இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை


9. மேலாண்மை பொன்னுச்சாமி சிறுகதைகளில் பெண் சித்தரிப்பு

வே. மீனா

முன்னுரை

தற்கால நாகரீகமும் விஞ்ஞான வளர்ச்சியும் நாட்டின் கிராமங்களை வளமாக்க உதவாமல் கிராமங்களை அழித்து, கிராம மக்கள் நகரச் சேரிகளில் குவிய வழி செய்யும் நிலையை நினைத்து வருந்தும் மேலாண்மை பொன்னுச்சாமி ‘தாய்மதி’ என்ற சிறுகதைத் தொகுப்பில் பல விதமாகப் பெண்களுக்கு இச்சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை எடுத்தியம்பியுள்ளார். வறுமையால் வாடும் கிராம மக்களும் அந்த வறுமையால் பாரத்தை அதிகமாகத் தாங்க நிர்ப்பந்திக்கப்படும் கிராமப் பெண்களின் வழி நம்மைப் பலமாக, பல நிலைகளில் சிந்திக்க வைப்பதுடன் எத்தனை துயரங்கள் வரினும் முடிவில் மனித சமுதாயம் அவைகளை வென்று முன்னேறவே செய்யும் என்ற நம்பிக்கையையும் இச்சிறுகதைப் தொகுப்பில் பரவி நிற்கும்படி செய்துள்ளார். இச்சிறுகதைகளின் மூலம் மாறுபட்ட பெண்களையும் அவர்களுக்குச் சூழல் அடிப்படையில் ஏற்படும் சிக்கல்களையும் எவ்வாறு சித்தரித்துள்ளார் என்பதை ஆய்வதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

மேலாண்மை பொன்னுச்சாமி சிறுகதையில் பெண்மைச் சித்தரிப்பு

சமுதாயத்தின் பிரதிப்பலிப்பாக இலக்கியம் படைக்கப்படுகிறது. இவை சங்க காலத்திலிருந்தே தொடர்ந்து வரும் நிலையாகும். இலக்கியம் காலத்திற்கேற்ப மாறுபடுகிறதே அன்றி பெண்கள் சங்க இலக்கியத்திலிருந்து இக்கால இலக்கியம் வரை அடிமையாகவோ, சார்பு நிலையிலோ அமைகிறாள். பிறப்பு முதல் திருமணம் வரை பெண் பெற்றோரைச் சார்ந்தும் திருமணத்திற்குப்பின் கணவனைச் சார்ந்தும் அடிமையாகவே கைதிகளை நாடு கடத்தி சிறையில் அடைக்கப்படுவதைப் போலவே சித்தரிக்கப்படுகிறாள். பெண்கள் இல்லையேல் இவ்வுலகில் மனித உயிர் இல்லை. இப்படியாக சமூக அடிப்படையில் பெண்கள் படைக்கப்பட மேலாண்மை பொன்னுச்சாமியோ சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவே தனது சிறுகதையில் அவர் சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படும் சிக்கலைக் கொண்டு பலவிதமான பெண்களைக் கூறி அவ்வப்பொழுது அவற்றிலிருந்து விடுபட அவர்களுக்குரிய தீர்வுகளையும் கூறுகிறார். இவை அவரின் ‘தாய்மதி’ தொகுப்பிலுள்ள ஐந்து சிறுகதை வாயிலாக வெளிப்படுகிறது.



‘தாய்மதி’ என்ற சிறுகதையின் பெண் சிசுக்கொலைப் பற்றி மிக உருக்கமாகப் படைத்துள்ளார். சிசுவைக் கொலைச் செய்ய, தாய்க்கும் இதர சுற்ற பெண்களுக்கும் இடையேயுள்ள வேற்றுமைக் காட்டி அவற்றின் கொடூரத்தை விளக்கியுள்ளார். இதனை அனுபவமாக உணர்வாகப் பதிவு செய்துள்ளார். இதில் பெண் சிசுக்கொலைக்கான காரணங்களைக் காட்டி அதன் விளைவையும் பாத்திரத்தின் வாயிலாக விளக்கியுள்ளார். இவற்றில் தலைப்பையும் பொருத்தமாகத் தனது குழந்தையைக் கொல்லும் போது தாய்க்கு ஏற்படும் ரணக்கொடூரத்தைத் தலைப்பிலேயே விளக்கியுள்ளார்.

‘மதிப்பீடு’ என்ற சிறுகதையில் பெண்களுக்கு பெண்களே எதிரி என்பதையும் வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் விளக்கி, இதில் நீதி இல்லாத சமூகத்தில் உயர்வாக்க பெண் மூலம் வறுமையில் வாடும் பெண்கள்படும் அவமானத்தை எடுத்து இயம்பியுள்ளார்.

‘சொந்தவீடு’என்ற கதையில் ’சுப்புத்தாய்’ என்ற பெண்ணின் வழி பெண் யாரையாவது சார்ந்தே வாழமுடியும், திருமணம் ஆன பின் அவளுக்குக் கணவன் இல்லமே சொர்க்கம் என்பதையும், கணவனின்றி சிக்கல் ஏற்பட்ட நிலையில் பிறந்த வீட்டால்; அவள் திருமணத்திற்குப் பின் வெறுக்கப்படுவதையும் தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.

கைம்மைப் பெண்களின் நிலையை ‘முக்காலும் காலுமாய்’ என்ற சிறுகதை வாயிலாக காட்டியுள்ளார். பெண் படும் வேதனையைக் கணவனால் அடைந்த பெருமைகளை நினைத்துத் தனிமையில் தவிக்கும் அவளிடம் பிற ஆண்கள் தவறான நோக்கில் அணுகுவதும் மதிப்பிடுவதுமான சமூகநிலையைப் பதிவு செய்துள்ளார்.

வயதானவர்களைத் தெய்வமாக நினைத்து வழிபட்ட காலம் போய் அவர்களை அடிமைப்படுத்தி வேவைவாங்கும் நிலையிலும், ஒதுக்கும் நிலையிலும் இருக்கும் இக்காலச் சூழலை ‘பந்தம்;’ என்ற சிறுகதை வாயிவாக புலப்படுத்துகிறார். இதில் தன் மகனால் ஒதுக்கப்படும் தாயின் மனநிலையைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

இவ்வாறாக பிறப்பு நிலையத்தில் எட்டு வைக்கும் பெண் தனது வாழ்க்கைப் பயணத்தில் பயணிப்பதில் மட்டுமின்றி இறப்பு நிறுத்தத்தில் இறங்குவதிலும் கூட பல சித்திரவதைகளுக்கும், வேதனைகளுக்கும் உள்ளாக்கப்படுவதை நுண்மையாகக் காட்டியுள்ளார் மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள்.

பிறப்பில் பெண் சிசுக்கொலை

‘தாய்மதி’ என்ற சிறுகதை பெண் சிசுக் கொலைப் பற்றிய மனிதநேயத்திற்குரிய கதையாகும். உலகெங்கிலும் சரித்திர காலம் தொட்டே ஆண், பெண் என்ற பேதமில்லாமல் சிசுவதைகள் நடைபெற்று வந்துள்ளன. இதிலும் ‘பெண்சிசுக்கொலை’ என்கிற சமூகக் கொடுமை 18ஆம் நூற்றாண்டிலிருந்தே இந்தியாவின் பல பாகங்களிலும் பரவியது. புராதனக் காலத்திலிருந்தே ஆண் குழந்தைகளின் பிறப்புதான் ஆனந்தமாகக் கொண்டாடப்பட்டது. பெண் குழந்தைகளின் பிறப்பு வெறுக்கப்படுகிறது. பெண் குழந்தைகளின் மீதான இந்த வெறுப்பிற்கு காரணம் ஆண் பிறப்பு ‘வரவு’ சுகமானது என்றும் பெண் பிறப்பு ‘செலவு’, ‘சுமை’ என்றும் கருகின்றனர்.



பெண் இயல்பில் தாய் உள்ளம் படைத்தவள் உள்ளம் படைத்தவள்; கருணை மிக்கவள் அதிலும் மண்ணோடும் மனிதர்களோடும் இயற்கையோடும் இணைந்து குடும்பத்தையும் சமூகத்தையும் வாழவைக்கும் பெண், தான் பெற்ற மகவை அழிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். இது ஒரு வகையில் தற்கொலை போன்றது. இதில் அவள் தன்னை தானே தன் மனதை சாகடித்துக் கொள்கிறாள். ‘தாய்மதி’ கதையில் வரும் முப்பிடாதியை அவ்வாறே படைத்துள்ளார்.

“குலங்கி குலுங்கி அழுதாள், முப்பிடாதி வெறுப்பும் கசப்புமாய் மனம் குமட்ட... வெடித்துக் கதறினாள். சுமந்து ரத்தம் தந்து, உயிர் கொடுத்து பெறப்போகிற மழலையை சாவின் கையில் ஒப்படைக்கப் போகிற மழலையை சாவின் கையில் ஒப்படைக்கப் போகிற அக்கிரமத்தை நினைக்க, நினைக்க குலையே கொதிக்கிறது. மண்டைக்குள் ஏதோ பிறாண்டுகிறது. கிறுக்குப் பிடித்துவிடும் போலிக்கிறது.” (1)

பெண் சிசுவதைக்களுக்கான காரணங்கள்

  • வறுமை பற்றாக்குறை, ஆடம்பரச் செலவுகள்

  • அடிப்படையாகவே பெண் குழந்தைகளின் மீதுள்ள வெறுப்பு

  • தீவிரமான ஆண் குழந்தை ஆசை

  • சுற்றத்தரால் வற்புறுத்தப்படுதல்

    என்பது போன்ற பல காரணங்களால் பெண் சிசுக்கொலை நடைபெறுகிறது.

    தான் பெற்ற பிள்ளையை வறுமை காரணமாக அதை வளர்த்துத் திருமணம் செய்து கொடுத்துத் துன்பப்படுவதை விட, கருவிலேயே அச்சிசுவைக் கொன்றுவிடுதல் நல்லது என்பது வறுமைச்சூழலில் வாடும் மக்களின் குரலாக உள்ளது.

    “சின்னராசு ஒரு சின்னச் சம்சாரி. மூன்றாவது பெண்ணைக் கரை சேர்க்கத் தெம்பில்லை. அவனும் ஓடியாடிப் பார்த்தான். குடும்பத்திற்குள் மூச்சுமுட்டல் ரெண்டு நாளாய் சின்னராசைக் காணவில்லை. ஊரே பதறிப் போய்த் தேடியது. பனந்தோப்பில் பிரேதமாய் விறைத்து...

    ‘அடேய் சின்னராசு கதி ஒனக்கும் வரணுமா? உள்ளுக்குள் விறைந்தே போகிறான்.” (2)



    வறுமையைக் காரணங்காட்டி பெண் சிசுக்கொலைச் செய்வதை மேலாண்மை பொன்னுச்சாமி ‘தாய்மதி’யில் கூறியுள்ளார். பெண் பிறந்தால் அவளது திருமணத்திற்குச் சீதனமாக வரதட்சனை எண்ணியே பெண் குழந்தையை வெறுக்கின்றனர். வரதட்சணை தருதல் குறித்து இரா.வேலுச்சாமி தனது கவிதையில்,

    “விலைகள்
    தொகையாக பணமாக
    இல்லாமல்
    கார்கள் - கல் நகைகள்
    பங்களாக்கள் - என்ற
    பண்டமாற்று முறையிலும்
    நடப்பதுண்டு” (3)

    என்று பெண்களின் வாழ்வில் இன்றியமையாததாக உள்ள திருமணத்திற்கு வழி அமைக்கும் வரட்சணைக் குறித்து கூறுகிறார்.

  • பெண் சிசுக்களை அழிக்கும் முறைகள்

    தாய் மறுபிறப்பு எடுத்து பெற்றேடுக்கும் குழந்தைகள் தன் சுயநலத்துக்காக ஒரு வினாடியில் அழித்துவிடுவது மிகப்பெரும் குற்றமாகும் அவர்கள் அச்சிசுவை அழிப்பதைப் பற்றியும் மேலாண்மைப் பொன்னுச்சாமி கூறியுள்ளார். “இங்க பாரு இப்பவே சொல்லியிருந்தேன் பொறக்குறது ஆணா இருந்தா இருக்கட்டும் நல்லதுதா பெண்ணாப் போச்சன்னா நெல்உமி எருக்கலம் பால்னு அலையக்கூடாது ஆமா... அப்படி இப்படின்னு கமுக்கமா ஏதாச்சும் செய்ஞ்சேன்னா நாணகாளியா மாறிடுவேன்!... (4)

    என்று ஆணாதிக்க சமூகத்தில் பெண்ணே அறியாமல் நடக்கும் பிழைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். இதனைப் போன்ற ‘ஜெகாதா’வும் தனது நூலிலுள்ள பெண்களும் கருக்கலைப்பும் நிர்ப்பந்தங்களும் என்ற பகுதியில் பெண்சிசுக் கொலை அழிக்கும் முறையினைக் காட்டுகிறார்.


    “இங்கு கள்ளிப்பாலு, எருக்கம்பாலு, அரளி இன்னும் சில எடங்களல புள்ள வாயில நெல்லுமணி போட்டும் கூட கொல்லுறாங்க. தாய்காரி மாருல விஷம் தடவி பாலு கொடுக்கச் செய்றதும் உண்டு. பொறந்த உடனே ஈரத்துணில சுத்திச் சிறிது நேரம் கவனிக்காம போட்டு வச்சுட்டா அதா விரைச்சுப்போய் செத்துப்போகும் கழுத்து எழும்பு முறிச்சுப் போடுறதும் உண்டு” என்ற சிறுகதை தொகுப்பின் மூலம் பெண்ணாகிய சிறு பிஞ்சைக் கொடூராமாக் கொலை செய்த நிகழ்வு வெளிப்படுகிறது. பிறந்த சில மணி நேரமே ஆன சிசுக்கள் பூவைப் போன்றது. அத்தகையப் பூவை ‘குரங்கு கையில் பூமாலை’ என்ற நோக்கில் அக்குழந்தையைக் கொல்ல வேண்டும் என்பதே குறிக்கோளாகக் கொண்டு இரக்கமின்றி பல விதமாகக் கொல்கின்றனர். அவை,

  • எருக்கம் பால்

  • பானைக்குள் போட்டு மண்ணில் புதைத்துவிடுவது

  • மூக்கு வாய் துவரங்களை அடைத்துவிடுதல்

  • புகையிலைக் கசக்கி கொடுத்தல்

  • கள்ளி,அரளி, நெல்மணி, பூச்சிக்கொல்லி மருந்து

  • கோழிக் குழம்பு

    போன்ற முறைகளில் பெண் சிசுக்கள் கொல்லப்படுகின்றன. இத்தகைய மனிதசெயலுக்கு எதிர்க்குரல் எழுப்பும் இறையன்பு ‘முகத்தில் தெளித்த சாரல்’ என்ற தனது கவிதைத் தொகுப்பில் ‘கள்ளிச்செடியும் கள்ளச் செயலும்’ என்னும் கவிதையில் மனிதருக்கு இல்லாத இரக்கம் ஐந்தறிவு படைத்த நாயிடம் இருப்பதைச் சுட்டுகிறார்.

    தேடிச் சென்ற
    கள்ளிச் செடிப்புதரில்
    குட்டிகளுக்குப் பாலூட்டும்
    நாய்” (6)

    மேலாண்மை பொன்னுச்சாமியும் பெற்ற பிள்ளைக் கொன்று அதனால் வாழ்வில் சுகப்படுதலை ‘தாய்மதி’யில்

    “பெத்த புள்ளையைக் கொன்னுட்டு வாழ்ற வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? ஈண்ட குட்டிகளை முழுங்கிட்டு நெளியுற பாம்பு மாதிரியா? பாம்பும் மனுசனும் ஒண்ணா! அடப் பாதரவே...!”

    கொடிய விஷம் கொண்ட பாம்பிற்கு இணையாக வெளிப்படுத்தியுள்ளார்.

  • பெண் சிசுக்கொலை - அன்னையரின் சோகச்சித்திரம்

    தான் பெற்ற பிள்ளை கொல்லப்படுவதை அறிந்து பெண் தன்னளவில் வெளிச்சொல்ல இயலாமல் நொந்து சாசிகிறாள். இதனை ஆசிரியர் மிக உருக்கமாகக் காட்டியுள்ளார்.

    “படக்கென்று முழிக்கிறாள். விருட்டென்று எழுந்து உட்கார்ந்தாள்” எங்க? எம்புள்ளை எங்க? எங்க?” வெறி பிடித்த கத்தலாய்க் கத்தினாள்.

    “செத்துத்தான் பொறந்தாச்சு...”

    “பொய்யி... பொய்யி... புள்ளை அழுத சத்தம் எனக்குக் கேட்டுச்சு...”

    சீந்துவாரில்லாமல் பரவி நனைந்து சொட்டடிக்கிறது. அமிர்தப்பால் - வாழ்க்கையை போல” (8)

    தனது குழந்தையை எண்ணி பல அன்னையர்களும் கனவில் உழன்று கொண்டிருந்தாலும் இச்சமூகத்திலுள்ள மிருகப்பிராயங்கள் பெண்ணை உதாசீனப்படுத்திக்கொண்டே இருக்கிறது. இதை சட்டம் போட்டு தடுக்க தமிழக அரசானது முயற்சி மேற்கொண்டு “தொட்டில் குழந்தைத் திட்டம்” என்றும், “பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம்” என்றும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனாலும், மனிதரே திருந்தி மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதே வெளிப்படையாகும்.

    கீழ்வர்க்க நிலையில் பெண்கள்

    வர்க்க முரண்பாட்டிற்கு ‘நிலவுடைமை’ காரணமாகும். நிலவுடைமையாளர்கள் மேல்வர்க்கமாகவும் இருந்தனர். இதில் கீழ்வர்க்க பெண்களின் நிலையே மிகவும் மோசமாகவுள்ளது. மேல்வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களாலே இவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டு தீயவள் என்று முத்திரையிடப்படுகின்றனர்.

    கீழ்வர்க்கத்தில் வாழும் பெண்ணின் வாழ்க்கையே ஒரு பெரிய போராட்டக்களம் தான் தினக்கூலி வாங்காவிடில் அவள் பாடு திண்டாட்டம் தான். அன்று முழுவதும் பசி பல அவமானங்களைச் சந்திக்க நேரிடும். தன் சுயதேவையை நிறைவேற்றிக் கொள்ளாத நிலையில் பிழைப்பு நடத்துகின்றனர். பெரும்பாலும் பெண்களே பொறுப்புடன் வேலைகளைச் செம்மையாகச் செய்ய வேண்டும் என்று ஈடுபடுவதால் உயர்வர்க்கத்தில் உள்ளோர் கூலி வேலைக்குப் பெண்களைத் தேர்வு செய்கின்றனர். பெண் இயற்கையிலே பயந்த சுபாவம் உடையவர்கள். எனவே கூலிக்காக வேலை நிறுத்தம் போராட்டநிலை என்ற நிலைக்குச் செல்லமாட்டார்கள் என்றும் மதிப்பீடு செய்து, பெண்களைக் கூலி வேலைக்கு அமர்த்தி அவர்களின் உழைப்பின் பயனைக்கூலி சரிவரத் தராமல் சுரண்டுகின்றனர்.

    “வேலை குதிரைக்கொம்பாய் இருக்கிற கொடுமை உழைத்தக் கூலியைக்கூட கண்டி‘ன் பண்ணிக் கேட்கமுடிகிறதில்லை. புஞ்சைக்காரர் சொன்னதுதான் சட்டம், மறுபேச்சு பேச ஏது ஞாயம்?” (9)

    என்ற வரிகள் உழைப்பின் பயனைத் திருடும் முதலாளிகளை எதிர்த்துக் கேட்க இயலாக நிலையைக் காட்டுகின்றது. இதனையே நாட்டுப்புறவியலில் புஞ்சைக்காரியால் பெண்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்.

    “கணக்குக் குறைந்ததால்
    களைக்காட்டு மேஸ்திரி
    கட்டிவைத்து அடித்தானம்மா” (10)

    அதுமட்டுமின்றி நேரம் காலமின்றி உழைப்பினைச் சுரண்டுவதை

    “தண்ணி கருத்திருச்சி
    தவளைச் சத்தம் கேட்டிருச்சு
    புள்ளை அழுதிருச்சு
    புண்ணியரே வேலைவிடு”

    என்றும் பொழுதிற்குரிய அடையாளங்கள் வந்தும் வேலை வாங்கும் புஞ்சைகாரரே எங்களைவிடு என்று கூறுவது போல அமைந்த நாட்டுப்புறப் பாடலை ‘ச. முத்துசிதம்பரம்’ எடுத்துக்காட்டுகிறார்.


    ஆணாதிக்கத்தில் விவசாயப் பெண்களின் நிலை

    பெண்ணானவள் காலம் காலமாக பிறந்ததிலிருந்து யாரையாவது சார்ந்தே வாழ்ந்து வருகிறாள். பெற்றோருக்கு அடுத்ததாக பெண் கணவருக்கு அடிமையாகிறாள். ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ ‘கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்’ போன்ற பழமொழிகள் இன்றும் நிலவிவருகின்றன. இவை பெண்ணை ஆணுக்கு அடிமைப்படுத்தும் வழக்கமாகும்.

    கணவன் அதிகாரி, மனைவி உபகாரி என்ற வழியில் பெண் தன்னுடைய தேவையை நிறைவேற்றாத நிலையில் கணவனுக்காக உழைத்திடும் அடிமைத்தனமான பெண்ணாக கணவனுக்கே சொந்தமான உபகாரியாக உள்ளாள். ஆணுக்குச் சமமாகப் பெண் வேலைப் பார்த்தாலும் அடுப்பூதுவதுதான் பெண் நிலை வேலைக்குப் போய் வந்த ஆண்கள் ஓய்வெடுக்க வந்த பின்னும் சங்கிலித் தொடராய்க் வேலைகள் காத்திருக்கப் பெண்கள் உழன்றாக வேண்டுயிருக்கிறது என்பதைச் சொந்தவீடு கதையில்,

    “காட்டு வேலை முடித்து வீடு வந்த சேர சுப்புத்தாய்க்கு நேரமாகிவிட்டது. உஸ்ஸ்ஸென்று ஓய்ந்து உட்காரப் பொழுதில்லை உடம்பெல்லாம் குத்திக் குடைகிற உளைச்சல்... பரப்பரப்பானாள் சூறாவளியாய்ப் பறந்தாள் இவள் ஓடிப்போய் நிற்பதற்குள். கணக்கு முடித்து, பால்கேனை லாரியில் ஏற்றி விட்டார்கள்...’ ஈரம் உலா;ந்த தலையில் எண்ணெய் வைத்துக் கொண்டே பசியின் கொலை பொறுக்காமல் கேட்டான்...

    நேரத்தோட்ட பால வாங்காம என்ன செஞ்சுக்கிட்டிருந்தே?” (12) என்று எடுத்துக்காட்டியுள்ளார்.

    கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் நிலை (சார்பு நிலை)

    பெண்கள் திருமணத்திற்கு முன் பெற்றோரையும் திருமணத்திற்குப் பின் கணவனையும் சார்ந்தே பெண் வாழ்ந்து வருகிறாள் என்பதை மேலாண்மை பொன்னுச்சாமி.

    “அடப்பாவி! என்னையா அடிக்குறே! யார்னு நெனைச்சே என்ன? நாதியத்தவன்னு நெனைச்சிட்டீயா? யாரு விடிஞ்சவுடனே போறேன் ஊரிலே என்னைத் தலையிலே வச்சுக் கொண்டாட அம்மா அய்யா இருக்காக” (13)

    என்று தனியாக நிற்க இயலாது மனதில் உறுதியற்று திகழும் சில பெண்களைக் காட்டியுள்ளார். கணவனிடம் மனஸ்தாபம் ஏற்பட்டோ சண்டை போட்டுக் கொண்டோ வெறுக்கப்படும் பெண்கள் தனியாக வாழ்வதால் இச்சமூகத்தில் அவள் புழுவைப் போல நடத்தப்படுகிறாள். கணவனைப் பிரிந்த சில நேரங்களிலே ஆன சுப்புத்தாய்யை இச்சமூகம் வேறு கோணத்தில் காணுகிறது.

    “கையைக் காட்டி, ஏறிக்கொண்டாள், பஸ்க்குள் நாளைந்து பேர்தான். இவள் ஒற்றைப் பெண்ணாய், இவள் மட்டும்... டிக்கெட் தர சாவகாசமாய் வந்த கண்டக்டர் முகத்தில் ஒரு தொனி பார்வையில் ஒரு சந்தேகம் பூரான் ஊர்கிற மாதிரி... கண்டக்டரின் முகத்தில் பார்க்க பயம்” (14) இதில் ஆசிரியர்

    கணவனை நீங்கிய பெண்ணை இழிவுப்படுத்தும் சமூகத்தை உணர்த்துகிறார்.

    கைம்பெண்

    கைம்மை என்பது பெண்களுக்கு மட்டுமே உரிய வாழ்க்கை நிலையாகும். திருமணமான பெண் கணவனை இழந்துவிட்டால் கைம்பெண்ணாகிறாள். ஆண்களின் துணையும் ஆதரவும் இன்றி அவர்கள், சமூகத்தில் தனித்தியங்கக் கூடாது என்னும் நிலையில் பெண்களைக் கைம்மை என்று வாழ்வை இழிவு படுத்துகின்றனர். கணவனை இழந்த நிலையில் பல கட்டங்களையும் இச்சமூகத்தில் பெண் அனுபவிக்கிறாள். கணவன் இருந்த நிலையில் வாழ்க்கையைச் சார்ந்து நடத்திச் சென்ற பெண்களுக்கு இப்போது கணவன் இடத்தில் இருக்கிறோம். என்ற உணர்வில் அவரையே எண்ணி வாழ்வர். கணவன் இன்மையால் தானே சுயமாகச் சம்பாதித்துக் குழந்தையைக் காப்பாற்றும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். இங்கு பெண்கல்வி இன்றியமையாததாகிறது.

    “கொத்துவேலை கெடைக்காம வீட்டுக்கும் வழிக்குமாய் வெறும் நடை நடந்து கிட்டு... கஞ்சி குடிக்கிறதே பெரும்பாடு சரி... நூத்தியம்பது ரூவாயாச்சும் வேணுமே அம்புட்டுக்கு இப்ப எங்க போறது.

    பூவனத்துக்கு கண்ணைக்கட்டி இருட்டுக்குள்விட்ட மாதிரியிருந்து?” (15) அன்றாட உணவுக்குக் கணவனை இழந்த பூவனம் படுகின்ற பாட்டை “முக்காலும் காலுமாய்” கதை கூறுகிறது.

    விதவை என்றாலே வாழை இலையில் விருந்துப் படைக்கக் காத்திருப்பவள் என்ற எண்ணம் சில ஆண்களிடம் படிந்துவிடுகிறது. சிலர் சில விதவைப் பெண்களின் வறுமையைப் பயன்படுத்திக் கொண்டு, அவள் பெண்மையை உறிஞ்சி முழுக்க அவளைக் கண்ணீர் சிந்த வைக்கின்றனர். விதவையான பெண்ணை ஒரு ஆண் பார்க்கின்ற கோணத்தை பூவனத்தின் வழி “முக்காலும் காலுமாய்” என்ற கதையில்

    “உரியை பார்க்கிற கள்ளப்பூனை மாதிரி... ... ஒரு விதமான பார்வை” (16)

    என வரும் வரிகளில் விதவையரின் நிலையை அவர்களின் துயரங்களைப் புலப்படுத்தியுள்ளார்.


    முதுமை நிலையில் பெண்

    முதுமை என்பது குழந்தைத் தனமான பருவமாகும். அடுத்தவர்களைச் சார்ந்தே வாழ ஆசைக் கொள்கின்றனர். இதில் பெரும்பாலும் பெண்கள் குடும்பத்தாரின் கூட்டிலே ஒரு அங்கமாய் வாழ விரும்புவர். ஆனால் புதிய உறவுகளின் வரவு காரணமாக இச்சார்பு நிலை சிதறடிக்கப்பட்டு முதுமையிலும் பெண் துயரத்திற்கு உள்ளாவதை பந்தம் என்ற கதையில் விளக்கியுள்ளார்.

    தனிக்குடும்பம் பெருகிவிட்ட தற்காலச்சூழலில் பெரியவர்கள் தனிமைப்படுத்தப்படுவதை,

    “நடுத்தெருவிலிருந்து மேலத் தெருவுக்குப் பிரிகிற இடம் இடிபாடான ஒரு வீடு...

    “ஒத்தை மகன் பெத்தேன் அருமைப் பெருமையா வளர்த்து ஆளாக்குனேன்... நாதியத்த சிவனாய் பாடுபட்டு கஞ்சி, காய்ச்சிக் குடித்தேன்” (17) என்று புலப்படுத்தியுள்ளார். பெத்த மகனே தாயைப் புரிந்து கொள்ளாத போது புதிதாக வரும் உறவு புரிந்து நடப்பது சாத்தியமற்றது. முதியவராக இருக்கும் காரணத்தினால் எதற்கும் பயனற்றவள் தனது சொந்தம் அன்று என்ற நோக்கில் பார்வதி தனது மாமியாரை,

    “அதாலே யாருக்கு என்னடி பிரயோசனம்” என்று தகாத வார்த்தையால் உதாசீனப்படுத்துகிறாள். இங்கு பெண்ணுக்குப் பெண்ணே எதிரியாகச் செயல்படுவதை எடுத்துக்காட்டியுள்ளார் ஆசிரியர்.

    முடிவுரை

    ‘பெண்ணைவிட உயர்ந்தது இவ்வுலகில் ஒன்றுமில்லை’ என்று பெண்மையைக் கவிராசர் புகழ்கிறார். ஆனால் அவளை உயர்வாக நினைக்காத சமூகம் அவளை பிள்ளை பெறும் எந்திரமாகவும், ஒரு போகப் பொருளாகவும், பழுதடைந்ததைத் தூக்கி எறியும் பொருளாகவும் மட்டுமே பார்க்கின்றது என்ற பெண்ணிய நிலையில் ஆசிரியர் இச்சிறுகதைகளை அமைத்துள்ளதை இவ்வாய்வு திறம்பட வெளிப்படுத்துகிறது.

    குறிப்புக்கள்

    1. தாய்மதி, ப-14

    2. தாய்மதி, பக்-16,17

    3. பெண்களும் சமூகமும், ப-51

    4. தாய்மதி, ப-19

    5. பெண்களும் பாதுகாப்புச் சட்டங்களும், ப-39

    6. முகத்தில் தெளித்த சாரல், பக்-54, 57

    7. தாய்மதி, ப-14

    8. தாய்மதி, பக்-24-23

    9. மதிப்பீடு, ப-28

    10. தமிழக நாட்டுப்புறவியலில் பெண்கள், ப-43

    11. தமிழக நாட்டுப்புறவியலில் பெண்கள், ப-43

    12. சொந்தவீடு, பக்.38, 39

    13. சொந்தவீடு, ப-41

    14. சொந்தவீடு, ப-45

    15. முக்காலும் காலுமாய், பக்-110,111

    16. முக்காலும் காலுமாய், பக்-112

    17. பந்தம், ப-151

    18. பந்தம், ப-155


    *****


    இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

    இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s2/p9.html
    

      2024
      2023
      2022
      2021
      2020
      2019
      2018
      2017


    வலையொளிப் பதிவுகள்
      பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

      எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

      சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

      கௌரவர்கள் யார்? யார்?

      தமிழ் ஆண்டுப் பெயர்கள்

      பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

      வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

      பண்டைய படைப் பெயர்கள்

      ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

      மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

      மரம் என்பதன் பொருள் என்ன?

      நீதி சதகம் கூறும் நீதிகள்

      மூன்று மரங்களின் விருப்பங்கள்

      மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

      மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

      யானை - சில சுவையான தகவல்கள்

      ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

      புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

      நான்கு வகை மனிதர்கள்

      தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

      மாபாவியோர் வாழும் மதுரை

      கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

      தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

      குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

      மூன்று வகை மனிதர்கள்

      உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


    சிறப்புப் பகுதிகள்





    முதன்மைப் படைப்பாளர்கள்

    வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


    சிரிக்க சிரிக்க
      எரிப்பதா? புதைப்பதா?
      அறிவை வைக்க மறந்துட்டானே...!
      செத்தும் செலவு வைப்பாள் காதலி!
      வீரப்பலகாரம் தெரியுமா?
      உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
      இலையுதிர் காலம் வராது!
      கண்ணதாசனின் நகைச்சுவைகள்
      குறைச்சுத்தான் எடை போடறாரு...!
      அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
      குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
      இடத்தைக் காலி பண்ணுங்க...!
      சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
      மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
      மாபாவியோர் வாழும் மதுரை
      இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
      ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
      அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
      ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
      கவிஞரை விடக் கலைஞர்?
      பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
      கடைசியாகக் கிடைத்த தகவல்!
      மூன்றாம் தர ஆட்சி
      பெயர்தான் கெட்டுப் போகிறது!
      தபால்காரர் வேலை!
      எலிக்கு ஊசி போட்டாச்சா?
      சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
      சம அளவு என்றால்...?
      குறள் யாருக்காக...?
      எலி திருமணம் செய்து கொண்டால்?
      யாருக்கு உங்க ஓட்டு?
      வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
      கடவுளுக்குப் புரியவில்லை...?
      முதலாளி... மூளையிருக்கா...?
      மூன்று வரங்கள்
      கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
      நான் வழக்கறிஞர்
      பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
      பொழைக்கத் தெரிஞ்சவன்
      காதல்... மொழிகள்
    குட்டிக்கதைகள்
      எல்லாம் நன்மைக்கே...!
      மனிதர்களது தகுதி அறிய...
      உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
      இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
      அழுது புலம்பி என்ன பயன்?
      புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
      கடவுளைக் காண உதவும் கண்ணாடி
      தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
      உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
      ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
      அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
      கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
      எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
      சிங்கத்திற்கு வாழைப்பழம்!
      வலை வீசிப் பிடித்த வேலை
      சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
      இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
      கல்லெறிந்தவனுக்கு பழமா?
      சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
      வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
      ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
      அக்காவை மணந்த ஏழை?
      சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
      இராமன் சாப்பாட்டு இராமனா?
      சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
      புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
      பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
      தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
      கழுதையின் புத்திசாலித்தனம்
      விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
      தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
      சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
      திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
      புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
      இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
      ஆணவத்தால் வந்த அழிவு!
      சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
      சொர்க்க வாசல் திறக்குமா...?
      வழுக்கைத் தலைக்கு மருந்து
      மனைவிக்குப் பயப்படாதவர்
      சிங்கக்கறி வேண்டுமா...?
      வேட்டைநாயின் வருத்தம்
      மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
      கோவணத்திற்காக ஓடிய சீடன்
      கடவுள் ரசித்த கதை
      புத்தர் மௌனமாக இருக்கலாமா?
      குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
      சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
      தேங்காய் சிதறுகாயான கதை
      அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
      அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
      கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
      சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
      அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
      விமானத்தில் பறந்த கஞ்சன்
      நாய்களுக்கு அனுமதி இல்லை
      வடைக்கடைப் பொருளாதாரம்
    ஆன்மிகம் - இந்து சமயம்
      ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
      தானம் செய்வதால் வரும் பலன்கள்
      முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
      பிரதோஷம் எப்படி விஷேசமானது?
      விநாயகர் சில சுவையான தகவல்கள்
      சிவராத்திரி விஷேசமானது ஏன்?
      முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
      தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
      கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
      எப்படி வந்தது தீபாவளி?
      தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
      ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
      ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
      அனுமனுக்கு வடை மாலை ஏன்?
      திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
      விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
      கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
      சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
      முருகா என்றால் என்ன கிடைக்கும்?
      குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
      விபூதியின் தத்துவம்
      கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
      தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
      கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
      இறைவன் ஆடிய நடனங்கள்
      யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
      செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
      கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
      விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
      இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
      நவராத்திரி பூஜை ஏன்?
      வேள்விகளும் பலன்களும்
      காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
      பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
      அம்பலப்புழா பால் பாயாசம்
      துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
      சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
      ஈசன் உபதேசித்தத் தலங்கள்
      பரமபதம் விளையாட்டு ஏன்?
      வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
      பதின்மூன்று வகை சாபங்கள்
      இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
      சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
      பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
      சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
      உணவு வழித் தோசங்கள்
      திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
      மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
      பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
      நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
      சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
      மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
      இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
      பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
      கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
      அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
      தீர்க்க சுமங்கலி பவா


    தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                            


    இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
    Creative Commons License
    This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License