இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
இந்து சமயம்

விரதம் - விரதத்தின் முக்கியத்துவம்

முனைவர் ஸ்ரீவாலாம்பிகை

பகுதி - 6

126. மார்கழி அமாவாஸ்யை - கௌரீதபோ விரதம்.

127. அச்வத்த பிரதட்சிண விரதம்

அமாவாசையில் சோம வாரம், சப்தமியுடன் கூடிய ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தியுடன் கூடிய செவ்வாய்க்கிழமை, அஷ்டமியுடன் கூடிய புதன் கிழமை இத்தினங்களில் புண்ய தீர்த்த கூப நதி தீரங்களில் நித்யகடன் முடித்துச் சங்கல்பஞ் செய்து கொண்டு திரிமூர்த்தி சொரூபமாயிருக்கும் அரச மரத்தைப் பூஜித்துக் கலச பூஜை செய்து அடி பிராமணராகவும், இலைகள் ருக் வேதமாகவும், பழங்கள் யஞ்ஞமாகவும், கிளைகள் நாராயணனாகவும் எண்ணி நாராயணனையும் சிவபிரானையும் பூஜித்துப் பின் மரத்திற்கு அபிஷேகாதிகள் நடத்திச் சோடசவுபசாரஞ் செய்து விருட்சராஜனை நமஸ்கரித்து 108 பிரதட்சணஞ் செய்து பலத்தைக் கேட்டுத் தட்சணை முதலியன கொடுத்துப் பிராம்மண போஜனஞ் செய்வித்து விரதமிருப்பது. இது வேத மயமாதலினாலும், திரிமூர்த்திகளும் யஞ்ஞத்தின் பொருட்டு இவ்விருஷ ரூபமானதாலும், இதனைப் பூஜிக்க வேண்டியது. புருஷராயினும், பெண்களாயினும், லட்சம் பிரதட்சணம் செய்ய வேண்டும். இதனடியில் தம்பதிகளை லட்சுமி நாராயணராக மதித்துப் பூஜை செய்யச் சனி வாரம் உசிதம். இதனடி பிரமரூபம். மத்யம் விஷ்ணுரூபம், அக்ரம் சிவரூபம் ஆதலால் அச்வத்த பூஜை செய்க. இதனைச் செய்தோர் பல ரோகங்கள் நீங்கிப் புத்ர போக பாக்யங்களை அடைவர். “பிரம்ம விஷ்ணுருத்ரசாட்ஷாத் அச்வத்தரூபிந” மூலம் ஸ்நாதனம் பிரம்ம கர்ப்போக்னிஸ் ஸமிதோரவி: சந்தாம்ஸிதஸ்யா பர்ணானி விருஷோசௌசவை வைஷ்ணவ: அச்வத்த சர்வ விருக்‌ஷாணாம் அக்ரணீர் வைதிகஸிவ” என்பதால் அரசைப் பூஜிக்க. இதைப் பூஜிக்க சநி ஸோம வாரங்கள் விசேஷம். இவ்வாறு பூஜித்துப் பிராம்மண போஜனஞ் செய்வித்துத் தட்சணாதிகள் கொடுத்து விரதமிருந்து புண்ய கதை கேட்க வேண்டும்.

128. அர்த்தோதயம கோதய விரதம்

இது தை, மாசி மாதங்களில் அமாவாஸ்யை, வியதிபாதம், திருவோணம் நட்சத்திரம் கூடிய ஞாயிற்றுக்கிழமை கூடிய நாள். இதில் விரதம் விசேஷம். இதில் திரிமூர்த்திகளின் பிரதிமைகளைப் பொன் வெள்ளிகளில் செய்வித்து ஊஞ்சலில் படுக்க வைத்து ஹோமாதிகள் செய்து தட்சணை போஜனாதிகளுடன் வேதியர்க்குப் பிரதிமைகளைத் தானஞ் செய்வது. மேற் கூறிய நட்சத்திரங்கள் திங்கள், புதனில் வரின் மகோதயமாம்.

129. வார விரதம் - ஞாயிற்றுக்கிழமை விரதம்

இந்நாளில் விரதங் கொள்ள நித்யகன்மம் முடித்து ஒரு சுத்த இடத்தில் மெழுகிச் சர்வதோபத்ர மண்டலமிட்டு அதன் மேல் தாம்ர பீடத்தில், சூர்ய மண்டலம் ரதம் சந்தனத்தால் எழுதி அதனிடையில் சூரிய யந்திரம் எழுதி அதன் பக்கலில் கணபதி யந்திரம் எழுதி கணபதியைப் பூஜித்துப் பின் அறுகோண யந்திரம் சூரியஷ்டாக்‌ஷரம் எழுதிக் கலசாவாஹனஞ் செய்து பிராணப் பிரதிஷ்டை செய்து சூர்யபூஜை கிரமப் படி செய்வது. இதை அநுட்டிப்போர் எல்லா நலமும் அடைவர். இந்த ஞாயிற்றுக்கிழமை விரதத்தில் உத்தராயணத்தில் சூரியன் மகர ராசியில் இருக்கையில் சுக்ல பட்சத்தில் சப்தமியில் வருவது நிரசனார்க்க வார விரதம் எனப் பெயர். இதில் விதிப்படி விரதமிருந்தவர் ரஜஸ்வலை பார்த்த தீண்டிய தோஷங்கள் நீங்குவர். இதில் துண்டிலன் என்போன் விரத உத்யாபன தினத்து ஒருவன் வீட்டில் புசிக்கத் தீர்த்தங் கொண்டு தனக்கிருந்த குஷ்ட வியாதி நீங்கினன்.



130. நித்யாரவி வார விரதம்

முற் கூறியபடி செய்து ரவி வாரந் தோறும் விரதமிருக்கின் சூர்ய சாயுஜ்யம் அடைவர்.

131. சோமவார விரதம்

இது சிவபிரான் விரதம். இதனைச் சோம வாரந் தோறும் அநுட்டித்தல் வேண்டும். இது பிராம்மண தம்பதிகளை உமாமகேசராகப் பாவித்துப் பூஜித்து அவர்களுக்கு உணவாதிகள் அளித்து விரதம் இருப்பது. சீமந்தினியைக் காண்க. இது கார்த்திகை முதலிய மாதங்களிலிருந்து தொடங்கல் வேண்டும்.

132. மங்கள கௌரி விரதம்

இது ஆவணி மாதம் செவ்வாய்க் கிழமையில் அநுட்டிப்பது. இது கன்னிகையராயின் தாய் வீட்டில் அநுட்டித்துப் பின் மாமியார் வீட்டில் அநுட்டிக்க வேண்டும். இதில் கௌரி பூஜை விசேஷம். இதை அநுட்டித்தவர் எல்லா மங்களங்களையும் அடைவர்.

133. மங்களக்ரஹ விரதம்

இது மங்கள வாரத்தில் செந்நிற புஷ்பம் சந்தனாதிகளால் செவ்வாய்ச் சக்கிரத்தில் செவ்வாய்க் கிரகத்தைப் பூஜிக்கின் கடன் முதலியன தீர்ந்து புத்ராதி சம்பத்தை அடைவர்.

134. புதவார விரதம்

புத வாரத்தில் புதனை அவனுக்குரிய யந்திரத்தில் ஆவாஹனஞ் செய்து பூஜிக்கின் வாணிபம் பெருகும்.

135. குரு வார விரதம்

இதில் குருவைத் தனக்குரிய சக்கரத்தில் பிரதிஷ்டை செய்து பூஜிக்கின் வித்யா செல்வ முதலியன பெறுவர்.

136. சுக்ல வார விரதம்

தேவி விரதம் காண்க. வரலட்சுமி விரதம் - அது ஆவணி மாதம் சுக்ல பட்ச த்விதியை சுக்ர வாரத்தில் அநுட்டிப்பது. இதனைச் சித்ரநேமி என்பவன் அநுட்டித்து எல்லாச் சித்திகளையும் பெற்றான். கல சத்தில் சதுர்ப்புஜமுள்ள லட்சுமிதேவி பிரதிமை செய்து கலச பூஜை செய்து ஸ்தாபித்துப் பூஜை செய்து தானாதி போஜனாதிகள் செய்விப்பது. இது கற்புள்ள மங்கையர் ஐஸ்வர்யத்தை எண்ணி நோற்பது. குண்டினபுரத்துச் சாருமதியின் பொருட்டு லட்சுமி தரிசனந் தந்து தன்னை இத்தினத்தில் பூஜித்து விரதமிருப்போர் அஷ்ட ஐஸ்வர்யம் அடைவர் என்று மறைய அவள் அவ்வாறு அநுட்டித்துப் பெரு வாழ்வடைந்தனள்.

137. சநிவார விரதம்

நிலத்தில் பொன் முதலிய லோகங்களால் சநிப்பிரதிமை செய்வித்துப் பூஜித்து ஓமாதிகள் செய்து வேதியர்க்குத் தட்சணை முதலிய அளிப்பது. இவ்வாறு செய்வோர் சனிக் கிரகத்தால் உண்டாகும் தீமை நீங்குவர்.



138. சநிவரா வேங்கடேசுவர விரதம்

இது ஆவணி மாதம் சனி வாரத்தில் வருவது. இந்நாளில் வேங்கடேசுரனை எண்ணி விரதமியற்றித் தானாதிகள் செய்யின் சகஸ்ர சஷ்டி விரத பலம் பெறுவர். இதனைப் புரட்டாசியில் அநுட்டிக்கின்றனர்.

139. வியாதிபாத விரதம்

இதில் விரதமிருந்தோர் சூர்ய உலகம் பெறுவர். வியதிபாதங் காண்க.

140. மாஸ உபவாஸம்

இது ஆடி மாதம் சுக்ல ஏகாதசி முதல் கார்த்திகை சுக்ல ஏகாதசி வரையில் உபாசிப்பது. இது லட்சுமி நாராயண உருவம் பிரதிமையில் செய்து பூசித்து விரதம் இருப்பது.

141. தான்ய சங்கராந்தி விரதம்

இது விஷ்வத் புண்ய காலத்தில் சூரியனைப் பூஜித்துத் தான்யதானஞ் செய்வது. இது செய்தார் ஆயிரம் அக்னிஷ்டோம பலம் அடைவர்.

142. லவண சங்கிராந்தி விரதம்

வருடக்கடைசியில் லவணகும்பம் தாபித்துச் சூரிய பூஜை செய்து வேதியர்க்குத் தானஞ் செய்வது. இதைச் செய்தவர் சூர்யலோகம் அடைவர்.

143. போகசங்கிராந்தி விரதம்

இது வருடக்கடைசியில் சூரியபூஜை செய்து தனதான்ய பசுவாதிகளை வேதியர்க்குத் தானஞ் செய்வது. இதினும் சூரிய பூஜை செய்ய வேண்டியது.

144. ரூபசங்கிராந்தி

இது சங்கிராந்தி காலத்தில் பொன் பாத்திரத்தில் பொன்னிட்டு நெய் வார்த்து வேதியர்க்குத் தானஞ் செய்வது. இதினும் சூரியபூஜை செய்ய வேண்டியது.

145. தேஜஸங்கிராந்தி

செந்நெல் அரிசி இவற்றின் மேல் கலசம் தாபித்து மோதக முதலியன நிவேதித்து வேதியர்க்களிப்பது. இது வருஷ முதலிற் செய்து கடையில் உத்யாபனமும் செய்வது.

146. சௌபாக்கிய சங்கிராந்தி

இது சங்கிராந்தி வாரத்தில் முதலில் சூரியனை அர்ச்சித்து வஸ்திர முதலியவை கலசத்திற்கு அணிந்து வேதியர்க்குத் தானஞ் செய்வது. இதில் லவண பர்வத தானமுஞ் செய்ய வேண்டும்.



147. தாம்பூல சங்கிராந்தி

வருடாரம்பத்தில் சூர்யார்ச்சனை செய்து ஒரு பாண்டத்தில் வெற்றிலை, பாக்கு முதலியவற்றோடு வாசனைத் திரவியங்கள் வைத்துப் பிராமண தம்பதிகளைப் பூசித்து அளிப்பது.

148. மனோரத சங்கிராந்தி

ஒரு கும்பத்தில் வெல்லம் நிறைத்துப் பூஜித்து வேதியர்க்கு விருந்தளித்து அளிப்பது. இதில் சூர்யபூஜை செய்ய வேண்டும்.

149. அசோக சங்கிராந்தி

உத்தராயன தட்சணாயனம், விஷ்வத் புண்ய காலம், வியதிபாதம் இக்காலங்களில் பொன்னில் சூர்ய பூஜை செய்து திலதான பூர்வகமாய்ப் பூசித்துக் கபிலை தான முதல் எல்லா தானங்களுஞ் செய்து பிராம்மண போஜனஞ் செய்வித்து வேதியர்க்குப் பிரதிமையைத் தருதல். இத்தானஞ் செய்தார் ஆயுராரோக்ய சம்பத்துக்களைப் பெறுவர்.

150. ஆயுஸ் ஸங்கிராந்தி

சங்கிராந்தி நாளில் பசுவின் பால் வெண்ணெய் முதலியவை கும்பத்தில் பூரித்துச் சூரியனைப் பூஜித்து வேதியர்க்கு அன்னபானாதி தட்சணைகள் அளித்து வேதியர்க்குக் கொடுப்பது.

தொடரும்...


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/hindu/p187e.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License