Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினாறாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை


10. புலம் பெயர் எழுத்தாளரின் கருத்துகளில் பிரதிபலிக்கும் மனவியல் கோட்பாடுகள்

சுகந்தி நாடார்

பழங்காலம் முதல் இன்று வரை தமிழ் இலக்கியங்கள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் வரலாற்றை எடுத்துச் சொல்லக் கூடியச் சான்றுகளாக விளங்குகின்றன. பழங்காலத் தமிழரின் வாழ்க்கை வரலாற்றுக்குச் சங்க இலக்கியங்கள் என்றால் தற்காலத்திற்கு சிறுகதைகள்,புதுக்கவிதைகள் ஆகியவை ஒரு நிலையான இடத்தைத் தமிழ் இலக்கியங்களில் பெற்று உள்ளன. பேராசிரியர் அ.கி பரமானந்தர் அவரது நூலான தமிழ் எழுத வேண்டுமா? என்ற நூலில் சிறுகதை எழுத்தாளர்களை உரைநடைக் கவிஞர்கள் என்று சொல்கிறார். அதே நூலில் அவர், சிறுகதைகள் வாழ்க்கையில் காணப்படும் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட வேண்டும் என்றும், சிறுகதையின் பாத்திரங்கள் வாசிப்பவர்களின் அனுதாபத்தைப் பெறும் வகையில் இருக்க வேண்டும் என்றும் கூறுகின்றார்.

இன்றைய காலக்கட்டத்தில், தமிழ்நாட்டுப் பத்திரிக்கைகளில் சிறுகதைகள் ஒரு நிமிடக் கதைகளாக சுருங்கி, நான்கு வினாடிக் குறுங்கதைகளாகி விட்டன. இதனால் மக்களின் மனோபாவத்தை உணர்ச்சி ததும்ப எழுதும் நடை குறைந்து சிறுகதைகளில் புதுக் கவிதையின் சாயல் தெரிகிறது. ஆனால், பல புலம் பெயர் தமிழர்கள் தங்களின் மனநிலையை எடுத்துச் சொல்லும் ஒரு கருவியாக சிறுகதையைப் பயன்படுத்தி இணையதளங்களில் எழுதி வருகிறார்கள். அவர்களின் மனோநிலை உலகம் முழுவதும் உள்ள பல்லாயிரம் வாசகர்களின் மனநிலையை ஒத்துப் போவதால் அவர்கள் ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர்களாகத் தங்களை அடையாளப் படுத்திக் கொள்கிறார்கள். அப்படி தன்னை அடையாளப்படுத்தத் தொடங்கி இருப்பவர்தான் பெண் எழுத்தாளர் வாணமதி.வாணமதி பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் அவர் இலங்கையை விட்டுக் குடும்பச் சூழ்நிலை காரணமாகவும், அரசியல் காரணங்களுக்காகவும் புலம் பெயர்ந்து வந்தவர். இன்று அவரது சிறு குடும்பத்துடன் சுவிஸ் நாட்டில் தற்போது வசித்து வருகிறார். அவர் தற்போது மார்த்தாண்டம் என்ற பத்திரிக்கைக்கு பெண்ணியக் கட்டுரைகளையும் இணையதளங்களில் புதுக்கவிதைகளையும் எழுதத் தொடங்கியுள்ளார். அதே போல சிறுகதை.காம் என்ற இணைய தளத்தில் அவர் சிறுகதைகளும் எழுதத் தொடங்கியுள்ளார். அவர் 2015ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் எழுதிய தமிழருவி, ஞானம் ஆகிய இரு சிறுகதைகள் இங்கே ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளன.

இரு கதைகளும் சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் ஒரு சிறு குடும்பத்தை மையமாகக் கொண்டு இருக்கிறது. கதையின் நாயகிகள் இருவரும் புலம் பெயர்ந்த தம்பதியரின் குழந்தைகளாக வருகிறார்கள். அந்நிய நாட்டைத் தாய் மண்ணாய்க் கொண்டு விட்ட தமிழ் குழந்தைகள் பள்ளிக் கால கட்டத்தில் தங்களுக்கு என்று ஒரு அடையாளத்தைக் கண்டுபிடிக்க அனுபவிக்கும் குழப்பம் ஒரே பாதையில் செல்லும் இரு வேறு தடங்கள் கொண்ட இருப்புப் பாதையைப் போலாகும். அமெரிக்க உளவியல் கூட்டு நிறுவனம் இதைத் தெளிவாக கீழ் வருமாறு கூறுகிறது. “புலம் பெயர் மக்கள் தங்களுக்குத் தெரிந்த ஒரே கலாச்சாரத்தில் வாழ்கிறார்கள். ஆனால், அவர்கள் குழந்தைகளோ வீட்டில் ஒரு கலாச்சாரமும் பள்ளியில் ஒரு கலாச்சாரமுமாக வாழ்கிறார்கள். அக்குழந்தைகள் தங்கள் பள்ளி வாழ்க்கையில் தங்களுக்கு வரும் பிரச்சனைகளை பெற்றோரிடம் கூறத் தயங்குகின்றனர். ஏனெனில் தங்கள் பெற்றோர்களுக்குப் புலம் பெயர் நாட்டின் கலாச்சாரம் தெரியாது, அவர்களால் புரிந்து கொள்ள முடியாது என்று அக்குழந்தைகள் நினைக்கிறார்கள்” இந்தக் கருத்தை வாணமதி தன் இரு கதாப்பாத்திரங்கள் மூலம் அழகாகக் காட்டுகிறார்.தமிழருவி என்ற சிறுகதை கதாநாயகியின் பெயரைத் தாங்கி வருகிறது. அக்கதையில் கதாநாயகியின் வயது ஐந்து. தாய்நாட்டில் வளரும் ஒரு ஐந்து வயதுக் குழந்தை பள்ளிக்குச் செல்லும் போது, அதனோடு விளையாடப் பள்ளித் தோழிகளும் தோழர்களும் நிறைய இருப்பர். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசுவதற்கு மொழியோ நிறமோ பழக்க வழக்கங்களோ ஒரு தடையாக இருக்காது. தாய் நாட்டில் குழந்தைகள் தமிழிலோ, ஆங்கிலத்திலோ அல்லது இரு மொழி கலந்தோ பேசி விடுவார்கள். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கும் மொழி ஒரு தடையாக இருப்பதில்லை. ஏன் என்றால் அவர்களின் பெற்றோர் ஆங்கில மொழி தெரிந்தவர்களாக இருப்பார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நூல்கள் ஆகியவை ஆங்கிலத்தில் இருந்தாலும் பெற்றோரால் குழந்தைகளுக்கு ஆங்கிலத்தைக் கற்றுத் தர முடியும். ஆனால், அயல்நாட்டில் குழந்தை தமிழருவி மற்ற நாடுகளில் உள்ள புலம்பெயர் குழந்தைகளை விட ஒரு படி மேலான துன்பத்தைப் பள்ளியில் அனுபவிக்கிறாள். ஏனென்றால், அவளின் பெற்றோருக்கு ஜெர்மன் மொழி தெரியாது. அதனால் குழந்தைக்கு ஏற்படும் ஊமைக் காயத்தை அழகாகச் சித்தரிக்கிறார் கதாசிரியர்.

“இந்த நாட்டுக்கு வந்து படுகிற பாட்டைப்பாருங்க... நம்ம நாட்டில் என்றால் மொழியும் பிரச்சினையில்லை, நிறமும் பிரச்சினையில்லை எல்லோரும் தமிழ்ப் பிள்ளைகள் என்ற மனநிலையே குழந்தைகளுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுக்கும். ஆனால் இந்த நாட்டில் காலநிலையில் தொடங்கிக் கலை, கலாச்சாரம், மொழி பண்பாடு யாவற்றிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் போராட வேண்டியுள்ளது. அதிலும் சிறுவர்களைப் பொறுத்தவரையில் அதுவொரு சுமைதானே”என் று தமிழருவியின் தாய் அங்கலாய்ப்பதும் “அம்மா எனக்குத்தானே அவங்க போல டொச்சுப் பேச (யேர்மன்மொழி) வராதே" என்று குழந்தை ஏக்கத்துடன் கூறுவதும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் கொண்ட புலம்பெயர் தமிழ்க் குடும்பங்களில் நடக்கும் ஒரு நிகழ்வு ஆகும். ஒரு அன்றாட உண்மையைத் தன் எழுத்துக்களால் வர்ணம் பூசி வாசகர்களின் மனதைக் கவருகிறார் வாணமதி. ஆனால் ஒரு ஆசிரியரின் பார்வையில் அவர் வாசகர்களுக்குக் கொடுக்கும் அறிவுரையாக "ஒருவித தாழ்வுமனப்பான்மையும் அவளுள் வளர்ந்து கொண்டு வருகிறது. இதனைச் சிறுவயதிலிருந்தே போக்க வேண்டும். அதற்குப் பெற்றோராகிய நீங்கள் முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.உங்களது சமூகத்தொடர்பு உங்கள் மகளின் வாழ்வுக்கு உறுதுணையாக அமையும். விளையாட்டு மைதானம், நூலகம் போன்ற இடங்களுக்கு கூட்டிச் செல்லுங்கள் அவள் வயது ஒத்த குழந்தைகளுடன் சுயமாகப் பழக அனுமதியுங்கள்"என்று தமிழருவியின் பள்ளி ஆசிரியர் குரலாக சொல்கிறார்.அவருடைய இரண்டாவது சிறுகதையில் கதாநாயகி அர்ச்சனா பதினெட்டு வயதுப் பருவ மங்கை. அவள் இரு கலாச்சாரங்களையும் உள் வாங்கிக் கொண்டு இருக்கிறாள் என்பதை ஆசிரியர் "தன் தாய் மீது கொண்டுள்ள அளவு கடந்த அன்பைத் தன் மொழி மீதும் காட்டுகின்றாள் என்றாலும், தமது பெற்றோரினால் பின்பற்றப்படும் சில சம்பிரதாயங்களை மட்டும் அவளால் பூரணமாக உள்வாங்க முடியவில்லை" என்ற வரிகளால் சொல்கிறார். இலங்கையில் உள்ள பாட்டியுடன் இணையம் மூலமாகவும், இசுகை மூலமாகவும் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு தன் கலாச்சாரம் மொழி என்ற உயிரோட்ட வேர்களை அறிந்து கொள்ளும் கதாநாயகி மேற்கத்திய கலாச்சாரத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தெளிவான சிந்தனையையும் வெளிப்படுத்துகிறார்.

தமிழ் மண்ணில் இதே வயதுக் குழந்தைகள் தற்போது தம் மொழியை மறந்து, பொழுதுபோக்கு, காதல் என்று மனம் அலையும் நேரத்தில் மேற்கத்திய குழந்தைகளின் கண்ணோட்டம், பொது நலம் கொண்டதாக அமைகிறது என்பதைக் கதாநாயகி அர்ச்ச்னாவின் செயல்கள் காட்டுகின்றன. வெளிநாட்டுப் பள்ளிகளில் புலம் பெயர் மக்கள் தங்கள் மொழியை, கலாச்சாச்ச்சாரத்தை மதிக்கக் கற்றுக் கொடுக்கிறார்கள். அதேபோல புலம் பெயர்ந்த தமிழர்களும் தங்கள் இளம் வயதில் அறிந்திருந்த தமிழ் கலாச்சாரத்தைப் புகட்டுவதில் அக்கறை காட்டுகின்றனர்.

கதாநாயகி அர்ச்சனா புலம் பெயர் தமிழ் மாணவர் மன்றம் ஒன்றைத் தொடங்குவதாக காட்டியிருக்கிறார் ஆசிரியர். இது புலம் பெயர் நாட்டில் வாழும் பள்ளிக் குழந்தைகளின் ஒரு தனிப்பட்ட குணமாகும். எல்லாக் குழந்தைகளும் அர்ச்சனாவைப் போல மாணவர் மன்றம் ஆரம்பிப்பது இல்லை என்றாலும், அவர்கள் தங்கள் கலாச்சாரத்தின் மொழியின் தூதர்களாக உலகம் முழுவதும் வாழ்கிறார்கள். இதற்கு ஒரு நல்ல சான்று இன்றைய தென்னாப்பிரிக்கத் தமிழர்கள். ஆறு தலைமுறைகளாக அவர்கள் தங்கள் மொழியையும் கலாச்சாரத்தையும் பாடுபட்டுக் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அதேபோல, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளிலும் தமிழ் மொழியோடு தங்கள் கலாச்சாரத்தைக் காப்பாற்றி வருகிறார்கள்.


தன்னுடைய இரு கதைகளிலும் வாணமதி இன்னோரு விஷயத்தை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல, புலம் பெயர் பெற்றோர் செய்யும் தவற்றைச் சுட்டிக் காட்டுகிறார். புலம் பெயர் தமிழ் மக்கள் தங்கள் கலாச்சாரம் என்ற ஒரு பெரிய கறுப்புத் துணியைத் தன் கண்களில் கட்டிக் கொண்டு குழந்தைகளின் உள்ள நலனை மறந்து விடுகிறார்கள். இதை அழகாக ஞானம் கதையின் வரிகளில் “இந்த அம்மா நேற்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்து சேர இரவு பத்து மணியாயிற்று. அதற்குப் பிறகு சில வீட்டு வேலைகளைச் செய்து குளித்துத் தூங்க இரவு பன்னிரண்டுக்கு மேல் இருக்கும். இந்த நிலையில் அதிகாலை ஐந்து மணிக்கே எழும்பிக் குளித்து முழுகி எப்பாவோ இறந்த பாட்டிக்காக, ஏன் இந்த ஆரவாரம். நினைக்கவே சிரிப்பாகத்தான் இருந்தது ஆனாலும் அம்மா மீது அனுதாபமே மேலோங்கியது" என்றும் தனக்குள் கதாநாயகி அர்ச்ச்னா நினைத்துக் கொள்கிறாள்.

தமிழருவி கதையில் "வேற்று நாட்டுக் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும் போது, ஏதாவது பிரச்சனைகள் வரலாம் அத்துடன் குழந்தையும் சில தப்பான பழக்கங்களை மொழி ரீதியாகச் செயல் ரீதியாகக் கற்றுக் கொள்ளலாம். இதையெல்லாம் ஊகித்தே நாங்கள் சிறுவயது முதல் குழந்தையை சக குழந்தையுடன் சேர்ந்து விளையாட அனுமதிக்கவில்லை" என்ற தமிழருவியின் தந்தையின் மூலமாகப் பெற்றோரின் செயலை விளக்கி, அதற்குத் தீர்வாக "ஒருவித தாழ்வு மனப்பான்மையும் அவளுள் வளர்ந்து கொண்டு வருகிறது இதனைச் சிறுவயதிலிருந்தே போக்க வேண்டும். அதற்குப் பெற்றோராகிய நீங்கள் முன்மாதிரியாகத் திகழ வேண்டும். உங்களது சமூகத்தொடர்பு உங்கள் மகளின் வாழ்வுக்கு உறுதுணையாக அமையும். விளையாட்டு மைதானம், நூலகம் போன்ற இடங்களுக்கு கூட்டிச் செல்லுங்கள் அவள் வயது ஒத்த குழந்தைகளுடன் சுயமாகப் பழக அனுமதியுங்கள்" என்று தமிழருவியின் பள்ளி ஆசிரியர் மூலமாகவும் சொல்கிறார் கதாசிரியர்.


புலம் பெயர் மக்களின் குழந்தைகள், முக்கியமாக எதிர் கொள்வது மற்றக் குழந்தைகள் அடாவடித்தனத்துடன் நம் குழந்தைகளை கொடுமைப்படுத்துவது ஆகும். இதில் தமிழ் குழந்தைகள் மிகவும் மன நலம் பாதிக்கப்படுகின்றனர். வீட்டுக்கு வெளியே பல சூழ்நிலைகளில் பாராபசட்சம் காட்டப்பட்டு ஓரங்கட்டப்படுகிறார்கள். இந்த நிலையில் தமிழ் குழந்தைகள் தங்களின் சுயத்தை அடையாளம் கண்டு கொள்ள மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். இதைப் பற்றி அமெரிக்க உளவியல் நிறுவனம் கூறுவதாவது, “அந்நியர் பற்றிய அச்சம் கொண்ட மக்கள் வாழும் சூழ்நிலையில் புலம் பெயர்ந்த மக்கள், பல சமயங்களில் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகிறார்கள்” வேலையில் பல பதவிகளில் பொறுப்புகளில் இருக்கும் பெரியவர்களே இப்படி நடத்தப்படும் போது, பள்ளிக் குழந்தைகளின் நிலை என்னவாக இருக்கும்?

அவர்களின் வெளியுலகப் போராட்டத்தைப் பற்றி வாணமதி இன்னும் சிறிது ஆழமாகத் தன் கதைகளில் கொடுத்து இருக்கலாம். புலம் பெயர் குடும்பங்களில் வரும் தினசரி வரும் சண்டை சச்சரவுகள் பல நேரங்களில் பெரிய போராட்டமாக மாறி விடுகிறது. அந்தப் போராட்டத்தின் விளைவுகள் சில நேரங்களில் எதிர்மறையாகவும் ஆகி விடுகிறது. வாணமதி, அவரது கதைகளினில் இந்த மாதிரி ஒரு பரிமாணத்தையும் ஆராய்ந்து எழுதும் போது, அவர் கதைகள் இன்னும் சிறக்கும். அவை புலம் பெயர் தமிழர்களின் வாழ்க்கை சித்திரமாகவும் பிரதிபலிக்கும்.

சான்றாதாரங்கள்

1. ஆ.கி, பரமானந்தர். சென்னை: அல்லி நிலையம், 2010. Print. 2. "American Psychological Association (APA)." Http://www.apa.org. N.p., n.d. Web. 31 Jan. 2016.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s2/p10.html


  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License