இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

சங்கப்புலவர்கள் பார்வையில் பறக்கும் பறவைகள் - பகுதி 1

முனைவர். ப. பாண்டியராஜா


பருவகாலத்தில் பறவைகள் சரணாலயத்தில் வந்து குவியும் பல்வேறு பறவைகளைப் பார்த்து இரசிக்க பார்வையாளர் கூட்டம் வந்து நிறைகிறது என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. மனிதர்கள் இயற்கையை இரசிக்கத் தொடங்கி விட்டார்கள் என்ற செய்தி நல்லதுதானே! இயற்கையை இரசிக்கும் போது மனிதனின் மனம் இலேசாகிறது. எனவே அவனது சிந்தனைகள் தெளிவடைகின்றன. உலகமே இனிமையாக மாறுகிறது. இன்றைய பரபரப்பு உலகத்தில் இயற்கையை இரசிக்க நமக்கு நேரம் இருப்பதில்லை. கிடைக்கிற சிறிதளவு நேரத்தில் இயற்கையை மனிதர்கள் எப்படியெல்லாம் இரசித்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்வதுவும் நேரடி இரசிப்புக்கு ஒரு நல்ல மாற்றுத்தான். சரணாலயம் சென்று வந்தவர்களைக் கேட்டுப் பாருங்கள். ‘அடடா, என்ன அழகு, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது' என்று சொல்லி விட்டுப் போவார்கள். இதையே சங்கப் புலவர்களைக் கேட்டுப் பாருங்கள். அவர்கள் வருணிக்கும் திறத்தைக் கேட்டு அப்படியே சொக்கிப் போவீர்கள். இதோ அவர்கள் வரைந்து காட்டும் சொல்லோவியங்கள்!நிரை பறை

வானத்தில் பறவைக்கூட்டம் பரந்து செல்வதைப் பார்த்திருக்கிறீர்களா? பட்டனத்துவாசிகளுக்கு அது எட்டாக்கனி. ஊர்ப்புறங்களில் வாழ்பவர்கள் அக்காட்சியைப் பலமுறை பார்த்திருப்பார்கள். கூட்டமாகச் செல்லும் பறவைகள் பெரும்பாலும் ஓர் ஒழுங்கு வரிசையில்தான் செல்லும். குடியரசுநாள் விழாவன்று தொலைக்காட்சியில் விமான அணிவகுப்பைப் பார்த்திருப்பீர்கள். அதற்கு அந்த விமானிகள் பலமுறை பயிற்சி எடுத்திருப்பார்கள். ஆனால் பயிற்சிகள் இன்றி, வெறும் உள்ளுணர்வு மட்டும் கொண்டு பறவைகளும் அதுபோல அணிவகுத்துச் செல்லும் காட்சி வியப்பிற்குரியது. சங்கப் புலவர் ஒருவர் அப்படி ஒரு காட்சியைப் பார்த்து வியந்து கூறுவதைக் கேளுங்கள்.

நெடுவேள் மார்பின் ஆரம் போல
செவ் வாய் வானம் தீண்டி மீன் அருந்தும்
பைம் கால் கொக்கு இனம் நிரை பறை உகப்ப - அகம் 20 : 1 - 3

நக்கீரனார் எழுதிய அகநானூற்றுப் பாடல் இது. ‘முருக்கடவுள் மார்பினிடத்து முத்தாரம் போல, செவ்வானத்திடம் பொருந்தி, மீனை அருந்தும் பசிய காலையுடைய கொக்கினது இனம் வரிசையாகப் பறத்தல் உயர்ந்திட' என்பது இதன் பொருள். நிரை என்பது பொதுவாகக் ‘கூட்டம்' என்ற பொருளில் வந்தாலும், அதற்கு ஒழுங்குமுறை அமைப்பு என்ற பொருளே சரியானதாகும். பறை என்பது பறவை, சிறகு, பறத்தல் என்ற பொருள்தரும். இங்கு அது பறத்தல் என்ற பொருள் தருகிறது.மாலை நேரத்தில் சிலவேளைகளில் அந்திவானம் செக்கச் செவேர் என்று சிவந்து காட்சி அளிக்கும். செக்கர் வானம் என்று அதை அழைப்பர். ஏதோ ஓரிடத்தில் மீன் அருந்திய ஒரு பறவைக்கூட்டம் நெடுந்தொலைவில் இருக்கும் தனது இருப்பிடத்தை நோக்கித் திரும்பிச் செல்கிறது. அவ்வாறு செல்லும் பறவைகள் பெரும்பாலும் ஆங்கில எழுத்துக்கள் U அல்லது V வடிவத்தில் அணிவகுத்துச் செல்லும். அது முருகனின் மார்பில் தவழும் முத்து மாலை போல் இருக்கிறதாம் புலவருக்கு! பறப்பது வெள்ளைக் கொக்கு அல்லவா! அந்த வெண்கொக்குகளின் நிரை பறை முத்துமாலை போல் தோன்றுவது என்ன நயமான கற்பனை. வடிவத்திலும் நிறத்திலும் ஒத்து வரும் அற்புதமான கற்பனை அல்லவா! வெறும் மாலை என்று எண்ணாமல் முத்துமாலை என்கிறார். வெறும் முத்துமாலை என்று எண்ணாமல் முருகனது கழுத்தில் இருக்கும் மாலை என்கிறார் புலவர். செக்கர் வானத்துக்கு, பவளத்தன்ன மேனியான் ஆன சேவற் கொடியோனின் செக்கச் சிவந்த மேனி என்ன பொருத்தமான உவமை.


மேலேயுள்ள முதல் மூன்று படங்கள் புலவர் கூற்றைப் படம் பிடித்துக் காட்டுவது போல் இல்லையா? அல்லது, புலவர் கூற்று இக்காட்சியை அப்படியே சொற்களால் ஓவியம் போலக் காட்டுவது போல் இருக்கிறதா? இதைத்தான் சொல்லோவியம் என்கிறோம். சங்கப் பாடல்களில் இப்படிப்பட்ட சொல்லோவியங்கள் நிறையப் புதைந்து கிடக்கின்றன.ஆமாம், அதென்ன பைங்கால் கொக்கினம்? கொக்குக்குக் கால்கள் பச்சையாகவா இருக்கும்? பார்த்ததில்லையே என்கிறீர்களா? கொக்குகளில் எத்தனையோ வகைகள் உண்டு. அவற்றில் ஏதோ ஒரு வகைக்கு இவ்வாறு பச்சைக் கால்கள் இருக்கலாம். இது கற்பனை அல்ல. மேலே கடைசிப் படத்தைப் பாருங்கள்.

உயரே வானத்தில் பறக்கும் நிரை பறைப் பறவைகளின் அழகிய காட்சியைப் பார்த்தோம். இப்போது நீர்மட்டத்தில் பறக்கும் மற்றொரு நிரை பறைப் பறவைகளின் காட்சியைப் பார்ப்போம். இது ஒரு அகநானூற்றுப்பாடல்.கார் பயம் பொழிந்த நீர் திகழ் காலை
நுண் அயிர் பரந்த தண் அய மருங்கின்
நிரை பறை அன்னத்து அன்ன விரை பரி
புல் உளை கலிமா மெல்லிதின் கொளீஇய
வள்பு ஒருங்கு அமைய பற்றி முள்கிய
பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்ப
கால் என மருள ஏறி நூல் இயல்
கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடும் தேர்
வல் விரைந்து ஊர்மதி - அகம் 234 : 1-9


மிக வேகமாகச் செல்லும் ஒரு தேர் - அதனை விரைவாக இழுத்துச் செல்லும் குதிரைகள் - ஓடும் குதிரைகளின் ஒழுங்கமைப்பு, புலவருக்குப் பறக்கும் அன்னங்களின் நிரை அமைப்பை நினைவுக்குக் கொண்டு வருகிறது. தேரில் பூட்டிய குதிரைகள் ஒன்றுக்கொன்று ஒழுங்கான இடம்விட்டு, ஒன்றையொன்று உரசாமல், ஒன்றின் வேகத்துக்கு மற்றொன்று ஈடுகொடுத்து, காற்றைக் கிழித்துக் கொண்டு விரையும். ஆனால் அக் குதிரைகள் ஒரு வல்லவனின் கட்டுப்பாட்டில் இயங்குவன; வார்களின் சேர்ப்புப் பிடியில் இணைக்கப்பட்டிருப்பன. நீண்ட பயிற்சியைப் பெற்றிருப்பன. அவை ஓர் ஒழுங்கான அமைப்பில் ஓடுவது வியப்புக்குரியதல்லவே! இவை ஒன்றுமே இல்லாமல் அதே ஒழுங்குடன் பறக்கும் பறவைகளின் நிரை பறையுடன் குதிரைகளின் ஓட்டத்தை ஒப்பிடலாமா? ஒன்றனுக்குரிய உவமையைக் கூறும்போது அதனைக் காட்டிலும் உயர்ந்த ஒன்றனுடன்தான் ஒப்பிடுவது வழக்கம். அந்த அளவில், விரை பரிக் கலிமாக்களைக் காட்டிலும் நிரை பறை அன்னங்கள் மேலானவை என்று புலவர் சொல்லாமல் சொல்லி விடுகிறார்! கீழே உள்ள படங்களைப் பாருங்கள். புலவரின் உவமை எந்த அளவுக்குச் சிறப்பான ஒப்புமை என்பதை உணர்வீர்கள்.

இதே உவமையைக் கொண்டு, இதே காட்சியைக் காட்டும் இன்னொரு அகப்பாடல் இது.

வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப
நால்கு உடன் பூண்ட கால் நவில் புரவி
கொடுஞ்சி நெடுந்தேர் கடும்பரி --------- - அகம் 334:10-12

மென்பறை

ஒரு கொக்குக் கூட்டம் ஓர் ஆற்றில் மேய்ந்து கொண்டிருக்கின்றது. ஆடுகள் புல் மேய்வதைப் போல, கொக்குகள் மீனை மேய்ந்து கொண்டிருக்கின்றன. ஆடுகள் எப்படிப் புல் மேயும்? ஒரே இடத்தில் நின்று கொண்டா? இல்லையே! அங்குமிங்கும் பரபரப்பாகத் திரிந்து கொண்டு, ஓரிடத்தில் புல் தீர்ந்து போனால் அருகிலுள்ள வேறு புல்லுள்ள இடங்களை நோக்கி, விரைந்து ஓடாமல், ஒரு நடையோட்டம் போட்டு அலைந்து கொண்டே இருக்கும் அல்லவா? அதைப்போலத்தான் கொக்குகளும் சிறிது தொலைவுகளுக்கு அங்குமிங்கும் மென் பறப்புப் பறந்துகொண்டு இருக்கும் அல்லவா! அதுதான் மென்பறை.

உடற்பயிற்சிக்காக, இளைஞர்கள் ஓடுவார்கள். வயதானவர்கள், வயதைப் பொருத்து மெதுவாகவோ அல்லது வேகமாகவோ நடப்பார்கள். நடுவயதுள்ளோர், நடையுமில்லாமல், ஓட்டமுமில்லாமல், ‘லொங்கு, லொங்கு’ என்று ஒரு ஓட்டம் ஓடுவார்களே - அது jogging - மெல்லோட்டம் எனப்படுகிறது. என்ன அருமையான சொல்லாக்கம் எனத் தோன்றியது. ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் நம் சங்கப் புலவர்கள் இந்தச் சொல்லைப் பறவைகளுக்காக ஆக்கியிருக்கிறார்கள் - மென்பறை. இந்த நெடுநல்வாடைக் காட்சியைப் பாருங்கள்:

பைங்கால் கொக்கின் மென்பறைத் தொழுதி
இருங்கழி பரந்த ஈர வெண்மணல்
செவ்வரி நாரையோடு எவ்வாயும் கவர - நெடு: 15-17

பசியகாலையுடைய கொக்கினது மெல்லிய சிறகரையுடைய திரள்

கரிய வண்டலிட்ட சேறுபரந்த ஈரத்தினையுடைய வெள்ளிய மணலாகிய,

சிவந்த வரியினையுடைய நாரைகளோடே, எவ்விடங்களிலுமிருந்து அக்கயலைத் தின்ன

என்று இதற்கு உரை காணுகிறார் நச்சினார்க்கினியர். அவர் மென்பறை என்பதற்கு மெல்லிய சிறகு எனப் பொருள் கொள்கிறார். பறை என்பதற்கு சிறகு என்ற பொருளும் உண்டு. இருப்பினும், மென்பறைக்கு மெதுவான பறத்தல் என்ற பொருள் இதற்கு மேலும் சிறப்பான பொருளைத் தருகிறது எனலாம். எப்படி? அதைத்தான் இப் பகுதியின் முன்னுரையில் கூறியிருக்கிறேன். இந்த அடிகளை மீண்டும் படித்துப் பாருங்கள். பசிய கால்களைக் கொண்ட கொக்கு - கரிய வண்டல் உள்ள கழி - வெண்மையான மணல் - சிவந்த வரிகளையுடைய நாரைகள் - இவ்வாறாக, பச்சை, கருப்பு, வெள்ளை, சிவப்பு என ஒரு வண்ணக் கலவை கொண்ட ஒரு சொல்லோவியமாகப் புலவர் இதனைத் தீட்டியிருக்கும் அழகைப் பாருங்கள்! சும்மா, கொக்குகளும் நாரைகளும் இரை மேய்ந்துகொண்டிருந்தன என்று கூறிவிட்டுச் செல்லாமல், ஒரு வண்ணப்படத்தையே நம் கண்முன் காட்டுகிறார் புலவர். இங்கு மென்பறை என்பதற்கு மெல்லிய சிறகு எனப் பொருள் கொள்ளாமல், ‘மெதுவாக அங்குமிங்கும் பறந்துகொண்டு’ என்ற பொருளையும் கொடுத்தால், இக்காட்சி வெறும் ஓவியமாக மட்டும் இல்லாமல், உயிரோட்டமுள்ள ஒரு குறும்படமாகவும் ஆகவில்லையா? இதற்கு வேறு ஏதேனும் சாட்சிகள் உண்டா என்று தேடியபொழுது,கானல் மாலைக் கழிப்பூக் கூம்ப
நீனிறப் பெருங்கடல் பாடெழுந் தொலிப்ப
மீனார் குருகின் மென்பறைத் தொழுதி
குவையிரும் புன்னைக் குடம்பை சேர - அகம் 40:1-4

என்ற அகநானூற்று அடிகள் கிடைத்தன. இதற்குப் பொருள்கூறும் நாட்டார்,

கடற்கரைச் சோலையை அடுத்த கழியில் வரிசையாகவுள்ள பூக்கள் குவியவும்,

நீல நிறத்தையுடைய பெரிய கடல் ஒலி மிக்கு ஒலிக்கவும்,

மீனை யுண்ணும மெல்லிய சிறகினையுடைய பறவைக் கூட்டம்,

திரட்சி பொருந்திய பெரிய புன்னைமரத்திலுள்ள கூடுகளிற் சேரவும்,

என எழுதுகிறார். மீண்டும் மென்பறை என்பதற்கு மெல்லிய சிறகு என்ற பொருளே கிடைத்தது. ஆனால் இங்கும் மீன்களை உண்ணும் குருகுகள் என்பதால் மென்பறை என்பதற்கு மென்மையாகப் பறந்துதிரிதல் என்ற பொருள் சிறப்பானதாகப் பட்டது. தொடர்ந்து தேடியதில்,

அஞ்சிறை வண்டின் மென்பறைத் தொழுதி
முல்லை நறுமலர்த் தாதுநயந் தூத - அகம்: 243-12

என்ற அடிகளுக்கு அதே நாட்டார் உரை எழுதுகையில்,

அழகிய சிறையினையுடைய வண்டின் மெல்லிய பறத்தலையுடைய கூட்டம்

நறிய முல்லை மலரில் உள்ள பூம்பொடியினை விரும்பி ஊத

என்று எழுதுகிறார். இங்கே சிறை என்பது சிறகு. அழகிய சிறகுள்ள வண்டு என்று சொன்னதன் பின்னர், பறை என்பதற்கு பறத்தல் என்ற பொருள் கொள்ளவேண்டிய அவசியம் ஆகிறது. ஓர் அழகிய நந்தவனம் - நிறையப் பூக்கள் - ஒரு வண்டுக் கூட்டம் அதனுள் நுழைகிறது. ஒரே பூவில் ஒரு வண்டுக்குத் தேவையான தேன் கிடைத்துவிடுமா? எனவே, பூக்களை மாற்றி மாற்றிப் பறந்து கொண்டு தேனெடுக்கும் அந்த வண்டுகளின் பறப்பு எப்படி இருக்கும்? அதுதான் மென்பறை. அதுபோலத் தானே இடங்களை மாற்றி மாற்றிப் பறந்து கொண்டு இரை மேயும் கொக்குகள் பறப்பதுவும் மென்பறைதானே. இதைத் தன் மனக்கண்ணால் கண்டு ரசித்த நக்கீரர் நெடுநல்வாடையில் கூறியிருப்பதுவும் இந்தப் பொருளில்தான் என்பது உறுதியாகிறது.

ஒரு புகைப்படக்காரர், ஒரு காட்சியைத் தான் பார்க்கும்போது தனக்கு ஏற்படும் உணர்வுகளைத் தன் புகைப்படத்தில் கொண்டுவந்து, பின்னர் அதைப் பார்ப்பவரும் அதே உணர்ச்சிகளைப் பெறும் வண்ணம் அந்தப் புகைப்படம் அமைந்தால், அதுவே மிகச் சிறந்த புகைப்படம் என்று ‘what is a good photograph?’ என்பதற்கான வரையறை கூறுகிறது. இதையெல்லாம் நாம் அறிந்துகொள்வதற்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் நம் புலவர்கள் தூரிகை இல்லாமல் - Camera இல்லாமல் - சொல்லாலேயே ஒளிப்படங்கள் மட்டும் என்ன, ஓடும்படங்களையும் எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். மென்பறை என்பது என்னவென்று நீங்களும் பாருங்கள்.


இன்னும் துனை பறை, வா(வு)ப் பறை, நிறை பறை, நொ பறை, வன் பறை, குறும் பறை என எத்தனை விதப் பறவைகள் பறவைகளுக்கு உண்டு எனக் கூர்ந்து நோக்கி விவரித்திருக்கும் சங்கப்புலவர்களின் கூர்த்த மதியைத் தொடர்ந்து ஆய்வோம்.

(பறவைகள் இன்னும் பறக்கும்...)


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p52.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License