கிரிஜா மணாளன்
திருச்சிராப்பள்ளி, பாரத மிகுமின் நிறுவனத்தில் (B.H.E.L.) முதுநிலை வரைவாளராக (Senior Draftsman) பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ள இர.நந்தகோபால் எனும் இவர் கிரிஜா மணாளன், கிரிஜானந்தா, சிடுமூஞ்சி, உம்மணாமூஞ்சி போன்ற புனைப்பெயர்களில் தமிழில் வெளியாகும் பிரபல இதழ்களிலும், சில சிற்றிதழ்களிலும் 180க்கும் மேற்பட்ட சிறுகதைகள் 1200க்கும் மேற்பட்ட நகைச்சுவைத் துணுக்குகள், நூற்றுக்கும் மேற்பட்ட நகைச்சுவை மற்றும் ஆன்மீகக் கட்டுரைகள், கவிதைகள், துணுக்குகள் என கடந்த 39 ஆண்டுகளாக எழுதியிருக்கிறார், தொடர்ந்து எழுதியும் வருகிறார். உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திருச்சி மாவட்டக் கிளையின் செயலாளராக இருக்கும் இவர் தற்போது இணைய இதழ்களிலும் எழுதத் துவங்கியிருக்கிறார். இவர் தனது படைப்புகளில் நகைச்சுவைக்கே முக்கியத்துவம் தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
(தங்களுடைய புகைப்படம் அனுப்பி வைக்கலாமே? - ஆசிரியர்)
கதை - சிறுகதை
சிரிக்க சிரிக்க
மகளிர் மட்டும்
குறுந்தகவல்

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.