இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

வந்துட்டான்யா....! மன்னன் வந்துட்டான்யா...!

கிரிஜா மணாளன்


(மன்னர் இழிகுண வர்மன் தன் அறையில் சுவாரஸ்யமாக காது குடைந்து கொண்டிருக்கிறார். அங்கே அமைச்சர் வருகிறார்.)

அமைச்சர்: மன்னா! ஓய்வாகத்தானே இருக்கிறீர்கள்? தங்களிடம் சில விசயங்களைக் கேட்டுத் தெளிவு பெற விரும்புகிறேன்.

மன்னர்: காது கொடையறது பத்தியா?

அமைச்சர்: நல்ல நகைச்சுவை உணர்வு மன்னர் தங்களுக்கு...

மன்னர்: என்ன...எதுக்காவது சோப்பு போட வந்தீரா...?

அமைச்சர்: அல்ல மன்னா!.... உங்கள் மனத்தில் கொட்டிக் கிடக்கும் எண்ணங்களை அறிந்து கொள்ள வேண்டுமென்று அடியேனுக்கு நீண்ட காலமாய் ஆவல்...!

மன்னர்: ஹா...ஹா... கொட்டிக் கிடக்கறத அள்ள வந்துட்டீரு... ஹா... ஹா...

அமைச்சர்: (தனக்குள்) ஹீம் பெரிய நகைச்சுவையை உதிர்த்து விட்டதாக மனசுக்குள் நினைப்பு போலும்...

மன்னர்: அமைச்சரே... ஏதோ வாய்க்குள் முணுமுணுக்கிறிரே...?

அமைச்சர்: அதெல்லாம் ஒன்றுமில்லை மன்னா...! நான் தங்களிடம் கேள்வியைக் கேட்கலாமா?

மன்னர்: ம்...ம்... போய்க் கதவைச் சாத்திவிட்டு வாரும்! மகாராணி வந்துவிடப் போகிறாள்...!

அமைச்சர்: மகாராணியாரிடம் தங்களுக்கு அவ்வளவு பயமா?

மன்னர்: அப்படியெல்லாம் ஒன்றுமில்லை... பெண்குலத்துக்கு ஒரு மரியாதை... அவ்வளவுதான்! கேள்விகளை அள்ளி வீசும்...!



அமைச்சர்: இதோ வீசுகிறேன் மன்னா...! தாங்கள் அரசவைக்கு வரும் போது "மன்னர் பராக்! பராக்!" என்று அறிவிப்புக் குரல் எழுப்புவதைத் தடை செய்து விட்டீர்களே...ஏன் மன்னா?

மன்னர்: (சோகத்துடன்) "பராக் பராக்"ன்னு சொல்றது என் காதுல விழுந்தா மறுபடியும் "பான் பராக்" (இது இந்தியாவில் ஒரு புகையிலைப் பொருளின் பெயர்) போடுற பழக்கத்தை துவங்கிடுவேனோன்னு உங்க மகாராணிதான் தடை செய்ய வச்சுட்டா...

அமைச்சர்: "மன்னர் வந்து விட்டார்! மன்னர் வந்து விட்டார்" என்று குரல் எழுப்பச் சொல்லலாமே?

மன்னர்: அய்யோ...வேணாம்.... சபையிலே கட்டியம் சொல்ற அந்தப் பயல் வடிவேலு ரசிகன்... என்மேல இருக்கற கடுப்புல திடீர்னு "வந்துட்டான்யா....! மன்னன் வந்துட்டான்யா...!"ன்னு கத்தித் தொலைச்சான்னா என்னோட மானம் என்னாவது?

அமைச்சர்: கத்தினாலும் கத்துவான். அடுத்த கேள்வி. தங்கள் அரியாசனத்தின் அருகே நின்று சாமரம் வீசும் பெண்களை நீங்களே நிறுத்தி விட்டீர்களா மன்னா?

மன்னர்: ஆ...ஆமாம்...ஆமாம்...நான்தான் நிறுத்திவிட்டேன். அந்தப் பச்சைக் கிளிங்க கை வலிக்க வலிக்க சாமரம் வீசுறதைப் பார்த்தா என் கையே நோவுகிற மாதிரி இருக்கு...!

அமைச்சர்: வேறு மாதிரியல்லவா கேள்விப்பட்டேன்... தாங்கள் அடிக்கடி அவர்கள் இடுப்பைக் கிள்ளி "சில்மிஷம்" செய்ததை ராணியார் பார்த்துவிட்டுத்தான்....

மன்னர்: எவன் சொன்னான்? உங்க ராணி இருக்காளே...ராட்சசி...அரண்மனையிலே...ஏன் இந்த நாட்டுலேயே மத்த பொம்பளைங்க அழகா, லட்சணமா இருந்தா அந்தக் கழுதைக்குப் பிடிக்கவே பிடிக்காது. பொறாமை பிடிச்சவ...அதனால்தான் அந்தப் பெண்களை நிறுத்திட்டா...! (ஏக்கத்துடன் உறுமியவாறு முகத்தைத் துடைத்துக் கொள்கிறார்.)

அமைச்சர்: அரியாசனத்தில் தாங்கள் அமரும் போது பட்டும் படாமலும் அமர்கிறீர்களே....படிந்து உட்கார முடியாத அளவுக்குத் தங்களுக்கு "மூல வியாதி" ஏதாவது...?



மன்னர்: (எரிச்சலோடு) மூலமா? எனக்கா? எவன் சொன்னான்?

அமைச்சர்: தங்களுக்கு மூலமென இன்னொரு அமைச்சர் மூலமாகக் கேள்வியுற்றதால் அதத் தங்கள் மூலமாகவே...

மன்னர்: நிறுத்துங்கள்... ஒரு வரியில எவ்வளவு மூலத்தை வளர்க்கிறீர்? (தனக்குள்) அரிப்பெடுக்க வைத்திட்டானே....(அமைச்சரிடம்) அந்த கிழட்டு வைத்தியன் சொன்னானா? அவனுக்குச் சம்பளத்தைக் குறைச்சுட்டேன்னு கடுப்பு...அதனால்தான் இப்படி வதந்தியைக் கிளப்பி விடுகிறான் அந்த பொக்கை வாயன்...

அமைச்சர்: அடுத்த கேள்வி.... ராணியார் மிருதங்கம் பழகுவதைத் தடை செய்து விட்டீர்களே மன்னா?

மன்னர்: பெரிய்ய கலைமாமணி பாரு...! மிருதங்கமாய்யா வாசிக்கிறா அவ....? எழவு வீட்டில மோளம் அடிக்கிற மாதிரி அவ டொம் டொம்முன்னு அடிக்கிறதைக் கேட்டால் எங்கே போர் முரசு கொட்டுதோன்னு எனக்கு வயித்தைக் கலக்குது. அதனால்தான் நிறுத்தச் சொல்லிட்டேன்...!

அமைச்சர்: அடுத்து... தாங்கள் பல்லவ மன்னர் பரம்பரையின் பதினைந்தாம் மன்னராயிற்றே...ஆனால் எப்படி பதினேழாம் மன்னர் என்று கூறிக் கொள்கிறீர்கள்?...கணக்குப்படி பதினைந்துதானே வருகிறது...

மன்னர்: இப்போ எதுக்கு அந்தக் கணக்கெல்லாம்....? அடுத்தவன் குடும்ப ரகசியம்னா கெளறோ கெளறுன்னு கெளறி அல்வா கிண்டிடுவீங்களே....! சரி சொல்லித் தொலைக்கிறேன்...எங்க பாட்டனும், முப்பாட்டனும் ஆளுக்கு ஒரு சின்ன அரண்மனை வச்சு கொட்டமடிச்சதுல பொறந்த ஒன்னு...ரெண்டு இந்த அரண்மனைப் பக்கம் ஒதுங்கினதால, கணக்கு இப்படி ஒதைக்குது.

அமைச்சர்: (தனக்குள்) ஆஹா என்ன பரம்பரை... (அரசரிடம்) அடுத்த கேள்வி...தாங்கள் இரவில் நகர்வலம் சென்ற போது இரவுக்காவலர்கள் உங்களை மரத்தில் கட்டி வைத்து உதைத்ததாகப் பேசிக் கொள்கிறார்களே...மன்னா...?



மன்னர்: (அதிர்ந்து கோபத்துடன்) எவனோ இப்படி கிளப்பி விட்டிருக்காங்க... அதை நம்ப வேண்டாம்... திருடன் வேஷத்திலே போயிருக்கக் கூடாது. போயிட்டேன்...காவலாளி பசங்க என்னைச் சந்தேகப்பட்டு பிடிச்சு நான்னு தெரிஞ்சதும் விட்டுட்டு காலில விழுந்து மன்னிப்பு கேட்டாங்க... நம்ம ஆட்சியிலே எவ்வளவு பொறுப்போட இருக்காங்க பார்த்தீர்களா...?

அமைச்சர்: (தனக்குள்) ம்...இன்னும் எத்தனை காவலர்கள் பொறுப்போடு உதைக்கப் போகிறார்களோ...? (அரசரிடம்) நகரிலுள்ள காமேந்திரச் சாமியாரின் ஆசிரமத்துக்கு அடிக்கடி சென்று வருகிறீர்களாமே...?

மன்னர்: நாட்டுக்கு ராசாவாக இருந்தாலும் கடவுள் பக்தி இருக்க வேண்டாமா? அது ஆன்மீக நாட்டம்!

அமைச்சர்: ஆசிரமப் பெண்கள் மேல் உள்ள நாட்டத்தால் தான் அங்கு அடிக்கடி போகிறீர்கள் என்றல்லவா பேசிக் கொள்கிறார்கள்.

மன்னர்: (கோபத்துடன்) அமைச்சரே... இங்கே அந்தப்புரத்திலில்லாத அழகிகளா அங்கே இருக்கிறாங்க...?

அமைச்சர்: கோபம் கொள்ளாதீர்கள் மன்னா... என் காதில் விழுந்ததைத்தான் சொன்னேன்.

மன்னர்: உம்ம காதுல இடிதான் விழனும்... என்னைப் பற்றிய நல்ல விஷயமெல்லாம் விட்டுவிட்டு கேள்வியால் இப்படி என்னை வாருறீரே...ராணி ஏதாவது லஞ்சம் கொடுத்து என்னைப் பற்றிக் கிளறச் சொன்னாளோ?

அமைச்சர்: அய்யகோ...கள்ளங்கபடமில்லாத மாதரசியை வம்புக்கிழுக்காதீர்கள் மன்னா...

மன்னர்: (தனக்குள்) அடப்பாவி அவளை இப்படி துதி பாடுகிறானே இந்தக் கிழவன்... இந்தக் கிழத்துக்கும் அந்தக் கழுதைக்கும் ஏதாவது கள்ளத்....



அமைச்சர்: மன்னா என்ன முணுமுணுக்கிறீர்கள்...?

மன்னர்: ஒண்ணுமில்லை...என்னோட தலைவிதி! உம்ம வாயாலே இதையெல்லாம் கேட்கனுமின்னு இருக்கே....ம்...கேள்விங்க அவ்வளவுதானே? இடத்தைக் காலி பண்றீரா?

அமைச்சர்: இன்னும் கொன்சம் இருக்கிறது மன்னா...தாங்கள் அந்தப்புரத்தைச் சாமியார் ஆசிரமத்துக்கு மாற்றப் போவதாகச் சொல்கிறார்களே...

மன்னர்: (தனக்குள்) அட இந்த அருமையான யோசனை நமக்கு வரவில்லையே...ம்...ம்...ஹீம்ம்.... (பெருமூச்சு விட்டு) இப்படி புரளியைக் கிளப்பி விடுபவன் அன்னிடம் உதைபட்டுச் சாவான்... பக்தி இருக்குமிடத்தில் பலான விஷயத்திற்கு இடமில்லை.

அமைச்சர்: ஆசிரமத்திற்கு நம் மகராணியாரும் அடிக்கடி சென்று வருவது தங்களுக்குத் தெரியுமா?

மன்னர்: (அதிர்ந்து தனக்குள்) ஆரம்பிச்சுட்டானுங்க... சந்தேகப்பட ஆரம்பிச்சுட்டானுங்க... அடிக்கடி ஆசிரமத்துக்குப் போறதேயில்லைன்னாளே... நாம நக்ர்வலம் போனதும் இவ அங்க போயிடறாளோ...? நீங்க சாமியார் உடை போட்டுக்கிட்டா நல்லாயிருக்கும்ன்னு அன்னிக்குச் சொன்னாளே...இதுக்குத்தானா...அய்யோ...! (அமைச்சரிடம்) அது அவளோட பக்தி மார்க்கம்! அதை என் கொடைகிறீர்கள்...?

அமைச்சர்: "பக்தி மார்க்கத்தில்" நுழைந்த மகாராணியை அந்த சாமியார் பலான மார்க்கத்தில் இழுத்துக் கொண்டு ஓடிவிட்டால்...

மன்னர்: (தனக்குள்) அந்தக் கழுதை ஓடிப்போனால் ஒரு பெரிய தலைவலி விட்டுச்சு!

அமைச்சர்: என்ன முணுமுணுக்கிறீர்கள் மன்னா?

மன்னர்: உம்ம வழுக்கை மண்டைக்குள் இவ்வளவு கற்பனை பிறக்குதேன்னுதான்...!

அமைச்சர்: தவறாக எண்ணாதீர்கள் மன்னா...! சாமியார் மேல் உள்ள சந்தேகத்துலதான் அப்படிக் கூறினேன். அடுத்த கேள்வி... நாட்டில் எண்ணெய்ச் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க ஏதாவது திட்டம் உண்டா...?

மன்னர்: எண்ணெய்ச் சிக்கன விழிப்புணர்வுன்னு ஒரு அருமையான திட்டம் வைத்திருக்கேன். எனது அறிவைக் குறைத்து எண்ணிவிடாதீர்கள்...இரவு நேரத்தில் எந்த வீட்டிலும் விளக்கு எரியக் கூடாதுன்னு உத்தரவிடப் போகிறேன்.

அமைச்சர்: (தனக்குள்) அய்யோ... இவர் மன்னரா அல்லது... வீடுகள்தோறும் கட்டாய சாந்தி முகூர்த்தத்துக்கு ஏற்பாடு செய்து விடுவார் போலிருக்குதே...)

மன்னர்: அமைச்சரே... ஏதோ முகூர்த்தம் என்று முணுமுணுக்கிறீரே...?

அமைச்சர்: உங்கள் திட்டம் மக்களுக்கு விடிய விடிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதனால் நாட்டில் மக்கள் தொகை பன்மடங்காகப் பெருகிவிடுமே மன்னா...? தவிர ஆங்காங்கே பலான விஷயங்களும் அரங்கேறிவிடுமே...?

மன்னர்: (தனக்குள்) இந்தக் கிழவன் சொவதும் சரிதான். இந்தத் திட்டம் அமுல்படுத்தினால் நம்ம சனங்க இரவு வேளையில் இதே வேலையால்ல இருப்பாங்க...! இந்தக் கிழவன் கூட சும்மா இருக்க மாட்டான் (அமைச்சரிடம்) சரி அதை யோசிச்சு செய்யலாம்...ஆமாம்... எனக்கு நிறைய நாட்களாக ஒரு சந்தேகம்... மும்மாரின்னா தெரியும். சோமாரி, கேப்மாரி, மொள்ளமாரின்னு சேரிப்பக்கம் பேசிக்கிறாங்களே...அப்படின்னா என்னாவாம்?



அமைச்சர்: (சிவ சிவா என்று காதுகளைப் பொத்திக் கொண்டே...தனக்குள்) கெட்ட வார்த்தைகளைப் பற்றி ஒரு மன்னனுக்கு வரக்கூடிய சந்தேகமா இது? நகர்வலம் செல்லும்போது சேரியில் எவளிடமாவது "முறைகேடாக" நடந்து அவளிடம் இப்படி திட்டுக்களை வாங்கியிருப்பாரோ...?

மன்னர்: என்ன யோசிக்கிறீர்கள் அமைச்சரே?

அமைச்சர்: நம் நாட்டில் மும்மாரி பெய்யாமல் போனால்...இப்போது கூறினீர்களே...இந்த கெட்ட வார்த்தைகளால்தான் குடிமக்கள் உங்களை வசைமாரி பொழிவார்கள் மன்னா!

மன்னர்: (பயந்து) ஓஹோ.. அதுக கெட்ட வார்த்தைங்களோ...? (கலங்கியபடி) இப்ப நம் நாட்டில் மும்மாரி பெய்யுது இல்லியா...?

அமைச்சர்: மும்மாரியென்ன, சுனாமியே வந்து நாட்டை நாறடித்துப் போய்விட்டது மன்னா!

மன்னர்: சுனாமியா...? அதென்ன...?

அமைச்சர்: (தனக்குள்) சுனாமி வந்ததேத் தெரியாமல் மாதக்கணக்கில் பள்ளியறையிலும், ஆசிரமத்திலும் முடங்கிக் கிடந்தால் நாட்டில் நடப்பது எப்படி தெரியும்?

மன்னர்: அமைச்சரே...என்ன பதிலைக் காணோம்...?

அமைச்சர்: அடுத்த கேள்வி நம் அந்தப்புர அழகிகளை அடுத்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்படி ஆணை ஒன்று பிறப்பித்தீர்களே...ஏன் மன்னா?

மன்னர்: கஜானா காலியாக இருக்குதுல்ல... வருமானத்தைப் பெருக்க வேண்டாமா?

அமைச்சர்: பிறகு ஏன் அதை நிறுத்தி விட்டீர்கள்?

மன்னர்: அந்தப்புரத்து அழகிகளைக் கப்பலேற்றி அனுப்பும்போது நம்ம ஆளுங்க புத்தி கெட்டுப் போய் கூட்டத்தோடு கூட்டமா என் மச்சினியையும் கப்பலில் ஏற்றிவிட்டுட்டானுங்க... பாவிங்க... நல்ல காலம், நானே ஓடிப்போய் அவளை இறக்கிக் கொண்டு வந்தேன்.

அமைச்சர்: நல்லவேளை நம் மகாராணியை ஏற்றி அனுப்பாமல் விட்டார்களே...?

மன்னர்: (தனக்குள்) அனுப்பியிருக்கனும்... அருமையான வாய்ப்பைத் தவற விட்டுட்டாங்களே...

அமைச்சர்: மன்னா...ஏதோ முணுமுணுக்கிறார்களே...?

மன்னர்: (சமாளித்து) ஒண்ணுமில்லே! இத பாருங்க... இனியாவது உருப்படியான கேள்வியைக் கேளும்...! அசந்துட்டா அடிமடியிலேயே கையை வைக்கிறீரே...ம்...கேட்க வந்தது அவ்வளவுதானே...?

அமைச்சர்: மன்னிக்க வேண்டும்... தங்களிடம் இன்னும் சில ரகசியமான கேள்வியைக் கேட்டு நான் தெளிவு பெற வேண்டும் மன்னா...கோபிக்காமல் விடையளிக்க வேண்டுகிறேன்...!

மன்னர்: (தனக்குள்) தெரியாத்தனமா இவன உள்ளே விட்டுத் தொலைத்துவிட்டேன் இன்னும் எதையெல்லாம் நோண்டப் போகிறானோ....! (அமைச்சரிடம்) கேளுங்கள் அமைச்சரே...ராணி வருவதற்குள் கேட்டு விடுங்கள்...!

அமைச்சர்: (மன்னரின் காதருகில் குனிந்தபடி) நகரின் சேரிப்பகுதியில் உள்ள சில குழந்தைகள் தோற்றத்தில் உங்கள் சாயலாகவே இருப்பதை நம் மகாராணியார் கண்டுபிடித்து...

மன்னர்: (திடுக்கிட்டு தனக்குள்) அடிமடியிலே கையை வைக்கிறானே...! இந்தக் கிழவனை முதலில் பதவியை விட்டுத் தூக்கிடனும்... (அமைச்சரிடம்) அவளுக்கு ஏன் இந்த வீண்வேலை? (காதருகில் குனிந்து) இப்போ நான் சொல்வதை ரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள்... அவளுக்குப் பிறந்த என் மூத்த மகன், நம்ம யானைப் பாகனோட சாயலாகவும், அடுத்தவன், அந்த சாமியார் சாயலாகவும்தான் இருக்கிறாங்க...இந்த இழவையெல்லாம் நான் கண்டுக்காமல்தானே இருக்கேன்...?

அமைச்சர்: (அதிர்ச்சியடைந்து, தனக்குள்) அய்யோ...விவஸ்தை கெட்ட அரச குடும்பத்தில் வந்து மாட்டிக் கிட்டேனே... இங்கே மந்திரியாயிருப்பதை விட எங்கேயாவது பிச்சையெடுத்துப் பிழைத்துக்கலாம்....ச்சே... (தலையில் அடித்துக் கொண்டு ஓடுகிறார்)

மன்னர்: அமைச்சரே...அமைச்சரே... எங்கே ஓடுகிறீர்கள்? யாரங்கே...? பிடியுங்கள் அந்தக் கிழவனை....( எழுந்து விரட்டுகிறார்)

(அது சரி... நீங்கள் எங்கே ஓடுகிறீர்கள்...?)

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p23.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License