சர்வதேசத் தமிழ்க் கவிதைப் போட்டி
மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை, திருமூர்த்திமலை தென் கயிலைத் தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து சர்வதேசத் தமிழ்க் கவிதைப் போட்டியினை நடத்தவிருக்கிறது. இப்போட்டிக்கு உலகம் முழுவதுமிருந்து கவிதைகள் வரவேற்கப்படுகின்றன.
விதிமுறைகள்
* தமிழ் மொழி, தமிழ் கல்வி, தமிழ் பண்பாடு, தமிழரின் வாழ்வியல் முறைகள், பண்பாடு, அடையாளம், சாதனைகள், விளையாட்டுகள், மருத்துவம், உணவு முறைகள், நம்பிக்கை, திருவிழாக்கள், வழிபாட்டு முறைகள் ஆகிய தலைப்புகளில் ஏதாவதொரு தலைப்பில் கவிதை எழுதப்பட வேண்டும்.
* இப்போட்டியில் பங்கேற்பதற்கு வயது வரம்பு எதுவுமில்லை.
* கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
* ஒருவர் ஒரு தலைப்பில் மட்டுமே எழுதி அனுப்ப வேண்டும்.
* அனுப்பப்படும் கவிதை பிற நூல், இதழ்கள் மற்றும் வலைத்தளங்களில் முன்பே இடம் பெற்றிருக்கக் கூடாது.
* இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் கவிஞர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள், கவிதையின் தலைப்பிற்கேற்ப ஏ-4 தாளில் ஒருங்குறி (Unicode), பாமினி (Bamini) எழுத்துரு (Font) 12 அளவில், 1.5 இடைவெளியில் (Space) தட்டச்சு செய்து 150 சொற்களுக்குக் குறைவில்லாமல் கவிதையினைப் படைத்து mkuannalcon@gmail.com அல்லது mkutamil2010@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் ஏதாவதொன்றுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
* போட்டிக்கான கவிதைகள் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 30-3-2018.
பரிசுகள்
* போட்டிக்கு வரப்பெற்ற கவிதைகளில் மூன்று கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசு ரூ 10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ 7 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ 5 ஆயிரம் என்று பரிசு அளிக்கப்படும்.
* ஆறுதல் பரிசாகப் பத்து கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு கவிதைக்கும் ரூபாய் ஆயிரம் மட்டும் வழங்கப்படும்.
* தேர்வு செய்யப்படும் அனைத்துக் கவிதைகளும் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்படும்.
* தேர்வு செய்யப்பட்ட கவிதைகளை எழுதிய கவிஞருக்கு அந்தக் கவிதை நூல் ஒன்று வழங்கப்படும்.
தகவல்:
போ. சத்தியமூர்த்தி
தமிழியல் துறைத் தலைவர் (பொ),
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
மதுரை - 625021.
அலைபேசி எண்: 94886 16100.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.