வரன் எப்படி அமைய வேண்டும்?
தம் குடும்பத்திலுள்ள பெண்ணுக்குத் தாங்கள் தேடும் வரன் (மாப்பிள்ளை) எப்படி இருக்க வேண்டும் என்று வீட்டிலுள்ள பெரியவர்கள் நினைக்கிறார்கள், அவனை மணந்து கொள்ளப போகும் பெண் என்ன நினக்கிறாள் என்பதை பழம்பெரும் இச்செய்யுள் கூறுகிறது:
"குலம் வேண்டுமென்றிருப்பார்
குலத்துள்ளார் கல்வியினாற்
குறையாஞானப்பலம் வேண்டுமென்றிருப்பார்
தந்தையார் பரந்தபெருஞ்
செல்வமுள்ளதலம் வேண்டுமென்றிருப்பார்
தாய்மார்கள் யவ்வனமும்
அழகும் சார்ந்தநலம் வேண்டுமென்றிருப்பார்
நாறுகுழற் கன்னிமார் நலத்தின் மிக்கார்."
இதன் பொருள்:
குடும்பத்திலுள்ள பெரியவர்கள் நல்ல குலத்தைச் சேர்ந்த வரன் அமைய வேண்டுமென்று விரும்புவார்கள். தந்தை, கல்வியிற் சிறந்த வரனையும், தாய், பெருஞ்செல்வம் படைத்த வரனையும், விரும்புவார்கள். ஆனால், அவனை மணந்து கொள்ளப்போகும் பெண், அழகும், இளமையும் அமையப் பெற்றவனே தனக்குக் கணவனாக அமைய வேண்டுமென்று விரும்புவாள்.
- கிரிஜா மணாளன்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.