எந்தவொரு பல் மருத்துவரும் செயலூக்கத்திறன் மிக்கவராய் இருக்க வேண்டும். நீண்டகாலக் குறிக்கோளுடன் தனது திறனைப் படிப்படியாக மேம்படுத்த வேண்டும்.
* தற்போதைய மருத்துவமனைச் செயல்பாடுகளை மதிப்பீடு செய்தல் வேண்டும். நம்முடையத் தொழில்நுட்பத்தை தணிக்கை செய்ய வேண்டும். மருத்துவமனையின் உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், நோயாளிகளின் நேர்மறை, எதிர்மறை அனுபவங்கள் இவைகளைத் தொகுத்துப் பார்த்து மருத்துவமனையை அடுத்த நிலைக்கு உயர்த்த வேண்டும்.
* சிறு மாறுதல்கள், ஆனால் தொடர் மாறுதல்கள் தேவை. மருத்துவமனையை ஒரே வேளையில், அதன் உள்கட்டமைப்பைத் தலைகீழாய் மாற்றி அமைத்து விட முடியாது. என்னென்ன வழிகளில் மருத்துவமனையை மேம்படுத்தலாம்? என்று சிந்திக்க வேண்டும்.
* நோயைக் கண்டறிய மற்றும் நோய்க்கான சிகிச்சை முறைகளை நவீனப்படுத்த, புதிய தொழில்ட்பமான செயற்கை நுண்ணறிவு இணைந்த கருவிகளை அறிமுகப்படுத்த வேண்டும்.
* பல் மருத்துவச் சேவையை பலப்படுத்த பணியாற்றும் துணைப்பணியாளர்களுக்குத் தகுந்த பயிற்சி தர வேண்டும்.
* மருத்துவமனையின் வரவு - செலவுக் கணக்கை நிலையானதாக மாற்ற வேண்டும்.
* நோயாளிகளின் காப்பீடு சார்ந்த செயல்பாடுகளைத் தன்னியக்கமாக்க வேண்டும்.
* பாதுகாப்பு மற்றும் நோயாளிகளின் ஈடுபாடு போன்ற எண்ணிமத் தளங்களை மேம்படுத்த வேண்டும்.
|
சர்வபட்சிணி வாழ்க்கை
“நல்லி எலும்பை கடித்துத் துப்புவதால் நாம் வல்லினம்.
அவித்த முட்டையைக் கவ்வி தின்பதால் நாம் இடையினம்.
பால் பாயாசத்தை உறிஞ்சிக் குடிப்பதால் நாம் மெல்லினம்.
பற்களால் வாழ்ந்து மகிழ்கிறோம்
அரைத்து கிழித்து கடித்து ஆசிர்வதிக்கப்பட்டது
நம் சர்வபட்சிணி வாழ்க்கை”
- அ. ஜன்னத்துல் பிர்தௌஸ்
|
* ஒரு பல் மருத்துவருக்கு எழுத்துப்பூர்வமான அல்லது கணினிமயமாக்கப்பட்ட திட்டவறை தேவை. குறிக்கோளை திட்டமிட வேண்டும். அவ்வப்போது, குறிக்கோள்களை தணிக்கை செய்வதுடன், மருத்துவமனைப் பணியில் உங்கள் குழுவினரை முழுமையாக ஈடுபடுத்துங்கள்.
* நோயாளிகளின் வருகையைப் பொறுத்து உங்கள் மருத்துவமனையின் சேவை பல பரிமாணங்கள் அடைந்து கொண்டே இருக்கும். உங்கள் செயல்பாடுகள், மருத்துவமனையின் அன்றாட நடவடிக்கைகளைச் சீர்குலைக்காமல், துணைப் பணியாளர்களைக் குழப்பாமல் இருக்க வேண்டும்.
* யுக்தியையும் தொழில்நுட்பத்தையும் இணைத்து நவீன மாற்றங்களை உருவாக்க வேண்டும்.
* செயற்கை நுண்ணறிவு செயல்முறைகளுக்கு சிறு வழிகாட்டி தயார் செய்து கொள்ள வேண்டும் அல்லது தானியங்கி விளக்கப்படம் உருவாக்கம் செய்யப்பட வேண்டும்.
* தங்களுடைய செயல்பாடுகளின் வெற்றி பற்றிய கணிப்பும் அளவீடும் அவசியம்.
* சிறிய மருத்துவமனைகளுக்கு ஏற்படுத்தும் திட்டங்களை மருத்துவமனையின் வளர்ச்சிக்குத் தக்கபடி விரிவுப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
* மருத்துவமனையின் அளவு, மருத்துவமனையின் வரவு செலவு, சிகிச்சை முறைக்குத் தேவைப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த கருவிகளையும் தேர்ந்தெடுக்க வேண்டும். ‘இரண்டாம் கருத்து’ என்கிற செயற்கை நுண்ணறிவுக் கருவி கதிர்வரைபடங்களை ஆராய உதவுகிறது.
* மருத்துவமனைப் பணியாளர் பணிகளை நிலையான இயக்க முறைமை செய்ய வேண்டும்.
* திறன் பயிற்சியில் நேரத்தையும், பணத்தையும் முதலீடு செய்ய வேண்டும். வெற்றிகளை அங்கீகரிக்க வேண்டும். வளர்ச்சிப் பாதையைத் தனிப்பட்டக் குறிக்கோளுடன் கூடிய சிகிச்சை தேவைகளுடன் இணைக்க வேண்டும்.
* பணியாளர்களின் பணிகள் ஆவணப்படுத்தப்படுவதன் மூலம், புதிதாகப் பணியில் சேர்ந்தவர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்ய முடியும்.
* சாதிக்கக்கூடிய வளர்ச்சித் திட்டங்களைக் குறுகிய கால, நீண்ட கால குறிக்கோளோடு உருவாக்குதல்.
* நோயாளிகள் மருத்துவரின் சிகிச்சைத் திட்டத்தை ஏற்றுக் கொள்தல்களையும் ஒரு மணிக்கு எவ்வளவு கட்டண வரவு இருக்கிறது என்பதனையும் ஆராய்ந்தால், நோயாளிகளுக்கான குறைந்தபட்சக் கட்டணங்களை நிர்ணயிக்கலாம்.
* எதிர்பாராத செலவினங்களைக் கட்டுபடுத்துவது அறிவுடைமை.
* நுண்ணறிவு பயிற்சி மூலம் நடைமுறைத் தரவுகளையும், வள ஒதுக்கீடுகளையும், வளர்ச்சி முடிவுகளையும் விவேகமாக எடுக்கலாம்.
* நவீன நோயாளிகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றபடி சேவை, வினியோக மாதிரிகளைத் தயாரித்து தேர்ச்சி பெறலாம்.
* நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்க்க இனைய வழியிலான அட்டவணை, எண்ணிம் வடிவிலான விண்ணப்பங்கள், தானியங்கு நினைவூட்டிகள், மெய் நிகர் பின்தொடர்தல் போன்றவைகளையும் பயன்படுத்தலாம்.
* சிகிட்சை முறைகளை எளிய தமிழில் நோயாளிக்கு விளக்க வேண்டும்.
* நோயாளிகளின் எதிர்வினைகளையும் காத்திருப்பு நேரத்தையும் கவனிக்க வேண்டும்.
* நோயாளியின் முதல் அழைப்பிலிருந்து நோயாளிக்கான சிகிச்சை முடிந்து கட்டணம் வசூலிக்கும் வரையிலான நிகழ்வுகளை முறைமைபடுத்த வேண்டும்.
* எதிர்காலத்துக்கும் தேவையான தீர்வுகளை நெகிழ்வு மற்றும் வளர்ச்சியோடு ஒப்பிட்டு உருவாக்குதல் வேண்டும்.
* ஆவண செயல் முறைகளக, 1. இணைய வழியில் சேமிக்கப்படும் தரவுகளை நிலைபடுத்துதல், 2. ஒரே மாதிரியான பணிகளை தானியங்கு முறைக்கு மாற்றுதல் போன்றவைகளைச் செயல்படுத்தலாம். இதன் மூலம், மருத்துவர்களையும், துணைப் பணியாளர்களையும் இளைப்பாறச் செய்ய முடியும். பணிச்சுமையும் குறையும்.
* பாதுகாப்பு மற்றும் இணக்கப் பயிற்சியை உங்களது ஊழியர்களிடம் நடைமுறைப்படுத்தலாம்.
* தொழில்நுட்பப் புதுக்கருவிகளை உள் கட்டமைப்பில் அறிமுகபடுத்தலாம்.
* மருத்துவமனையில் பணியாளர்களுக்கு இடையே தலைமைப் பண்பை வளர்க்கலாம். அதனால் அடிக்கடி மாறும் உங்கள் தேவைகளை உங்கள் பணியாளர் எளிதாகப் புரிந்து கொள்வர்.
* பல் மருத்துவமனையின் தொழில்நுட்பங்களை பாரபட்சம் இன்றி மதிப்பீடு செய்யுங்கள்.
* பல் மருத்துவமனைப் பணியாளரின் நேர்மறை எதிர்மறைச் செயல்பாடுகளை பட்டியலிடுங்கள்.
* பல் மருத்துவச் சேவைக்கான நோயாளிகளின் பின்னூட்டங்களை கருத்து வேறுபாடுகளின்றிச் சேகரியுங்கள்.
இதே போன்று,
* உறுதியான பொருளாதார திட்டம்.
* மருத்துவமனை ஊழியர்களின் செயல்திறன் முன்னேற்றத்திற்கான முதலீடு.
* அளவிடக் கூடிய பாதுகாப்பான தொழில்நுட்பம்.
* முழுமையான செயல்பாடு ஆற்றல்.
* ஓர்மையான இணக்கப் பயிற்சி.
* அளவிடக் கூடிய குறிக்கோளை நிர்ணயியுங்கள். அவ்வப்போது அதனை மறு பரிசீலனை செய்யுங்கள்.
|
பல் மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு
எஸ். முஹம்மது சுபான், தென்காசி
பல் மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்பாட்டிலிருக்கிறதே, பல் மருத்துவர்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறார்களா?
மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:
எந்தவொரு புதியத் தொழில்நுட்பம் வந்தாலும், அதனைப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான், அந்தத் தொழில்நுட்பத்துடன் சேர்ந்து நாமும் வளர முடியும். தற்போதையப் புதிய தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு, சாதாரணமான மனிதர்களையும் சென்றடைந்திருக்கிறது. அவர்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பல்வேறு செய்திகளைச் சேகரித்து வைத்துக் கொண்டுதான் மருத்துவமனைக்கு வருகின்றனர். எனவே, பல் மருத்துவர்களும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அவர்களுக்கேற்ற பதிலளிக்கத் தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் மீது நம்பிக்கை ஏற்படும். காலத்திற்கு ஏற்ற மாற்றத்தை மருத்துவர்களும் உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே, சிறப்பாகச் செயல்பட முடியும்.
|
* எதிர்பாராதச் செலவுக்கு சிறிய அளவிலான பணத்தைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.
* கற்றுக் கொண்டே இருங்கள். புதிய வரவுகளுக்கேற்பத் தங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.
* கருவிகள் விலை, துணைப் பணியாளர் சம்பளம், குறைவான நோயாளி வருகை அல்லது கட்டணம் குறைவாகத் தரப்படுதல் போன்றவை பல் மருத்துவமனையின் வளர்ச்சிக்கான தடைகள்.
அவற்றை தாண்டி வருவதுதான் ஒவ்வொரு பல் மருத்துவரின் திறன் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.