Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            ISSN  2454-1990
muthukamalam muthukamalam
உங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.

முத்து: 13 கமலம்: 2
உள்ளடக்கம்

சமையல்

Alexa Rank


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

12. சங்ககால மக்களின் பொருளாதார வாழ்வியல்


ப. இராஜேஷ்
உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை,
கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), திருச்செங்கோடு.

முன்னுரை

காலந்தோறும் தோன்றி வளரும் இலக்கியச் செல்வங்கள் தமிழில் மிகுதியாகக் குவிந்து கிடந்தாலும். எக்காலத்தவரையும் தம்பால் ஈர்த்துத் தம்முள் மூழ்கச் செய்கின்ற திறன் சங்க நூல்களுக்கு மட்டும் உண்டு. பா நயத்தாலும், அணி நய அழகாலும், கற்பனைத் திறத்தாலும் காலத்திற்கேற்ற கருத்துக்களைக் காலச்சூழ்நிலையிலிருந்து மாறுபடாமல் இயற்கையோடு இயைந்து இனிதாக எடுத்தியம்பும் பான்மையால் சங்க இலக்கியங்கள் மேற்கூறிய சிறப்பினைப் பெற்றுள்ளன.

சங்க இலக்கியங்கள் அறத்தின் வழி நடக்கச் செய்தும் அவ்வாறான நன்னெறியின் வழி பொருளீட்டுதலையும், ஈட்டிய பொருளைக் கொண்டு இன்பத்தைத் துய்த்தலையும் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இவ்விலக்கியங்கள் எடுத்துரைக்கின்ற பொருளாதாரம் சார்ந்த சிந்தனைகளை இன்றைய நிலையில் வெளிக்கொணரத் தேவை ஏற்படுகின்றன.

பொருளாதாரம் பற்றிய பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே அறிஞர்கள் சிந்தித்துப் பல கருத்துக்களைக் கூறியுள்ளனர். வள்ளுவர் திருக்குறளில் ‘பொருட்பால்’ எனும் பகுதியில் பொருளாதாரக் கருத்துக்களை விளக்கியுள்ளார். அரிஸ்டாட்டில், பிளாட்டோ முதலிய கிரேக்கச் சிந்தனையாளர்களும் பொருளாதாரக் கருத்துக்களை விளக்கியுள்ளனர். குடும்ப நிர்வாகம், நாட்டு நிர்வாகம் மட்டுமின்றி மனிதனின் அன்றாடப் பொருளாதார வாழ்நிலைச் செயல்களை விளக்கும் ஓர் இயலாக இருபதாம் நூற்றாண்டில் பொருளாதாரவியல் அமைகிறது.

பண்டைய தமிழர் வாழ்க்கை வெற்றியும் வளமும் அழகும் நிரம்பியது. அவர்களின் வாழ்விற்கும், மொழியும் நிலத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. தாம் வாழும் நிலத்தின் இயல்பிற்கு ஏற்றவாறு வாழ்க்கையும் அமையும் என்ற சிறந்த கொள்கையினை உடையவர்கள் பண்டையத் தமிழர்கள். அவர்களுடைய வாழ்வில் பெரும்பாலும் பண்டமாற்று முறையே நிலவி வந்தது. பண்டமாற்று முறையில் குறியெதிர்ப்பை என்ற முறையும் இருந்து வந்துள்ளது. குறிப்பிட்ட ஒரளவு பண்டத்தைக் கடனாகக் கொண்டு ஒரு காலத்திற்குப் பிறகு அதைத் திருப்பிக் கொடுப்பதே இம்முறையாகும். இதனை;

“கரும்பின் கடும்பசி தீர யாழநின்
நெடுங் குறியெதிர்ப்பை நல்கியோர்க்கும்” (புறம் 163 : 3-4)

எனும் வரிகளால் அறியலாம்.குறிஞ்சி நில வாழ்வியல்

நிலத் தோற்றத்தில் முதலில் உருவானது மலைப்பகுதியான குறிஞ்சி நிலமே. மலையோடு தொடர்புடைய குறிஞ்சி நிலம் மனித வாழ்க்கைக்கு ஏற்ற நிலமாக விளங்கியது. ஒரே இடத்தில் நீரும் நிழலும் தற்காப்புக் கருவிகளும், உணவுப் பொருட்களும் உள்ள நிலம் குறிஞ்சி நிலமேயாம். மனித வாழ்வு தோன்றிய முதல் இடம் என்ற பெருமையைக் குறிஞ்சி நிலம் பெறுகின்றது.

மலையும் குன்றுகளும் அவற்றைச் சார்ந்த பகுதிகளும் குறிஞ்சி நிலமாகும். ஊர்களைக் குறிஞ்சி, சிறுகுடி என்றும், மக்களைக் குறவர், சிலம்பன், கானவன், புனவன், வெற்பன் என்றும் அழைத்தனர்.

“மரல் நார் உடுக்கை மலையுறை குறவர்” (நற்.,64,4)

நிலத் தலைவன் வெற்பன் எனப்பட்டான்.

“கல் லக வெற்பன் சொல்லின் தேறி” (மேலது., 36 வரி : 4)

என்னும் வரியால் உணரப்பட்டது. பெண்கள் குறத்தி, கொடிச்சி (நற். 85) என்றும் அழைக்கப்பட்டனர். அவர்கள் வீரம் மிகுந்தவர்களாகத் திகழ்ந்தனர். “சூல் மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை” வாழ்ந்தனர்.

குறிஞ்சி நிலத்து விளை பொருள் தினை. இத்தினைப் புனத்தைக் காக்கக் குறவர்கள் பரண் அமைத்து அதன் மீது நின்று பறவை, விலங்குகளை விரட்டினர். மேலும் அகில் சந்தனம், வேங்கை, கோங்கு, தேக்கு, திமிசு, அசோகு, இற்றி, பலா, மூங்கில், நெல்லி, வாழை, கடம்பு, கருங்காலி, சுரபுன்னை போன்ற மரங்களும், திருந்திய மேடான நிலங்களில் ஐவன நெல்லும், வெண்மை நிற நெல்லும், அவரை, கடுகு, இஞ்சி, மஞ்சள், பருத்தி, மிளகு போன்ற கொடிகள் நிறைந்த வளம் பொருந்திய நிலமாகக் குறிஞ்சி உள்ளது.

மலை அருவிகள், சுனைகள் போன்றவைகளை நீராதாரங்களாகப் பயன்படுத்தினர். மலைப் பாறைகளுக்கிடையே குறிஞ்சிச் செடிகளும் காந்தள் செடிகளும் குவளை மலர்களும் மலர்ந்து நறுமணத்தைக் கொடுத்தன. யானை, புலி, பன்றி, கரடி, வருடை, கவரிமான், சிங்கம், குரங்கு, ஆளி, ஆயா, சிறுத்தை முதலிய விலங்குகள் குறிப்பிடத்தக்கவை. பறவைகளாக மயில், கிளி, கூகை போன்றவை குறிஞ்சி நிலத்திற்கு அழகு சேர்த்தன. கூகை மலை வாழ் பறவையாதலால் குன்றக் கூகை என்பர்.மலைவாழ் மக்களுக்கு மலை உச்சியிலிருந்து தேனும், வள்ளிக் கிழங்கும், பலா மரங்களிலிருந்து பலாப்பழமும் கிடைத்தன. தேனை மூங்கிற்குழாய்களில் பதப்படுத்தி வைத்துக் கள் தயாரித்துக் குடித்தனர். வில்லாற் கொலைத் தொழில் புரியும் இயல்புடைய குறவர்கள் யானை, காட்டுப்பன்றி விலங்குகளை வேட்டையாடித் தீக்கல்லால் எழுப்பப்பட்ட வைக்கோலையும், ஐவன நெல்லின் வைக்கோலையும் கூரையாக வேய்த்து அதில் பாதுகாப்பாக வாழ்ந்தனர். குறவர்கள் வானளாவ உயர்ந்த மரங்களிலிருந்து தேனெடுத்தலை தம் தொழில்களில் ஒன்றாகக் கொண்டிருந்தனர்.

“அறைஉறு தீம்தேன் குறவர் அறுப்ப
முயலுநர் முற்றா ஏற்றுஅருநெடுங்சிமை
புகல் அரும், பொதியில் போல்” (அகம்., வரிகள் : 12-14)

மலையில் கிடைக்கும் தேனையும், தந்தங்களையும், புலித்தோலையும், அகிற்கட்டைகளையும், சந்தனத்தையும், வேறு நிலத்தில் விற்று உணவுப் பொருட்களைப் பண்டமாற்றாகப் பெற்று வாழ்ந்தனர். வீரம் மிக்க இளைஞர்கள் சுற்றத்தாருடன் வேறு நிலம் சென்று பசுக் சுட்டங்களைத் தேடி விற்றுக் கள்ளையும், மீனின் நெய்யையும் உண்டனர்.

முல்லை நில வாழ்வியல்

முல்லையடிவாரத்திலுள்ள காடுகளும், ஆறுகளும், குன்றுகளும் நிறைந்து சிறந்த ஒவியனின் கைவண்ணத்தில் அமைந்து போன்ற செந்நிலமாகவும், பழுது படர்ந்ததாகவும் விளங்குவது முல்லை நிலம், காடும் காடு சார்ந்த இடம் முல்லை.

“அரக்கத்து அன்ன செந் நிலப் பெருவழி” (அகம்., 14: 1)

செந்நிலப் புறவு என்றும் அழைப்பர்.

“முல்லை சான்ற முல்லை புறவின்” (சிறுபாண், வரி : 169)

என்னும் வரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிஞ்சி நிலம் போன்றல்லாது மழைக்காலம் வரும் வரை காத்திருந்து பயன்பெறும் நிலம். மக்கள் இடையர், பொதுவர், ஆயர் ஆய்ச்சியர், கோவலர் என்று அழைக்கப்பட்டனர்.முல்லை நிலத்தில் இலந்தை மரங்கள் சூழப்பட்ட இடத்தில் உயரமான குடில்களைக் கட்டி, தானியங்களின் வைக்கோல்களைக் கூரையாக வேய்ந்து வாழ்ந்தனர். உணவாகப் பாலில் வேக வைத்த வரகு, அரிசிச் சோறு, பால், தயிர், வெண்ணெய், நெய், கேழ்வரகு, சாமை போன்றவைகளையும் உண்டனர். விருந்தினர் வந்தால் எல்லா உறவினரையும் அழைத்து முயல் கறியைச் சமைத்து விருந்தளித்தனர். இதனை புறம்,

“புறவுக் கரு அன்ன புன்புல வரகின்
பால் பெய் புன்கம் தேனொடு மயக்கிக்
குறுமுயற் கொழுஞ் சூடு கிழித்த ஒக்கலொடு” (புறம் ., 34 : 9-11)

எனச் சுட்டுகிறது.

ஆநிரைகளை மேய்த்தலும், வரகு, கேழ்வரகு, அவரை, துவரை போன்ற உணவுப் பொருட்களைப் பயிரிடுதலும் முக்கியத் தொழில்கள். வரகுப் பயிர் கார் காலத்தில் செழித்து வளரும் பயிர், செம்மண் நிலத்தில் வளர்வது. இதனை,

“செவ்வி கொள் வரகின் செஞ்சுவற் கலித்த” (குறுந்., 282 வரி : 1)

என்பர். முல்லைக் கொடிகளும் கொன்றை, குருத்து போன்ற மரங்களும், மனைக்கோழி சிவல் (கவுதாரி) கானக் கோழி, மயில், ஆநிரை, முயல், மான் முதலிய பறவைகளும் விலங்குகளும் முல்லை நிலத்தில் குறிப்பிட்டத்தக்கவை. புதலையும் இந்நிலத்திற்குரிய மரமாக இயம்பூரணர் கூறுவர் (தொல்காப்பியம், பொருதிகாரம் அகத், இளம்பூரணர் உரை, ப.18). காயா கொன்றை, வெட்சி, குல்லை, குருத்து, கோடல், பாங்கர், முல்லை, பிடவம், தளவம் போன்ற மலர்கள் நிலமெங்கும் மணம் வீசி மலர்ந்தன. இதனை,

“மெல் இணர்க் கொன்றையும், மென்மலர்க் காயாவும்
புல் இலை வெட்சியும் பிடவும், தளவும்” (கலி, 103 : 1-2)

வெளிப்படுத்துகின்றது.

இருள் விலகும் விடியங் காலையில் பறவைகள் எழும் முன்னே எழுந்து, முழக்கம் தரும் மத்தினால் ஆரவாரிக்கும் படி உறையிட்டு இறுகிய தயிரைக் கடைந்த பின் பானையில் ஊற்றி தலையின் மேல் மெல்லிய சும்மாடில் அம்மோர்ப் பானையை ஏற்றிச் சென்று புதிய மோரை விற்றாள் ஓர் ஆயர்குலப் பெண் என்பதை,

“நள் இருள் விடியல் புள் எழப் போகி
புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி…
நெய்விலைக் கட்டிப் பகம்பொன் கொள்ளாள்
எருமை நல் ஆன், கருநாகு பெறூஉம்” (பெரும்பாண், வரிகள் : 155-164)


எனும் வரிகளில் ஆயர் குலப் பெண்கள் பால், மோர், தயிர், நெய், வெண்ணெய் போன்றவைகளை விற்று, பண்டமாற்றாகப் பெற்ற நெல்லால் உணவு சமைத்து சுற்றத்தாருடன் உண்பர். நெய் விற்ற பணத்தைச் சேமித்து வைத்துப் பொன் வாங்காமல் நல்ல பாலெருமைகளையும், பகக்களையும் அவற்றின் கன்றுகளோடு வாங்குவர் எனும் செய்தியையும் இப்பாடல் வரிகளால் அறியலாம்.

ஆயர்கள் ஆநிரைகளிடமிருந்து பெற்ற பாலை வீட்டைச் சுற்றியுள்ளவர்களுக்கு விற்றுப் பொருளீட்டினர். ஆநிரைகளை மேய்க்கக் காட்டிற்குள் செல்லும் போது தம் தோள்களிலுள்ள உறிகளில் பால் பானைகளையும், தோல் பையில் உணவினையும், தீ மூட்டிக் குளிர்காய காய்ந்த சுள்ளிக் கம்புகளையும் கொண்டு சென்றனர். ஓலையால் செய்யப்பட்ட உடைகளும், கோணலான மரக்கோலும் இருந்தது. மூங்கிலால் செய்யப்பட்ட வேங்குழலில் பாட்டிசைத்து மகிழ்ந்து திரிந்தனர் என்பதை,

“கழுவாடு கடுபடை சுருக்கிய தோற்கண்
இமிழ்இசை மண்டை உறியொடு, தூக்கி
ஒழுகிய கொன்றைத் தீங்குழல் முரற்சியர்
வழுஉச் சொற்கோவலர், தத்தம் இனநிரை
பொழுதொடு தோன்றிய கார்நனை வியன்புலத்தார்” (கலி ., 106:1-5)

எனும் வரிகளால் அறியலாம்.

மருத நில வாழ்வியல்

நான்கு நிலத்திலும் வளம் மிகுந்த நீர்வளமும் நில வளமும் மிக்க வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம், தீம்புனல் உலகம் என்று போற்றப்படும் மருத நிலப் பொது மக்களை உழவர், களமர் கடையர், உழத்தியர் என்றும் உயர்ந்தோர்களான ஆண்களைத் தலைவன் ஊரன், மகிழ்நன் என்றும், பெண்களைத் தலைவி, கிழத்தி, மனைவி என்றும் அழைக்கப்பட்டனர்.

ஆற்று நீரும், பொய்கை நீரும் மருத நிலத்தை வளப்படுத்தின. நெல்லும், கரும்பும் விளைபொருட்கள். வெற்றிலை, வாழை, மருதம், காஞ்சி, வஞ்சி போன்ற மரங்களும், தாமரை, கழுநீர் ஆம்பல் போன்ற மலர்களும் எருமை, நீர்நாய் போன்ற விலங்குகளும், நீர்க்கோழி, கொங்கு, குயில் முதலிய பறவைகளும் மருத நிலத்தில் காணப்படுபவை. மருத நிலக் கடவுள் வேந்தன் (இந்திரன்) ஆவான். மருத நில மக்கள் சுறுசுறுப்பானவர்கள். அதிகமான புதுவருவாயைத் தரும் நெற்கதிர்கள் நிறைந்த வயல்கள் உடையவர்கள். மண் வளம் மிக்க வயல்களில் எருதுகளைப் பூட்டிய ஏர்களினால் நிலத்தை உழுது செம்மைப்படுத்தி, உரமிட்டு விதை விதைத்து நீர்ப் பாசனம் செய்து நெல்லைப் பயிரிட்டு வளர்த்தனர். கரும்பு, காய்கறிகளையும் நிலத்தில் வளர்த்தனர். இங்ஙனம் உணவுப் தட்டுப்பாடு இல்லாமல் நிறைவான உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்தனர். இதை,

“குடிநிறை வல்சிச் செஞசால் உழவர்” (பெரும்பாண், வரி : 198)

எனும் வரி உணர்த்தும். குளங்கள் கொள்ளும்படி யானைகளையும் மறைக்கும்படி ஒங்கிய கரித்துகளையுடைய கழனிகளிடத்தும் விளங்கும் மடுக்களிடத்தும் இலைக்கு மேல் ஓங்கி நிற்கும் தாமரைப் பூவினையும், தேன் மணக்கும் நெய்தற் பூவினையும் வண்டுகள் தங்கள் மணம் பிற பூக்களையும் உடைய பொய்கைகளிடத்தும் பாய்ந்து செல்கின்றது என்கின்றது மதுரைக்காஞ்சி.

மருதநிலமே உணவு உற்பத்திக்குக் காரணமான நிலம் என்பதைப் பெரும்பாணாற்றுப்படை(253-254) பாடல் விளக்குகிறது.

பழங்காலத்தில் தமிழகம் ஐந்நிலமாகப் பிரிக்கப்பட்டு, நிலத்திற்கேற்ற தொழில் செய்து பண்டமாற்று முறையில் வாழ்ந்திருந்தனர் என்பதை அறியமுடிகின்றது.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s3/p12.html


ISSN 2454 - 1990
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License