மூளையில் இருந்து வரும் ஏழாவது நரம்பான முக நரம்பு பாதிப்படைவதால் முகத்தின் ஒரு பக்கம் செயலிழந்து போவதையே முகவாதம் என்கிறோம். இந்த நரம்பு பாதிப்பினால் குறிப்பாக முகத்தசைகள், கண்ணீர் சுரப்பிகள், உமிழ்நீர் சுரப்பிகள், உட்செவி தசைகள், நாக்கின் சுவை மொட்டுக்கள் மிக பாதிப்படைகின்றன. இதுவும் ஒரு வகையான வாத பாதிப்பு என்றாலும் கை மற்றும் கால்களில் ஏற்படும் வாத நோய் போன்று அல்லாமல் முற்றிலும் குணப்படுத்தக் கூடிய ஒன்றே.
முகவாதத்திற்கான முக்கியக் காரணங்கள் இதுவரைத் துல்லியமாகக் கண்டறியப்படவில்லை என்றாலும், வைரஸ் தொற்று (ஹெர்பஸ் வைரஸ் ), குளிர்காற்று காதின் வழியாகச் சென்று நரம்பைப் பாதிப்பது, கடுளமயான தலைவலி, உட்செவியில் ஏற்படும் நோய்த் தொற்று, உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், முகம் மற்றும் மூளையில் ஏற்படும் கட்டிகள் மற்றும் புற்றுநோய், விபத்தினால் மண்டையோட்டில் ஏற்படும் எலும்பு பாதிப்புகள் போன்றவைகளும் காரணங்களாக அமைகின்றன.
பெரும்பாலும் குளிர் காலங்களில் வயது வித்தியாசமின்றி அளனத்து வயதினரையும் பாதிக்கும் நோயாக இது இருக்கிறது.
ஒரு பக்க முகத் தசைகள் வலுவிழத்தல், கண் இமை மூடாதிருத்தல், நாக்கின் சுளவ அரும்புகள் பாதிப்படைவதால் சுவையைக் கண்டறிவதில் ஏற்படும் சிரமம், காதின் பின்பக்கத்தில் வலி, உணவு உண்ணுவதில் சிரமம், தலைவலி, வாய் ஒரு பக்கமாகக் கோணியிருத்தல் போன்றவை முகவாதப் பாதிப்பிற்கான அறிகுறிகளாகும்.
இதைக் கண்டறிய, மருத்துவர்களின் ஆலோசனைப்படி இரத்தம், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனைகள் தேவைப்பட்டால் செய்ய வேண்டி வரும். அது மட்டுமில்லாமல், மருத்துவர்களின் பரிந்துரைப்படி மருந்துகளும் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
முகவாதத்திற்கு மிக முக்கியமாக இயன்மறை சிகிச்சை எனப்படும் பிசியோதெரபி சிகிச்சையானது மிகுந்த பலன் கொடுக்கும். முகவாதத்தினால் பாதிப்படைந்த ஒருவர் முதலில் தனக்கு ஏற்படும் தேவையில்லாத பயத்தையும், குழப்பங்களையும் கைவிட்டு மருத்துவரை அணுகித் தெளிவு பெறுவதுடன் இயன்முறை சிகிச்சை மருத்துவரை அணுகி, நோய் தீர ஆலோசனை பெறுவது நல்லது. அதன் அடிப்படையில் இயன்முறை மருத்துவர் முகவாதத்திற்கு ஏற்ற சிகிச்சை முறைகளை மேற்கொள்வார்.
பாதிக்கப்பட்ட நரம்பின் தன்மைய ஆராய்ந்து, பிசியோதரபி முறையில், தசைகளுக்குச் சிறிய அதிர்வுகளுடன் கூடிய மின் தூண்டுதல் சிகிச்சை, முகத்தசைகளை இயக்குவதற்கு முகப் பயிற்சி, மசாஜ் போன்ற இயன்முறை மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை தடங்கல் இல்லாமல் எடுத்துக் கொண்டால் மூன்றிலிருந்து ஆறு வாரங்களுக்குள் முற்றிலும் முகவாதப் பாதிப்பிலிருந்து விடுப்டலாம்.
நோய்ப் பாதிப்பின் போது பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே மருத்துவர்கள் மற்றும் பிசியோதெரபி மருத்துவர்களின் ஆலோசனைப்படி, கண் பாதிப்பிற்குத் திரவக் கண் மருந்து, மற்றும் எளிய முறை முகப்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் உரிய மருத்துவ ஆலோசனை இல்லாமல் மருந்துகளையோ அல்லது முகப்பயிற்சிகளையோக் கண்டிப்பாக மேற்கொள்ளக் கூடாது.
முகவாதத்தால் பாதிப்படைந்தவர்கள் பயணத்தின் போது, கண்டிப்பாக கண்ணுக்குக் கண்ணாடி அணிய வேண்டும். இதன் மூலம், இமைகள் திறந்திருப்பதால் கண்ணில் குளிர் காற்று படுவதையும், தூசு மற்றும் அழுக்குகள் படுவதைத் தடுக்க முடியும். அதே போல் காதில் குளிர் காற்று பட்டு பாதிப்படையாமல் இருப்பதற்குக் காதில் பஞ்சு வைத்துக் கொள்வது பயன்தரும். உணவைச் மெல்லப் பயன்படும் தசைகள் வலுப்பட சூயிங்கம் மெல்வது உதவும்.