தாக்ஷாயினி பிரபாகர்

இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நடன நாடக அரங்கியல் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றும் முனைவர் பி. தாக்ஷாயினி இலங்கையின் மட்டக்களப்பில் 1980ல் பிறந்தவர். இலங்கையின் தேசியக் கலைஞர் கவிக்கோ வெல்லவூர்க் கோபால் தம்பதியின் புதல்வியான இவர் மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் தேசியக் கல்லூரி, திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி ஆகியவற்றில் உயர்கல்வி பயின்றதோடு, பரதநாட்டியத்தில் முது நுண்கலைமானி பட்டத்தினையும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழரின் பாரம்பரிய நடனமான பரத நாட்டியத்தினையும், சிங்கள மக்களின் பாரம்பரிய நடனமான கண்டிய நடனத்தினையும் முழுமையாக ஒப்பீடுசெய்து முனைவர் பட்டத்தினையும் பெற்றவர். மோகினி ஆட்டத்தில் சிறப்புச் சான்றிதழினையும் குச்சுப்புடி, ஒடிசி நடனங்களில் நல்ல தேர்ச்சியும் பெற்றவர்.
இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளின் பத்திரிகை மற்றும் சஞ்சிகைகளில் நூற்றுக்குமதிகமான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ள இவர், இதுவரை நடன நாடகத்துறை சார்ந்த ஐந்து நூல்களையும் வெளியிட்டுள்ளார். இலங்கை வடக்கு கிழக்கு மாகாண சபை, இலங்கைவாழ் இந்திய சமூகம், இலங்கை மலையாள அமைப்பு என்பவற்றினால் கௌரவிக்கப்பட்டுள்ள இவரது இரு நடன நிகழ்வுகள் முன்னைய இந்திய உயர் ஸ்தானிகர் திருமதி நிருபமாராவ் அவர்களின் முன்னிலையில் கொழும்பில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கட்டுரை - பொது
கட்டுரை - இலக்கியம்

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.