ஒருவருக்குத் தலை வலி வருகிறதென்றால், தசை அழுத்தம், இரத்த நாள சுருக்கம் அல்லது வீக்கம் (கடினத்தன்மை, அடைப்பு அல்லது பிடிப்பு), பதட்டம், நீர்ச்சத்துக்குறைவு, தூக்கமின்மை, கண்ணுக்கு அதிக வேலை, உணவு பழக்கவழக்கம் (சீஸ், சிட்ரஸ், சாக்லட், காபி, கோலா அதிகம் உண்ணுதல்), உயர் இரத்த அழுத்தம், ஆல்கஹால் ஹாங்ஓவர், நோய் தொற்று, காபியை இடை நிறுத்தல், சைனஸ், மூளை குருதி நாள நெளிவு மற்றும் பல் பிரச்சனைகளான ஞானப்பல் முளைத்தல், தூக்கத்தில் பற்களை நறநறத்தல், பற்சொத்தை, ஈறுநோய், வாய் தொற்றுகள், தாடை மூட்டுக் கோளாறு என்று பல காரணங்கள் இருக்கின்றன.
வாயில் நோய் தொற்றோ, வீக்கமோ ஏற்பட்டால் வலியானது தலைக்கும் கழுத்துக்கும் பரவி ஒற்றைத் தலைவலி அறிகுறியை ஏற்படுத்துகிறது.
பல் பராமரிப்பில் அடிப்படை 2-2-2 விதிகள் உள்ளன.
தினம் இருவேளை இரண்டு, இரண்டு நிமிடம் பல் துலக்கி வருடத்திற்கு இரு முறை பல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.
பல்வலி இருந்தால் 3-3-3 விதிகளை பின்பற்ற வேண்டும்.
வலி நீக்கத்திற்கான மாத்திரைகளைத் (3X 200mg) தினமும் மூன்று வேளை என்று மூன்று நாட்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்று நாளைக்கு மென்மையான பற்குச்சம் கொண்ட பல் தூரிகையைப் பயன்படுத்த வேண்டும். மூன்று நாட்களுக்கு மென்மையான உணவை உண்ண வேண்டும். அதன் பின் பல் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
|
இரட்டைக் குழந்தைகள்
“இருபது வருட காத்திருப்புக்குப் பின்
செயற்கை கருத்தரிப்பில் பிறந்த
இரட்டைக் குழந்தைகள் சிரித்தன
பூத்தன வானவில்கள் கைகோர்த்து”
- அ. ஜன்னத்துல் பிர்தௌஸ்
|
நீங்கள் ஒரு பல் மருத்துவமனைக்குச் செல்கிறீர்கள். பல் மருத்துவத்திற்கான சிறப்பு நாற்காலியில் நீங்கள் அமர வைக்கப்பட்டு உங்கள் வாயும் பற்களும் பரிசோதிக்கப்படுகின்றன.
அப்போது உங்கள் பல் மருத்துவர் ‘0’ லிருந்து ‘6’வரையிலான ஏதாவது ஒரு எண்ணை சப்தமாக தனது உதவியாளரிடம் கூறுவார்.
அதனைக் கேட்கும் தாங்கள், பல் மருத்துவர் தனது உதவியாளரிடம் ஏதோ ரகசியமாகப் பேசுகிறார் என்று நினைக்கலாம். ஆனால், அது உண்மையில்லை.
அவர், உங்கள் பற்களின் ஈறுகளின் நிலையைக் கூறுகிறார்.
உங்கள் ஈறுகளும் பற்களும் நகராத திடமான யூனிட்கள் அல்ல பற்களும் ஈறுகளும் சந்திக்கும் இடத்தில் V வடிவ புறவெளி இருக்கும். அந்த புறவெளியை குழிவு (Sulcus) என அழைப்பர். ஆரோக்கியமான பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையே ஆன புறவெளி குறுகியதாக இருக்கும்.
பல் மருத்துவர் கையில், குத்திச் சோதிக்கும் ஊசிக்கருவி (Probe) எனும் சிறிய அளவீடுக் கருவி இருக்கும். அதனைக் கொண்டு, அவர் ஒவ்வொரு பல்லையும் மில்லிமீட்டர் அளவில் கச்சிதமாக அளப்பார். அதனை, இடைப்பள்ள ஆழம் (Pocket Depth) என்பர், அதாவது, ஈறுகளுக்கும் உங்கள் பல்லின் வேர் மேற்பரப்புக்கும் இடையில் உருவாகும் இடைவெளி எனக் கூறலாம்.
* நோயாளியின் பல்லையும் ஈறையும் ஆராய்ந்து விட்டு பல் மருத்துவர் ‘O’ அல்லது ‘1’ எனச் சொல்கிறார் என்றால் நோயாளிக்கு தரமான ஆரோக்கியமான ஈறுகள் இருப்பதாகப் பொருள். வீக்கம் இல்லை. இரத்தக்கசிவு இல்லை. ஈறு நோய் இல்லை.
* பல் மருத்துவர் ‘2’ என்று சொன்னால், நோயாளிக்கு ஆரோக்கியமான பற்கள் இருப்பதைத்தான் சுட்டுகிறது.
* பல் மருத்துவர் ‘3’ என்று சொன்னால், ஈறுகளில் சிறு வீக்கம் இருக்கிறது, பெரிய பிரச்சனை எதுவுமில்லை. ஈறு அழற்சியின் ஆரம்பகட்டம், ஈறு நோயின் முதல் நிலை என்றுபொருள்.
* பல் மருத்துவர் ‘4’ அல்லது ‘5’ என்று சொன்னால், ஈறுநோய் முற்றிய நிலையில் இருக்கிறது, பற்புறத் திசு நோய் (Periodontitis) உள்ளது. கிருமிகள் ஈறு தசைகளுக்கும் எலும்புகளுக்கும் இடையே பல்கிப் பெருகுகிறது. இவ்வகை நோயாளிகளுக்கு சிறப்புச் சிகிச்சை தேவை. ஆழமான பற்சுத்தம், வேர் சிகிச்சைத் திட்டமிடல் செய்ய வேண்டுமென்று பொருள்.
* பல் மருத்துவர் ‘6’ என்று சொன்னால், மிகக் கடுமையான ஈறுஅழற்சி மற்றும் தொற்றுநோயால் நோயாளி அவதிப்படுகிறார் எனப் பொருள். ஈறு திசுக்களும் எலும்புகளும் இழப்பு. உடனடி பரபரப்பான சிகிச்சை, ஈறு அறுவை சிகிச்சை எலும்பு மற்றும் திசு ஒட்டும் அறுவை சிகிச்சை தேவை.
மேற்காணும் எண்களில் 3, 4, 5, 6 எண் உள்ள நோயாளிகளின் பல் பிரச்சினையால் நிச்சயம் அவர்களுக்கு பல்வலி வரும்.
இந்தப் பல் வலி வரும் முன் காப்பே நல்லது.
மனித உடலில் ஏழு ட்ரில்லியன் நரம்புகள் உள்ளன. மூளை தண்டுவடம் மற்றும் அனைத்து உடல் பாகங்களுடனும் ஒரு மின் இணைப்பு வலையமைப்பு போல் அமைந்துள்ளது. இவற்றுள், 12 ஜோடி கிரேனியல் நரம்புகள் (Cranial Nerves) மற்றும் 21 ஜோடி தண்டு வட நரம்புகளும் அடக்கம்.
|
தலைவலிக்குப் பல் மருத்துவம்
ஆர் ராஜலட்சுமி, சங்கரன்கோவில்.
தலைவலி வந்தால் கண் மருத்துவரிடம் செல்ல வேண்டுமென்று சொல்வார்கள், சிலர் பல் மருத்துவரிடம் சென்றும் பார்க்க வேண்டுமென்கிறார்களே...?
மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:
தலைவலிக்குப் பொதுவாக பல காரணங்கள் இருக்கின்றன. கண், காது, மூக்கு, வாய் மற்றும் பற்களில் எந்தப் பிரச்சனை வந்தாலும் தலைவலி வரும். கண் மருத்துவர், காது - மூக்கு - தொண்டை மருத்துவர் பரிசோதனையைப் போல், பல் மருத்துவரிடமும் பரிசோதனை செய்து, தலைவலிக்கு உண்மையான காரணத்தைக் கண்டறியலாம். பல் பிரச்சனை காரணமாயிருந்தால், பல் மருத்துவரிடம் தகுந்த சிகிச்சை பெற்று நலம் பெறலாம்.
|
மத்திய நரம்பு மண்டலம் (மூளை, தண்டுவடம்), வெளிப்புற நரம்பு மண்டலம் (உடலின் மற்ற பாகங்களின் இணைப்பு) 12 கிரேனியல் எனப்படும் மூளை நரம்புகளின் பெயர் கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்றன.
1. நுகர்வு நரம்பு (Olfactory)
2. பார்வை நரம்புகள் (Optic Nerves)
3. விழி இயக்க நரம்பு (Oculomotor)
4. நான்காம் நரம்பு (Trochlear Nerve)
5. முப்பெரு நரம்பு (Trigeminal)
6. ஆறாவது மண்டை நரம்பு (Abducens Nerve)
7. புறநோக்கு நரம்பு (Facial Nerve)
8. கேள்வி நரம்பு (Vestibulocochlear Nerve)
9. நாக்குத் தொண்டை நரம்பு (Glossopharyngeal Nerve)
10. அலைவு நரம்பு (Vagus Nerve)
11. துணை நரம்பு (Accessory Nerve)
12. கீழ்நாக்குநரம்பு (Hypoglossal Nerve)
இவற்றுள், முப்பெரு நரம்பு எனப்படும் நரம்பு பல் பிரச்சனைகளுடன் தொடர்புடையது. அதனால் இந்த நரம்பை ‘பல் மருத்துவர் நரம்பு’ என அழைப்பர். இது பற்கள், ஈறுகள் மற்றும் வாய்ப்பகுதியின் உணர்வு நரம்பூட்டலைச் செய்கிறது. தவிர மெல்லுதல் தொடர்பான தசையை இந்த நரம்பு கட்டுப்படுத்துகிறது.
பல் பிரச்சனை சார்ந்த தலைவலி சகிக்க முடியாத அளவுக்கு கொடூரமாய் இருக்கும்.
முழுமையான பல்சுத்தம் பல் தொடர்பான தலைவலிகளை போக்கும் தடுப்பு மாமருந்து. ஆகவே பற்சுத்தம் பேணுவோம் தலைவலியிலிருந்து விடுபடுவோம்.