பொண்ணு பிடிக்கலையா...பில்லைப் பிடி!
கிரிஜா மணாளன்
ஒருவர்: கிலோ ரெண்டு ரூபாய்க்கு மேல எடுக்க மாட்டேங்கறான்னா அந்த பழைய பேப்பர்காரனை அடிச்சீங்க...!
மற்றவர்: பின்னே என்னங்க, இதைக் காரணமா வச்சு பக்கத்து வீட்டுக்காரர் பேப்பர் வாங்கிறதை நிறுத்திட்டாருன்னா... ஓசிப் பேப்பர் படிக்கிறதுக்கு நான் எங்கே போகிறதாம்?
*****
ஒருவர்: கோடை வந்தாச்சு... கத்தரி வெயில் சீசன் எப்போ ஆரம்பிக்குதாம்?
மற்றவர்: எதுக்குங்க அந்தக்கவலை இப்போ... அது எனக்கு என் கல்யாணம் அன்னிக்கே ஆரம்பிச்சிடுச்சு...!
*****
ஒருவர்: அவங்க பொண்ணைப் பிடிக்கலேன்னு சொல்லிட்டதால, அன்னிக்கு நாம் சாப்பிட்ட டிபனுக்கெல்லாம் பில் அனுப்பிருக்காங்கப்பா!
மற்றவர்: அதுசரி... அதென்ன கீழே T & B சார்ஜ்னு அஞ்சு ரூபாய் சேர்த்திருக்காங்க...?
ஒருவர்: அவங்க வீட்டு டாய்லெட், பாத்ரூமை யூஸ் பண்ணினதற்காம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.