இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




மருத்துவம்
பிற மருத்துவங்கள் - பல் மருத்துவம்

புன்னகை பூக்கும் பற்கள்

டாக்டர் ஆ. நிலாமகன்


47. பல் மருத்துவத்தில் முழுவுருவவியல்

முழுவுருவவியல் (Holography) என்பது முப்பரிமாணப் படங்களைப் பதிவு செய்து மறு கட்டமைக்க ஒளிக் குறுக்கீட்டைப் பயன்படுத்தும் ஒரு நுட்பமாகும். ஒளியின் தீவிரத்தை மட்டுமே படம் பிடிக்கும் நிலையான இரு பரிமாணப் புகைப்படம் எடுத்தல் போலல்லாமல் முழுவுருவவியல் ஒளி அலைகளின் வீச்சு மற்றும் கட்டம் இரண்டையும் படம் பிடிக்கிறது. இது லென்ஸ் இல்லாது ஒளிப்படம் எடுத்தல் ஆகும்.

பதிவு செய்யும் செயல்முறை

ஒரு லேசர்கற்றை இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. ஒரு பொருள் கற்றை (பொருளைப் பிரதிபலிக்கிறது) மற்றும் ஒரு குறிப்புக்கற்றை (நேரடி). இந்த இரு கற்றைகளும் குறுக்கிட்டூ வடிவம் ஒரு ஊடகத்தில் பதிவு செய்யப்படுகிறது.

மறுகட்டமைப்பு

பதிவு செய்யப்பட்ட முழுவுரு (Hologram) வழியாக ஒரு ஒளி மூலத்தை (பெரும்பாலும் லேசரை) பிரகாசிக்கச் செய்யும் போது முப்பரிமாணபடம் வெளிப்படுகிறது.

முழுவுருவவியல் வகைகள்

1. காட்சி முழுவுருவவியல் காட்சி முப்பரிமாணப் படங்களை உருவாக்குகிறது.

2. எண்ணிம முழுவுருவவியல் (Digital Holography) - குறுக்கீடு வடிவத்தைப் பதிவு செய்ய அல்லது கணக்கிட உணரிகள் (Sensors) மற்றம் கணினிகள் பயன்படுத்தப்படுகின்றன.

சர்வபட்சிணி வாழ்க்கை
“அந்நியரை, சகோதரனை, சிறுகுழந்தையை
சந்திக்க நேர்ந்தால் புன்னகை செய்- அது தர்மம்.
அந்தப் புன்னகையில்
உள்ளத்தின் கனிவும் அன்பும் மனிதநேயமும்
பொங்கி பீரிடட்டும் மானுடம் தழைக்கட்டும்.”
- அ. ஜன்னத்துல் பிர்தௌஸ்


பயன்பாடுகள்

கணக்கு அட்டைகள், வங்கிக் குறிப்புகள் பாதுகாப்பு, தரவு சேமிப்பு, நுண்ணோக்கி மற்றும் நோய் நிலைக் குறைப்பு (Medical Imaging)

முழுவுருவவியல் தோற்றம்

1948 ஆம் ஆண்டில் டென்னிஸ் கபோரால் முழுவுருவவியல் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்காக அவருக்கு 1971 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல்பரிசு வழங்கப் பெற்றது.

மின்னணு ஒளிக்கற்றைகள் வைத்து அவர் மின்நுண்ணோக்கியின் தரத்தை மேம்படுத்தினார்.

1970 ஆம் ஆண்டில் வேலேரி தாமஸ் என்கிற பெண் விஞ்ஞானி தத்ரூபமான முப்பரிமாண முழுவுருக்களைக் கண்டுபிடித்தார். அவரது கண்டுபிடிப்பை ‘மாயையைக் கடத்தும் கருவி’ என அழைத்தனர். அதன் காப்புரிமையை அவர் 1980 ஆம் ஆண்டி பெற்றார்.

சீரொளிக் (Laser) கற்றைகளில் பல வகைகள் உண்டு. அதில் இரண்டு முக்கியமான வகை சீரொளிகள் உள்ளன. அவை;

1.தொடர்ச்சியான அலை சீரொளி (Continuous Wave Laser)

2. துடிப்புள்ள சீரொளி (Pulsed Laser)

தொடர்ச்சியான அலை சீரொளி ஒளிமயமான தொடர்ச்சியான ஒற்றைக்கற்றையைக் கக்குகிறது. துடிப்புள்ள சீரொளி தீவிரமானது.

பத்துக்கோடியில் ஒரு பங்கு நொடியே நிலைக்கக் கூடியது. ஒளிப்படம் எடுப்பவரை போட்டோகிராபர் என்பது போல முழுவுருவவியல் எடுப்பவரை ஹாலோகிராபர் என்கின்றனர். தொட்டு பார்க்கக்கூடிய முழுவுருக்கள் தற்சமயம் பயன்பாட்டிலிருக்கின்றன.


பல்மருத்துவத்தில் முழுவுருவவியல்

ஏழு பரிமாண முழுவுருவவியல் விண்வெளி ஆராய்ச்சியில் பயன்படுகிறது. செயற்கை நுண்ணறிவு முழுவுருக்களும் இப்போது பயன்பாட்டுக்கு வந்து விட்டன. இவ்வளவு விரிவாக முழுவுருவவியல் பற்றி ஏன் குறிப்பிடுகிறேன் தெரியுமா?

முழுவுருவவியல் தொழில்நுட்பம் நவீனப் பல் மருத்துவத்தில் பயன்படுகிறது. குறிப்பாக;

* உயர்துல்லியம்

* தொடர்பு இல்லாத அளவீடு

* நோயறிதலுக்கான அழிவில்லாத முப்பரிமாண நோய் நிலைக் குறைப்பை வழங்குகிறது.

* பற்சீரமைப்புப் பகுப்பாய்வு

* செயற்கைப் பல்லியல் திரிபு மதிப்பீடு

* உள்வைப்பு அறுவைச் சிகிச்சையில் மெய்நிகர் உள்ளடக்கத்தை (AR) கணிசமாக மேம்படுத்துகிறது.

* முழுவுருவவியல் பல்வார்ப்புகளின் எண்ணிமச் சேமிப்பை எளிதாக்குகிறது.

* உடல் சேமிப்புச் செலவுகளைக் குறைக்கிறது.

* மேம்பட்ட நோயாளிக் கல்விக்கான யதார்த்தமான முப்பரிமாண காட்சிப்படுத்தலைச் செயல்படுத்துகிறது.


பல் மருத்துவத்தில் முழுவுருவவியலின் முக்கியப் பயன்பாடுகள்

* எண்ணிம ஆய்வு மாதிரிகள் காப்பகம் - முழுவுருக்கள் பல் வார்ப்புகளுக்கு முப்பரிமாணப் பதிவு செய்யக்கூடிய மற்றும் சேமிக்கக் கூடிய வடிவமைப்பை வழங்குகின்றன. இது இயற்பியல் சேமிப்பு இடத்தின் தேவையைக் குறைக்கிறது.

* பல் மருத்துவம் மற்றும் பல் இயக்கம் - இது பல் அசைவைப் பகுப்பாய்வு செய்யவும், சுழற்சி மையங்களைத் தீர்மானிக்கவும் தாடை எலும்புகளில் ஏற்படும் சிதைவை ஆய்வு செய்யவும் குறிப்பாக அழுத்தத்தின் கீழ் பல்லைச் சுற்றிய தசை நார்களைக் கண்காணிக்கவும் பயன்படுகிறது.

பல்மருத்துவம் மற்றும் பல் மறுசீரமைப்பு

முழுவுருவவியல் குறுக்கீட்டு விளைவளவியல் (Holography Interoferometry) பல் மருத்துவச் சாதனங்களில் உள்ள சிதைவு மற்றும் பற்ற வைக்கப்பட்ட தங்க மூட்டுகளில் உள்ள திரிபு ஆகியவற்றைத் துல்லியமாக அளவிட அனுமதிக்கிறது.

* அளவீடு மற்றும் நோயறிதல்

விளிம்பு படமிடல் (Mapping) போன்ற நுட்பங்கள் மறைப்பு மேற்பரப்புத் தேய்மானத்தை அளவிட முழுவுருவவியல் பயன்படுகிறது. பல் இயக்கத்தை அளவிடவும் முழுவுருவவியல் உதவுகிறது.

* ஆராய்ச்சி மற்றும் பயிற்சி

இது பல் கட்டமைப்புகளை படிப்பதற்கான ஒரு கருவியை வழங்குகிறது மற்றும் உடற்கூறியல் மற்றும் மறுசீரமைப்பு பல் மருத்துவத்தை கற்பிப்பதற்கான முப்பரிமானப் பயிற்சி உதவிகளை வழங்குகிறது.

* எதிர்காலப் போக்குகள்

மிகை மெய்மம் (Augment Reality) மற்றும் முப்பரிமாணத் தரவுகளுடன் ஒருங்கிணைப்பு. உட்புறப் பல் கட்டமைப்புகளின் முழுவுருவவியல் காட்சிப்படுத்தல் மற்றும் நோயாளி சார்ந்த ஊடாடும் சிகிச்சைத் திட்டமிடலைச் செயல்படுத்துகிறது.

பல் மருத்துவத்தில் முழுவுருவவியல்

ஆர். கோவிந்தசாமி, மணப்பாறை

ஒரு பல் நோயாளிக்கு ஹாலோகிராபி வழியாக, பல் பிரச்சனைகளை முழுமையாகக் குணப்படுத்த முடியுமா?

மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:

நீங்கள் சொல்வது அறிவியல் புதினங்களில் நடக்கலாம். பல் மருத்துவத்தில் 12 பிரிவுகள் உள்ளன. அவற்றில் பற்சீரமைப்பு இயலில்தான் முழுவுருவவியல் எனப்படும் ஹாலோகிராபியின் பயன்பாடு அதிகம். பொதுவாக ஒரு தொழில்நுட்பம் மேற்கத்திய நாடுகளில் தோன்றினால், அது இந்தியாவில் முழுமையான பயன்பாட்டிற்கு வரக் குறைந்தது இருபது வருடங்கள் ஆகும். முழுவுருவவியல் எனும் ஹாலோகிராபி ஒரு கருவி அவ்வளவுதான். அதனைப் பயன்படுத்திப் பல் மருத்துவர் சிறப்பான சேவையினைத் நோயாளிகளுக்கு வழங்க முடியும்.



பல் மருத்துவத்தில் முழுவுருவவியலின் நன்மைகள்

* உயர்துல்லியம்

அழிவில்லாத முப்பரிமாணக் காட்சிப்படுத்தல் மேம்படுத்தப்பட்ட நோயறிதல் திறன் பதிவுகளை எளிதாகவும் நீண்டகாலச் சேமிப்பாகவும் சேமித்தல்

* வரம்புகள்

சில பகுதிகளில் மோசமான தரம் (எடுத்துக்காட்டு வெட்டுப்பகுதி) மற்றும் தரவுகளுக்கான குறிப்பிடதக்க உயர்தெளிவுத்திறன் சேமிப்பின் தேவை.

இது காட்சிப்படுத்தல் மற்றும் பகுப்பாய்வில் பல முன்னேற்றங்களை வழங்கினாலும் வழக்கமான அன்றாட மருத்துவ நடைமுறைகளில் (பாரம்பரிய பிளாஸ்டர் மாதிரிகள்) முழுமையான மாற்றமில்லை.

முழுவுருவவியல் பற்சீரமைப்பு இயலில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.

பற்சீரமைப்பு பகுப்பாய்வு, சிகிச்சைத் திட்டம், நோயாளிகளுக்கான கல்வி மற்றும் மருத்துவ ஆவணங்களில் முழுவுருவவியல் கோலோச்சுகிறது.

முழுவுருவவியல் தீவிர ஆராய்ச்சிகளின் விளைவால் எதிர்காலத்தில் மிகச் சிறப்பாக நிற்கும். நோயாளியின் கையைக் கடிக்காத கட்டணம், நோயாளிகளுக்கும் தொழில்நுட்பத்துக்கும் இடையே ஆன நல்லுறவு எதிர்காலத்தில் கட்டாயத் தேவை.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/medicine/dental/serial/serial1/p47.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License