இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




மருத்துவம்
பிற மருத்துவங்கள் - பல் மருத்துவம்

புன்னகை பூக்கும் பற்கள்

டாக்டர் ஆ. நிலாமகன்


44. பல் மருத்துவமும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமும்

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் (The Consumer Protection Act, 1986) நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்கவும், குறைபாடுள்ள பொருட்கள் அல்லது சேவைகள், நியாயமற்ற வணிக நடைமுறைகள் போன்றவற்றில் இருந்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் உருவாக்கப்பட்ட சட்டமாகும். பல் மருத்துவர்களின் அலட்சியம் அல்லது கவனக்குறைவு அல்லது அசட்டை அல்லது புறக்கணிப்பு அல்லது அக்கறையின்மை காரணமாக பல் மருத்துவ நோயாளிகளுக்கு ஏற்படும் மருத்துவச் சிக்கல்களை நுகர்வோர் நீதிமன்றம் கவனமாக ஆராய்கிறது.

* பல் பிடுங்கும் போது நோயாளியின் தாடை முறிவு அல்லது விரிசல் விடுதல்

சண்டிகாரில் ஒரு நோயாளிக்கு அறிவுப்பல்லை அகற்றும் போது நோயாளியின் தாடை முறிந்தது. இதனைச் சிகிச்சையின் போது பல் மருத்துவர் கண்டுபிடிக்கவில்லை. இதனை மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பாயம் (District Consumer Disputes Redressal commission DCDRC) விசாரித்துத் தொடர்புடைய பல் மருத்துவர் சார்ந்த பல் மருத்துவமனைக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை அறிவித்தது.

* கவனக்குறைவான பல் அகற்றல் பல் மருத்துவச் சிக்கல்களுக்கு வழி வகுக்கும்

கோயமுத்தூரில் ஒரு பல் மருத்துவர் தனது நோயாளியின் சொத்தைப்பல் பிடுங்கும் போது கவனக்குறைவாகச் செயல்பட்டு நோயாளிக்கு அதீதவலி, சீழ் கோர்ப்பு, ஆரோக்கியமான பல் இழப்பு, இரத்த நாளத்தில் இரத்தக் கசிவு ஏற்படுத்தினார். அதனை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் கோவை பல் மருத்துவருக்கு ஒரு லட்சம் அபராதம் விதித்தது.

* நோயாளிக்குப் பல் கிளிப் பொருத்தும் போது பல் சேதம்

பெங்களூருவில் ஒரு பல் நோயாளி பல் மருத்துவரிடம் தனது புன்னகையை மேம்படுத்த வேண்டினார். பல் கிளிப்புகள் பொருத்தப் பட்டன. அதனால் பல் எனாமல் சேதாரம் மற்றும் ஈறுகள் காயம் ஏற்பட்டது. பல் கிளிப்பும் முரட்டுத்தனமாக அகற்றப்பட்டது. நுகர்வோர் நீதிமன்றம் விசாரித்து பல் மருத்துவருக்கு இரண்டு லட்சம் அபராதமும் விதித்தது. அத்துடன் பல் மருத்துவக் கட்டணத்தை முழுமையாக திருப்பித் தர உத்தரவிட்டது.

வெள்ளிக் குவியல்கள்
“அன்னையின் கருணையது
சிரிப்பினில் விளங்கும்!
அழகும் பொலிவும்
பொழிந்திடும் தூறலாய்
அன்பான சொற்கள்
மகிழ்விக்கும் சாரலாய்
அனைத்தையும் தகர்த்திடும்
வல்லமை
சிறு சிரிப்பிற்குண்டு
மனதிற்கு
பிடித்தமானவர்களின்
புன்னகை பரவசப்படுத்தும்
மீளாவழகு மீண்டும்
உதயமாகும்
வெள்ளிச் சிரிப்பினில்
பால் பற்கள் முளைத்த
சிறு குழந்தையின் சிரிப்பு
நட்சத்திரங்களாய் மின்னும்
வெள்ளிக் குவியல்கள்.”
--கவிஞர் செந்தாமரை


* வேர் சிகிச்சையின் போது மருத்துவ உபகரணத்தின் சிறு பகுதி சிக்கிக் கொள்ளுதல்

வேர் சிகிச்சை செய்யும் போது பல் மருத்துவர்கள் மறதியாய் அல்லது கவனக்குறைவாய் வேர் கால்வாய் சிகிச்சை ரீமர்கள் அல்லது ஊசிகளை ஈறுகளில் விட்டு விடுகின்றனர். அப்படி விட்டு விடுதலால் சில மருத்துவ பிரச்சனைகள் ஏற்பட்டன என்பதனை நுகர்வோர் நீதிமன்றம் முன் பல் நோயாளி நிரூபிக்க வேண்டும். புகார் மனுவை குறிப்பிட்டத் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்க வேண்டும். இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒரு பெரிய தொகை பல் மருத்துவருக்கு அபராதமாய் விதிக்கப்படும்.

* பல் பிடுங்கும் போது அலட்சியத்தால் நோயாளி மரணம்

மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு சொத்தைப்பல் பிடுங்கப்பட்டது. நுகர்வோர் நீதிமன்ற விசாரணையில் தொடர்புடைய பல் மருத்துவர் பல் பிடுங்கும் முன் நோயாளிக்கு தேவையான மருத்துவ சோதனைகளைச் செய்யவில்லை என கண்டறிந்தது. இறந்தவரின் மனைவிக்கு நீதிமன்றம் 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.


* தகுந்த கல்வித்தகுதி இல்லாமல் பல்மருத்துவம் பார்த்தல்

ஒரு பல் மருத்துவர் இளங்கலை பல்மருத்துவம் மட்டும் படித்திருந்தால் போதாது. அவர் நோயாளிக்கு எவ்வகை சிகிச்சை செய்கிறாரோ அதன் தொடர்பான முதுகலைப் பட்டமும் பெற்றிருக்க வேண்டும். பல் சீரமைப்பு மருத்துவம் செய்வதற்கு ஒரு மருத்துவர் முதுகலை பல் சீரமைப்பு மருத்துவம். படித்திருத்தல் வேண்டும். அதனால்தான் சில பல் மருத்துவமனைகளில் அந்த மருத்துவர் படிக்காத பிரிவுகள் சார்ந்த நோயாளி சிகிச்சைக்கு வந்தால் ஒரு சிறப்பு மருத்துவரை அழைத்து சிகிச்சை தரச் சொல்லுவார். நோயாளி தரும் கட்டணத்தை இரு மருத்துவர்களும் அவர்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டின்படி பகிர்ந்து கொள்வர்.

* நுகர்வோர் நீதிமன்றம் ஒரு வழக்கு விசாரணையில் கவனிக்கும் செயல்பாடுகள்

ஒரு குறிப்பிட்ட மருத்துவச் சிகிச்சை அளிக்கும் முன் பல் மருத்துவர் நோயாளியிடம் கீழ்க்கண்ட செயல்களைப் பற்றி விவாதித்திருக்க வேண்டும்.

* சிகிச்சை அளிக்கப்படும் முறைக்கு நோயாளியின் ஒப்புதல்.

* சிகிச்சையில் ஏற்படக்கூடிய பின் விளைவுகள் பற்றி அறிவுறுத்தல் மற்றும் கலந்துரையாடல்.

* மாற்று சிகிச்சை முறை பற்றி அலசுதல்

இவை அனைத்தும் செய்யப்பட்டாமல் அவசரமாக ஒரு சிகிச்சையை மேற்கொள்ளுதல், சிகிச்சை குறைபாடாகக் கருதப்படும்.

* ஆவணப்படுத்துதல்

நோயாளி தொடர்பான தகவல்களை முழுமையாக ஆவணப்படுத்துதல்.

* நோயாளியின் பெயர் / பாலினம்/ தொழில்/ கல்வி / முகவரி / திறன்பேசி எண் விவரம்.

* சிகிச்சை திட்ட வரைகள்.

* ரேடியோகிராப்ஸ்

* சிகிச்சைக்கு நோயாளி ஒப்புதல் தெரிவித்த கடிதம்

* நோயாளியின் உயர்இரத்த அளவு, சர்க்கரை அளவு. ஆவணப்படுத்துதல் (இவை முறையாக இருந்தால் ஒரு மருத்துவருக்கு நுகர்வோர் நீதிமன்றப் பிரச்சனைகள் வராது)

* வல்லுநர் கருத்து - ஒரு பல்மருத்துவரின் மீது புகார் வந்தால் நுகர்வோர் நீதிமன்றம், மருத்துவக்குழு, மாநில பல் மருத்துவர் குழு வல்லுநர்களின் கருத்துகளைக் கேட்டறியும்.

* ஆதாரங்களின் அடிப்படையில்தான் தீர்ப்பு

ஒரு பல் மருத்துவரின் மீது புகார் தரப்பட்டால் புகாரை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் புகார்தாரரின் மீதுதான். சிகிச்சைக்கு பின் ஏற்பட்ட மருத்துவச் சிக்கல்களுக்கு காரணம் பல் மருத்துவரின் அலட்சியம் அல்லது கல்வித்தகுதிக் குறைவு என்பதனை நோயாளி நிரூபிக்க வேண்டும்.

* நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்

பல் மருத்துவச் சிகிச்சைகளில் (இந்தியாவிற்குள் செய்யப்பட்டவை) உள்ள குறைபாடுகளை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் முழுமை செய்கிறது. நோயாளிகளுக்கான மாற்று வழிமுறைகளை நுகர்வோர் நீதிமன்றம் வழங்கும்.

பல் மருத்துவமும் நுகர்வோர் பாதுகாப்பும்

மஞ்சுளா கிருஷ்ணன், மதுரை.

பல் மருத்துவர் சேவைக் குறைபாட்டிற்காக, நுகர்வோர் நீதிமன்றங்களில் அபராதம் உள்ளிட்ட சில தண்டனைகளைப் பெற வேண்டியிருக்கும் நிலையில், புதிதாகப் படிப்போர் பல் மருத்துவம் படிப்பதற்கு பதில் வேறு ஏதாவது படிக்கலாமே?

மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமென்பது நுகர்வோர் பிரச்சனைகள், சேவை குறைபாடு, வணிக நடைமுறை, நேர்மையற்ற வணிகமுறை போன்றவற்றிற்கு தீர்வு தரும் சட்டமாக உள்ளது. இதே போன்று மருத்துவக் குறைபாடுகள், வங்கிகள், வீடு கட்டிக் கொடுப்பவர் பிரச்சனைகள் மற்றும் பொருள்கள் தரத்தில் உள்ள குறைபாடுகள் போன்றவற்றை உள்ளடக்கிய சிக்கல்களுக்கு நீதி பெற நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம். இதனடிப்படையில் பெரும்பான்மையான பணிகள் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகளுக்குள் இடம் பெற்றிருக்கின்றன. இலவசமாக பெறும் சேவை மற்றும் தனிப்பட்ட சேவை ஒப்பந்தத்தின் கீழ் உள்ள சேவைக்கும் பொருந்தாது. எந்தவொரு தொழிலையும் தவறின்றி செய்து வந்தால், எந்தவொரு பயமும் தேவையில்லை என்பதை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்.



ஒரு பொது மருத்துவர் அல்லது சிறப்பு மருத்துவர் ஒரு சிறிய அறையில் நோயாளிகளைப் பார்த்து, மருந்துகளைப் பரிந்துரைக்கலாம். ஆனால், ஒரு பல்மருத்துவரின் மருத்துவச் சேவை கடினமானது. ஒரு பல் நோயாளிக்குத் தேவையான வலி தீர்வு, பல் நோயிலிருந்து விடுபடச் செய்தல் போன்றவைகளைச் சிறப்பாக செய்யத் தெரிந்த பல் மருத்துவர்களே தங்கள் தொழிலில் வெற்றி பெறுகின்றனர். ஒரு நோயாளியின் அவசரத்துக்கு ஒரு பல் மருத்துவர் கவனமின்றி செயல்பட்டுவிடக் கூடாது.

ஐம்பது வயதுக்கு மேற்பட்ட எடை அதிகமுடைய ஒருவர் பல் மருத்துவரிடம் சிகிச்சைக்கு வந்தால், அவரின் இரத்த அழுத்தத்தையும், சர்க்கரையையும் கண்டறிந்து அவருக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும். நோயாளிக்குச் சிகிச்சை தரும் முன்பு அவரது முழு உடல் நலம் குறித்தும் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். சில வேளைகளில், அப்பகுதியில் பல் மருத்துவத் தொழில் செய்து வருபவர்கள், தங்களது மருத்துவமனைக்கு ஒரு நோயாளியை அனுப்பி, அவரின் வழியாகத் தங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும். நோயாளியின் உடல் மொழியை உள்நோக்கத்தை கணிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

ஒரு நோயாளி உங்களிடம் வருவதற்கு முன் வரவேற்பாளர், மருத்துவ உதவியாளர் ஆகியோரைக் கொண்டு முழுமையாக அவரைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/medicine/dental/serial/serial1/p44.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License