்களப்பு, 2013 - பக்:158
04. Mahuloluwa W B, Dances of Ceylon - p:32
05. Sarachandra E R, Folk Drama of Ceylon 1966- P:15
06. பொலநறுவை வானவன் மாதேவி ஈஸ்வரம் கல்வெட்டு
07. Sarachandra ER, Folk Drama of Ceylon, 1966 p:6
08. -do-
09. கங்கை முத்துப்பிள்ளை, நடனாதி வாத்ய ரஞ்சனம் - திருநெல்வேலி 1893
10. ஆனந்த குமாரசுவாமி, கட்டுரை, சித்தாந்த தீபிகை 1912
11. Sarachandra ER, Folk Drama of Ceylon, 1966
12. Mahavamsam 10,87
13. Mahavamsam 24,25,31,37
14. Chulavamsam 70- 31
15. -do- 64-4, 69 - 22, 26
16. Ragavan.M.D, Sinhala Natum - Colombo P:24
17. -do- P: 22,23
18. -do- P: 31,32
19. Wickramasingha Martin, Sinhala Liturature, Colombo P:174
20. Ragavan M.D, Sinhala Natum, Colombo, P:33
21. Sarathchandra E.R, The Folk Drama of Ceylon, Colombo - 1969 P:11
22. லீலாம்பிகை செல்வராஜா, நடன சாரம் - யுனி ஆர்ட்ஸ் 2001 பக்:182,183
23. சிவசாமி,வி,பேராசிரியர், இலங்கையின்வெளி சாஸ்திரிய நடனங்கள் பக்: 05, ஏழாலை 2011
24. Almut Jayaweera - Vannama:A Clasical Dance Form and its Musical Structure P:1
25. சிவசாமி,வி.பேராசிரியர; தென்னாசிய சாஸ்திரிய நடனங்கள்.1998 பக்: 115)
26. Coomaraswamy Rathika. The Art of Chithrasena. Tamil Week News 2006.

முற்றும்


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p52b.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License