இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

இலக்கியத்தில் அறிவியல் கோட்பாடுகள்

கிருஷ்ணன், சிங்கப்பூர்


ஒவ்வொரு இலக்கியமும் தான் தோன்றிய சமுதாயத்தை உள்ளடக்கமாகக் கொண்டு திகழ்கிறது. அறிஞர்களும், இலக்கியம் என்பது சமுதாயத்தைப் பிரதி பலிக்கும் கண்ணாடி என்கிறார்கள். எந்த ஒரு இலக்கியமும் தான் தோன்றிய அச் சமுதாயத்தின் பண்பாட்டையும் நாகரிகத்தையும், பொருளாதாரத்தையும் அக்கால மக்களின் அறிவையும், பழக்க வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் எடுத்துரைப்பனவாய் விளங்குவதைக் காணலாம். இந்த அடிப்படையில்தான் நமது தமிழ் இலக்கியங்களும் விஞ்ஞானப்பூர்வமாக மிளிர்கின்றன.

இருபதாம் நூற்றாண்டை அறிவியல் யுகம் என்று கூறலாம். அறிவியல் கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் கணக்கில் அடங்கா. அறிவியல் வளர்ச்சி பெற்று விளங்கும் கருத்துகளுக்கான வித்துகளை புராணங்கள், இதிகாசங்கள், சங்க இலக்கியம் தொடங்கி ஆரம்பகாலக் கண்ணாடியாக இலக்கியத்தில் காணலாம்.

"இன்றைய மேனாட்டு அறிவியல் சிந்தைனையின் சுவடு கூடப் படாத சங்க காலத் தமிழரிடையே இருந்த அறிவியல் அறிவும் உணர்வும், அதிலும் குறிப்பாக வானவில் பற்றிக் கொண்டிருக்கும் கருத்தும் சிந்தனையும் சில நம்மை வியக்க வைக்கிறது. இன்றைய நிலையில் அறிவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல், மருத்துவ இயல் என்று பல்துறைகளாகப் பல்கி பெருகியுள்ளன. இவ்வறிவியல் சிந்தனைகளை நோக்கும் முன்பு அறிவியல் பார்வை இலக்கியத்தில் பெற்ற நிலையினை உணர்தல் இன்றியமையாததாகும்.

"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப அறிவு '' (குறள். 355)

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு '' (குறள். 423)



-என்ற குறளிலும் தெளிவுபடுத்தி உள்ளார். விருப்பு வெறுப்பற்ற தன்மை உடையது அறிவியல் என்பதைத் தம் சிந்தனையாக வைத்துள்ளார். இயற்பியல் ஒரு பிரிவாக விளங்குவது அணுவியல். அண்மைக்கால அறிவியல் வரலாற்றில் அற்புதமான வளர்ச்சி பெற்று இருப்பது அணுவியலாகும். முதலில் அணுவைப் பிளக்க இயலாது என்ற கொள்கை தோன்றியது.பின்னர் ஓர் அறிஞர் அணுவைப் பிளக்க இயலும் என்ற புதிய கருத்தை வெளியிட்டார். இக்கொள்கையுடைய தமிழ்ச் சான்றோர்கள் சிலர் இருந்தமை இலக்கியத்தில் நாம் காணலாம்.

"அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்"

-என்று அணுவாகிய துகளைப் பிளக்க இயலும் என்ற சிந்தனையை நம்முன் வைத்துள்ளார்.

கம்பரும் இக்கருத்தினை இரணிய வதைப் படலத்தின் மூலம் உணர்த்துகிறார்.

இரணியன்,"இறைவன் எங்கு உள்ளான்?" என்று பிரகலாதனிடம் வினவினான். அப்போது பிரகலாதன் ஓர் எளிய அணுவை நூறு பங்காகச் செய்தால் அந்தச் சிறு பகுப்பில் அமைத்து உள்ளான் என விடை கூறுகிறான்.

"சாணினு முளனோர் தன்மை
அணுவினைச் சத கூறிட்ட
கோணினு முளன்....." (கம்பராமாயணம். 253)

-என்ற பாடலில் அணுவைப் பற்றி கம்பரின் கருத்து மிளிர்கிறது.

தமிழ் இலக்கியத்தில் "ஒப்புநோக்குக் கொள்கை" உடையவராய், தமிழர்களும் இச் சிந்தனை உடையவராய் விளங்கினர் என்பதற்குத் தொல்காப்பியரைச் சான்றாகக் காட்டலாம். முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று மூன்று பிரிவுகளுள், முதற்பொருள் என்பதனை,

"முதல்எனப் படுவது நிலம்பொழுது இரண்டின்
இயல்பென மொழிப் இயல்புணர்ந் தோரே"

-என்று நிலமும் காலமும் என இருவகையாகப் பிரித்துள்ளார்.

நீர்ப்பொருளுக்குச் சுருங்கும் தன்மை இல்லை. நீர்ப் பொருளின் இச் சுருங்கா இயல்பை அறிவியல் பூர்வமாகக் கண்டறிந்து கூறியவர் "பாஸ்கல்" என்னும் அறிஞர். இப்பாஸ்கல் விதிக்குச் சான்றாக,

"ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது"

-என்று ஒளவையின் பாடல் கூறுகிறது. ஆழத்தைப் பொறுத்து அழுத்தம் மிகுகின்றது என்ற மற்றொரு அறிவியல் உண்மையையும் எடுத்துரைக்கின்றார்.

சூரிய ஒளியினால்தான் தாவரங்கள் ஆற்றலைப் பெறுகின்றன. தாவரங்களின் ஒளிச் சேர்க்கைக்குச் சூரிய ஒளி பெரிதும் உதவுகிறது. இக்கருத்தை உணர்ந்தவர் இளங்கோ அடிகள். ஆதலின்,

"ஞாயிறு போற்றும் ஞாயிறு போற்றும்
காவிரி நாடான் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலந்தரி தலான்..."

-என்று ஞாயிற்றைப் போற்றினார்.



உயிரியல் துறை பற்றிய சிந்தைனையும் தமிழ் இலக்கியத்தில் சிறப்புற அமைந்துள்ளதைத் தொல்காப்பியம் மூலம் உணரலாம். ஒரு செல்லானது, செல் பிரிதலின் மூலம் பல்கிப் பெருகிப் பல உயிர்கள் உருவாகின்றன. பல செல் உயிர்களில் ஒரு செல்லே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு வேலையும் ஒரு குறிப்பிட்ட செல் தொகுப்பு செல் தொகுப்புகளால் செய்யப் பெறுகின்றது என்பது உயிரியல் கொள்கை. இக் கொள்கையை ஓரளவு விளக்குவதாய்,

"ஒன்று அறிவதுவே உற்ற அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனோடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிதுவே அவற்றொடு மனனே
நேரிதில் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே ..." (தொல் பொருள் மரபியியல்:29)

உயிரியல் கொள்கையாக விளங்கும் டார்வின் கோட்பாட்டை விளக்குவதாய்த் திருமாலின் 10 அவதாரங்கள் அமைந்துள்ளன. நீரில் வாழும் உயிராக மச்சாவதாரம், நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மையுடைய உயிராக கூர்மவதாரம், நிலத்திலே மட்டுமே வாழுகின்ற தன்மையுடைய விலங்காக வாரக அவதாரம், பிறகு விலங்கும் மனிதனுமாக நரசிம்ம அவதாரம், அதன் பின்னரே வளர்ச்சி அடைந்த முழு மனிதனாக கிருஷ்ணன், ராமன் அவதாரங்கள். அதில் மனிதனை நெறிப்படுத்தும் தத்துவங்களை மீறிய ஒரு விஞ்ஞான அதிசயம் பொதிந்து கிடப்பதுதான் முக்கியம். உயிர்களின் வளர்ச்சியைப் பரிணாமப் படிகளாக உலகுக்கு அறிவித்த டார்வின் சித்தாந்தம் இந்துமத திகாசங்கள் பொருந்தி இருப்பதைக் காணலாம்.

டார்வினுக்கு நமது இந்து மதத்தில் உள்ள 10 அவதாரங்களைத் தெரிய வாய்ப்பு இல்லை. ஆரம்பத்தில் உயிரனங்கள் தண்ணீரில் தோன்றியது. பிறகு அதே உயிரினம் தண்ணீரிலும் நிலத்திலும் வாழும் தகுதி பெற்றது. அதன் பிறகு நிலத்தில் வாழும் விலங்குகள். அடுத்து படிப்படியாக அந்த விலங்குகள் வளர்ச்சி பெற்று குரங்காகி அதிலிருந்து மனிதன் தோன்றினான். இந்த மூன்று அவதாரங்களைக் கவனித்தால் டார்வின் விஞ்ஞானியின் பரிணாமக் கொள்கையோடு ஒத்துப் போகிறது. இங்கேயும் செல் [ஜீன்] விஷயம் தெரிகிறது.



மனிதனுக்கு அவனது ஜீன்கள் என்ற ஜீவ அணுவில் ஏற்கனவே எல்லாம் கற்றுக் கொடுக்கப் பட்டிருக்கிறது. எதை, எந்தக் காலகட்டத்தில் அவன் கண்டுபிடிக்க வேண்டும் என்ற விதி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அப்படித்தான் இருக்கவேண்டும் என்ற விதி. அதன்படிதான் மனித குலம் வளர்ந்து வருகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

மீனில் ஆரம்பித்த அவதாரம் 5-வது அவதாரமாக வருவது வாமன அவதாரம். வாமன அவதாரம் என்பது விஞ்ஞான ரீதியாக பரிணாம வளர்ச்சியில் மிகச் சரியானது. இந்துமத இதிகாசங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அறிந்து வெளியிட்டுள்ள அறிவியல் செய்தி.

மற்ற அவதார புருஷர்களைவிட இவர் குள்ளமானவர்! நான்கு அவதாரங்களை அடுத்து மிகச் சரியாக விடுபட்ட (மிஸ்ஸிங் லிங்க்) இந்த குள்ளமான வாமன அவதாரம். விஞ்ஞானத்திற்கு ஒரு முன்னோடியாக இருக்கிறது.

"மிஸ்ஸிங் லிங்க்" என்பது உயிரின வளர்ச்சிப் படிகளில் அடிக்கடி உபயோகிக்கப்படும் ஒரு சொல். "விட்டுப்போன கண்ணி " குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று விஞ்ஞானம் ஒப்புக் கொண்டாலும் குரங்குக்கும் மனிதனுக்கும் இடையில் ஏதோ ஒன்று இருக்கிறது. அந்த மிஸ்ஸிங் லிங்க் எதுவென்று விஞ்ஞானிகள் அவ்வப்போது தலையைப் பிய்த்துக் கொள்கிறார்கள். ஆனால் குரங்குக்கும் மனிதனுக்கும் உள்ள உருவ ஒற்றுமையைப் பார்த்தால் விடுபடவில்லை என்பது தெளிவாகிறது.

டார்வின் சித்தாந்தப்படி உயிர்கள் தண்ணீரில்தான் உருவாயிற்று என்று 200 ஆண்டுகளுக்கு முன்னால்தான் ஆச்சரியமாக கண்டறியப்பட்டது. இந்து மத இதிகாசங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னமே முதல் அவதாரமாக

1. மச்ச அவதாரம் என்று மிகச் சரியாக காட்டியுள்ளது.
2. கூர்ம அவதாரம் (ஆமை வடிவம்).
3. வராக அவதாரம்.
4. காட்டுக்கு ராஜாவான சிங்கத்திற்கு "சிம்மாவதாரம்".
5. மிருகங்களிலிருந்து முதுகுத் தண்டு நிமிர ஆரம்பித்த குள்ள ஜீவனான "வாமன அவதாரம்".
6. பரசுராம அவதாரம்.
7. ராம அவதாரம்.
8. பலராம அவதாரம்.

-எல்லாமே மனிதன் சாதாரணக் கருவிகளான வில் ஈட்டி, கோடாரியைப் பயன்படுத்திய காலக்கட்ட அவதாரங்கள்!

வானவியல் பற்றிய அறிவுடையவராய் விளங்கினர் அக்கால மக்கள் என்பதை இலக்கியங்கள் மூலமாக உணரலாம். சூரியனையும், அதனைச் சுற்றி உள்ள கோள்களையும் அறிவியல் அறிஞர்கள் [Solar System] சூரிய வட்டம், அதனைச் சுற்றியுள்ள பாதை என்று மொழிகின்றனர். இவ்வாறு வானவெளியில் காணப்படும் இக்காட்சியைப் புறநானூறுக் கவிஞர்,

"செஞ்ஞாயிற்றுச் செலவும்
அஞ்ஞாயிற்று பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்..." (புறநானூறு:30)

-என்று பாடியுள்ளார்.



இருபதாம் நூற்றாண்டில் ஈடு இணையற்ற கவி பாரதியார். எதிர்காலச் சமுதாயம் அறிவியல் துறையில் என்னென்ன சாதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்னும் கனவைத் தம் பாடலின் மூலம் கூறுகிறார்.

"வானை அளப்போம் கடல் மீனை அளப்போம்
சந்திர மண்டலத்தில் கண்டு தெளிவோம்..."

-என்று பாடியுள்ளமை உணரலாம். இன்று சந்திர மண்டலத்தினையும் தாண்டி மற்ற கோள்களையும் ஆய்வு மேற்கொண்டுள்ளான்.

தமிழ் இலக்கியத்தில் பயணத்தை விரைவாக்கிய விமானம் பற்றிய சிந்தைகளையும் காண முடிகிறது. புறநானூறு, ஓட்டுநர் இல்லாத வானவூர்தியைப் பற்றிய செய்தியினைத் தருகின்றது. அவ்வரிகள்,

"வலவன் ஏவா வான வூர்தி
எய்துப என்பதஞ் செய்வினை முடித்தெனக் ..." (புறம். 27)

"கோநகர் பிழைத்த கோவலன் தன்னொடு
வானவூர்தி ஏறினள் மாதோ
கானமர் புரிகுழற் கண்ணகி தானென்.." (சிலம்பு)

-என்ற அடிகளில் சிலப்பதிகாரம் "வானவூர்தி" என்ற சொல்லைப் பயன்படுத்தி உள்ளமை காணலாம். சீவக சிந்தாமணியில் திருத்தக்க தேவர், விசயை வானத்தில் பறக்கக் கூடிய பறவை உருவத்தில் அமைந்த ஊர்தியில் சென்றதாகக் காட்டுகிறார். அவ்வரிகள்:

"என்பு நெக்குருகி உள்ளமொழுகுபு சோர யாத்த
அன்பு மிக்க வலிதாற்றா வாருயிர் கிழத்தி தன்னை
இன்ப மிக்குடைய சீர்த்தி இறைவன தாணை கூறித்
துன்பமில் பறவை யூர்தி சேர்த்தினன் றுணைவி சேர்ந்தாள்" (சீவக சிந்தாமணி)

இவ்வாறு தமிழிலக்கியச் சான்றோர்கள் விமானம் பற்றிய தம்முடைய சிந்தனையை வித்திட்டுச் சென்றனர்.

கடவுளுக்கும் கவிஞனுக்கும் ஏற்பட்ட வாதம். புலமைக்குத் தலைமை தந்த பெருமை. அறிவியலை இன்பத் தமிழோடு சான்றோர் சபையில் முதன் முதலில் நடத்தப்பட்ட பட்டிமன்றம். அது ஒரு அறிவியல் தலைப்பட்ட அறிஞர் விவாதம். ஒரு புலவனுக்கு உதவ இறையானர் இறங்கி வந்தது. உண்மையான திறமையுள்ள புலவனுக்கு இறைவனை எதிர்ப்புற வாதம் செய்யவும் துணிவு இருந்தது. இலக்கிய, ஞான, ஆன்மீக, கலாச்சார சிறப்புகள் என்று எல்லோரும் அறிந்த கதைதான்.

மதுரை மன்னன் செண்பக பாண்டியனுக்கு ஒரு ஐயம். பெணகளின் கூந்தலுக்கு இயற்கையாக மணம் உண்டா?

ஆலவாய் சொக்கர் தருமிக்குத் தந்துதவிய பாட்டு.

"கொங்கு தேர் வாழ்க்கை அன் சிறை தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீய நட்பின் மயிலியன்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே!"

மலர்கள் தோறும் சென்று பூந் தாதுக்களைத் தேர்ந்தெடுத்துத் தேன் உண்ணும் வண்டினை நோக்கித் தலைவன் கூறுவதாய் அமைந்த பாடல். "நீ கண்டுள்ள மலர்களில் எல்லாம், தலைவி கூந்தலுக்கு நிகரான மணம் உண்டோ" என்று வினவும் பாடல்.

இப்பாடலின் உள்ளுறை - கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு!



சரி. நவீன விஞ்ஞானத்தைச் சற்று பார்ப்போம். "பீரோமோன்ஸ்" (Pheromones) என்று சில வேதிப்பொருட்கள் (ரசாயனப் பொருட்கள்) உள்ளன. இவை குறிப்பிட்ட சுரப்பிகளால் சுரக்கப்படுகின்றன. இத்தகைய பீரோமோன்ஸ், அந்த வகையில் உயிரினங்களுக்குள், ஆண்-பெண் அடையாளம் காட்டவும், அவற்றின் பாலின மற்றும் நடத்தைகளை நிர்ணயிக்கவும் உதவுகின்றன.

சரி, பீரோமோன்ஸ் எங்கெங்கு உள்ளன? பீரோமோன் சுரப்பிகள் மயிர்கால்களோடு அதிகம் தொடர்புடையவை. இன்னமும் நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் முழுமையாக முற்றுப் பெறாத நிலையில் நமக்கு கிடைத்திருக்கக் கூடிய செய்தி இது. மேலும் ஆராய்ச்சிகள் தொடரத் தொடர, இன்னமும் தெளிவான செய்திகள் கிடைக்கலாம்.

எப்படியாயினும், இயற்கையில் சுரக்கப்படும் பீரோமோன்ஸ்க்கு மணம் பரப்பும் இயற்கையான தன்மை மணம் உண்டு இறையனார் பாடல் சுட்டுகிறது. அப்படியானால், செண்பகப் பாண்டியனுக்கு வந்தது ஒரு விஞ்ஞான சந்தேகம். இறையனார் தருமி மூலம் கொடுத்த, ஒரு விஞ்ஞான விவாதம். நக்கீரருக்கும் ஆலவாய் சொக்கருக்கும் ஏற்பட்டது ஒரு விஞ்ஞான விவாதம். நக்கீரருக்கு முதலில் உடன்பாடு இல்லை.

ஆனால், யார் இதற்கான நிச்சயமான தகவலைத் தரமுடியும்?

நிச்சியமாக இயற்கையின் உண்மையை இயற்கைத் தலைவனான இறைவனே விளக்குவதாக நிகழ்ச்சி அமைந்ததால், சிக்கலுக்குத் தீர்வு கிடைத்தது. அறிவியல் தனத்தோடு, அறிவியல் பார்வையோடு நம் பார்வை அமையலாம். அமைய வேண்டும்.

இன்றைய விஞ்ஞானப்படி தண்ணீரில் ஹைட்ரஜன் வாயு இரண்டு பங்கும், பிராண வாயு ஒரு பங்கும் உண்டு [H2O] என்கிறோம். இந்த உண்மை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. "பிராணம் ஏசும் அன்யத்வே" என்கிறது அதர்வண வேதம். அதாவது பிராண வாயு ஒரு பங்கும் இன்னொரு வாயு இரண்டு பங்கும் என்கிறது.

பல வருடங்களுக்கு முன் சந்திர மண்டலத்துக்குச் சென்று மண்ணெடுத்து வந்தார்கள். அந்த மண் கறுப்பாக இருந்தது. நம் பழைய வேதத்தில் அதைப் பற்றி ஒரு குறிப்பு வருகிறது. அங்கீரஸ் மஹரிஷி ஒரு ஹோமம் நடத்தினார். அதற்குச் சந்திர லோகத்திலிருந்து மண்ணெடுத்து வந்து பூமியிலுள்ள மண்ணோடு பிசைந்து குண்டம் தயாரிக்க வேண்டியிருந்தது. அது சரித்திரம்.

அதைக் குறிப்பிடும் போது, "சந்த்ரமஸி கிருஷ்ணம" என்கிறது வேதம். அதாவது, "சந்திர மண்டலத்து மண் கறுப்பானது" என்று விளக்கம்.

திருப்பாவையில் நான்காவது பாடல்

ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழியம் தோளுடை பத்மனாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சாரங்கம் உதைத்த சரமழை போல
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராடி மகிழ்ந்தேலோரெம்பாவாய்.

திருப்பாவையின் நான்காவது பாடல் மேகத்தை நோக்கிக் கூறுவதாக அமைந்திருக்கிறது. கடலின் மீது இறங்கி நீரை மொண்டெடுத்துக் கொண்டு விண்ணேறி மழை வேண்டிய இடத்தில் பொழியுமாறு மேகத்தைக் கேட்டுக் கொள்வதாக அமைந்திருக்கிறது.

கண்ணதாசனால் மிகவும் சிலாகித்துப் பேசப்பட்ட ஆண்டாளின் பாடல். பாவை நோன்பின் பலனாக மழை பெய்ய வேண்டும் என்பதே மேலெழுந்தவாரியான கோரிக்கை.



மேகம் கடல் நீரை உண்டு எடுத்துக் கொள்வதைப் போல இறைவன் பக்தியை எடுத்துக் கொள்கிறான். எங்கும் பரந்து செயல்படும் சக்தியாகிறான். மின்னலின் ஒளிர்வும் இடியின் முழக்கமும் போலத் தப்பாது தெரிய வரும் வடிவம் கொள்கிறான். தனது கருணையைப் பக்தனுக்கு மட்டுமன்றி உலகுக்கே பொழிகிறான். இப்படியாக இறைக் கருணையின் அளப்பற்ற பெருமையை பக்தன் தவறாது உணர வருகிறான்.

முகர்ந்து கொண்டு ஆர்த்து ஏறி என்ற வரியில் பூரிப்பு தெறிக்கிறது. ஆழி போல் மின்னி என்கிற போதும் வலம்புரி போல் நின்றதிர்ந்து என்கிற போதும் மின்னலும் இடியும் கண்ணுக்குத் தப்பாது தெரிந்தே போவது போல இறைவனும் பக்தனுக்குத் தப்பாது தெரிபவன் என்ற கருத்து வெளிப்படுகிறது.

உலகில் நிகழும் சாதாரணச் செயல்கள் அனைத்திலும் வேதியிலின் நிகழ்வுகள் உண்டாகின்றன. இவ்விளைவுகளை நம்மால் உணரமுடிகிறது. ஆனால் ஏன் என்ற வினாவிற்குக் கற்றவர்கள் தவிர கல்லாதவர்கள் விடை அளிக்க இயலாது. தமிழ்ச் சான்றோர் பல் துறை அறிவுடையவராய் விளங்கியமையால் இயற்கை நிகழ்வுகளை உற்று நோக்கித் தம் பாடல்களில் தம் முத்திரைகளைப் பதித்துள்ளனர்.

இந்தப் பிரபஞ்சத்தில் முதன் முதலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட சரித்திர முக்கியதுவம் வாய்ந்த நிகழ்ச்சி குருசேத்திரத்தில் 18 நாட்கள் நடந்த மகாபாரதப் போர். அஸ்தினாபுரத்தில் கண் பார்வையில்லா திருதராஷ்டிரன் தன் சயன மஞ்சத்தில் சாய்ந்து கொண்டிருக்க, பார்வையில்லாத அவனுக்குத் தேரோட்டி சஞ்சயன் சினிமாஸ்கோப் அகலத்தில் சுவரில் தெரிந்த போர்க்களக் காட்சிகளைப் பார்த்து வருணனைச் [கமெண்டரி] செய்து கொடுத்ததாகச் சொல்லப் பட்டுள்ளது. முதல் ஒளிபரப்பு அதுவும் நேரடி ஒளிபரப்பு மகாபாரதப் போர்.முதல் வருணனையாளர் சஞ்சயன்.

இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிற எல்லா விஞ்ஞான அறிவியல் சங்கதிகளும் மகாபாரதக் காலத்திலேயே இருந்திருக்கின்றன. அதே போல் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் வாழ்ந்த சித்தர் தன் தொலை நுண்ணுணர்வு மூலம் [இப்போது டெலிபதி என்று சொல்கிறோம்] வெவ்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு ஞான மொழியில் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டு இருந்திருக்கிறார்கள்.

ஒரு கண்டுபிடிப்பை டெல்லி பல்கலைக்கழத்தைச் சேர்ந்த ஒரு அறிவியலாளரும், அவரது குழுவினரும் வெளியிட்டுள்ளார்கள். பல ஆண்டுகள் இவர்கள் பாரதப் போர் நடந்த குருச்சேத்திரத்தில் மண்ணை அகழ்ந்து தோண்டி ஆய்வு செய்துள்ளார்கள். மகா பாரதப் போரில் இரசாயன ஏவுகணைகள் உபயோகப்படுத்தப் பட்டிருக்க வேண்டும் என்று ஒரு ஆராய்ச்சிக் குறிப்பு. போர் நடந்த பிரதேசத்தில் சற்று ஆழமாகத் தோண்டி எடுத்த மண், இரும்புத் துண்டுகள், தேர் சக்கர உதிரி பாகங்களை எடுத்து பரிசோதனை செய்து பார்த்ததில் இப்போது இந்திய ராணுவத்தில் உள்ள அக்னி ஏவுகணையில் என்னென்ன இரசாயன சங்கதிகள் உள்ளதோ அத்தனையும் அந்த மண்ணில் உள்ளதாம். நவீன அறிவியல் கருவிகளைக் கொண்டு கிடைத்த பொருட்களை ஆய்வு செய்த போது கதிர் வீச்சுகள் இன்னும் அந்த உலோகப் பொருட்களில் இருப்பதை மெய்ப்பித்துள்ளார்கள்.

மருத்துவ சான்றுகளும், மாற்று உறுப்பு சிகிச்சைகளும் சங்க இலக்கியங்களில் இருந்தமை காண்கிறோம். இன்றைய சமுதாயத்தில் மக்களுக்கு எடுத்துரைக்கபடும் தானங்களில் உறுப்பு தானங்களும் அடங்கும். அதில் கண்தானம் அடங்கும். இயற்கையின் வளங்களைக் கண்டு உணர முடியாத, வாய்ப்பில்லாது பலர் தவிக்கிறார்கள். இம் மக்களுக்கு உதவி புரிய பல்வேறு சமூக நல இயக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டு அவற்றின் மூலமாக அவர்கள் பயன் பெற வாய்ப்புகள் ஏற்படுத்தப் படுகின்றன. கண் இல்லாது தவிக்கும் பார்வை அற்றோருக்கு பார்வை பெற வழி செய்துள்ளது இன்றைய அறிவியல் விஞ்ஞானம்.

இந்த நவீன கண் சிகிச்சை பற்றிய சிந்தனை அன்றைய இலக்கியத்தில் இடம் பெற்று இருப்பதை அறியாலம். இக் கண்மாற்றுச் சிகிச்சை கண்ணப்ப நாயனரால் கையாளப்பட்டு உள்ளத்தைச் சேக்கிழாரின், பெரிய புராணத்தில் அறியலாம்.

சிவனின் கண்ணின்று ரத்தம் பெருகிற்று. அதைக் கண்டு கண்ணப்பனார் உள்ளம் தவித்தது. அவர் செய்வதறியாது திகைத்தார். அப்பொழுது அவருக்கு ஊனுக்கு ஊன் என்பது நினைவிற்கு வந்தது. உடனே தன்னுடைய கண்ணை எடுத்து இறைவனுக்குப் பொருத்தினார். இச்செய்தி பெரிய புராணத்தில் காணலாம்.

மற்றவர் புகழ்ந்து வார்த்த மருத்தினால் ஆற்றி இருக்க காளத்திக்
கொற்றவர் கண்ணிற் புண்ணீர் குறைபடா திழியக் கண்டு
மிற்றி னிலைமைக் கென்றோனிச் செயலென்று பார்ப்பா
உற்ற நோய் தூனுக் கூனெனு முறை கண்டார் (கண்டார். 821)

இதற் இனி என்கணம் பாலிடந்தப்பி எந்தை யார் கணதற்கிது
மருந்தாய்ப் புண்ணீர் நிற்கவும் மடுக்கு மென்று
மதர்த்தெழு உள்ளத் தோடு மகிழ்ந்து முன்னிருந்து தங்கள்
முதற் கரம் முதல்வர் தங்கண்ணி இலப்ப..(கண்டார். 822)

-என்ற இரு பாடல்களின் மூலம் அறியலாம்.

தமிழிலக்கியங்களில் பரவலாக அறிவியல் கோட்பாடுகள் அமைந்துள்ளதை நாம் காணலாம். இன்றைய அறிவியலுக்குச் சிந்தனை வித்தாக அமைந்து முறையான வளர்ச்சி நிலையினை உடையனவாய் இருக்கிறது. இந்த வளர்ச்சி எதிர்காலத்தில் ஆல்போல் பரந்து, விரிந்து, ஊன்றி நமது தமிழ் இலக்கியங்கள் உலத்தோடு ஒத்துள்ளதை உலகு அறிய அதிக தூரமில்லை.

நமது முன்னோர்கள் நமக்கு முன்னால் பிறந்தவர்கள் மட்டும அல்ல. நம் காலத்தில் இருக்கும் எல்லா விஞ்ஞான விஷயங்களுக்கும் அவர்கள் முன்னோடிகளும் கூட.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p1.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License