இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
இந்து சமயம்

விரதம் - விரதத்தின் முக்கியத்துவம்

முனைவர் ஸ்ரீவாலாம்பிகை

பகுதி - 4

76. சதபல விரதம்

இது ஆவணி மாத கிருஷ்ண பட்ச அஷ்டமியில் அநுட்டிப்பது. இதில் ரோகிணி நட்சத்திரம் கூடின் நலம். புத வாரம், சோம வாரம் கூடினும் நலம். இதில் விரதமிருப்பவன் பிரேதயோனி அடையினும் நீங்குவன்.

77. கிருஷ்ண ஜன்மாஷ்டமி

இது ஆவணி மாதம் கிருஷ்ண பட்ச அஷ்டமியில் ரோஹிணி நட்சத்திரம் கூடிய தினத்தில் கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி உபாசிப்பது.

78. ஜேஷ்டா விரதம்

புரட்டாசி மாதம் பட்ச அஷ்டமியில் ஜேஷ்டாதேவியை உபாசித்து அநுட்டிப்பது. இது இலட்சுமி பரிஹாரத்தின் பொருட்டு அநுட்டிப்பது. இது மூன்று தினம் அநுஷ்டிக்கின் உத்தமம்.

79. தூர்வாஷ்டமி விரதம்

இது புரட்டாசி மாதம் சுக்ல பட்ச அஷ்டமியில் அநுஷ்டிப்பது. வெண்ணிறமாய்ப் படர்ந்த வடக்குச் செல்லும் அறுகால் உன்னைப் போல் வேரோடிச் சந்ததி வளர்ந்திருக்க வென்று சிவமூர்த்தியையும் கணேச மூர்த்தியையும் பூசிப்பது.

80. மஹாலட்சுமி விரதம்

இது புரட்டாசி மாதம் சுக்கிலாஷ்டமி முதல் பதினாறு நாள் லட்சுமியை நோக்கி விரதமிருப்பது. இதனை அநுட்டிப்போர் எல்லா நலமும் பெறுவர்.

81. மஹாஅஷ்டமி விரதம்

இது ஐப்பசி மாதம் சுக்ல பட்ச அஷ்டமியில் தட்ச யஞ்ஞ நாசனியாகிய காளியை எண்ணி அநுட்டிப்பது.

82. நவமி - ஸ்ரீராமநவமி விரதம்

இது சித்திரை மாதம் சுக்லபட்ச நவமியில் அநுஷ்டிப்பது. இத்திதி மத்யான்ன வியாபினியாய்ப் புனர்பூச நட்சத்திரம் கூடியதாயின் நலம்.

83. சரஸ்வதி புஸ்தக மண்டல விரதம்

இது ஐப்பசி மாதம் சுக்ல பட்ச நவமியில் சரஸ்வதியை எண்ணிப் பூசிப்பது.

84. அட்சய நவமி விரதம்

இது கார்த்திகை மாதம் சுக்கில பட்சத்தில் நவமி திதியில் அநுஷ்டிப்பது. இது துவாபரயுகாதி இந்நாளில் கூச்மாண்டன் என்னும் அசுரன் விஷ்ணுமூர்த்தியால் கொல்லப்பட்டான். இத்தின முதல் 3 நாள் துளசி தளத்தைக் கைக்கொண்டு விரதமிருக்கின் கன்னியாதான பலத்தையடைவர். இத்தினத்தில் துளசியை விஷ்ணுவிற்கு விவாஹம் நடத்தினால் பெரும் புண்ணியம் அடைவர்.



85. தசமி விரதம் - தசஹாதசமி விரதம்

இது ஆனி மாதம் சுக்கில பட்ச தசமியில் அநுஷ்டிப்பது. இது ஸம்வச்சரத்தின் முகமாகக் கூறப்பட்டிருக்கிறது. இத்தினத்தில் ஒரு நதியை அடைந்து ஸ்நான தானாதிகள் செய்து நியமத்துடன் இருப்பவர் பத்து வித பாவங்களிலிருந்து நீங்குவர். ஆதலால் இதற்குத் தசஹரதசமி என்று பெயர்.

86. திக்தேவதா விரதம்

இது ஆடி மாதம் சுக்ல தசமியில் அநுஷ்டிப்பது. இதில் திக்தேவதைகளை அந்தத் திக்குகளில் ஸ்தாபித்துப் பூசித்தல் வேண்டும்.

87. தசாவதாரவரதம்

இது புரட்டாசி மாதம் சுக்ல தசமி விஜயதசமியில் தசாவதார சுவர்ண பிரதிமை செய்வித்துப் பூசை முதலியன செய்து விரதமிருப்பது.

88. விஜயதசமி

இது ஐப்பசி மாதம் சுக்ல பட்ச தசமியில் தாரகோதயம் விஜயமென்று கூறப்படுதலால் விஜயதசமி எனப்படுகிறது. இத்தினத்தில் வெற்றியை விரும்பினவர்கள் தேவியைப் பூஜிக்க. வன்னி பூஜையும் இத்தினத்தில் உண்டு.

89. ஏகாதசி - வஞ்சுள ஏகாதசி விரதம்

அருணோதயத்தில் தசமி சம்பந்தமாய்ச் சூரியோதயத்தில் ஏகாதசி வியாபித்திருத்தல் நலம் என்பர். இத்தினத்தில் ஔதும்பர பாத்திரமாகிய அத்தி மரத்தால் செய்த பாத்திரத்தில் நீர் கொண்டு விரத சங்கற்பஞ் செய்து கொண்டு விரதமிருந்து விஷ்ணுமூர்த்தியைய் பூசித்து அந்நாளில் ஆகாரம் முதலியன இல்லாமலும், பகலிற் தூங்காமலும், இரவில் விஷ்ணுவை. மந்திர பூர்வமாகப் பூசித்துப் பரான்னம் புசியாமலுமிருந்து மறுநாள் விஷ்ணுவைப் பூசித்துத் துளசிதளத்துடன் தீர்த்தார்ப்பணம் பெருமாளுக்குத் தர்ப்பணஞ் செய்து நெல்லிக்கனியுடன் பாரணஞ் செய்யில் சுத்தியடைகிறான். இத்தினத்தை “தத்ரசுதாசிகை ஏகாதசி யுதாத்வாதசி உன்மீலினீ; த்வாதசி வா;த்ததே சேத்ஸாவியஞ்ஜலி” என்பதால் வஞ்சுள ஏகாதசி என்பர்.

90. சுக்ல கிருஷ்ண ஏகாதசி

மார்க்கசீர்ஷ சுக்ல பட்சத்தாயினும், கார்த்திகையிலாயினும் ஏகாதசி வியாபிப்பது. இதில் தசமியில் ஒரு வேளை பூசிப்புள்ளவனாய் ஏகாதசியில் நியமத்துடன் கணேசரைச் சோடச உபசாரத்துடன் பூசித்துத் சதுரச்ர வேதிகையில் காரெள் பரப்பி அதன் மீது பதினாறு இதழ்க் கமலம் எழுதி அதன் நடுவில் கும்பம் நிறுத்தி அதில் நிறையக் காரெள் நிரப்பிக் கறுப்பு வஸ்திரம் தரித்து, இரண்டு அரசந்தளிர் பஞ்ச ரத்னமிட்டுச் சங்கர்ஷ்ணாதியரையும், கண மாத்ருகைகளையும், ஷேத்ர பாலகரையும், பூசித்து மற்றப் பக்கத்தில் சுக்ல ஏகாதசியின் பொருட்டு வெள்ளெள் பரப்பி, வெள்ளை வஸ்திரம் கலசத்திற்கு அகணிந்து, மேற்கூறிய தேவ கணங்களைப் பூஜித்துக் கும்பத்தை எடுத்து விட்டு லட்சுமி நாராயணனை அவனது அஷ்ட லட்சுமிகளுடனும் பரிஜனங்களுடனும் ஆவாகித்துப் பூஜித்து, திக்பாலகர்களையும், மற்றத் தேவர்களையும் பூசித்துத் தானாதிகள் செய்து விரதமிருந்து மறுநாள் ஸ்நானாதிகள் முடித்து ஓமாதிகள் செய்து தேவதாஹவி கொடுத்து விரதமிருந்து மறுநாள் பாரணஞ் செய்க. இவ்வாறு செய்தவர் விஷ்ணுபதம் பெறுவர்.



91. கோபத்ம விரதம்

ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசியில் அநுஷ்டிக்கப்படுவது. பசுக்கள் கட்டுமிடத்தில் கோமயத்தால் மெழுகிட்டுப் பச்சரிசி மாவில் 33 இதழ்க்கமலம் எழுதிப் பஞ்சவர்ணத்தால் சோபிக்கச் செய்து பூசித்து அதன் மத்தியில் சர்வதோபத்ர மண்டலத்தில் விஷ்ணு பிரதிமை பொன்னால் செய்வித்து விதிப்படி பூசித்து ஹோமஞ் செய்து கன்றுடன் கூடிய பசு வினை ஆசார்யருக்குத் தானஞ் செய்து வேதியர்க்கு அன்னமளிப்பது. இதை அநுஷ்டிப்போர் சர்வ காமியங்களையும் அடைவர்.

92. கார்த்திகை சுக்ல ஏகாதசி விரதம்

இதில் நியமத்துடன் விஷ்ணு ஸதாபனஞ் செய்து பூசிப்பது. இது பீஷ்மர் சரசயனத்திலிருந்து பாரத முடிவுவரைக் கண்ட நாளாதலின் இதில் பீஷ்ம பஞ்சக விரதம் இருப்பர்.

93. மார்கழி ஏகாதசி விரதம்

இது மார்கழி மாதம் கிருஷ்ண பட்ச ஏகாதசியில் அநுஷ்டிப்பது. இந்நாள் தேவர்க்கு இடுக்கண் புரிந்த முராசுரனை விஷ்ணு கொன்று தேவரைக் களிப்பித்த நாள். இதில் உதயம் ஏகாதசி, மத்யம் த்வாதசி, அந்தியம் திரயோதசி விரதமிருக்கின் ஆயிரம் ஏகாதசி பலம் உண்டு.

94. வைதரணி விரதம்

இது மார்கழி மாதம் சுக்ல பட்ச ஏகாதசியில் அநுஷ்டிப்பது. இது பீஷ்மர் சரசயனத்திலிருந்து நாள். இதில் பசுவின் வாலைப் பிடித்துக் கொண்டு தர்ப்பணாதிகள் செய்து கோபூசை செய்து விரதமிருப்பது.

95. துவாதசி - சைத்ர சுக்ல த்வாதசி விரதம்

இது சித்திரை மாதத்தில் சுக்கில பட்ச துவாதசியில் விரதமிருப்பது. இது எல்லா நலமும் தரும்.

96. வைசாக சுக்ல துவாதசி விரதம்

வைகாசி மாதம் சுக்ல பட்சத்வாதசியில் விரதமிருப்பது. இதில் விஷ்ணுவைப் பூசிக்கின் எல்லா நலமும் அடைவர்.

97. ஆஷாட சுக்ல துவாதசி விரதம்

ஆடி மாதம் சுக்ல த்வாதசியில் விஷ்ணுவை எண்ணிச் செய்வது. இதை அநுஷ்டிப்போர் சகல சித்தியும் பெறுவர்.



98. ச்ராவண சுக்லத்வாதசி விரதம்

ஆவணி மாதம் சுக்ல த்வாதசியில் விரதமிருப்பது. இதில் பவித்ராரோபணஞ் செய்து விரதம் இருப்பது.

99. வாமன ஜயந்தி விரதம்

இது புரட்டாசி மாதம் சுக்ல பட்ச த்வாதிசியில் திருவோண நட்சத்திரத்துடன் கூடிய நாள். இந்நாளில் தேவர் பொருட்டுப் பலியை அடக்கத் திரி விக்ரம அவதாரங் கொண்ட வாமன மூர்த்தியைப் பூஜித்து விரதம் இருப்பது.

100. க்ஷூராப்தி சயன விரதம்

இது கார்த்திகை மாதம் சுக்ல த்வாதசியில் அநுஷ்டிப்பது. இதில் லட்சுமி நாராயண பூஜை செய்து விரதமிருப்பது. இதில் விஷ்ணுமூர்த்தி க்ஷூராப்தி சயனத்திலிருந்து பிருந்தாவனத்தில் எல்லாத் தேவைகளாலும் பூசிக்கப்பட்டனர்.

தொடரும்...


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/hindu/p187c.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License