Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினாறாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

42. மலர்களின் மருத்துவச் சிந்தனைகள்


சே. சலோமி இராஜரீகம்
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ் உயராய்வு மையம்,
பாத்திமா கல்லூரி (தன்னாட்சி), மதுரை.

முன்னுரை

இப்பூவுலகெங்கும் மரம், செடி, கொடி, சமுத்திரம், மலை, பறவைகள் மனித இனம், விலங்குகள் என்பன இயற்கையில் பரிணமித்துள்ளன. இவைகள் அனைத்தையும் விட மிகவும் அழகான தோற்றத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளவை தான் மலர்கள் என்பதும் மறுப்பதற்கில்லை. மரம், செடி, கொடிகளில் பூக்கும் மலர்களின் நிறம், அதன் மருத்துவக் குணம், சுகந்தம், கவர்ச்சியான தோற்றம் என்பன இவ்வுலகில் உள்ளோரை பிரமிக்க வைக்கின்றன என்பது நிதர்சனமாகும். மிலேனியம் ஆண்டாக மிளிரும் இன்றைய காலகட்டத்தில் கூட வீட்டுத் தோட்டங்கள், பூஞ்சோலைகள் பூங்காவனங்கள் என்பனவற்றில் கோடான கோடி பூக்கள் தினமும் மலர்வதை அவதானிக்கலாம். இதனாலன்றோ “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா” என்று இயற்கையைப் போற்றினர் நமது முன்னோர்கள். அதே வேளை “எத்தனை கோடி பூ மலரும்” என்றார் கவிஞர் கண்ணதாசன். அத்தகைய மலர்களின் சிறப்புகளையும், மருத்துவப் பண்புகளையும் விளக்கிக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மலர்களின் சிறப்புகள்

மலர்கள் நமக்கு இயற்கை நல்கிய கொடை, அவைகளில் தான் எத்தனை எத்தனை வர்ணங்கள், பல்வேறுபட்ட வடிவங்கள், விதம் விதமான நறுமணங்கள், மருத்துவக் குணங்கள் என்று அதன் தாற்பரியங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். கண்ணுக்குக் கவர்ச்சியாகவும், மனதுக்குச் சாந்தியையும், கிளர்ச்சியையும் நல்குவது பூக்கள் தான் என்பது வெள்ளிடை மலை. மலர்கள் புனிதமானவை. இறைவனுக்கு அர்ப்பணிக்க கூடியது. மணமக்கள் கழுத்தில் மாலையாகப் பொலிவது மலர்கள் தான் என்பதையும் நாம் அறிந்தவை தான். மகரந்தங்களால் இனிக்கும் தேனை வழங்கி வருவதும் மலர்களே. பல்வேறு சிறப்பு மிக்க அத்தகைய மலர்கள் மனித குலத்திற்குப் பிணி நீக்கும் ஔடதமாகவும், முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர் என்றும் அறிய முடிகின்றது. சித்த மருத்துவ நூலைப் புரட்டிப் பார்த்தோமாகில் பல்வேறு வகையான மலர்களின் மருத்துவக் குணங்கள் சிறப்புறக் கூறப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு வகையான மருத்துவக் குணம் உண்டு. இன்று கூட தென் இந்தியக் கிராமங்கள் சிலவற்றில் நோய்களுக்குப் பூக்களை மருந்தாகிப் பயன்படுத்தி எளிய முறையில் சிகிச்சை பெறுகின்றனர். இது செலவில்லாமல் சுலப மருத்துவம் என்பது கண்கூடாகும். பலகோடி மலர்கள் உலகில் உள்ளன. இருப்பினும் நமது அனுபவம் மற்றும் பழக்கத்தில் உள்ள மலர்களின் மருத்துவக் குணம் பற்றி அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.மருதோன்றி மலர்

மருதாணி என்ற சிறிய செடியில் கிடைப்பது மருதோன்றிப்பூ. இந்த மருதாணி இலையை மங்கையர் தங்கள் அழகிற்காக கால்களிலும், கைகளிலும் அரைத்துப் பூசுவார்கள். இது வண்ண வண்ண அழகையும், குளிர்ச்சியையும் தருகின்றது. மருதாணி மரத்தில் மலரும் பூக்கள் மருதோன்றிப் பூக்களாகும். இந்த பூக்கள் மருத்துவத் தன்மை வாய்ந்தவை. மருதாணி இலைக்கு உள்ளதைப் போன்று பூக்களுக்கும், உடல் உஷ்ணத்தை தனிக்கும் தன்மை உண்டு. மருதோன்றிப் பூவைப் படுக்கைக்குச் செல்லும் போது தலையில் வைத்துக் கொண்டால் அல்லது தலைக்கு அடியில் வைத்துக் கொண்டால் நன்றாகத் தூக்கம் வரும். குடும்பக்கவலை, தீர்க்க முடியாத பிரச்சனை, மன உளைச்சல் உள்ளவர்கள் உள்ள மங்கையர் இந்தப் பூவை தலையில் சூடிக்கொண்டால் நோய் அகன்று விடும். சில பெண்களுக்கு மருதோன்றிப் பூவின் மணம் பிடிப்பதில்லை. ஆகவே அவர்கள் இம்மலரைக் காய வைத்த பின் உபயோகிக்கலாம். காயவைத்து மருதோன்றிப்பூவுடன் எலுமிச்சைப் பழச்சாறு சேர்த்துத் தலையில் தேய்த்துக் குளிப்பதன் மூலம் உடலில் உள்ள உஷ்ணம் குறைவதுடன் தலையில் உள்ள பொடுகு போய் விடும். மற்ற மலர்களை விட மிகவும் மாறுபட்ட நறுமணத்தைக் கொண்டது மருதோன்றிப்பூ. அடுத்து கமகம என்று நறுமணத்தை அள்ளி வீசிக் கொண்டிருக்கும்.

மல்லிகை மலர்

மல்லிகைப் பூவை விரும்பி வைக்காத பெண்களே இல்லையெனலாம். மல்லிகையிலும் பல இரகங்கள் உள்ளன. அவற்றைக் குண்டுமல்லி, நித்திய மல்லி, காட்டுமல்லி என வகுக்கலாம். மல்லிகைப்பூவிலும் சில மருத்துவ குணம் இருப்பது பலருக்குத் தெரியாது. மல்லிகைப்பூ தலைவலியைப் போக்கும் தன்மை கொண்டது. சில பெண்களுக்கு மல்லிகையின் மணம் பிடிக்காது. அதனை ஒவ்வாமையென்று கூறலாம். மல்லிகை மலர்கள் களைப்பைப் போக்கும். அதே நேரம் மோக இச்சையையும் அதிகரிக்கும் வல்லமை கொண்டது. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் தொடர்ந்து மல்லிகைத் தோட்டத்தில் உலாவினால் நல்ல பலன் ஏற்பட வாய்ப்புண்டு. மல்லிகைப் பூவின் மணத்தை ‘காதல் மணம்’ என்று கூடக் கூறுவர். மன்மதன் - ரதி ஆகியோர் மல்லிகைத் தோட்டத்தில் தான் வசித்தார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. மல்லிகைப் பூ தைலம் எடுக்கப்பட்டு வாசனைத் திரவியங்களில் கலந்து பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது.ரோஜா மலர்

பொதுவாக இதனை மலர்களின் ராஜா என்று அழைப்பதுண்டு. மனதுக்கு இதமான பலவித வர்ணங்களில் காட்சி தருகின்ற ரோஜாவைப் பறிப்பதற்குக் கூடிய கவனம் செலுத்தியே ஆகவேண்டும். ஏனெனில் ரோஜாச் செடியில் அதிக அளவில் முட்கள் காணப்படுவதே ஆகும். ரோஜாவை பச்சையாகவும், காயவைத்தும் பயன்படுத்தலாம். ரோஜா இதழ்களை அப்படியே சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். அத்துடன் கர்ப்பிணிப் பெண்களுக்குச் சிறுநீர் சுலபமாகப் போகும். குடல்புண், தொண்டைப் புண், குணமாக்குவதற்கும், ரோஜா மலர் பயன்படுத்தப்படுகின்றது. ரோஜாப்பூவின் மணம் சளியைக் குணப்படுத்தும். ஆற்றலும், வயிற்றைச் சுத்தமாக்கும் இயல்பும் கொண்டது. ரோஜாவில் இருந்து தைலம் எடுக்கலாம். காது வலி, காது குத்தல், காதில் ரோகம், காதுப்புண் என்பனவற்றுக்கு இத்தைலம் பயன்படுத்தப்படுகின்றது. ரோஜா இதழ்களை கொண்டு குல்கந்து தயார் செய்யலாம். இதனை சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெருகும். அத்துடன் அழகான உடல் அமைப்பையும் பெறலாம். அத்துடன் குருதி சுத்தமடைந்து தோலின் நிறம் பளபளப்புடன் விளங்கும். ரோஜா இதழ்களில் இருந்து சர்பத் தயார் செய்யலாம். இதை அருந்தினால் மூலச்சூடு மலச்சிக்கல் குடலில் உண்டாகும் புண் இவைகளைக் குணப்படுத்தும். வாயிலுள்ள துர்நாற்றத்தை ரோஜா இதழ்கள் போக்கும் தன்மையுடையது. பொதுவாக தாம்பூலம் தரிக்கும் பொழுது அத்துடன் இரண்டு அல்லது மூன்று ரோஜா இதழ்களை சேர்த்துக் கொள்வது நல்லது. அது ஜீரணத்தைப் போக்கும். வீட்டு முற்றத்தில் ரோஜாச் செடிகளை வளர்ப்பது நல்லதாகும்.

பவள மல்லிகை மலர்

பவள மல்லிகைச் செடி மரம் வகையைச் சேர்ந்தது. இதனை வளர்ப்பதற்கு அதிகத் தண்ணீர் தேவையில்லை. கோடையில் பூத்துக் குலுங்கும் இந்த மலரை ‘பாரிஜாத மலர்’ என்றும் கூறுவா;. ‘பாரிஜம்’ என்ற பதம் சமஸ்கிருதச் சொல்லாகும். இந்தப் பூ சுகந்தத்தைக் கொடுக்கக் கூடியது. இதன் வாசனை அலாதியானது. இந்தப்பூ மிகச் சிறியதாக இருக்கும். இவை இந்திரனின் தோட்டத்தில் காணப்பட்டன என்று அமரகோசம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. இதனைக் கண் சம்பந்தமான நோய்களுக்கு பயன்படுத்துவர். பெரும்பாலும் பெருமாள் கோவில்களில் இந்தப் பவள மல்லிகை மரங்கள் அதிகமாக இருக்கும். இதன் வாசனை ஞானத்தை அளிக்கக் கூடியது. அத்துடன் இந்த மரத்தின் கீழே தான் வாயுபுத்திரன் தவம் இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இதன் அடிப்படையில் தான் ஆஞ்சநேயர் சன்னதியில் பவள மல்லிகை மரம் வளர்க்கப்படுகிறது.இலுப்பை மலர்கள்

இலுப்பை மரத்தில் இருந்து கிடைக்கும் பூ இலுப்பைப் பூ ஆகும். இந்தப் பூவில் பல்வேறு மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. மெலிந்த உடலுள்ளவர்கள் இலுப்பைப் பூக்களை பசும்பால் விட்டு அரைத்துக் காய்ச்சிய பாலுடன் சிறிது சர்க்கரை சேர்த்துப் பருகி வந்தால் நாற்பத்தெட்டு நாட்களுக்குள் உடம்பு தேறும். இலுப்பைப் பூவை ஒத்தடம் கொடுத்தால் உடலில் உள்ள வீக்கம் குறையும். ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் பசும்பாலுடன் இலுப்பைப் பூ கஷாயத்தைச் சேர்த்துப் பருகினால் ஆண்மைக் குறைபாடு குணம் அடையும். இலுப்பை எண்ணெய்யை உடலில் உறுப்புகள் சிலவற்றில் தேய்த்துக் கொள்வதும் உண்டு. சிலர் அவ்வப்போது உணவிற்காகவும் பயன்படுத்துகின்றனர்.

தூதுவளை மலர்கள்

தூதுவளைப் பூ மிகச்சிறந்த மருத்துவக் குணம் நிறைந்தது. இந்தப் பூ அதிக அளவில் கிடைப்பது இல்லை. கிடைக்கும் பூவை வதக்கித் துவையலாக அரைத்துச் சாப்பிட்டால் நல்ல பயன் ஏற்படும். தொண்டை, வயிறு இவைகளில் ஏற்படும் புண்களுக்கு இது மருந்தாகப் பயன்படுகின்றது. வீட்டு வேலிகளில் எல்லோரும் தூதுவளை கொடியை வளர்க்க வேண்டும். தூதுவளை, இலை, பூ இவைகளுக்கு நல்ல விலை கிடைக்கின்றது. குறிப்பாகச் சித்த மருத்துவத்திலும், ஆயுர்வேதம், யுனானி முறையில் பெரும் அளவு இது பயன்படுகிறது.

தாமரை மலர்கள்

தாமரை மலர் மிகவும் அழகானது. இதன் மத்தியில் சரஸ்வதி வீற்றிருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. நினைவாற்றலுக்குத் தாமரைப்பூ சிறந்த மருந்தாகப் பயன்படுகின்றது. தாமரைப் பூவைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நரை, திரை, மூப்பு ஆகிய மூன்றும் ஏற்படாது. அத்துடன் உயிரையும் வளர்க்கும் என்று சித்த நூல்கள் கூறுகின்றன. நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ தாமரைப்பூ மருந்தாகப் பயன்படுகின்றது. வெள்ளைத் தாமரைப் பூவைச் சுத்தம் செய்து குடிநீர் தயாரித்துப் பருகி வந்தால் இரத்த மூலம் சீதபேதி குணமடையும் என்பர். மூளை வளர்ச்சிக்கு இது ஒரு முக்கியமான மருந்தாகும். இதன் அடிப்படையில் தான் கல்வி வளர்ச்சியும், ஞான வளர்ச்சியும் இருக்கும். தாமரை விதைகளை பச்சையாகச் சாப்பிடலாம். இதைச் சாப்பிட்டால் இரத்த விருத்தி ஏற்படும். உடல் சூடும் தணியும்.


முருங்கை மலர்கள்

முருங்கைப் பூவைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. முருங்கைப் பூ தாது பலத்திற்கு முக்கியப் பங்கு வகிக்கின்றது. பசும்பாலை நன்றாக காய்ச்சி அதில் முருங்கைப் பூவை போட்டு நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் ஏற்படும். ஆண்மை சக்திக்கு முருங்கைக் கீரை, பூ இலைகளைப் பயன்படுத்துகின்றனர். முருங்கை மரத்தை மிகச் சுலபமாக தோட்டத்திலும், வீட்டிலும் வளர்க்கலாம். கிளைகளை வெட்டி வைத்தால் சுலபமாக வளர்ந்து பலன் தரும். வீட்டிற்கு ஒரு வைத்தியர் என்று முருங்கை மரத்தைக் குறிப்பிடலாம்.

வேப்பம் மலர்கள்

வேப்பம் மரத்தில் இருந்து கிடைக்கும் இந்தப்பூ மிகச்சிறந்த மருத்துவக் குணங்களைக் கொண்டது. வேப்பம் பூ உதிரும் காலத்தில் பூக்களைச் சுத்தமாகக் கழுவி, காயவைத்து சேகரித்து வைக்க வேண்டும். வேப்பம்பூவை துவையலாகவோ, பொடி செய்தோ, சர்பத் போல் தயாரித்தோ அல்லது பச்சையாகவோ பயன்படுத்தலாம். வயிறு சம்பந்தமான நோய் உள்ளவர்கள் மற்றும் கல், மண் போன்றவற்றைத் தெரியாத்தனமாக உண்ணும் குழந்தைகளுக்கு வேப்பம் பூ கஷாயம் கொடுத்தால் வயிறு சுத்தமாகும். இதை சோற்றில் கலந்து சாப்பிட்டால் வாந்தி, ஏப்பம், பித்தம் நீங்கும். வேப்பம்பூவிற்கு ஜீரணத்தை அதிகரிக்கும் சக்தி உண்டு. அத்துடன் உடலின் உஷ்ணத்தையும் கூட்டும் வல்லமையுள்ளது. வேப்பம்பூ குடலிலுள்ள பூச்சிகளை கொல்லும் மருத்துவக் குணம் கொண்டது. வேப்ப மரம் மிகப்பெரிய மருத்துவக் குணம் நிறைந்தது. இதன் காற்றே பல வியாதிகளைக் குணப்படுத்தும். அதன் குச்சி, இலை, துளிர், பூ அனைத்தும் மிகவும் பயனுள்ளவை ஆகும்.

மகிழம் மலர்கள்

மகிழம் பூவின் நறுமணம் மற்றப் பூக்களை விட சற்று வித்தியாசம் ஆனது. காதுகளில் எந்தத் தொல்லை ஏற்பட்டாலும் மகிழம் பூவை எண்ணெய் போட்டுக் காய்ச்சி தலையில் தேய்த்து சற்று நேரம் குளிர வைத்து அதன் பின் குளிர்ந்த நீரில் குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தொட்டாச்சிணுங்கி மலர்கள்

தொட்டாச்சிணுங்கி என்ற முள் கொடியில் தொட்டால் சிணுங்கிப் பூ கிடைக்கும். தொட்டவுடன் இந்தக் கொடியின் இலைகள் சுருங்கிவிடும். தொட்டாச்சிணுங்கியின் வேருக்குப் புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல் உண்டு என்பது சித்த மருத்துவர்களின் கூற்றாகும். மனிதர்களுக்கு மட்டுமன்றி, கால்நடைகளுக்கும் ஏற்படுகின்ற பல நோய்கள் இப்பூவினால் குணமாகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது.

எருக்கம் மலர்கள்

எருக்கம் செடியில் இருந்து கிடைக்கும் இந்தப் பூ மிகச் சிறந்த மருத்துவத் தன்மை உடையது. உடலில் உண்டாகும், ஆரம்ப நிலையில் உள்ள தொழுநோய்க்குச் சிறந்த மருந்தாகச் சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.


அரளி மலர்கள்

அரளி விதையும், வேரும் கொடிய விஷத்தன்மை கொண்டது. அதனால் தான் பெரும்பாலும் இச்செடியை வீட்டில் வளர்க்காமல் கோவில்களில் வளர்க்கப்படுகின்றன. இந்த மலர்களை தலையில் வைத்துக் கொண்டால் பேன் தொல்லை நீங்கும்.

அல்லி மலர்கள்

அல்லி மலர்கள் தாமரையைப் போல் இருந்தாலும் மிகவும் சிறியதாக காணப்படுகின்றன. வெள்ளை அல்லி மலர்களில் தான் மருத்துவ குணம் அதிகம் உள்ளது. அதிக உடல் உஷ்ணம் உள்ளவர்கள் அல்லி இதழ்களையும், மலரின் உள்ளே உள்ள முடிச்சுகளையும் பச்சையாகச் சாப்பிடலாம். நீரழிவு உள்ளவர்கள் அல்லிப்பூவில் சர்பத் செய்து சாப்பிட்டால் நோய் கட்டுப்படும்.

வெங்காய மலர்கள்

வெங்காயம் பொதுவாக மருத்துவக் குணம் உள்ளது என்பதை நாம் அறிவோம். வெங்காயத்தில் இருந்து வரும் தாள்களில் பூக்கள் காணப்படுகின்றன. வெங்காயப் பூக்களுக்கும் மிகச் சிறந்த மருத்துவ குணங்கள் உண்டு. வெங்காயம் ஒரு சிறந்த கிருமி நாசினியாகப் பயன்படுகின்றது.

ஆவாரம் மலர்கள்

“ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ” என்ற பழமொழி உண்டு. ஆவாரம் மலர்கள் எண்ணற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதைத் தடுக்கிறது. இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. அரைப்பலம் ஆவாரைப் பட்டையை நன்றாய் இடித்து ஒரு மண்கலயத்தில் போட்டு அரைப்படி நீர் விட்டு அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினம் இருவேளை 1.5 அவுன்ஸ் வீதம் கொடுத்து வர மேக ஓட்டம், ரத்த மூத்திரம், பெரும் தாகம் ஆகியவை குணமாகும். மலர் சூரணத்தையோ, பூவைக் குடிநீராக்கிப் பாலில் கலந்தோ, இதழ்ளைக் கறிகூட்டாகவோ நாள்தோறும் பயன்படுத்த மேகவெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல், வரட்சி, ஆயாசம் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல், உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண், வயிற்றுப்புண் போன்றவற்றை அறவே நீக்கும். இதனைத் தொடர்ந்து பயன்படுத்தினால் நோயின்றி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

முடிவுரை

மேற்கூறிய மலர்களில் மட்டும் இல்லை மருத்துவத் தன்மைகள். எல்லா மலர்களிலும் பொதுவாகவே மருத்துவத் தன்மை உள்ளது. அவற்றைத் தெரிந்து பயன்படுத்துவதன் வழியாகச் சிறந்த நோயற்ற வாழ்வை நாம் வாழ முடியும் என்பதை இக்கட்டுரை வழி அறிந்து கொள்ளலாம்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s3/p42.html


  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License