Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                                    இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...

Content
உள்ளடக்கம்


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

திருநெல்வேலி அல்வா வேணுமா?

வித்யாசாகர்


பள்ளியில் கட்டுரை போட்டியிலோ ஓவியப் போட்டியிலோ கலந்து கொள்ளும் ஒரு மாணவனை அழைத்து 'இந்தா நீ உலகத்தின் முதல் பரிசினை பெற்றாய்' என்று கையில் கொடுத்தால் அந்த மாணவனின் முகத்தில் எத்தனை வெளிச்சங்கள் சிரிப்பாய் பிரகாசிக்குமோ அப்படித்தான் பிரகாசித்தான் இனியன். தமிழினியன் அவன் முழு பெயரென்றாலும் இனியனென்றே நண்பர்கள் அழைத்துக் கொண்டு அவன் பின்னால் ஓடினார்கள்.

இனியனுக்கு வாழ்வின் அத்தனை வெற்றிகளும் உள்ளங்கையில் விழுந்து கிடப்பதாய் ஒரு சந்தோஷம், வானத்தையும் பூமியையும் மாறிமாறிப் பார்க்கிறான், எதை விலைக்கு வாங்குவது வானத்தையா? பூமியையா? என்று சிந்தித்திருப்பான் போலும். அப்படி ஒரு துணிவு, துடிப்பு, துள்ளல், அவனுக்குள் இன்று.

"வா.. வா... எல்லோரும் வாங்க.., இன்னைக்கு எல்லாருக்கும் விருந்து இருக்கு.., அதும் எங்க தெரியுமா ஐந்து நட்சத்திர விடுதியில விருந்து" சத்தம் போட்டுக் கத்தினான் இனியன்.

அப்படி என்ன தான் நிகழ்ந்து விட்டது இவனுக்கென்று திகைத்துப் போய் பார்க்கிறார்கள் அவனுடைய நண்பர்களெல்லாம். இனியனொன்றும் அத்தனை சாதாரணமானவன் அல்ல. வீண் பேச்சு பேசியோ வெட்டியாக அரட்டை அடித்தோ திரிபவனல்ல. இக்கால இளைஞர்களுக்கு முன்மாதிரி இளைஞன். சுருக்கமாகச் சொன்னால் திரைப்படங்களில் நடித்திடாத 'வாழும் கதாநாயகன் என்று சொல்லலாம் இனியனை.

"இனியா.. இனியா.. சொல்லுடா.. என்னடா ஆச்சு அப்படி, (இ)தோ பார்.. இனியும் நீ சொல்லலைன்னா நாங்க எல்லாம் திரும்பிப் போய்டுவோம். அப்புறம் நீ தான் எங்களைத் தேடி வந்து சொல்லணும்"

"சொல்லக் கூடாதுன்னு இல்லடா, சொன்னா நம்புவீங்களா, நான் ஒரு பெரியா கோடீஸ்வரன் ஆகப்போறேன் ரவி, என்னால இனி எதையும் அப்படி சொடுக்கினா வாங்கிட முடியும்"நண்பர்கள் திகைத்தார்கள். என்ன ஆச்சு இவனுக்கு. ஏதேனும் கனவு கினவு காண்பதாக நினைத்து பெனாத்துகிறானா அல்லது லாட்டரி கீட்டரி ஏதாவது... "ஹா..ங்............ எனக்கு தெரிஞ்சி போச்சு..........."

"இனியா எனக்கு தெரிஞ்சி போச்சு"

"என்ன தெரிஞ்சி போச்சு மலர்?"

"உனக்கு நம்மூரு பம்பர் லாட்டரி அடிச்சு போச்சி........"

"அடப்போடா... அதலாம் எப்பவோ நிறுத்தியாச்சி தெரியாதா"

"அப்போ.., இன்னைக்கு ஏப்ரல் பூல்....."

"ச்ச ச்ச.. நான் சொல்வது சத்தியம், இன்னும் இரண்டே நாள்ல நான் தான் நம்ம ஊர்லயே ஏன் தமிழகத்துலயே இந்தியாவிலயே பேசப்பட போற முதல் ஆளாகப் போறேன்"

"டேய்.. ரவி.. மலர்.. வாசு.. வாங்க போலாம். இவனுக்கு ஏதோ ஆயிடுச்சி..டா"

"நில்லு மணி, இங்க பார்.. ஐம்பது மில்லியன்.., ஐம்பது மில்லியன் டாலர்.., நம்மூரு பணம் எவ்வளவு தெரியுமா 'இருநூற்றி இருபத்தொன்பது கோடியே, எழுபத்தொன்பது லட்சத்து, தொன்னூற்றியொன்பதாயிரத்து, தொள்ளாயிரத்து ஐம்பத்துநாலு ரூபா இருபத்தியிரண்டு பைசா.."

இனியன் நீட்டி சொல்லி மூச்சு விடுவதற்குள் வாய்பிளந்து ஓடி வந்தார்கள் நண்பர்களெல்லாம். படக்கென அந்தத் தாளை மடக்கி சட்டைப் பையில் போட்டுக் கொண்டான் இனியன்.

"நான் சொல்றதைக் கவனமாக் கேளுங்க. இது, என்னோட பணம் மட்டுமில்ல, உங்களோட பணமும் கூட"

"என்னடா இனியா, உனக்கு ஒன்னும் ஆயிடலியே என்னென்னவோ சொல்ற, ஏதேதோ காட்டுற எங்களால நம்பவே முடியலேயேடா""முதல்ல நானும் நம்பலடா ரவி, பொய்யின்னு தான் விட்டுட்டேன், பிறகு தான்.... 'இங்க பார் என்னோட பேர்ல செக்கு, வங்கியில போட்டு எடுக்க சிபாரிசு கடிதம்ன்னு எல்லாம் அனுப்பினாங்க, அதனால தாண்டா நானே நம்பினேன்.."

"எங்கருந்து வந்திருக்கு, யார் அனுப்பினா, எதையுமே விவரமா சொல்ல மாட்டேன்றியேடா இனியா, சரியா சொன்னா நாங்களும் அதை யார்கிட்டையாவது கேட்டு உறுதி படுத்துவோம்ல"

"அதலாம் விடு மணி.. ஒரு கனவு போல இருக்கு தெரியுமா. ஒரு புத்தகம் வாங்க, கல்லூரி கட்டணம் அடைக்கன்னு எவ்வளவு எல்லாம் கஷ்டப்பட்டிருப்போம் அதுக்கெல்லாம் ஒரு விடிவுடா இது. எப்படின்னெல்லாம் கேட்காதிங்க, உடனடியா எனக்கு பணம் வேணும் 'ஒரு லட்சத்தி முப்பத்தி ஐந்தாயிரம் வேணும்' யாராவது ஏற்பாடு பண்ணுவீங்களா"

"ஒரு லட்சத்தி முப்பத்தி ஐந்தாயிரமா?" நண்பர்கள் வாய் பிளந்து நின்றார்கள். மணி, மலர், ரவி, அழகன், இனியன் எல்லோரும் கல்லூரி முடித்து வேலை தேடி அலைந்து ஏதும் சரியாக கிடைக்காததால் பகுதி நேர ஊழியர்களாக கிடைக்கும் இடங்களில் கிடைக்கும் வேலைகளை செய்துவரும் லட்சிய இளைஞர்கள்.

இவர்களில் இனியன் எப்போதுமே சமூகம் பற்றியும் தன் பெற்றோர் பற்றியும் சிந்தித்து எதையேனும் வாழ்வின் கடைசி நாளிற்குள் சாதித்தே ஆகவேண்டுமென லட்சியக் கனவுகளோடு வாழ்பவன். அப்படிப்பட்ட இனியனின் சொல்வதை யாராலும் நிராகரிக்க முடியாமல் பணம் திரட்டுவதற்கான வழியை யோசிக்கிறார்கள்.

"இனியா நான் எப்படின்னா அப்பா கிட்ட பேசி தங்கச்சி கல்யாணத்துக்கு வைத்திருக்கிற பணத்துல ஒரு ஐம்பதாயிரத்தை வாங்கித் தரேன் "

"நான் கூட எங்க வீட்ல பேசி ஒரு இருபதாயிரம் வாங்கிக் கொடுப்பேன்டா இனியா" மற்றொருவன் பதினைந்தும், மீதம் ஐம்பதாயிரத்தை மட்டும் இனியன் தயார் படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் முடிவெடுத்தார்கள்.

"மச்சி இங்க பாருடா..உன் மேல நம்பிக்கை இல்லாமலெல்லாம் இல்லடா, நீ என்ன சொன்னாலும் செய்வோம். ஆனா என்ன பண்ண போற, எப்படி இதலாம் நடக்கும்னு சொல்வியா?" ரவி கேட்டான்.இனியன் ஒரு நொடியும் தாமதிக்கவில்லை. தன் கைப்பையில் வைத்திருந்த கோப்புகளை எல்லாம் எடுத்துக் காட்டினான். எல்லோரும் கையெழுத்திட்டு அங்கீகரிக்கப்பட்ட காசோலை மற்றும் இதர படிவங்களையும் மின்னஞ்சல் மடல்களையும் எடுத்து அவர்கள் முன் போட்டு, ஏதோ இணைய லாட்டரியில் பணம் அடித்திருப்பதாகவும், அந்தத் தொகை மிகப் பெரிய தொகை என்பதால் பேங்காக் வங்கியில் வந்து எடுத்துக் கொள்ளச் சொல்லி பேங்காக் வங்கியிலிருந்து அழைத்து பேசியதாகவும், பேங்காக் போக இனியனுக்கு கடவுச்சீட்டு அதாவது பாஸ்போர்ட் இல்லாததால் அவர்களே ஒரு உலகவர்த்தக மையம் ஒன்றினை தொடர்பு கொண்டு பணம் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்திருப்பதாகவும், தற்போது அந்த உலகவர்த்தக மையத்தின் மூலம் பரிந்துரைக்கப் பட்ட வக்கீல் ஒருவர் இவனை பலமுறை அழைத்து பேசி அநேகம் நாளைக்கே பணம் இவனுடைய இந்திய வங்கிக் கணக்கிற்கு மாறிவிடும் என்று சொன்னதாகவும், அதற்கு முன் இவ்வளவு முன்தொகை இட வேண்டுமென்றும் தவிர இதர செலவெல்லாம் சேர்த்து இரண்டு லட்சம் வரை கட்ட வேண்டுமென்றும், அவன் முடிந்தவரை தயார் செய்து விட்டதாகவும் மீதம் இவ்வளவு பணம் தேவைபடுகிறதென்றும் சொல்லி முடிக்க நண்பர்கள் எல்லோரும் அமைதியாக அவனையேப் பார்த்தார்கள்.

"ஏண்டா... யோசிக்கிறீங்க, எந்த பணமா இருந்தாலும் பரவாயில்லைடா, கொண்டு வாங்க, இன்னும் இரண்டே நாள், இரண்டே நாள்ல திருப்பிடலாம், இந்த பணம் மட்டும் கிடச்சுட்டா நாமேல்லோருமே கோடீஸ்வரன்களாயிடுவோம்."

"இதப் பாரு மச்சி, உனக்கு உதவி செய்ய எங்களுக்கு ஒரு ஆட்சேபனையும் கிடையாதுடா, ஆனா இரண்டு லட்சம்! யோசி, நன்றாகச் சிந்தித்துப் பார், வெறும் இரண்டு லட்சம் வாங்கிக் கொண்டு இவ்வளவு பெரிய தொகை தருவது சாத்தியமா?" ரவி கேட்க

"ஆமாண்டா இனியா, இணையத்துல இப்படி எல்லாம் நிறைய திருட்டுத்தனம் நடக்குதுடா, உண்மையான சான்றிதழ் மாதிரியே கல்லூரி சான்றிதழ் முதற் கொண்டு அச்சடிச்சி தராங்கடா.., எதுக்கும் வேற யாரையாவது நல்லா தெரிந்தவங்களை கேட்டுக்கடா" மலர் கெஞ்சினான்"நீங்கல்லாம் எதிர்மறையாவே யோசிக்கிறீங்கடா, நான் அதுக்கெல்லாம் தயாரில்லை, எனக்கு நம்பிக்கை இருக்கு, வெள்ளைக்காரன் ஆங்கிலத்தில் பேசினான், ஜெனுன் பிரின்ட் சான்றிதழ் வந்திருக்கு, இன்னும் என்னடா வேணும், நம்பினாதான்டா வாழ்க்கை. எனக்கு இதுல நம்பிக்கை இருக்கு ரவி, முழு நம்பிக்கை இருக்கு. இது மட்டும் நடந்துட்டா, இதை வைத்து எத்தனை பேரோட கண்ணீரைத் துடைப்பேன் தெரியுமா? மொத்த ஏழ்மை இளைஞர்களையும் தத்தெடுத்துக்குவேண்டா, பெரிய பெரிய ஆளா ஆக்குவேன். நூறு இளைஞர்களை சுயமா அவுங்க கால்ல நின்னு உழைக்கிற அளவுக்கு உருவாக்கி அவர்கள் மூலமா ஆயிரம் ஆயிரம் பேருக்கு என்னால வேலை கொடுக்க முடியும்டா ரவி. எனக்கு ஒரு பெரிய கனவு இருக்குடா.. யாரும் ஏழ்மையா இருக்கக் கூடாது. சாப்பாடுக்காகப் பொய் சொல்லக் கூடாது. துணிக்காக பொருளுக்காக ஆசைப்பட்டு அடுத்தவன் பொருளைத் திருடக் கூடாது. என்னால அவனை மாதிரி இருக்க முடியலையேன்னு பொறாமைப்பட்டு வஞ்சம் வளர்த்து கொலைவரை ஒருவனை ஏழ்மை கொண்டு போய் விட்டுடக் கூடாது. எரியுற ஏழ்மை நெருப்பு தணல் விட்டு வீட்டின் கூரைவரை எரியறதாலதான் 'இன்னைக்கு யாரைப் பார்த்தாலும் கிடைக்கிறத சுருட்ட தயாராயிட்டாங்க. அதலாம் ஒழிக்கனும்னா, அவர்களுக்கு உழைப்பை கொடுக்கனும்டா, உழைத்து சுயமா சம்பாரித்துக் கொள்ள வழி ஏற்படுத்திக் கொடுக்கனும். கட்டுக் கட்டா பணத்தைச் சுயமா சம்பாரித்து பார்த்துட்டா பிறகு பிறர் பொருள் மேல ஆசை வருமா? நம்மால் முடிந்த ஆயிரம்பேரை அப்படி உருவாக்குவோம், அந்த ஆயிரம் பேர் கிட்டயும் அவர்கள் மூலமா அதுபோல யாரேனும் ஒரு ஏழை மாணவனையாவது படிக்க வைக்க, பெரியாளாக்கி விட வாக்குறுதி வாங்கிக்குவோம், அதே கணக்குல ஒரு ஐம்பது; நூறு; வருடம் தாண்டிபாரு, அடுத்த தலைமுறைக்கு பசி இருக்குமா? பஞ்சம் இருக்குமா? அதுக்கு இந்தத் தொகை வேணும்டா.. வேணும் கண்டிப்பா வேணும்"

எல்லோர் வாயையும் தன் கனவுகளால் அடைத்தான் இனியன். நல்ல எண்ணங்கள் மட்டும் போதாது, அதை ஈடு செய்ய தக்க பாதையும் தேவை என்பதை மட்டும் சிந்திக்க அவகாசமின்றி போனது இனியனுக்கு. அவரவரால் இயன்றதைச் சேகரித்துக் கொடுத்தார்கள். இனியன் கடைசியாக தன் அம்மாவிடம் கெஞ்சி கேட்க, அவள் வார வட்டிவிடும் கந்துவட்டி கடையில் பேசி என் மகன் தொழில் துவங்கப் போகிறானென்று சொல்லி ஐம்பதாயிரம் வாங்கித் தருகிறாள்.

மொத்தப் பணமும் சேர்த்து இரண்டு லட்சத்தையும் அவர்கள் சொன்ன பேங்காக் வங்கி முகவரிக்கு அனுப்பப்படுகிறது. இனியனுக்கு ஏக சந்தோஷம். எப்படியும் இரண்டு நாளில் பணம் கைக்கு வந்து விடும். எப்படியும் பத்திரிகைகளுக்கெல்லாம் தெரிந்து பேட்டியெல்லாம் எடுப்பார்கள். ஒரு பாதித் தொகையை 'பொதுசேவை மையங்களுக்கு தருவதாகவும் மீதித் தொகையை வைத்து முழுக்க முழுக்கப் படித்து வேலை தேடும் இளைஞர்களை வைத்து தொழில் துவங்கப் போவதாகவும் பேட்டியில் சொல்லலாம்.

"மச்சான் பணம் வந்த உடனே ஒரு பெரிய கார் வாங்கி அதுல ஒரு சீட்டு முழுக்கக் பீரா வாங்கி அடுக்குறோம்டா.. ஒரு ஒரு வாரத்திற்கு சலிக்கிற வரையும் குடிக்கிறோம், ஆட்டம் போடுறோம், குடிக்கிறோம் ஆட்டம் போடுறோம்.. என்ன மச்சி சொல்ற.." அழகன் இனியனிடம் சொல்லி விட்டு திரும்பி ரவியை கேட்க.

"அதுலையே இருக்காதடா அழகா, உன் பணத்துல குடிச்சாலே எனக்கு பிடிக்காது, இதுல நான் வேற வாங்கித் தருவேனா.. ஆசை தான் உனக்கு. இந்த பணத்துல ஒரு காசு கூட நமக்கு சுயதேவைக்காக எடுக்க போறதில்ல"

"நீ எடுக்காத.., எங்களுக்குக் கொடு..அதலாம் நாங்க பார்த்துக்குறோம்"

"நீங்க வேற நான் வேறயா? அதில்லடா அழகா, நான் சொல்வது அப்படியில்லை, இந்தப் பணம் நாம் சம்பாரித்த பணமில்லைதானே. நமக்குக் கிடைக்கப் போற பணம்தானே, அதுல பிறருக்கு கொடுக்க உரிமை இருக்கே தவிர நமக்கு அனுபவிக்க எந்த உரிமையும் கிடையாது. வேணும்னா இதை வைத்து நாமும் சம்பாதிப்போம், நம்மலால பிறரையும் சம்பாதிக்க வைப்போம், அதுக்கப்புறம் உன் பணத்துல நீ ஆட்டம் போடு நானும் கூட சேர்ந்து போடுவேன்."

கனவுகள் சுகமாயினும், கனவுகள் நல்லதாயினும், கனவுகள் கனவுகள் தானே. இனியன் மிக நல்ல கனவு கண்டான். பணம் அனுப்பியதிலிருந்து ஒவ்வொரு நொடியும் கனவுகளோடு வாழ்வினை வெல்லும் பொழுதிற்காய் காத்திருந்தான். என்னதான் நாமாக ஆயிரம் கற்பனை லட்சியமென கோட்டைகளை கட்டிக் கொண்டாலும் 'எது நடக்க இருக்கிறதோ அதுவே நடத்தப் படுகிறது. அந்த நியதியின் படி ஏற்பட்ட தாமதம் இனியனுக்கு மெல்ல மெல்ல பயத்தை தந்தது. தாமதிக்கும் ஒவ்வொரு நொடி காத்திருப்பும் வலித்தது இனியனுக்கு. நடக்கும் என்பதை தவிர வேறொன்றுமே நினைக்கத் தயாராகயில்லை என்றாலும் ஒரு பயம் மனதைக் கவ்வியது.

வாழ்வில் பொதுவாக நாம் எல்லோருமே என்னதான் திடமான நம்பிக்கை வைத்திருந்தாலும் அது சரியான நம்பிக்கையாகவும் இருத்தல் வேண்டும். இதை இனியன் சிந்திக்கத் தவறி விட்டான். நாட்கள் ஒன்றாய் இரண்டாய் நகர ஆரம்பித்தது. பணம் பெற்ற இடத்திலிருந்து ஒரு தகவலும் வரவில்லை. ஒரு நாளைக்கு ஆயிரம் முறை அழைத்தவன் இப்போது ஒருமுறை கூட அழைக்கவில்லை. நண்பர்கள் மெல்ல மெல்ல நம்பிக்கையை இழக்க ஆரம்பித்தார்கள். அலசி ஆராய்ந்து 'சில இணையதளம் தரும் வசதி மூலம் தமிழகத்திலிருந்து உலகத்திற்கு எங்கு வேண்டுமாயினும் குறைந்த கட்டணத்தில் அழைக்கவும், அங்ஙனம் அழைக்கையில் பக்கத்து வீட்டு நபருக்கு அழைத்தாலும் வெளிநாட்டு அழைப்பு போல தான் அலைபேசியில் காட்டும், அழைப்பவரின் தொடர்பு எண்ணினை காட்டாது என்பதையும் கண்டு கொண்டார்கள். தகவல் அறிந்து அம்மா பதறிப் போனாள். பயந்தாள். ஒரு லட்சம் தங்கையின் கல்யாணப் பணத்தை வாங்கித் தந்த நண்பனின் அப்பா வீடுவரை வந்து சத்தம் போட்டு விட்டுப் போனார். காவலில் தெரியப்படுத்துங்களில்லையேல் நான் தெரிவிப்பேன் என்று எச்சரிக்கை செய்தார்.இனியனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எத்தனையோ மின்னஞ்சல்களை அவர்களுக்கு அனுப்பி வைத்தும் பதிலில்லை. அவர்கள் அழைத்த தொடர்பு எண்ணில் அழைக்க முயன்றாலும் அத்தனை எண்களுமே தற்காலிகமாக அணைத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வந்தது.

கனவெல்லாம் கண்முன் வந்து தன்னை சுட்டு எரிந்தாலும் நம்பிக்கை கொண்டான் இனியன். இன்னும் சற்று அவகாசம் கொள்ள வேண்டும் போல் எண்ணினான். எப்படியும் பணம் வந்துவிடுமென்றே நம்பினான். நடக்காது என்பதை மட்டும் அவனால் நினைக்கவே முடியவில்லை. நடந்தேயாகவேண்டுமெனும் ஒரு தீவிர சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுப் போனான். அவன் நம்பிக்கை ஒருவிதத்தில் மட்டும் வீண்போகவில்லை. மூன்று நாள் நான்காகி, நான்கு ஐந்தாகி, ஐந்து ஒரு வாரமாக கடந்த பின், வாரம் இரண்டு மூன்றாக நகர்ந்த பின் ஒரு மின்னஞ்சல் வந்தது அவர்களிடமிருந்து.

தான் அனுப்பிய பணம் கிடைத்ததாகவும், மிக்க மகிழ்வென்றும், பணத்தை பேங்காக் வங்கியிலிருந்து அந்த உலகவர்த்தக மையம் எடுத்து விட்டதாகவும், இன்னும் ஒரே நாளில் மொத்தத் தொகையையும் இவன் கணக்கிற்கு மாற்றி விடுவதாகவும், உடனடியாக அதை செய்வதற்கான சம்பளமாக ரூ பத்து லட்சம் அனுப்பிவைக்க வேண்டுமென்றும் அனுப்பாவிட்டால் அனுப்பிய பணத்திற்கு நாங்கள் பொறுப்பில்லை என்றும் அந்த மின்னஞ்சல் கூறி முடிய, கணினியை எடுத்து உடைத்துப் போடவேண்டும் போல் இருந்தது இனியனுக்கு.

உடனடியாக அந்த மின்னஞ்சலோடு குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி எண்ணினைக் கையில் குறித்துக் கொண்டு ஓடினான். ஓடி ஒரு தொலைதொடர்பு கடைக்குள் நுழைந்து, அவசரம் அவசரமாக அழைத்தான். எதிர்முனையில் யாரோ தொலைபேசியை எடுத்து 'ஹலோ.... திருநெல்வேலி அல்வா கடையிலிருந்து பேசுறோம். உங்களுக்கு யார் வேனும்?' என்றார்கள்.

பகீரென்றானது இனியனுக்கு.

"என்னங்க இது பேங்காக் இல்லையா?"

"பேங்காக்கா? ஏம்ப்பா இது பேக்கரிப்பா, திருநெல்வேலி அல்வா விக்கிற பேக்கரி, தொடர்பு எண்ணை ஒழுங்காப் பாரு போனை வைய்யீ........."

இனியனின் கையிலிருந்த தொலைபேசி அனிச்சையாக தவறி கீழே விழுந்துவிட்டது!

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p59.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                               


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License