இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை


51.ஈழச் சிறுகதைகளில் வட்டார வழக்குச் சொற்கள் (சிறப்புப் பார்வை: மறுஜென்மம் சிறுகதை)

முனைவர்தி. நெடுஞ்செழியன்

தொடக்கம்

17ஆம்நூற்றாண்டில் ஐரோப்பியர் வருகையால் தமிழுக்குக் கிடைத்த ஒரு புதிய இலக்கிய வடிவம் சிறுகதை. தமிழில் வ.வே.சு ஐயர் எழுதிய குளத்தங்கரை அரசமரம் என்ற சிறுகதைதான் தமிழில் முதலில் தோன்றியதாகும். இன்றைக்குத் தமிழ்நாட்டில் சிறுகதையின் வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது என்றால் மிகையில்லை.

தமிழ்நாட்டு சிறுகதைப் படைப்புகளில் மிகையான கற்பனையும் எதார்த்தம் என்பது மிகவும் குறைவாகவே அமையப் பெற்றிருக்கின்ற நிலையை உணர முடிகின்றது. ஈழத்திலிருந்து வெளிவரும் எல்லாப் படைப்புகளிலும் உண்மைத்தன்மை மிகுதியாகவும் கற்பனை என்பது குறைவாகவும் அமைந்திருப்பது என்பது இயல்பான ஒன்றாக அமையக் காண்கிறோம்.

இந்த வேற்றுமைக்கான காரணிகளாக, தமிழ்ப் படைப்பாளர்களில் பெரும்பாலனோர் தமிழர்கள் இல்லை என்பதும், ஈழத்துப் படைப்பாளர்கள் தமிழர்கள் என்று பறைச்சாற்றிக் கொள்வதில் பெருமையடைபவர்கள் என்பதேயாகும்.

ஈழத்துச் சிறுகதைப் படைப்புகளில் எழில்நிலா (www.ezhilnila.com) இணையதளம் வெளியிட்டுள்ள - பிறைனா நாதன் எழுதிய மறுஜென்மம் என்ற சிறுகதை மட்டும் ஆய்வுப் பொருளாகக் கொள்ளப்பட்டுள்ளது.

இச்சிறுகதையின் வழியாக ஈழத்தில் வழங்கலாகும் வட்டார வழக்குச் சொற்கள் இங்கே பட்டியலிடப்படுகின்றன. மேலும், அவற்றுக்கான தமிழ்நாட்டு வழக்கிலுள்ள சொற்கள் பொருத்திக் காட்டப்பட்டுள்ளன.

ஈழத்தில் வழங்கிவரும் வட்டார வழக்குச் சொற்களை எதிர்காலத்தில் தமிழ்நாட்டு ஆய்வாளர்கள் எதிர்காலத்தில் ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொள்ள இந்த ஆய்வு ஒரு முன்னோடியாக அமைந்திருக்கும்.

மறுஜென்மம் கதைக்கரு

கயல் என்னும் ஓர் இளம்பெண்ணின் அவலத்தைச் சுட்டிக் காட்டுகின்றது. தந்தையை இழந்த கயல், தாயோடும் தாயின் மற்றொருமொரு கணவனோடும் (தந்தை என்ற பெயரளவில்) வாழ்ந்து வருகின்றாள். கயல் இயல்பு நிலையில் இல்லாமல் சோகம் நிறைந்த மனநிலையோடு உள்ளாள். தாய் சோகத்தின் காரணத்தை அறிய முற்படுகின்றாள். தந்தையாய் உள்ளவரும் அறிய முற்படுகின்றனர். யாருக்கும் கயல் தன் மனதைத் திறந்து பதில் சொல்லாது மௌனம் காத்து வருகின்றாள்.

அவளைச் சந்திக்க வரும் பள்ளித் தோழியர்கள் வற்புறுத்தி, சோகத்தின் காரணத்தை அறிந்து அதிர்ச்சி அடைகின்றனர். இந்நிலையில் கயல் தான் வாழ்ந்து வந்த யாழ்ப்பாணத்தை விட்டு வேறு எங்காவது சென்று விடவேண்டும் என்று எண்ணி பேருந்து நிலையம் வருகிறாள். அங்கே புறப்படும் நிலையில் உள்ள மன்னார் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்து கொள்கிறாள். கயலைத் தேடி தந்தை வருகிறார். தந்தையின் வேண்டுகோளை எற்க மறுத்து மன்னார் நோக்கி தன் பயணத்தைத் தொடர்கின்றாள். அப்பேருந்தில் கயல் சிறுமியாக இருந்த போது கோயில் செல்லும் வழக்கமுடையவளாக இருந்த நிலையில், கயலுக்கு இறை வேண்டுதலை நடத்திக் கொடுத்த ஐயர், கயலை அடையாளம் கண்டு, விசாரித்து அறிகிறார்.



திசையறியாது பயணம் செய்த கயலை அந்த ஐயர் தான் வாழ்ந்து வரும் மன்னார் பகுதியில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். பிள்ளைப்பேறில்லா ஐயரின் மனைவி கயலை வரவேற்று, உன்னை மகளாக நான் பாதுகாப்பேன் என்றுஉறுதி அளிக்கின்றாள். அடுத்தநாள் காலை கிணற்றில் கயல் பிணமாக மிதக்கின்றாள். கயலின் உடல் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றது. ஆய்வறிக்கையில், அவள் தாய்மை அடைந்துள்ள செய்தியோடு கதை முடிவடைகின்றது. கயலின் தாய்மைப் பேற்றிற்குக் காரணியாக இருந்தவர் தாயின் இரண்டாம் கணவர் என்பது உணர்த்தப்படுகின்றது.

இந்தச் சிறுகதையில், தாய்-மகள் உரையாடல், தந்தை-மகள் உரையாடல், கயல்-தோழியர் உரையாடல், கயல்-ஐயர் உரையாடல், கயல்-ஐயர் மனைவியின் உரையாடல் என எல்லா உரையாடல்களும் ஈழத்தமிழர்களின் வட்டார வழக்கில் அமையப் பெற்றுள்ளது. கதையின் உரைநடை என்பது பொதுவாக தமிழ்நாட்டு நடையோடு பொருந்தி வருகின்றது.

இந்த உரையாடல்கள் வழி வெளிப்படுத்தப்பட்டுள்ள ஈழத்தமிழர்களின் வட்டார வழக்குச் சொற்கள் இனம் காணப்பட்டு அவற்றிற்கு இணையான தமிழ்நாட்டுச் சொற்கள் பொருத்திக் காட்டப்படுகின்றன. ஈழ வட்டார வழக்குச் சொல் அல்லது தொடர்களை அடுத்து சாய்வுநிலையில் உள்ள எழுத்துகள் தமிழ்நாட்டுச் சொற்கள்ஆகும்.

கதை உரையாடலும் - ஈழ வட்டார வழக்குச் சொற்களும்

அம்மாவின் காலடியில் படுத்திருந்தாள் கயல். பொழுது விடிந்ததும், நித்திரையால் எழுந்த தாய்

 &   &  நித்திரை என்பது உறக்கம், தூக்கம், கவிதை நடை துயில்

“என்ன கயல், இண்டைக்குமா?, நித்திரையில நடக்கிற உன்ர வியாதி எப்பதான் உன்னவிட்டுப் போகப் போதோ தெரியல. சரி எழும்பு, ஸ்கூலுக்கு ரைம் ஆச்சு, போய் குளிச்சிட்டு வா”

 &   &  இண்டைக்குமா - இன்றைக்குமா, உன்ர . உன்னுடைய, வியாதி - நோய், எப்பத்தான் - எப்போதுதான், எழும்பு - எழுந்திரி, ஸ்கூலுக்கு - பள்ளிக்கு, ரைம் ஆச்சு - டைம் (நேரம்) ஆகிவிட்டது.

“எப்பிடிமா நான் இங்க வந்தன்?”

 &   &  எப்படி அம்மா நான் இங்கே வந்தேன்

“உன்ர றிப் போட்டும் நேற்றுப் பாத்தன், எல்லாத்துக்கும் சரியான குறைவு, இதுவரைக்கும் நீ இப்பிடி மார்க்ஸ் எடுத்ததில்லயே."

 &   &  உன்னோட ரிப்போட்டைநேற்றுப் பார்த்தேன். எல்லாவற்றிலும் மதிப்பெண் குறைவு (சரியான குறைவு தமிழ்நாட்டு வழக்கு அல்ல) நீ இப்படி மார்க் எடுத்ததில்லையே.



"உன்ர ரீச்சர நேற்றுக் கண்டன், அவ என்னட்ட கேக்கிறா, வீட்ட ஏதாவது பிரச்சினயா எண்டு, நான் அப்பிடியெல்லாம் இல்ல, ஏன் அப்பிடி கேக்கிறீங்க என்டதுக்கு, கயல் இப்ப முந்தின மாறி இல்ல, படிப்பில சரியான வீக்கா போனா, கிளாஸ்ல படிப்பிக்கிறதக் கூட சரியாக் கவனிக்கிறேல, எதையோ யோசிச்சிக் கொண்டே இருப்பா. அதுதான் நான் அப்பிடிக் கேட்டன், என்டா, நான் ஒருமாரிச் சமாளிச்சிட்டு வந்திட்டன்”

 &   &  உன்னுடைய டீச்சரை... கண்டேன். அவர் என்னிடம் கேட்கிறார் (தமிழ்நாட்டு வழக்கில் மரியாதையுள்ளது) எண்டு - என்று,

அப்படியெல்லாம்இல்லை, ஏன் அப்படி கேட்கின்றீங்க என்றதுக்கு,

கயல் இப்போது முன்பு இருந்தது போல் இல்லை, படிப்பில் ரொம்ப வீக்காகாகியுள்ளார். கிளாஸ்ல படிக்கின்றதைக் கூட சரியாகக் கவனிக்கிறது இல்லை, ... அப்படி கேட்டேன் என்றால் ... ஒருமாதிரி சமாளித்து விடுவாள். “இப்ப எல்லாத்தயும் யோசிச்சுப் பாத்தா உனக்கு ஏதோ பிரச்சின இருக்கு, சொல்லு கயல், என்ன என்டாலும் பறவாயில்ல, உன்ட அப்பா பாத்துக்குவார், உனக்குத்தான்அவரப் பற்றித் தெரியுமே, உனக்கு ஒன்டென்டா அவர் தாங்க மாட்டார். அவருக்கு என்டு இந்த ஊரில நல்ல மரியாத இருக்கு, அவற்ற மரியாதய கெடுக்கிற மாதிரி ஏதும் நீ செய்திடாத”

 &   &  எல்லாத்தையும் யோசித்து பார்க்கும் போது ... என்னவென்றாலும் பரவாயில்லை, உன்னோட ... உனக்கு ஒன்று என்றால் .... அவருக்கு என்று ... அவரோட மரியாதையைக் கெடுக்கிற...

“என்ன பிரச்சின என்டாலும் மனசு விட்டுச் சொல்லு”அம்மா நீளமாய் அறிவுரை சொல்ல,

 &   &  என்டாலும் - என்றாலும், நீளமாய்அறிவுரைசொல்ல - அதிக அளவு அறிவுரை சொல்ல

“ஐயோ அம்மா, நீங்க நினைக்கிற மாதிரி எனக்கு ஒரு பிரச்சினயும் இல்ல, சும்மா மனசப் போட்டு குழப்பிக்காதேங்கோ. எனக்கு ஏதும் பிரச்சின என்டா உங்ககிட்ட சொல்லாம வேற யாருகிட்ட சொல்லப் போறன், நீங்கதான் என்ர செல்ல அம்மா ஆச்சே. என்ன எனக்கு இப்ப படிக்கிறதில கொஞ்சம் பஞ்சி பிடிச்சிட்டு, எனி நல்லாப் படிக்கிறன் அம்மா”

... குழப்பிக்காதிங்க ... என்டா - என்றால் ... என்ர - என்னோட, கொஞ்சம் பஞ்சி பிடிச்சிட்டு - கவனக்குறைவு ஏற்பட்டு, இனி நல்லாப் படிப்பேன்...

“நீங்க கவலப்படாதேங்கோ. எப்பவும் உங்கட மரியாதய கெடுக்கிற மாதிரி இந்தக்கயல் நடந்துக்கவே மாட்டா, போதுமா?” “சரி அத விடுங்கோ. நீங்க போய் கயல்குட்டிக்கு சாப்பாடு செய்வீங்களாம், நான் போய் குளிச்சிட்டு வருவனாம்.”

 &   &  கவலப்படாதேங்கோ - கவலைபடாதீங்க, உங்கட - உங்களோட, குளிச்சிட்டு வருவனாம் - குளித்து வருகிறேன்.

அன்று ஞாயிற்றுக்கிழமை, பாடசாலை விடுமுறையென்பதால்

 &   &  பாடசாலை - பள்ளிக்கூடம்

“கயல், நீ ஏன்டீ எப்ப பாத்தாலும் மூஞ்சய தொங்கப்போட்டுக் கொண்டே இருக்கா, உனக்கு என்ன குறை சொல்லு பாப்பம், இப்பிடி ஒரு வசதியான வாழ்க்கையும், பாசமான நல்ல அப்பா, அம்மாவும் கிடைக்க நீ குடுத்து வச்சிருக்கனும். லைவ்வ சும்மா என்ஜோய் பண்ணுவியா, அத விட்டிட்டு எப்ப பாத்தாலும்”

 &   &  மூஞ்சய - மூஞ்சிய (முகத்தை), சொல்லுபாப்பம் - சொல்லு பார்க்கிறோம், இப்பிடி - இப்படி, லைவ்வ - லைப்பை (வாழ்க்கையை), என்ஜோய் - என்ஜாய் (மகிழ்ச்சி), விட்டிட்டு - விட்டுவிட்டு

“கயலுக்கு என்ன நடந்திச்சு, நானும் இப்ப கொஞ்ச நாளாப் பாக்கிறன், அவளின்ட போக்கில நிறைய வித்தியாசமிருக்கு”

 &   &  அவளின்ட போக்கில - அவளின் போக்கில்

“என்ன வித்தியாசத்த நீ அவளிட்ட கண்டுபிடிச்சனீ? சும்மா போ, அவள் முந்தி தொடக்கமே இப்பிடித்தானே, அவளுக்கு உந்த பணக்கார வாழ்க்க பிடிக்கல, சாதாரண வாழ்க்கயதான் விரும்பிறாள், அத எத்தினயோ தடவ நம்மகிட்டயும் சொல்லி இருக்காள், எனக்கென்டா அவள் அதால தான் எப்பவும் கவலையாவே இருக்காள் என்டு தோணுது, நீ சும்மா எல்லாம் கற்பன பண்ணாத”

 &   &  கண்டுபிடிச்சனீ - கண்டுபிடித்தாய்நீ, முந்தி தொடக்கமே - முன்பே, இப்பிடித்தானே - இப்படித்தானே, அவளுக்குஉந்த - அவளுக்கு இந்த (உந்த - ஈழத்தில் சுட்டுச்சொல்), வாழ்க்கயத்தான் - வாழ்க்கையைத்தான், எத்தினயோ - எத்தனையோ, எனக்கென்டா - எனக்குஎன்னவென்றால், என்டு - என்று.

“சரி நீ சொல்லிறதாவே வச்சுக்குவோம், உங்கள் எல்லாருக்கும் தெரியும் கயல்தான் நம்மட கிளாஸ்லயே ஒவ்வொரு ரேமும் முதலாம் பிள்ளயா வாறவள், ஆனா கடசிரேம் அவள்தான் கடசி பிள்ள, இதுக்கு சான்சே இல்ல, அவளுக்கு ஏதோ ஒருபிரச்சினையிருக்கு என்டது இதிலயே புரியல”.

 &   &  ரேமும் - நேரமும், முதலாம் பிள்ளையா - முதல்தர மாணவியாக, கடசி ரேம் . கடைசியான நேரத்தில், கடசி பிள்ள - கடைசி பிள்ளை (மாணவி).



“ம்... ம்... நீ சொல்லிறதும் சரிதான்” என்று ஆமோதித்தனர்.

 &   &  சொல்லிறதும் - சொல்லறதும்

இவ்வாறு கதைத்துக் கொண்டிருக்கும் தருணத்தில் அங்கு வந்த கயல், ... ஒரே தலயிடியாஇருந்திச்சு, அதுதான் போய் முகம் கழுவீற்று வந்தனான்.

 &   &  கதைத்து - பேசுதல், தருணத்தில் - நேரத்தில், தலையிடியா - தலைவலியாய், கழுவீற்று - கழுவிக்கொண்டு.

ஒரு பிரச்சினயும் இல்ல என்டு மட்டும் பொய் சொல்லாத, உன்ர முகம்தான் றொம்ப நல்லாக் காட்டிக் கொடுக்குதே. ஒன்டு மட்டும் புரிஞ்சுக்கோ, சந்தோசத்தயும் கவலையையும் பகிர்றதுதான் உண்மையான ப்ரண்ட்சிப். இதுக்கு மேலயும் நாம உன்னக் கட்டாயப்படுத்த விரும்பல, விரும்பினா சொல்லு. ஆனா யாரிட்டயாச்சும் மனசுவிட்டு கதடீ, அப்பதான் உனக்கும் ஒரு ஆறதலா இருக்கும்”

 &   &  என்டு - இன்று, உன்ர - உன்னுடைய, றொம்ப - ரொம்ப, ஒன்டு - ஒன்று, யாரிட்டயாச்சும் - யாரிடமாவது, கதடீ - சொல்லுடி, ஆறதலா - ஆறுதலாய்.

என்ர மனசிலயே வச்சிக்கிட்டு, ஒவ்வொருநாளும் செத்திக்கிட்டு இருக்கன். நீங்க இவ்வளவு தூரம் கேக்கிறதால சொல்லிறன், யாருக்கிட்டயும் சொல்ல மாட்டன் என்டு எனக்கு சத்தியம் பண்ணித்தரனும், ஓகேயா!"

 &   &  என்ர - என்னோட, இருக்கன் - இருக்கிறான், சொல்லிறன் - சொல்லிவிடுகிறேன், சொல்லமாட்டன் - சொல்லமாட்டேன், என்டு - என்று.

“இல்லக் கயல், சத்தியமா நாம யாருக்கிட்டயும் சொல்லமாட்டம், நீ தைரியமாச் சொல்லு கயல்”

 &   &  சொல்லமாட்டம் - சொல்லமாட்டேன்.


“கயல், நீஇவ்வளவு சோதனைக்குள்ள வாழிறாயா? நாம நினச்சுக்கூடப் பாக்கல.கடவுளே இப்பிடியும் இருக்கினமா மனுசர்? சிக், இப்பிடிப் பட்ட மனுசர நிக்கவச்சு சுடனும்.” என்றாள் அகிலா.

 &   &  வாழிறாயா - வாழ்கின்றாயா, பாக்கல - பார்க்கவில்லை, இருக்கினமாமனுசர் - இருக்கின்றன மனிதர், சிக் - சீ…, மனுசர - மனிதரை.

இதச் சொல்ல கஸ்ரமாத்தானிருக்கு, ஆனா உனக்கு வேற வழியில்ல கயல். யோச்சு முடிவெடு, ஏதும் உதவி வேணுமென்டாசொல்லு. நாங்க உன்கூட எப்பவும் இருப்பம், கடவுள்கிட்ட உனக்காக ப்றே பண்ணிறம், நிச்சயம் நல்ல வழிகாட்டுவார். சரி கயல் நேரமாச்சு, நாங்க போட்டுவாறம்!"

 &   &  இதச்-இதைச், கஸ்ரமாத்தானிருக்கு - கஷ்டமாத்தான் இருக்குது, வேணுமென்டா - வேண்டுமென்றால், இருப்பம் - இருப்போம், ப்றே - ப்ரே (இறைஞ்சுதல்), போட்டுவாறம் - போயிட்டு வருகிறோம்.

போ, போய் படு செல்லம், காலம ஸ்கூல் போகனும் எல்லா”

 &   &  காலம - காலையில், போகனும் எல்லா - போகனும் இல்லையா.

முடியாத கட்டத்தில் பொலிஸிடம் சென்று முறையிட்டனர்,

 &   &  பொலிஸிடம் - போலீஸ்ஸிடம் (காவல்நிலையம்)

“ஐயோ அப்பா என்ன விட்டிடுங்கோ, நான் வரமாட்டன், என்ன வாழவும் விடிறீங்க இல்ல, சாகவாச்சும் விடிங்களன், யாராவது என்ன காப்பாத்துங்களன், ப்ளீஸ் இந்த ஆளிட்ட இருந்து என்ன காப்பாத்துங்கோ”

 &   &  விட்டிடுங்கோ - விட்டுவிடுங்கள், வரமாட்டன் - வரமாட்டேன், விடிறீங்கஇல்ல - வாழவும் விடுவதும் இல்லை, சாகவாச்சம் விடிங்களன் - சாகவாவது விடுங்கள், காப்பாத்துங்கள் - காப்பாற்றுங்கள்,

“இது தேப்பனுக்கும் மேளுக்கும் இடயில நடக்கிற பிரச்சின, இதில நீங்க யாரும் தலயிட வேண்டாம்” என்றார் தகப்பனுடன் வந்த ஒருவர்.

 &   &  தேப்பனுக்கும் - அப்பனுக்கும் (தந்தை), மேளுக்கும் - மகளுக்கும்.

கயல் “யாரு இவரா என்ர அப்பா, அப்பா என்ற வார்த்தய கேவலப்படுத்தாத. என்ர அப்பா எப்பயோ செத்திட்டார்.”

 &   &  என்ர - என்னோட, வார்த்தய - வார்த்தையை,

“மேள், மேள்.. நான் இதில உட்காரலாமா? மன்னிச்சிருபுள்ள, உன்ரநித்திரயக் குழப்பீற்றனாக்கும். நான் இதில உட்காரலாமா மேள்?”

 &   &  மேள் - மகள், புள்ள - மகளே, உன்ர - உன்னோட, நித்திரயக் - உறக்கத்தை, குழப்பீற்றனாக்கும் - குழப்புகின்றேனா.

அருகில் இருந்தவரை ஒருக்கா திரும்பிப் பாத்தவள், ‘ஐயோ இவர எங்கயோ பாத்தமாறியிருக்கே. யாரா இருக்கும், முகத்தப் பாத்தா ஏதோ கன நாள் பழகினமாறி இருக்கு, ஹ்ம், ஆனா யாரென்டுதான் தெரியல, சரி யாராவும் இருந்திட்டு போகட்டும், என்ன யாருனு கண்டுபிடிக்காட்டிச் சரி’

 &   &  ஒருக்கா - ஒருமுறை, பாத்த மாறியிருக்கே - பார்த்த மாதிரி இருக்கே, கனநாள் - நீண்ட நாள், யாரென்டுதான் - யார்என்றுதான்,

கயல்! 'ஐயோ கடவுளே! இந்த ஆள்என்ன என்ர பெயரையே சொல்லுறார்,

 &   &  என்ர - என்னோட, சொல்லுறார் - சொல்லுகிறார்.

ஆ, ஒரு ஐடியா, பேசாம ‘யாரு கயல்?, நீங்க வேற யாரோ என்டு நினச்சு என்கிட்ட பேசிக் கொண்டிருக்கிறியள் போல என்டு சொல்லிப் பாப்பம்'

 &   &  என்டு - என்று, பேசிக் கொண்டிருக்றியள் போல - பேசிக் கொண்டிருக்கிறார் போல, சொல்லி பாப்பம் - சொல்லிப் பார்ப்போம்.

இப்ப ஒரு ஏழு வருசத்திற்கு முன்னம் நான் அந்தக் கோயில்ல குருக்களா இருந்தன்,

 &   &  முன்னம் - முன்பு, இருந்தன் - இருந்தேன்.

அது விசியமா நான் உன்ரஅப்பாகிட்ட கதச்சன், அது பெரிய பிரச்சினயாப் போய், நான் ஊர விட்டிட்டே வந்துட்டன்."

 &   &  உன்ர - உன்னோட, கதச்சன் - பேசினேன்.

"இப்ப நானும் என்ர மனுசியுமா மன்னாரிலதான் இருக்கம். என்ன மன்னிச்சிருமா, உன‌க்கு என்னால உதவி செய்யேலாமப் போச்சு. ஆ, இப்ப ஞாபகம் வந்திச்சோ இல்லயோ."  &   &  என்ர - என்னோட, மனுசியுமா - மனைவியுமா, இருக்கம் - இருக்கிறோம், செய்யேலாமப் போச்சு - செய்யமுடியாது போய்விட்டது, இல்லயோ - இல்லையோ.

“நீ கவலப்படாத புள்ள, நீ நல்ல முடிவுதான் எடுத்திருக்கிறா, உன‌க்கு எந்தப் பயமும் வேணாம், நீஎந்த நம்பிக்கையில வெளிக்கிட்டியோனு என‌க்கு தெரியல, ஆனா எனி உன‌க்குநானிருக்கன். “

 &   &  புள்ள - பிள்ளை, வெளிக்கிட்டியோனு - வெளியே கிளம்பினியோனு, எனி - இனி, நானிருக்கன் - நான் இருக்கிறேன்.

“என்ன உன்ர அப்பாவா நெனச்சுக்கோ. எனக்குக்கு புள்ள இல்லனு நான் எத்தனயோ தடவ கடவுள்கிட்ட அழுதிருக்கன், அவர்தான் உன்ன என்கிட்ட அனுப்பியிருக்காரு”

 &   &  உன்ர - உன்னோட, புள்ளஇல்லனு - குழந்தை இல்லைன்னு, அழுதிருக்கன் - அழுதிருக்கிறேன்,

“என்ர மனுசி உன்ன கண்டா றொம்ப சந்தோசப்படுவாள், நீ அவள அம்மானு கூப்பிடு, அந்த வார்த்தயக் கேக்கிறதுக்காகவே அவள் நிறய நாளா காத்திருக்காள்.”

 &   &  என்ர -என்னோட, மனுசி - மனைவி, றொம்ப - ரொம்ப, நிறய - வெகு (நீண்ட)

பிராமண குடும்பத்த சேந்தனீங்க, நான் உங்க கூட வந்திருந்தா உங்களப் பற்றி எல்லோரும் தப்பாக் கதைக்க மாட்டாங்களா?”

 &   &  சேந்தனீங்க -சேர்ந்த நீங்க, கதைக்க - பேச

யாரு என்ன கதச்சாலும் என‌க்குக் கவலையில்லை. நான், நீ, என்ர மனுசினு நாம‌ சந்தோசமா இருக்கலாம். சரி எழும்பு புள்ள, வீடு வருது, இறங்குவம்.”

 &   &  கதச்சாலும் - பேசினாலும், என்ர - என்னோட, மனுசி - மனைவி, எழும்பு - எழுந்திரி, இறங்குவம் - இறங்குவோம்.

எனி இவள்தான் நம்மட மகள். உன்ன அம்மா என்டு கூப்பிட ஒரு ஆள் வந்திட்டுது, உன‌க்கு சந்தோசம்தானே?"

 &   &  எனி - இனி, நம்மடமகள் - நம்முடையமகள், என்டு - என்று, வந்திட்டுது - வந்துவிட்டது.

கயல் "உங்கள மாறி நல்லவங்களயும் படச்சிட்டு, என்ர அப்பாவ மாறி ஒரு கொடூர மிருகத்தையும் கடவுள் படச்சிருக்கிறார். ஏன் அம்மா?"

 &   &  மாறி - மாதிரி, படச்சிட்டு - படைத்துவிட்டு, என்ர - என்னோட, மாறி - மாதிரி.


"நீ ஒன்னுக்கும் கவலப்படாத, எனி நீ நம்மட மேள். என்ன நடந்தது என்டு என‌க்கு தெரியா, ஆனா நான் அதக் கேக்கவும் விரும்பல, நீ எல்லாத்தயும் மறந்திட்டு புது வாழ்க்க வாழு"

 &   &  எனி - இனி, நம்மட மேள் - நம்முடைய மகள், என்டு - என்று, தெரியா- தெரியாது, வாழ்க்க - வாழ்க்கை.

மறக்கிற விசியமா என்ர வாழ்க்கைல நடந்திருக்கு" "சரி சரி, கயல் கனதூரம் பயணிச்சது களைப்பா இருக்கும், போய் கை, கால் அலம்பிற்று வா"

 &   &  விசியமா - விடயமா, கனதூரம் - ரொம்பதூரம், அலம்பிற்று - அலம்பி.

ஐயாவும் அம்மாவும் என்னை மன்னிச்சிடுங்கோ, எனக்கு இத விட வேற வழி தெரியல. அடுத்த ஜென்மத்திலயாவது நான் உங்கட மகளாப் பிறக்க வேணும்."

 &   &  மன்னிச்சிடுங்கோ - மன்னித்துவிடுங்கள், உங்கட - உங்களின்,

பிரேத பரிசோதனையில் அவள் கற்பமாக இருந்தது தெரிய வந்தது!

 &   &  கற்பமாக - கர்ப்பமாக.

தொகுப்புரை

தமிழ்நாட்டில் வழங்கும் வட்டார வழக்குச் சொற்களுக்கும், ஈழத்தில் வழங்கப்பட்டு வரும் வழக்குச் சொற்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதை அறிய முடிந்தது.

எதிர்காலத்தில் ஈழத்தமிழர்களின் வட்டார வழக்குச் சொற்களை ஆய்வுகளின் வழியாகத் தொகுப்பதன் மூலம் ஈழத்தமிழர்களின் பண்பாட்டை அறிய வழிகோலும் என்பதில் ஐயமில்லை.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s2/p51.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License