இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை


8. இதயவேந்தன் சிறுகதைகளில் கதைப் பின்னலில் உத்தி முறைகள்

முனைவர். இரா. சின்னத்தாய்

முன்னுரை

இலக்கியப் படைப்பின் நோக்கங்களில் முக்கியமானது கருத்துப் புலப்பாடாகும். இக்கருத்துப் புலப்பாட்டிற்கு இன்றியமையாதது உத்தியாகும். “கருத்து சுவைபடக் கூறப்படும் முறையினால் தான் வாசகன் அதனைத் தெளிவாகவும், ஆழ்ந்தும் உணர முடியும். ஒரு கருத்தைச் சுவைபடக் கூற வேண்டுமாயின் தகுந்த உத்தியைப் பயன்படுத்த வேண்டும்” (1) என்று கூறும் ம. திருமலையின் கருத்து எல்லாப் படைப்புகளுக்கும் பொருந்தும். எனவே உத்தி முறை ஆசிரியருக்கு ஆசிரியர் வேறுபடுவதற்குக் காரணம், அவர்கள் கையாளும் உத்தி முறையே ஆகும்.

ஒரு படைப்பாளன் உருவமும் உள்ளடக்கமும் எடுத்தாளும் திறமையால் தனித்து நிற்கிறான். இவ்வாறு எடுத்தாளும் முறைதான் உத்தி எனப்படுகிறது. மா. இராமலிங்கம் இது பற்றிக் கூறும் போது, “புனைகதை, நாடக ஆய்வில், நுவல் பொருள் (Subject), பாடுபொருள் (Theme) ஆகிய இரண்டையும் அறிதல் முதன்மையானது. நுவல் பொருளாவது பேசப்படும் பொருள், பாடுபொருளாவது அப்பொருள் பற்றிப் படைப்பாளன் கூறும் தனிநோக்குச் சிந்தனை” (2) என்பார். இங்கே படைப்பாளன் கூறும் தனிநோக்குச் சிந்தனையை உத்தி என்று கொள்ளலாம்.

இதயவேந்தன் விழுப்புரத்தில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் நூற்றி நான்கு சிறுகதைகளைப் படைத்துள்ளார். இவருடைய படைப்பில் உள்ளடக்கத்தில் இடம் பெறும் கதைப் பின்னலில் சில உத்தி முறைகளைப் பற்றி இக்கட்டுரை ஆராயும்.

கதைப்பின்னலில் உத்தி

“கற்போர் மனத்தில் தான் பதிக்க விரும்பும் உணர்வைத் தோற்றுவிக்கும் வகையில் கதை நிகழ்ச்சிகளை முறை மாற்றிக் கலைஞன் அமைத்தபின் முழுவடிவம் பெற்று விட்ட சிறுகதையில் நிகழ்ச்சிகள் கூறப்பட்டுள்ள நிரல் முறையே கதைப் பின்னலாகும்” (3) ஆகக் கதைப்பின்னல் என்பது ஆசிரியர் கதையில் உள்ள நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்திக் கோர்வையாக்கி, கற்பவர்கள் தெளிவாகப் புரியும்படி அமைக்கும் முயற்சியாகும். இம்முயற்சியின் அடிப்படையில் படைப்பாளி இதய வேந்தனும் கீழ்க்காணும் உத்திகளில் கதைப் பின்னலை அமைத்துள்ளார். அவை;

1. பின்னோக்கு உத்தி

2. கடித உத்தி

3. உரையாடல் உத்தி

4. கதைப் பின்னலில் நிகழ்ச்சிகள்

என்பவையாகும்.



பின்னோக்கு உத்தி

“ஒரு கதையைச் சொல்லிக் கொண்டே போகிற போது, கடந்த கால நிகழ்ச்சிகளை ஒரு பாத்திரத்தின் நினைவோட்டமாக எழுத்தாளர்கள் எடுத்துக் கூறுவர். இதனையே பின்னோக்கு உத்தி அல்லது நினைவுக்காட்சி” (4) என்று திறனாய்வாளர் குறிப்பிடுவர்.

“கதையோடு தொடர்புடைய நிகழ்ச்சியை, ஏற்புடைய இடத்தில் வெளிக்கொணரவும் பாத்திரத்தின் மன உணர்வை வெளிப்படுத்தவும் இப்பின்னோக்கு உத்தி துணை நிற்கிறது” (5) என்பார் மா. இராமலிங்கம். கதையோட்டத்திற்கு ஏற்றவாறு கடந்த காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னோக்கிக் கூறி நிகழ்கால நிகழ்ச்சிக்குத் துணை நிற்கும் நோக்கில் படைப்பாளி கையாளும் உத்தியே பின்னோக்கு உத்தியாகும்.

‘பசி’ கதையின் தொடக்க வரிகள் அலுலவகத்திலிருந்து வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. அந்தக் கோப்புகளை எடு, இந்தக் கோப்புகளை எழுது என்று போட்டு நச்சரித்து விடுகிறார்கள் அதிகாரிகள். வேலை நேரத்தில் ஒன்றும் வேலை செய்யாமல் ‘ஓய்வூதியம்’ போல் பெற்றுச் செல்லும் எழுத்தர்களும் இருக்கிறார்கள்” (6) என்று அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியை வீட்டிற்கு வந்ததும் எண்ணிப் பார்க்கும் செயலைப் பின்னோக்கு உத்தி என்று கூறலாம்.

மேலும், அக்கதையின் இடையே ஒரு நாள் அவருக்கும் அவரின் மனைவிக்கும் சண்டை நிகழ்ந்தது. அப்போது அவர் ஐந்து வேளை தொடர் பட்டினியாய் கிடந்ததை அவரால் மறக்க முடியவில்லை. அவ்வேளையில் இளமைக் காலத்தில் தாயின் அரவணைப்பை நினைத்துப் பின்னோக்குச் சிந்தனையில் ஆழ்கிறார் ஆசிரியர்.

“இட்லி தோசை இரவு மீந்தது கொடுத்தால் அப்படியே மடியில் சுருட்டி வந்து எனக்குத் தருவாள். தங்கையும் விடாமல் பங்கு கேட்பாள். அடிச்சீ அவன் தான் பசிதாங்க மாட்டான்னு தெரியும்லடீ. அம்மாவுக்கு என்னையும் என் பசியையும் நன்றாகத் தெரியும். தங்கையை நெட்டித் தள்ளுவாள். அம்மாவை நினைத்த படியே தூங்கி விட்டிருந்தேன்” (7) இக்கதை நிகழ்காலத்தில் தொடங்கி பின்னோக்கு உத்தியுடன் முடிகிறது.



கடித உத்தி

கடிதங்கள் மூலமாகக் கதை கூறுவது சிறுகதைகளில் ஓர் உத்தியாகும். “நீண்ட கால இடைவெளியில் நடக்கும் கதையைச் சொல்லவே இது ஏற்றதெனினும், சிறிது நடந்து முடியும் சிறுகதைகளும் ஒரேவழி இவ்வுத்தியில் எழுதப்படுவதுண்டு” (8) என்று வேலஸ் ஹில்டிக் குறிப்பிடுகின்றார்.

“தமிழ் நாவல்களில் கடித உத்தி, கதை வளர்ச்சிக்காகவும் கதை மாந்தர்களின் பண்பு நலன்களைத் தெரிந்து கொள்ளவும் கதை நிகழ்ச்சிகளால் உருவாகின்ற சிக்கல்களைத் தீர்க்கவும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது” (9) என்பது இ. முத்தையாவின் கருத்தாகும். எனவே கதையாசிரியர்கள் கதை கூறுவதற்கு கடித வடிவத்தை ஓர் உத்தியாக மேற்கொள்கின்றனர்.

இதய வேந்தனின் ‘சிநேகிதன்’ என்னும் கதை நண்பனுக்கு எழுதும் கடிதமுறையின் கடித வடிவத்தை ஓர் உத்தியாக மேற்கொள்கின்றார்.

“என்னிலிருந்து காணாமல் போன என் அன்பு சிநேகிதன் அன்பானந்தனுக்கு என்று கடிதத்தைத் தொடங்கி,

வாழ்வின் கடைசி அத்தியாயத்திற்குள் என்றேனும் ஒரு நாள் நாம் சந்திக்காமலா போய் விடுவோம். முடிந்தால் எல்லாவற்றையும் பேசுவோம். இப்போதைக்கு இவ்வளவுதான். இன்னும் எழுதுவேன். அன்பானந்தனுக்கு மாறாத அன்புடன் அன்பு சிநேகிதன்” (10) என்று கடிதத்தில் முடிக்கிறார். எனவே இக்கதை கடித உத்தியுடன் அமைந்துள்ளது.

உரையாடல் உத்தி

சிறுகதைகளில் இடையிடையே இடம் பெறும் உரையாடல்கள் கதையை வாசகர்கள் எளிதாகப் புரிந்து கொள்வதற்கும், பாத்திரங்களின் பண்பு நலன்களைக் குறிப்பாகத் தெரிந்து கொள்வதற்கும் துணை நிற்கின்றன. பெரும்பாலும் உரையாடலின்றி சிறுகதைகளோ நாவல்களோ அமைவதில்லை. “சிறுகதைகளில் உரையாடல் மிகுந்திருந்தலும் உண்டு. குறைந்து அமைதலும் உண்டு. கதை மாந்தரின் பண்பை விளக்குவதற்கோ, கதை நிகழ்ச்சியைப் புலப்படுத்துவதற்கோ ஏற்ற அளவிற்கு உரையாடல் அமையலாம். அது எழுதுவோரின் திறனைப் பொறுத்ததே ஆகும்” (11)

‘இல்லை’ என்னும் கதையில் கப்பூர் கிராம மக்களைச் சந்திக்க அதிகாரி செல்கிறார். அங்கு மக்களைச் சந்திக்க அதிகாரி செல்கிறார். அங்கு அக்கிராம மக்களிடம் மனுவை வாங்கிப் படித்து விட்டுப் பல கேள்விகளைக் கேட்கிறார். அப்போது மக்களிடம்,

“தண்ணி இல்லியா! ஆமாங்க; சேரில குடிக்க தண்ணீ பைப்பு இல்ல பொதுக் குழாயே இல்லியா ம்க்கும் அவன் தலைவர் பக்கம் திரும்பினான் நான் பல முறை எழுதிக் குடுத்திருக்கேன் சார் ... ... ... ... ... ... ... ... ... ஏரி கொள மாகிலும் இல்லைங்க... ... ... ... ... ... ... ... ... ... ... ... ரேசன் அட்டை இல்லியா?

‘இல்ல, இல்லன்னு சொல்றீங்களே, என்னதான் இருக்குது இந்த ஊர்ல, இல்ல, இல் லன்னு சொல்றதுக்கு உயிரோட நாங்கதான் இருக்கம் சாமி” (12)

என்ற உரையாடலில், அடிப்படை வசதிகள் இல்லாத ஒரு கிராமத்தைக் கண்முன் நிறுத்துகிறது. அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்பதால் இக்கதைக்கு ‘இல்லை’ என்னும் பெயர் மிகவும் பொருத்தமாக உள்ளது.



கதைப் பின்னலில் நிகழ்ச்சிகள்

கதைப் பின்னலில் நிகழ்ச்சிகள் என்பது ஒரு நிகழ்ச்சி அல்லது நிகழ்ச்சிகள் பலவற்றைச் செறிவுடனும் சுவையுடனும் திறம்பட அமைப்பதாகும். “ஒரு நிகழ்ச்சி, ஒரு காட்சி, வாழ்வின் ஓரியல்பு, மக்கட் பண்புகளில் ஒன்று, சுவைகளில் ஒன்று ஆகிய இவற்றில் யாதேனும் ஒன்றினை ஒட்டிச் சிறுகதை புனையப் பெறும்.” (13) எனவே சிறுகதைகள் ஒரே ஒரு நிகழ்ச்சி மட்டும் இடம் பெற்றால் அக்கதைகளை ஒரு நிகழ்ச்சி கதைகள் என்று கூறலாம்.

இதயவேந்தன் எழுதிய ‘அதிர்ச்சி’ கதை குஜராத்தின் புஜ் என்ற இடத்தில் நடந்த அதிர்ச்சி ஆசிரியருக்கு ஒரு கதைக்களத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளது.

‘குஜராத்துக்கு நிவாரண நிதி உதவி’ என்று அரசு ஊழியர் சங்கத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர் ஊதியத்திலிருந்து ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்த பொழுது சில மனிதர்கள் வாக்குவாதம் செய்தனர். அப்போது காசாளராகப் பணிபுரியும் ஆசிரியர் அந்நிகழ்ச்சியை எண்ணிப் பார்க்கிறார்.

“உடனுக்குடன் எல்லாமும் சாட்சியாய், செய்தியாய் வந்து என் கண்முன்னே நிற்கிறது. எல்லாம் மவுனமாய் இருக்க முடியவில்லை. உள்ளுக்குள் நீர் வீழ்ச்சியைப் போல் பேரிரைச்சலோடு ஓவென அழுகிய சத்தம் கேட்கிறது.” (14) ஆனால் சம்பளத்தில் பணம் பிடித்ததைக் கவுரவக் குறைச்சலாக நினைக்கிற சில மனிதர்களுக்குப் பின்னால் வீடு, வாசல், நிலம்... எல்லாம் இருக்கிறது. எதுவுமே இல்லாமல் நிர்க்கதியாய் நிற்கும் அவர்களைப் பற்றி ஒரு நிமிடம் நின்று யோசிக்கவோ, மௌன அஞ்சலி செலுத்தவோ தயாரில்லாத சூழலில் மனம் குமைந்தது என்று புஜ் நகரம் பூகம்பநிதிக்கு அரசு ஊழியர் ஒரு நாள் ஊதியம் தர வாக்குவாதம் செய்த நிகழ்ச்சியைக் கதையாக்கியுள்ளார்.

முடிவுரை

இவ்வாறு இதயவேந்தன் தன் சிறுகதைகளில் மனித வாழ்வின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளக் கூடிய நிகழ்ச்சிகளாக, மேற்கூறப்பட்ட உத்திகளின் வாயிலாகப் பதிவு செய்கிறார்.

அடிக்குறிப்புகள்

1. மா. திருமலை, தமிழ் மலையாள நாவல் ஒப்பாய்வு. ப. 50.

2. மா. இராமலிங்கம், நோக்குநிலை, ப. 150.

3. மீனாட்சி முருகரத்தினம், கல்கியின் சிறுகதைக் கலை, ப.54.

4. மா. இராமலிங்கம். நாவல் இலக்கியம், ப. 152.

5. மேலது.

6. விழி. பா. இதயவேந்தன், பசி, ப.117.

7. மேலது, பக்.122, 126.

8. க. மீனாகுமாரி, பிச்ச மூர்த்தி படைப்புகள் ஓர் ஆய்வு, ப. 68.

9. இ. முத்தையா, தமிழ் நாவல்களில் மொழிப்பயன்பாடு, ப.6.

10. விழி. பா. இதயவேந்தன், சிநேகிதன், பக்.17, 26.

11. டாக்டர். மு. வரதராசன். இலக்கியமரபு, ப. 167.

12. விழி. பா. இதயவேந்தன், இல்லை, பக். 50-52.

13. தா. ஏ. ஞானமூர்த்தி. இலக்கியத் திறனாய்வியல், ப.331.

14. விழி. பா. இதயவேந்தன், அதிர்ச்சி, ப. 54.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s2/p8.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License