வித்யாசாகர்

புதுச்சேரியை பூர்வீகமாகக் கொண்டு, 25 நவம்பர் 1976 வியாழன் அன்று சென்னையில் பிறந்து, மணலி பேரூரில் வளர்ந்து, மாதவரம் சூர்யா கார்டனில் வீடமர்த்தி, ஓமான், பஹ்ரெய்ன், ஷார்ஜாஹ், துபாய், சவுதி அரேபியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை என பல நாடுகளுக்கு பயணித்து, இளங்கலை இயந்திரப் பொறியாளர் மற்றும் ISO Lead Auditor, IRCA வில் தேர்வுற்று, தற்போது குவைத்தில் ஒரு எண்ணெய் சார்ந்த நிறுவனத்தில் தரக் கட்டுப்பாட்டுத் துறையில் மேலாளராக பணி புரிந்து அங்கேயே எட்டு வருடமாக வசித்தும் வரும் இவர் கடந்த பன்னிரண்டு வருடங்களாக சமூக அக்கறையும் எழுத்தார்வமும் கொண்டு பல சிறுகதைகளையும் கவிதைகளையும் நாவல்களையும் கட்டுரைகளையும் எழுதி, தான் வாழ்ந்ததின் அடையாளத்தை எழுத்துக்களால் தக்கவைத்து வருகிறார். அதுமட்டுமின்றி இவ்வெழுத்துப் பணியின் மூலம் வரும் வருமானங்களை ஏழை எளியோருக்கும், ஆதரவற்றவர்களுக்கும், பிற சேவை மையங்களுக்கும் கொடுத்து உதவியும் வருகிறார். தான் வந்த நல்ல பாதையை, நல்ல அனுபவங்களை தன் வழி வருவோருக்குக் கொடுத்து நாளைய நல்லதொரு சமுதாயத்தை உருவாக்குவதும்; இன்றைய சமுதாயத்தின் தவறுகளை எழுத்தின் மூலம் எடுத்துரைத்து திருத்தி, திருந்தி வாழ்வதும் தன் லட்சியமெனக் கருதி வருகிறார். இவருடைய படைப்புகள் இதுவரை 17 நூல்களாக வெளியாகி இருக்கின்றன.
கதை
கவிதை
சிறுவர் பகுதி - கவிதை

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.