இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
இந்து சமயம்

விரதம் - விரதத்தின் முக்கியத்துவம்

முனைவர் ஸ்ரீவாலாம்பிகை

பகுதி - 5

101. திரயோதசி - ஜய பார்வதி விரதம்

இது ஆடி மாதம் சுக்ல பட்ச த்ரயோதசியில் அநுட்டிப்பது.

102. கோதிராத்ர விரதம்

இது புரட்டாசி மாதம் சுக்ல பட்ச த்ரயோதசியில் அநுஷ்டிப்பது.

103. அசோகாதிராத்ர விரதம்

ஐப்பசி மாதம் சுக்ல த்ரயோதசியில் அநுஷ்டிப்பது.

104. மகாவாருணி விரதம்

இது சித்திரை மாதம் கிருஷ்ண பட்ச த்ரயோதசியில் அநுஷ்டிப்பது. இது சனி வாரமும் சதய நட்சத்த்திரமும் கூடின் மகாமக வாருணியென்று கூறப்படும். இது திரிகோடி பலந் தருவதாம்.

105. சநித்திரயோதசி பிரதோஷ விரதம்

இது கார்த்திகை, ஆவணி மாதங்களில் நேரிடின் அதியுத்தம தினமென்பர். இந்நாள் இந்திரன் நமுசியையும், விருத்திராசுரனையுங் கொன்று சிவபூசை செய்து சித்தி பெற்ற நாள். இதில் சுக்ல பட்சமாயின் விசேடம். இதில் விதிப்படி சிவபூசை செய்து விரதமிருக்கின் சர்வ பலன்களையும் அடைவர். இதில் கடன் நிவாரணத்தின் பொருட்டும் ஆயுராரோக்யத்தின் பொருட்டும் செவ்வாய்க்கிழமை நலம். இந்நாளில் விரதமிருந்து சூர்ய அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் பின் மூன்றே முக்கால் நாழிகையுமாகிய பிரதோஷ காலத்தில் சிவதரிசனஞ் செய்து நந்திமா தேவரையடைந்து பின்னின்று அவரது பீஜஸ்பரிசம் செய்து, அவரது இரண்டு கொம்புகளுக்கிடையில் சிவதரிசனஞ் செய்யில் மிக உத்தமம். ஏனெனில் பிருதிவியிலுள்ள தீர்த்தங்களெல்லாம் பிரதோஷ சமயத்தில் சிவ தரிசனத்தின் பொருட்டுக் கோவிருஷ்ணத்தை அடைந்து இருக்கின்றன என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. பின்னும் முசிப்பையும், வாலினையும் தொட்டுத் தொழுதால் பலம் அதிகம். இந்த விரதம் இருபத்து நான்கு தரம் அநுட்டித்தவர்கள் வேண்டும் சித்திகளைப் பெறுவர்.

106. பட்சப்பிரதோஷ விரதம்

இது கிருஷ்ண பட்ச, சுக்ல பட்சங்களில் சிவ பூசை உபவாசம். அக்னிகார்யம் செய்து விரதம் இருப்பது. இதனை அநுட்டிப்போர் எல்லா நலமும் அடைவர். சநித்திரயோதசிப் பிரதோஷ விரதத்தில் உள்ளதைக் காண்க.

107. அநங்க திரயோதசி விரதம்

மார்கழி சுக்ல பட்ச திரயோதசியில் அநுட்டிப்பது.

108. சதுர்த்தசி - சைத்ர சுக்ல சதுர்த்தசி விரதம்

இது சக்தியைக் குறித்து சித்திரை மாதம் சுக்ல பட்ச சதுர்த்தியில் விரதம் இருப்பது. இது யம பயத்தை நீக்கும்.



109. சீராவண சுக்ல சதுர்த்தி விரதம்

ஆவணி சுக்ல பட்சத்தில் சதுர்த்தசி இராத்திரியில் வியாபித்திருப்பது விசேஷம்.

110. சைத்திர கிருஷ்ண சதுர்த்தசி விரதம்

சித்திரை மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தசியில் சிவ சந்நிதியில் ஸ்நானஞ் செய்யில் அத்தீர்த்தம் கங்கைக்கு நேர் ஆகையால் இதை அநுட்டிப்போர் பிரேதத்துவம் வராது நீங்குவர்.

111. நிருசிம்ம ஜயந்தி

இது வைகாசி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தசியில் பிரதோஷ சமயத்தில் பகல் நிசாமுகத்தைச் சமீபிக்கும் சமயத்தில் அநுட்டிப்பது. அவ்வேளை நிருசிம்ம மூர்த்தி பிறப்பு. அதில் சோம வாரம் கூடில் நலம். இந்நாளில் விரதம் ஆயிரம் த்வாதசி பலன் உண்டு. இதில் சுவாதி நட்சத்திரம் கூடில் மிகுந்த புண்ணியம். இந்த விரதத்தை வாசுதேவன் என்னும் வேதியன் அநுட்டித்துப் பிரகலாதனாகப் பிறந்தான்.

112. அநந்த சதுர்த்தி விரதம்

இது புரட்டாசி மாதம் சுக்ல பட்சம் சதுர்த்திசியில் அநுட்டிப்பது. இது முதலில் யமுனை பூசை செய்து பிறகு ஒரு நூலில் பதினான்கு முடியிட்டு முடியொன்றுக்கு கிரந்தி பூசை செய்து பின் அநந்த பூசை விஷ்ணு அஷ்டோத்தரத்தால் பூசித்து நோன்புக் கயிற்றைத் தட்சிணக்கரத்தில் கட்டிக் கொண்டு விரதம் இருந்து பாராணை செய்து பிராம்மண போஜனம் முதலியன செய்து இஷ்ட சித்தி பெறுவது.

113. கதளீ விரதம்

புரட்டாசி மாதம் அல்லது கார்த்திகை, மாசி, வைகாசி ஆகிய இம்மாதங்களில் சுக்ல பட்ச சதுர்த்தசியில் வாழை மரத்தடியில் உமா மகேசுவர பூசை செய்து விரதம் இருக்கின் சித்தி பெறுவர்.

114. நரக சதுர்த்தசி விரதம்

இது ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்ச சதுர்த்தசியில் விடியற் காலத்தில் மங்கள ஸ்நானம் செய்தல் வேண்டும். தைலத்தில் இலட்சுமியையும், ஜலத்தில் கங்கையையும் ஆவாகித்து ஸ்நானம் செய்து, பின்னர் தர்ப்பணாதிகள் செய்யின் யமபயத்தினின்று நீங்குவர். இதனைக் கார்த்திகை சுக்ல பட்சத்துச் சதுர்த்தசியில் செய்ய வேண்டும். இதில் புது வேட்டி, பூஷணம் முதலியன செய்து தரிப்பர். இத்தினத்தில் விஷ்ணு திரிவிக்கிரம ஸ்வரூபமாய் மகாபலியின் மூவுலகத்தை மூன்று அடியால் அபகரித்த போது அவன் மூன்று நாள் தன் பொருட்டுத் தீபதானம் மூவுலகத்தாரும் செய்யக் கேட்டுக் கொண்டபடி வரம் தந்ததனால் இந்நாளில் மூன்று தினம் தீபம் இடுவர். இதனால் இப்பண்டிகை தீபாவளி எனப்படும்.

115. வைகுண்ட சதுர்த்தி விரதம்

இது கார்த்திகை மாதம் சுக்ல பட்சத்துச் சதுர்த்தசியில் அநுஷ்டிப்பது. இந்நாளில் கிருதயுகத்தில் வாரணாசியில் மணிகர்ணிகையில் இருந்து ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு விஷ்ணு மூர்த்தி சிவ பூசை செய்து அருச்சிகையில் நாடத் தம்பிரான் ஒரு மலரை மறைக்க விஷ்ணு மூர்த்தி தமக்குத் தாமரைக்கண்ணன் என்று பெயர் இருத்தல் கருதித் தம் கண்ணைப் பெயர்த்து அருச்சிக்கச் சிவமூர்த்தி சக்கரம் பிரசாதித்த நாள். இதில் விரதம் அநுட்டிப்போர் சகல சித்தியும் பெறுவர். (சநத்குமார சங்கிதை.)



116. மகாசிவராத்திரி விரதம்

மாசி மாதக் கடையில் அமாவாசை வரும் கிருஷ்ண பட்ச சதுர்த்தசியில் அநுட்டிக்கும் விரதம். இது மகாப் பிரளய முடிவில் சிவமூர்த்தியைப் பரமேசுவரி நான்கு சாமத்திலும் பூசித்துப் பேறு பெற்றது போல உலகில் உள்ளவரும் இந்நாளில் பூசிக்க வரம் பெற்ற நாள். இச்சிவராத்திரி மகா சிவராத்திரி என்றும், யோக சிவராத்திரி என்றும், நித்ய சிவராத்திரி என்றும், பட்ச சிவராத்திரி என்றும், மாத சிவராத்திரி என்றும் ஐவகைப்படும். இவற்றுள் மகாசிவராத்திரி என்பது மாசிமாதத்துக் கிருஷ்ண பட்ச சதுர்த்தசியில் வருவது. இதனை வருட சிவராத்திரி என்றும் கூறுவர். யோக சிவராத்திரி என்பது சோம வாரத்தில் உதய காலம் முதல் அறுபது நாழிகையும், அமாவாசை இருப்பதும், அவ்வாரத்து இரவு சூரியன் அத்தமனம் முதல் இரவு முழுவதும் கிருஷ்ண பட்ச சதுர்த்தசி இருப்பதுமாம். இதனை வார சிவராத்திரி எனவும் கூறுவர். நித்திய சிவராத்திரியாவது வருடத்தில் உண்டாம் பன்னிரண்டு மாதங்களில் உண்டாகும் கிருஷ்ண பட்ச, சுக்கில பட்சங்களில் சதுர்த்தசி வருவது. பட்ச சிவராத்திரியாவது தை மாதத்திய கிருஷ்ண பட்ச பிரதமை முதல் 13 நாட்கள் வரையில் நாள் தோறும் ஒரு வேளை உண்டு 14 ஆம் நாள் ஆகிய சதுர்த்தசியில் விரதம் இருப்பது. மாத சிவராத்திரியாவது மாசி மாதத்தில் கிருஷ்ண சதுர்த்தியும், பங்குனி சுக்ல திருதியையும், சித்திரை கிருஷ்ண அஷ்டமியும், வைகாசி சுக்ல அஷ்டமியும், ஆனி சுக்ல சதுர்த்தசியும், ஆடி கிருஷ்ண பஞ்மியும், ஆவணி சுக்கிலாஷ்டமியும், புரட்டாசி சுக்ல திரயோதசியும், ஐப்பசி சுக்ல த்வாதசியும், கார்த்திகை சுக்ல சப்தமியும், கிருஷ்ணாஷ்டமியும், மார்கழி சுக்ல திருதியையுமாம். இதில் உத்தம உத்தமமாவது சூர்யாஸ்தமனம் வரையில் திரயோதசியில் இருந்து நீங்க இரவு முழவதும் மறுநாள் பகல் முழுவதும் சதுர்த்தசி இருப்பது. உத்தம சிவராத்திரியாவது சூரியாஸ்தமனத்திற்குப் பின்னும் இரவில் முன் பத்து நாழிகை சதுர்த்தசி வியாபித்து இருப்பது. முத்திம சிவராத்திரியாவது, உதயம் முதல் மறுநாள் உதயம் வரை அதாவது பகலிரவு 60 நாழிகை வரும் சதுர்த்தசியும், சூரியன் அஸ்தமிக்கும் முன் வரும் சதுர்த்தசியுமாம். ஆதம சிவராத்திரியாவது, இரவில் இருபது நாழிகை இருந்த சதுர்த்தசியை அமாவாசை தொடர்வதாம். இதில் சிவ பூசை முதலியன செய்யின் தீமை உண்டாகும். இதன் விரதம் முதலியவற்றைக் காமிகாதி ஆகமத்தில் காணலாம். இவ்விதம் அனுட்டித்தவர் அச்சுவமேத பலம் பெறுவர். இதில் வேடன் அபுத்தி பூர்வமாக விரதம் இருந்து அவனும், மான்களும் முக்தி அடைந்தனர். இதில் சுகமாரன் என்னும் வேதியன் பெருங்கொடுமை செய்து சிவ தர்சனம் செய்து முக்தி பெற்றான்.

117. பௌர்ணமி - சித்ரா பௌர்ணமை

சித்திரை மாதம் பௌர்ணமி விசேஷம். சித்திரை நட்சத்திரம் கூடின பௌர்ணமி மிகவும் விசேஷம். இதில் சித்திர வேட்டிகள் தானம் செய்து விரதம் இருக்கின் நலம். பௌர்ணமி, சனி, ஞாயிறு, வியாழன் ஆகிய கிழமைகளில் வரின் விசேஷம். வைசாக பௌர்ணமி விரதம் விசேஷம். ஆனி மாதத்திய பௌர்ணமி அல்லது அமாவாசை விசேஷம்.

118. வட சாவித்திரி விரதம்

ஆடி மாதத்திய பௌரணையில் கோபத்ம விரதம் - இதில் விஷ்ணு விரதம். இந்நாளில் கோகிலா விரதம் - இதனை வடநாட்டார் அநுஷ்டிக்கின்றனர். ஆவணி பௌர்ணமியில் ரக்ஷா பந்தனம். புரட்டாசி பௌர்ணமியில் உமா மகேச்சுவர விரதம் - இதில் யதா சக்தி பொன்னாலும், வெள்ளியாலும் உமாமகேச்சுவர விக்கிரங்கள் செய்வித்து இரண்டு கலசம் தாபித்து அதில் பிரதிமை வைத்துப் பூசை முதலியனவும் அருச்சனையும் செய்து பதினைந்து முடியுள்ள நோன்புக் கயிறு குங்குமத்தில் தோய்த்து முடிகளை விதிப்படி பூசித்து வலக்கரத்தில் அணிந்து கொள்ளல் வேண்டும். இவ்விரதம் 16 வருடம் அநுட்டிக்கின் சர்வா பீஷ்டமடைவர். இதனை விஷ்ணு பிரமாதிகள் அநுஷ்டித்தனர்.

119. ஐப்பசி பெளர்ணமி - கௌமுதி ஜாகர விரதம்

இது உத்திரதேசத்தில் அநுஷ்டிப்பது. இதில் லட்சுமி விரதம் விசேஷம்.

120. கார்த்திகை பௌர்ணமி

சிவாலயங்களில் திரிபுரோற்சவ விரதம். கார்த்திகை நட்சத்திரத்திற்கு முன்னால் பரணி நட்சத்திரத்தில் சாயுங்காலம் தீபத்தில் அக்னி கார்ய மூலமாய் மகாலிங்க மூர்த்தியை ஆவாகனஞ் செய்து பூஜித்து வைத்து மறுநாள் சாயுங்காலத்தில் பிரம்ம ஸ்தானத்துத் தீபம் முன்னும் சோமாஸ்கந்தர் பின்னுமாக எழுந்தருளச் செய்து கொண்டு தீபத்தைச் சுஷ்கதீப தண்டத்தில் வைத்துச் சமஸ்காரப் படுத்தி எரிந்தவுடன் தண்டத்தைச் சேதித்து விட வேண்டியது. தீபகாரணம் உமையுடன் சிவபெருமான் எழுந்தருளி இருக்குங் கால் அவ்விடமிருந்த தீபவொளி குறையுஞ் சமயத்தில் நெய்யுண்ணச் சென்ற ஒரு எலி அபுத்தி பூர்வகமாயதனைத் தூண்டிய பலத்தால் சக்கரவர்த்தியாய்ச் சிவாலயத்துள் செருக்குடன் பிரதட்சணம் வருகையில் அரசன் மீது தீபகணம் ஒன்று விழுந்தது. அதனால் அரசனது தேகம் புண்ணாய் வருந்துகையில் அசரீரியாய்ப் பரமசிவம் நீ செருக்குற்றதால் இவ்வாறு செய்தோம். இன்று முதல் சகல சிவாலயங்களிலும் ‘இருள் சூழ்ந்த மற்ற இடங்களிலும் தீபமிடின் சாயுச்யமுறுவர்’ யென்ன அவ்வாறே தீபம் வைத்து வருகையில் கார்த்திகை பூர்வ பட்ச கிருத்திகை நட்சத்திரத்தில் தேஜோ மயமாய்ச் சிவமூர்த்தி உக்ரவுருவுடன் எழுந்தருளினர். இதைக் கண்ட விதி விஷ்ணுவாதியர் நடுங்கி அவ்வுக்ர உஷ்ணந் தணியப் பொரி அவல் முதலிய நிவேதித்தனர். இச்சக்ரவர்த்திக்கு மாவெலிச் சக்ரவர்த்தி என்று பெயர். விஷ்ணு ஆலயங்களில் இவ்வுற்சவம் நடத்தப்படுகிறதற்குக் காரணம் திருமகள் ஒரு அசுரனுக்குப் பயந்து காட்டில் ஒளிக்க அவ்வசுரன் காட்டைக் கொளுத்தத் திருமகள் அந்தரமாய் மறைந்தனள். அந்தக்காரணம் பற்றித் தீக்கொளுத்துவர் என்பர்.



121. மார்கழி மாத பௌர்ணமி

திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜமூர்த்தி விரதம். மகாபலந் தருவது. இந்நாளில் சிவாலயங்களில் நடராஜ மூர்த்திக்குப் பஞ்சகிருத்திய உற்சவம் நடத்துவர். நடராஜமூர்த்தி பீடத்தை விட்டு எழுந்தருளல் சிருட்டி, ரக்‌ஷாபந்தனந் தரிப்பது. திதி, கிருஷ்ணகந்தந் தரிப்பது சங்காரம், வெள்ளை சாத்துவது திரோபவம், உற்சவம் கொண்டருளுதல் அநுக்ரகம். அகங்கரித்த அசுரர் சரீரத்தை நீறாக்கித் தரித்ததே கிருஷ்ணகந்தம். சங்கார காலத்தில் எழுந்த உக்ரவுருவைத் தேவர்கள் வெள்ளைப் புஷ்பத்தாலும் வஸ்திரத்தாலும் மறைத்ததே வெள்ளை சாத்தல்.

122. பங்குனி பெளர்ணமை

இது ஹோலி பண்டிகை - இதில் போளி ஒன்று செய்து அதனைத் தீயிலிட்டு மன்மதனைத் தகனஞ் செய்ததாகத் துக்கங் கொண்டாடுவர். இதனைக் காமன் பண்டிகை என்பர். காமனைப் போல் உருவெழுதி அப்படத்தைக் கிராமப்பிரதட்சணஞ் செய்வித்துப் பின் தகன சஞ்சயனாதிகள் செய்வர். இந்த நாளில் துக்கக் குறியாகத் தங்கள் மேல் செஞ்சாயத்தை ஊற்றிக் கொள்வர்.

123. பக்தேச்வர விரதம்

இது எல்லா பௌர்ணமிகளிலும் நோற்கும் சிவகௌரி விரதம். இதனைச் சந்திர பாண்டியனும் குமுதவதியும் நோற்றுப் புத்திரப்பேறு அடைந்தனர். புத்திரனுடைய மனைவி அநுட்டித்துக் கணவனுக்குத் தீர்க்காயுள் பெற்றனள். அமாவாஸ்யை - பிதுர்க்களின் பிரீதியின் பொருட்டுச் செய்யப்படும் விரதம்.

124. கேதாரேச்வர விரதம்

இது ஐப்பசி அமாவாசையில் கலசத்தில் சாம்ப மூர்த்தியை ஆவாகித்துக் கிராமப் படி பூஜை செய்து 21எண்ணுள்ள பழ வகைகளும், மற்ற வகைகளும் நிவேதித்துப் பூஜை செய்து விரதமிருப்பது. இது முதலில் பிருங்கி சிவமூர்த்தியை வணங்கித் தம்மை வணங்காத காரணஞ் சிவமூர்த்தியால் கேட்டு உணர்ந்த பிராட்டியார் அர்த்த பாகம் பெற அநுட்டித்தது. பிறகு சித்ராங்கனென்னும் காந்திருவன் அநுட்டித்துச் சகல சித்திகளையும் பெற்றனன். பிறகு புண்யவதி, பாக்யவதிகள் என்னும் பெயருள்ள இரண்டு ஏழை வைசிய கன்னியர் ஆலடியிலிருந்து அனுஷ்டித்து இராஜைஸ்வர்யம் அடைந்து பிறகு அவ்விருவரில் ஒருத்தியாகிய பாக்யவதி, செல்வச் செருக்கால் மறந்து விரத்தை விட்டுச் செல்வமிழந்து கள்ளரால் பல முறை பறியுண்டு நினைவு வந்து விரதம் அநுட்டித்து இழந்த இராஜ செல்வங்களைப் பெற்றனள். இதனை அநுட்டிப்போர் பெருஞ் செல்வ வாழ்வினையும் முத்தியினையும் அடைவர்.

125. கார்த்திகை அமாவாஸ்யை - அமாவாஸ்யை லட்சுமி விரதம்

இது கார்த்திகை மாத அமாவாஸ்யை நாளில் மேற்கொள்ளும் விரதமாகும்.

தொடரும்...


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/hindu/p187d.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License